வித்யாசமான படங்கள் இந்தியில் வந்து கொண்டிருக்கும் காலத்தில் கஜினி, ஹிந்தி போக்கிரியான வாண்டட் வந்து மீண்டும் ஒரு மசாலா மார்கெட்டை ஓப்பன் செய்த்து என்றால் அதை இன்னும் ஃபோர்ஸாக அடித்து சொல்லியிருக்கிறது தபங்..
தபங் படத்துக்கு போகும் போது ரெண்டு டிக்கெட் வாங்கி போங்கள் ஒன்று உங்களுக்கு, இன்னொன்று உங்கள் மூளைக்கு என்று நம்ம விஜயை கிண்டல் செய்கிறார் போல தொடர் எஸ்.எம்.எஸுகளால் கிண்டல் செய்யப்பட்ட படம் முதல் வாரத்திலேயே சுமார் நூறு கோடியை தட்டியிருக்கிறது.
வழக்கமாய் நல்லவன்/ கெட்டவன், ப்ரச்சனை, நல்லவன் ஜெயிப்பது என்ற வரைமுறைக்குள் வரும் கதை என்றாலும் ஆர்டிஸ்ட் ப்ரெசென்ஸ் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உணர்த்தும். சும்மா பூந்து விளையாடியிருக்கிறார் சல்மான் கான். ஆரம்ப சண்டைக் காட்சியிலிருந்து, கடைசி க்ளைமாக்ஸ் காட்சிவரை அவர் ராஜ்ஜியம் தான். ஒரு மாதிரியான அரகன்ஸ், நடை, டயலாக் டெலிவரி எல்லாவற்றையும் பார்த்தால் அவர்கள் சீரியஸாகத்தான் படமெடுத்திருக்கிறார்களா? இல்லை தமிழ் படம் போல கிண்டல் செய்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் நிச்சயம் வரத்தான் செய்யும் அந்தளவுக்கு நிஜமாகவே சீரியஸாய் ஒரு பக்கா மசாலா படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
சல்மானுக்கு ஒரு வளர்ப்பு அப்பா, அந்த அப்பாவின் மூலம் தன் தாய்க்கு பிறந்த தம்பி, அப்பா எப்போது அவர் மூலம் பிறந்த பிள்ளைக்கு முன்னுரிமை கொடுக்க, அப்பாவுக்கும் மகனுக்கு பிரச்சனை. சல்மான் ஒரு கரப்டட் போலீஸ் ஆபீஸர். கொள்ளையடிப்பவர்களை எல்லாம் தேடி பிடித்து பந்தாடிவிட்டு, அவர்களீடமிருந்து பிடிங்கிப் போகும் பணத்தை லவுட்டி, தேவையிருக்கும் ஆட்களுக்கு உதவுபவர். அதனால் அவரை எல்லோரும் சல்புல் பாண்டே என அழைப்பதற்கு பதிலாய் ராபின்ஹூட் பாண்டே என்றழைக்கும் அளவுக்கு பிரபலம். அவரின் தம்பியோ சோம்பேறி.. ஒரு கட்டத்தில் தாய் இறந்துவிட, குடும்பம் இரண்டாய் பிரியகிறது, இதன் நடுவில் சல்மானின் காதல், தம்பியின் காதல், வில்லன், வில்லனிடம் தம்பி வேலை செய்ய அதனால் பிரச்சனை என்று தொடர் விஷயங்களால் பரப்ரப்பான ஒரு திரைக்கதை அமைய.. அப்புறம் என்ன க்ளைமாக்ஸில் தன் தாயை கொன்ற வில்லனை கொன்று பழிவாங்குகிறார். ஆஸ்துமா நோயாளியான அம்மாவை மூச்சடைக்க வைத்து கொன்ற வில்லனை கொல்லும் ஐடியா.. அடங்கொன்னியா.. சூப்பரப்பூ..
இப்படி படம் பூராவும் பக்கா மசாலா எண்டர்டெயினரை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு சரியான தைரியம் வேண்டும். படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் சல்மான் தான். சரியான இடங்களில் பாடல்களை நுழைத்து அதிலும் ஒரு அயிட்டம் சாங், முதல் சண்டை காட்சியும், ஹீரோயினுடனும், அவளின் குடிகார அப்பாவுடன் இருக்கும் போது கொலை முயற்சி செய்யும் வில்லன் ஆட்களை போட்டு பந்தாடும் சண்டைக் காட்சியும் அடிதூள்.
க்ளைமாக்ஸில் சண்டையில் சட்டை புஐ புடைப்பில் கிழிந்து தொங்கி பாடி காட்டும் காட்சியில் தியேட்டரில் விசில் ஆச்சர்யமாக இருக்கிறது. ரொம்பவும் புத்திசாலித்தனமான, யோசிக்க வைக்கக்கூடிய படங்களுக்கு மத்தியில் ஒரு பக்கா மசாலாவும் தேவையாயிருக்கிறது மக்களுக்கு என்று கரெக்டாக தெரிந்தடித்திருக்கிறார்கள்.
தபாங் – A Masala potpouri
டிஸ்கி: தமிழில் எடுத்தால் பாராட்டுவீர்களா? என்று சில பேர் கேட்பார்கள். நிச்சயம் இதற்கு முன் தமிழில் வந்த போக்கிரி போன்ற படங்கள் மசாலா படங்களே.. ஒரு இண்ட்ரஸ்டிங் நேரேஷன் இருந்தால் யார் பார்க்க மாட்டேனென்பார்கள்?
Post a Comment
11 comments:
Very Good Masala Entertainer and Your Review too
parthu vidugiren
ஹம் ஆப்கே.. னில் எப்பிடி இருந்த சல்மான். இப்படி எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்க்கு இருக்கிறாரே.. ஹிஹி.
செம ஹிட் மூவி.....
எனக்கு படம் போர் தலைவரே... ஹீரோயின் சூப்பர்... சல்மான்கான்... சல்கிழமான்கான் ;)
அப்ப சுறா மசாலா படம் இல்லீங்களா ...?
Nalla vimarsanam anna.
:)
நல்ல வேளை....
அங்க யாரும் டிங்கர் பிச்சான், பாரதிராஜா போன்ற வேலை வெட்டி இல்லாத ட்கால்டிகள் இல்லை...
இருந்திருந்தால், ஆமீர் கான் அவர்கள் ரங்தே பசந்தி, பீப்லி லைவ், தாரே ஸமீன் பர், த்ரீ இடியட்ஸ் போன்ற நல்ல படங்களில் நடித்து படிப்படியாக திரையுலகை முன்னே கொண்டு செல்லும் போது, சல்மான் கான் வாண்டட், டபாங் போன்ற குப்பைப்படங்களில் நடித்து திரையுலகை பல படிகள் பின்னே இழுக்கிறார் என்று பேட்டி கொடுத்திருப்பார்...
நீங்களும் லக்கியும் ஒத்துபோகும் படம் இது ஒன்றுதான். வழமையாக நீங்கள் வடக்கு என்றால் லக்கி தெற்க்கு என்பார். இருவருமே புகழ்த்திருப்பதால் கட்டாயம் பார்க்கவேண்டும்
Post a Comment