Kommaram Puli

komaram_puli_heroine_nikesha_patel_wallpapers_03

சில வருஷங்களாய் தெலுங்கு சினிமா கொஞ்சம் நன்றாக இருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாய் நொந்து நோகடித்துக் கொண்டிருக்கிறது. அந்த லிஸ்டில் இந்த படம் கொம்மரம் புலி. இந்த புலிக்கு சொந்தக்காரர் எஸ்.ஜே.சூர்யா. புலியாக வருபவர் ஆந்திர பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவரது பெயிலியர் படமே கோடிக்கணக்கில் வசூல் கொடுக்கும் நடிகர்.

இரண்டு வருடஙக்ளுக்கு ஒரு முறையோ, மூன்று வருடஙக்ளுக்கு ஒரு முறையோ ப்டம் வெளியிடுபவர். மொத்த ஆந்திர தேசமே.. காத்துக் கொண்டிருந்த படம். எனக்கு ட்ரைலர் பார்த்த போதே ஒரு பி கிரேட் படம் இதை விட பெட்டராக இருக்கக்கூடும் என்று நினைத்திருந்தேன். அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது படம்.

ரொம்ப வருஷங்களுக்கு முன் வந்த பனிஷர் என்கிற படத்தின் உட்டாலக்கடியாக ஆரம்பித்து, அப்புறம் தேவையில்லாமல் அய்யப்ப தரிசனம் படமாய் ஆரம்பித்து அவ்வப்போது பக்தி, நாட்டுபற்று ஜல்லியடித்தால் தேறிவிடும் என்று எந்த நம்பிக்கையில் எஸ்.ஜே.சூர்யா நம்பினார். மகாநடிகன் என்கிற படத்தில் ஒரு காட்சி வரும் அதில் இரண்டு இயக்குனர்கள் சத்யராஜுக்கு கதை சொல்வார்கள். அதில் ஒருவர் ஹீரோவுக்கு ஹீரோயினை விட ஒரு வயசு குறைவு.. என்று ஏற்றிவிடுவார். இன்னொருவரோ.. பிறக்கும் குழந்தையே நீங்கதான் சார் என்றதும் பட வாய்ப்பை பெறுவார். அது போல சூர்யா கதை சொல்லியிருப்பார் போலிருக்கு.
pawan_kalyan_komaram_puli_photos_wallpapers_stills_01 முதல் காட்சியில் புலியின் அம்மா காட்டு கோயிலில் என் புருஷனை கண்டு பிடித்து கொடு, என்னை போன்ற போலீஸ்காரன் பொண்டாட்டிக்கே இந்த கதி என்றால் மக்களுக்கு என்ன கதி என்று தனியாய் காட்டில் இருக்கும் அய்யப்பனிடம் கேட்க, உடனே அங்கிருந்து லைட் வர, அம்மா வாந்தியெடுக்க, வயிற்றில் கருவாய் உதிக்கும் புலிக்கு அய்யப்பன் ஆதரவு அளிப்பதாய் ஆரம்பித்த காட்சியை சொல்லும் போது உங்களூக்கு புரிந்து போயிருக்கும் புலி எப்படி கலக்கியிருப்பான் என்று.
pawan_kalyan_komaram_puli_photos_wallpapers_stills_03 கொஞ்சம் கூட கற்பனை இல்லாத காதல் காட்சிகள், நல்ல பாடல்கல் தனியாக் கேட்கும் போது இருக்கும் சுகம் கொஞ்சமும் இல்லாத படமாக்கல். தெளிவில்லாத ஸ்கிரீன் ப்ளே, மூன்றாம் தர சி.ஜி.வேலைகள். மீடியோகேர் ஒளிப்பதிவு, என்று இவ்வளவு மைனஸ் இருந்தும், கொஞ்சம் நேரமாவது உட்கார முடிவதற்கு காரணம் ஒரே ஒரு விஷயம். நான் பார்த்த எஸ்கேப் தியேட்டரின் ஆம்பியன்ஸும், பவன் கல்யாணின் ஒரு சில காட்சிகளீன் பர்பாமென்ஸும்தான். அது கூட என்னை போன்ற பவன் ரசிகரால் தான் ரசிக்க முடியும் மற்றவர்களுக்கு .. வேண்டாம் ஏதும் சொலல் விருப்பமில்லை.

நல்ல வேளை விஜய் இந்த கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். க்ரேட் எஸ்கேப்.

kommaram puli – எலி.

கேபிள் சங்கர்

Comments

உங்கள் தலை எழுத்து! எங்களுக்காக இந்த மாதிரி பாடாவதிப் படங்களெல்லாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

விதி வலியது!
ஆனாலும் இந்த மாதிரி படத்தையும் பார்க்கும் உங்க மன உறுதியை பாராட்டி ஆலயமணி படத்திலே நம்ம சரோஜா தேவி யூஸ் பண்ண ஒரு சோப்பு டப்பா இலவசம்....
jalsa க்கு அடுத்து மறுபடியும் ஒரு மொக்கையா?
R.Gopi said…
// நல்ல வேளை விஜய் இந்த கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். க்ரேட் எஸ்கேப். //

*******

சங்கர் ஜி....

விஜய் இதை விட மொக்கை படங்களில் தான் நடிக்கிறார்...

இது கிரேட் எஸ்கேப்லாம் ஒண்ணும் இல்ல... இதைவிட ஒரு மொக்கை படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பார்..
Madurai pandi said…
காப்பாத்தினதுக்கு நன்றி!!! சுவாமி சரணம்!!
ragu said…
pls avoid these films,or don't post above such films those posts are degrated your rating
R. Jagannathan said…
விமர்சனத்தைப் படிக்கும் போதெ வயிற்றைக் கலக்குகிறதே! ஐயோ பாவம் நீங்கள்! ஆனால் உங்களுக்கு இது தேவை தான் - எந்த மாதிரி படங்கள் எடுக்கக் கூடாது என்று தெரிந்துகொள்ள. ஒரு வேளை படம் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி பெற்றால் இந்த மாதிரியும் படங்கள் தொடரும்.- - R.Jagannathan
DR said…
ரொம்ப நன்றி காப்பத்துனத்துக்கு...

அப்புறம் பாலையா சிம்ஹா அப்புடீன்னு ஒரு படம் நடிச்சாரே. அந்த படத்தையும் பாத்திட்டு வந்து கொஞ்சம் விமர்சனம் போட்டா நல்லா இருக்கும்...
saro said…
kathai ennannu sollave ellaiye cableji
Mohan said…
இந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்து,தியேட்டர் பக்கம் போறதுக்கே பயமாக இருக்கிறது!
தளபதி க்ரேட் எஸ்கேப்....

அண்ணே ராஜ்மெளலி படம் இந்த வருஷம் தானே? காப்பிதானானுல் நல்லா இருந்துச்சு.. சுனில வச்சு இப்படி இரு படம் யார் எடுக்க முடியும்? அவர மாதிரி நம்ம ஊருல யாருமே இல்லைன்னுதான் சொல்லணும்
pichaikaaran said…
cable ji... super..

please update saappaattu kadai
சரியான விமர்சனம்.
விநாயகர் சதுர்த்தி அன்னைக்கி பாமிலியை கூட்டிட்டு போய் ஒரே திட்டு. இதுக்கு ஜல்சா எவ்வளவோ பரவாயில்லை. படம் காமெடியாகவாவது இருந்தது. இந்த படத்து ஹீரோயின் என்னுடைய ரெண்டு வருஷம் வீணா போச்சுன்னு புலம்பியிருக்கிறார் . S.J. சூர்யா டயலாக் விசுவை விட மோசம் ( அதாவது புரியும் ). அனைவரும் நன்றாக நடித்திருந்தும் ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் இன்னும் பல ' +' - லும் ஸ்டோரி இல்லை. பல தியேட்டரில் ஒரே வாரத்தில் படத்தை தூக்கி விட்டார்கள்.
பவன் சிரஞ்சீவி தம்பி என்பதை குறிப்பிட்டிருக்கலாம்.
Anonymous said…
vijai, Hero constume (uniform) paathu venaamunnnu solli iruppaaro... :)
உங்கள் அனுதாபங்களை தெரிவித்த நண்பர்களுக்கும், அன்பர்களூக்கும் மிக்க நன்றி..

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.