Posts

Showing posts from October, 2010

உங்கள் பக்கம்

Image
ஷவர் ஒரு சந்தோஷ சாத்தான் குளியலறைக்குள்  நுழைந்தபின்தான் நியாபகம் வரும் டவல் எடுக்க மறந்தது. உனை அழைத்து கேட்க வெட்கங்களுடனே  எடுத்துக்கொடுத்து மின்னலாய் வெளியேறுவாய். என் இதழ்கள் உன் பெயரை  மெதுவாய் உச்சரிக்க, தயங்கியபடியே உள்நுழைவாய்.  ஷவரின் நீர்துளி  உன்மீது படாதவாறு எச்சரிக்கையுடன் ஒதுங்கி நிற்பாய். உன்னை அருகில்  இழுக்கும் வேலையை கச்சிதமாக என் ஒரு கரம் செய்ய,  மறு கை ஷவரின் திறப்பானுக்கு கட்டளையிடத்தொடங்கும் மேலிருந்து நீர்த்துளி பூவாய் பொழியத்தொடங்க, பூவையின்ஆடைகள் மொட்டவிழ்க்கத் தொடங்கும். உன் ஆடைகள் முழுவதும் நீரால் சூழப்பட நீயோ என்னால் சூழப்படுவாய். முழுக்க நனைந்தபின்  முக்காடு தேவையா என்று  நான் சூசகமாய் கேட்க, முறைத்தவாறே திரும்பி நிற்பாய்.  விடுதலை என்றால்  எனக்கு மிகப்பிடிக்கும். அதை உன் அனுமதியின்றி உன் ஆடைகளுக்கு கொடுப்பேன். உன்னை நோக்கி நான் ஈர்க்கப்படுவதைப்போல நம்மை நோக்கி நீர் ஈர்க்கப்படும். உலகிலேயே நம் இருவருக்கு மட்டுமே மழை பெய்யும் இடம் நம் குளியலறைதான்.  ஆடை தொந்தர...

Baava

Image
பொம்மரில்லுக்கு பிறகு சித்தார்த்துக்கு பெரியதாய் ஏதும் தெலுங்கிலும் சரி, இந்தியிலும் சரி.. ஏதும் குதிரவில்லை. ஓயே என்று ஷாலினி தங்கை ஷாம்லியுடன் நடித்த படம் கொஞ்சம் ஓகே.  கொஞ்சம் கேப்பில் இந்தியிலும் சொல்லும் படியாக இல்லாமல் மிகவும் எதிர்பார்த்த படம் பாவா. படத்தின் கதை ஒன்றும் புதியதில்லை. வழக்கமான சின்ன வயசு ப்ரெண்ட்ஷிப், இரண்டு கிராமம் பகை, கோயிலில்  ஆளுக்கு பாதி, சொந்த மாமாவையே தெரியாமல் காதலிப்பது, ஹீரோவின் அம்மா அந்த பணக்கார வீட்டு பெண், வீட்டிற்கு தெரியாமல் தாலி கட்டிக் கொண்டு அலையும் ஹீரோயின், சின்னத்தம்பி க்ளிஷேக்கள், என்று இந்திய சினிமாவில் எவ்வளவு டெம்ப்ளேட் விஷயங்கள் இருக்கிறதோ.. அவ்வளவு விஷயங்கள் படம் முழுக்க இருக்கிறது. சித்தார்த் என்னதான் தன்னுடய ப்ர்மாமென்சால் பரபரப்பாக போகும் திரைக்கதை என்று காட்ட நினைத்தாலும், நகரவே நகர மாட்டேன் என்கிறது திரைக்கதை என்கிற வஸ்து.  சமீப காலத்தில் இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸ பார்த்ததேயில்லை. சக்ரியின் இசையில் ரெண்டு பாட்டுகள் தேவலாம் ராஜேந்திர ப்ரசாத் சித்தார்த்தின் அப்பாவாக வருகிறார். என்.டி.ஆரை இமிடேட் செய்கிறார். பெ...

எண்டர் கவிதைகள்-17

Image
தொடர் ஹாரன் சத்தம் கேட்கும் டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம் புணர்ந்து போட்ட பெண் போலிருந்தது முட்டை தோசை குஷ்பூ இட்லி இட்லி போடும் குண்டு பெண் பேக்கிரி உனக்கு உங்கக்கா எனக்கு அய்யோ.. ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ? உள்ளே போனது நெப்போலியன் வெளியே வந்தான் அலெக்ஸ்ஸாண்டர் பல்லில் சிக்கிய சிக்கன் துண்டு வேறொருவனோடு ஓடிப் போன காதலி போடாங்க.. அவ என்ன பெரிய பு...யா? புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன் அடுத்த நாள் காலை தயாராய் இருந்தது சலவை செய்த முகமூடியோடு. கேபிள் சங்கர்

ப்ளூ பாக்ஸ் ஸ்ரீதர்

Image
Blue Box  - K.R. Sridhar கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே .அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி?என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் ...

இசையெனும் “ராஜ’ வெள்ளம் - 6

இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் கமல். இளையராஜாவின் பரம விசிறி. முக்கியமாய் கமல் படத்தில் வரும் ராஜாவின் பாடல்களுக்கு ஒருவிதமான முக்கியத்துவம் இருக்கவே செய்யும். கமலின் ஆரம்பகால படங்களிலிருந்து, ஹேராம் வரை இருவருக்குமான பிணைப்பு அவர்கள் இணைந்து உருவாக்கும் படைப்பில் தெரியும் அதில் முக்கியமானது கமலின் ராஜ பார்வை. கண் தெரியாத ஒரு இசைக் கலைஞனின் காதலை சொல்லும் படம். முழுக்க, முழுக்க இசையோடு பயணித்த படம். வழக்கமாகவே ராஜாவின் இசை கோர்வையில் வயலினும், புளூட்டும் பின்னி பெடலெடுக்கும். வயலின் கலைஞர் பற்றிய படம் பின்பு கேட்கவா வேண்டும். இப்படத்தில் முக்கியமாய் ஒரு ஆரம்பக் காட்சியில் பார்வையற்றோர் பள்ளியில் கமல் வயலின் வாசிப்பதை போல ஒரு காட்சி ஆரம்பிப்பதாய் ஞாபகம். அதில் ஒரு பெரிய பி.ஜிஎம். ஸ்கோர் செய்திருப்பார் இளையராஜா. அதே ஸ்கோரை படத்தின் பின்னணியிசையிலும் பயன்படுத்தியிருப்பார். படத்தில் வரும் முக்கிய பாடலையே பின்னணியிசை கோர்வையாய் பயன்படுத்துவதை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ராஜா தான் என்று ஞாபகம். ராஜபார்வையில் பாடல்களிலாகட்டும், பின்னணியிசையிலாகட்டும...

நிதர்சன கதைகள்-24- தனுகு கொண்டாலம்மா..

Image
“உங்கள் கதையை படித்துவிட்டு என் மனைவி உங்களை பற்றி திட்டியதை சொன்னால் தூக்கு போட்டுக் கொண்டு விடுவீர்கள்.” என்ற ராஜாராமனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை பார்த்து எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது. ராஜாராமன் என் நண்பனுடய நண்பன். பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர். அவருடய கெஸ்ட் அவுஸில் தான் அன்றைய சாராய, சைட் டிஷ்ஷுகளுடனான இந்த பிரதான சந்திப்பு நிகழ்ந்தது. எடுத்து அடித்த முதல் ரவுண்டிலேயே இப்படி ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. சில சமயங்களில் போதையின் போது பாராட்டுதலை விட இம்மாதிரியான கிரிடிஸிசம் நிறைய போதை தரும். ஒரு மிடில் ஏஜ் மாது அவனை விட குறைந்த வயதுடையவனுடன் ஏற்பட்ட உறவிற்கு காதலா? காமமா? என்று குழம்பி, காமத்தில் முடிக்கலாமா? என்று முடித்த கதையை பற்றித்தான் திட்டிக் கொண்டிருந்தார். “ஒரு விஷயத்தை படித்தால் அதனால் பல நல்ல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டும். ஆனால் உங்கள் கதை என்ன செய்கிறது தெரியுமா? நாம் ஏன் அம்மாதிரி தவறை செய்யக்கூடாது என்று தூண்டுகிறது? இது சமுதாயத்தை கெடுக்காதா..? ”புத்தகம் படித்து ...

கொத்து பரோட்டா-25/10/10

மீண்டும் பதிவுலகம் தனி மனித தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டது. இனி ஆளாளுக்கு ஆதரித்தும், எதிர்த்தும், நடுநிலை கொண்டும் பதிவு போடுவார்கள். எங்கு பார்த்தாலும் அதை பற்றி பேசி, எழுதி, டீக்கடை சந்திப்புகளில், எங்காவது குழுமினால் அதை பற்றி  பேசி மாய்ந்து போவார்கள்.  பின்பு வேறொரு நபர், வேறொடு தனி நபர் தாக்குதல் என்று போய்க் கொண்டேயிருக்கும். அட விடுங்கப்பா.. லூசுல.. $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ வெள்ளியன்று இரவு பரிசல்காரனை சந்திக்க பிரசாத் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் முடித்து போயிருந்தேன். நீயா நானா? படப்பிடிப்புக்காக மனிதர் வந்திருந்தார். வழக்கமான ப்ளா..ப்ளா..வாக நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நானும் நண்பர் கே.ஆர்.பியும் இன்னொரு பக்க செட்டில் ஒரு வினையில் ஷீட் விரித்து படுத்து கொண்டிருந்தோம். அப்போது அங்கே ஒருவருக்கு டிவி பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் அஹா..ஓஹே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார் டிவி வென்றமைக்கு. பாவம் அவருக்கு தெரியாது அந்த பரிசு அறிவிப்புக்கான அட்டையில் உள்ள் டிவி கூட கிடைக்காது என்று. நல்ல வேளை...

உங்கள் பக்கம்

thirumanam நமக்குத்   திருமணமாகும் ... ஒவ்வொருநாளும்   நம்   திருமணநாளாய் ... ஒவ்வொரு   இரவும்   நம்   முத ........,,, நாம்   சந்தோஷமாக   வாழ்வோம் ! ஆசை   ஆசையாய்   அருகினில்   வருவாய் ... நான்   நெருங்க   நெருங்க ... வெட்கமாய்   விலகிப்போவாய் ... வீம்பாய்   நான்   திரும்பிப்படுக்க ... வந்தமர்வாய்   வெகுஅருகில் ! விடியும்   வரையிலும்   தொடர்ந்திடும்   விளையாட்டு ... விடியும்   முன்   விழிகள்   தழுவும்   உறக்கம் ... ஒவ்வொரு   விடியலும்   புதிய   விடியலாய் ! நீ   எழுப்ப   வேண்டும்   என்பதற்க்காய் ... அலாரம்   வைக்க   அவசியமற்றெழும் ... என்   வழக்கம்   தாமதிக்கும் ! முழுதும்   விடிந்தப்   பின்   எழுப்ப   வருவாய் ... உனைபற்றி   எதுவுமே   தெரியாதே   எனக்கு ... எனைப்பற்றியும்   எதுவுமே   தெரியாதே   உனக்கு ... எப்படி   எழுப்பப்   போகிறாய்   எனை ! ...

சாப்பாட்டுக்கடை

Image
சாப்பாட்டுக்கடை எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டேயிருந்தாங்க.. கடந்த மூணு மாச காலமா ஷூட்டிங் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் வெளியில் சாப்பிடுவதற்கான வாய்ப்பேயில்லாமல் போய்விட்டது. ஷூட்டிங் சாப்பாடு வெளியிலிருந்து பார்பவர்களுக்கு கன ஜோராய் பெரிய ஆச்சர்யமாய் இருக்கும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால். நாம் சாப்பிடும் அளவு குறைந்து ஒரு மந்த நிலையை உருவாக்கிவிடும். சரி அதை விடுங்கள் அதை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம் அவ்வளவு விஷயம் இருக்கிறது. சென்னையில் நார்த் உஸ்மான்ரோடில் ஜீதமிழ் டிவிக்கு எதிரே உள்ள சோமசுந்தரம் பார்க் அருகில் பார்பக்யூ நேஷன் என்ற ஒரு உணவகம் உள்ளது. பெயர் மட்டுமல்ல உள்ளே அவர்களது சர்வீஸும் வித்யாசமாய் இருந்த்து. நமது டேபிளின் நடுவே ஒரு பெரிய ஓட்டை இருக்கும் நீங்கள் உட்கார்ந்தவுடன் அதில் ஒரு கரி அடுப்பு க்ரில்லோடு நமது டேபிளின் நடுவே உட்கார, அதில் இரும்பு கம்பியில் சொருகப்பட்ட, சிக்கன், மட்டன், மற்றும் வெஜ் அயிட்டஙக்ள் எல்லாவற்றையும் , குமுட்டி அடுப்பின் மேல் தனலில் வைக்க, அதன் மேல் ஊற்றுவதற்காகான சாஸேஜுகள் எல்லாம் நாமே அதன் மேல் தடவி ...

எண்டர் கவிதைகள்-16

Image
  தூங்குமூஞ்சி மரங்கள் தூரத்தில் தெரியும் ட்யூப்லைட் எழுத்து தெரியாத சிவப்பு போர்டு எகிறிக் குதித்த காம்பவுண்டுகள் சிதறிக் கிடக்கும் ப்ளாஸ்டிக் க்ளாசுகள் உள்ளங்கால் முதல் உச்சி வரை ஏறும் முட்கள் ஆங்காங்கே வழுக்கும் ரப்பர் குப்பைகள் சந்து அறைகளின் வழியே கசியும் குண்டு பல்பு வெளிச்சம் "டைமாச்சு சார் சீக்கிரம்"குரல்கள் காலி டேபிள்களில் ஆல்கஹால் வீச்சம் சிந்துகிறது மீதித் திரவம் கையறு நிலையில் நான்... கேபிள் சங்கர்

Brindavanam

Image
முதல் தேதியில் தெலுங்கு எந்திரன். அடுத்த வாரம் மஹேஷ்பாபுவின் கலேஜா, இந்த வாரம் ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம். என்று தெலுங்கு சினிமா பரபரப்பாய் தான் இருக்கிறது. அநேகமாய் அடுத்த வாரமோ, அதற்கு அடுத்த வாரமோ நாகார்ஜுன் வருகிறார் என்று நினைக்கிறேன். இப்படி கோலாகலாமாய் இருக்கிறது தெலுங்கு படவுலகம். அதே போன்ற ஒரு கோலாகலமான, கொண்டாட்டமான படம் தான் பிருந்தாவனம். கிருஷ்ணா என்கிற கிருஷ் ஒரு பில்லியனர் முகேஷின் ஒரே செல்ல மகன். கிருஷ்ஷுக்கு ஒரு பழக்கம் என்னவென்றால் காதலர்களை எப்பாடு பட்டாவது சேர்த்து வைப்பது. கிருஷ்ஷுக்கு ஏற்கனவே சமந்தாவுடனான காதல் இருக்க, சமந்தா தன் சிநேகிதியான பூமிக்கு அவளுடய அப்பா பிரகாஷ் ராஜ் அவளுக்கு பிடிக்காத மாமா மகனை திருமணம் செய்து வைக்க ப்ளான் செய்வதால் தனக்கு ஹைதராபாத்தில் ஒரு பாய் ப்ரெண்ட் இருப்பதாக பொய் சொல்லிவிட்டாள். ஆனால் இப்போது அவளுடய அப்பா பூமியின் பாய்ப்ரெண்டை கூட்டி வர சொல்லி விட்டார். அதனால் கொஞ்ச நாள் நீ அங்கு போய் அவளுடய பாய் ப்ரெண்டாக நடிக்க வேண்டும் என்று சொல்லி பூமியுடம் அனுப்புகிறாள். ஒரு கட்டட்தில் பூமி, கிருஷ்ஷை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள்....

தொட்டுப்பார்

Image
ரேஷன் கார்டை வைத்து ஜாமீன் கொடுப்பதையே வாழ்க்கையாய் கொண்டிருக்கும் மகாராஜா (எ) மகா.  ஒரு நாள் மகா ஒருவனுக்கு ஜாமீன் கொடுக்க, அதனால் அவன் வாழ்க்கையே தலைகிழாக மாறிப் போகிறது. இது தான் தொட்டுப்பார் வித்யார்த்தும், லக்‌ஷனாவும் அறிமுகங்கள். வித்யார்த் கூத்துப்பட்டறை தயாரிப்பாம். அனுஹாசனின் சாவுக் காட்சியில் நல்ல நடிப்பு தெரிகிறது. சண்டைக்காட்சிகளிலும், நடனங்களிலும் இன்னும் பயிற்சி தேவை. இவருக்கும் எஸ்.ஐ. ஹனீபாவுக்குமான உறவு இண்ட்ரஸ்டிங்கான ஒரு கெமிஸ்ட்ரி. அனுஹாசனும், அழகம் பெருமாள் கேரக்டர்கள் ஒரு குழப்ப லிங். கதாநாயகி லக்‌ஷணாவைவிட லட்சணமாய் நிறைய பெண்கள் படத்தில் வளைய வருகிறார்கள். நடிப்பதற்கோ, இல்லை சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லாத ஒரு கேரக்டர். வித்யார்த்தின் டாஸ்மாக் சப்ளையர் நண்பனாக நண்டு ஜெகன். பல இடங்களில் ஓவர்லாப்பில் டயலாக்குள் அபாரம். வில்லனாக ரமணா.. அதிரடியான கமிஷனர் குழந்தைகளையே கடத்தி மிரட்டும் அளவுக்கான ஒரு டெரர் கேரக்டர் என்று காட்டுகிறார்கள். ஆனால் ஒரு லோக்கல் வில்லன் போல ஆவூனென்றால் ஏன் எதற்கு என்று தெரியாமல் ஆட்களை அடித்தும், ஆசனவாயில் குச்சியை குத்தியும் கொல்க...

கொத்து பரோட்டா-18/10/10

இந்த வார சந்தோஷம் சென்ற ஞாயிறு கல்கி இதழுக்காக நான் எழுதிய எந்திரன் விமர்சனம் வெளியானது. அவர்களுக்காகவே புதிதாக எழுதிய விமர்சனத்தை படித்துவிட்டு போனிலும், நேரிலும் என்னை பாராட்டிய நண்பர்கள், அனைவருக்கும் என் நன்றிகள். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& இந்த வார வருத்தம் கடந்த சில வாரங்களாகவே ஒரு அம்மணி. ஏதேதோ பஞ்சாயத்துகளை இழுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். தொடர் படப்பிடிப்பு காரணமாய்  நான் எதையும் பார்க்கவில்லை. சென்ற வாரம் என்னையும் இன்னும் சில பதிவர்களை தனிபட்ட முறையில் சாட்டுகளில் தாந்தோன்றி தனமாய் பேசியிருப்பது அநாகரீகத்தின் உச்சமாய் இருக்கிறது. அதிலும் சினிமாக்காரர்கள் என்று வேறு பொதுப்படுத்தி சொல்லிய...