கொத்து பரோட்டா-11/10/10

டிகர் நடிகைகளுக்கு இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் கற்றுக் கொள்ளூம் ஆர்வம். எங்கள் படத்தில் நடிக்கும் நடிகைக்கு இது இரண்டாவது படம். அட்சரம் கூட தமிழ் தெரியாது. மிகவும் இயல்பாக பழகக் கூடியவர். எனக்கும் இந்தி தெரியுமென்று இப்போதுதான் தெரிகிறது. என்னுடன் இந்த இருபது நாட்களில் பேசி, பேசி தமிழ் பேசக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் ஒரு பதிவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார். நான் ஒரு ஷாட்டுக்கு வேண்டிய ஜுனியர் ஆர்டிஸ்டுகளை கூப்பிடப் போக, நடிகையோ நான் இருக்குமிடத்தில்தான் ஷாட் என்று நினைத்து என் பின்னாலேயே வர, நிழலில் தூங்கிக் கொண்டிருந்த ஜுனியர் ஆர்டிஸ்ட் பெண்களை எழுப்பி ரெடியாகச் சொல்ல, பின்னால் வந்த நடிகை “என்ன எங்கே ஷாட்?” நான் வேறு ஒரு இடத்தை காட்டினேன். “அப்போது நீ என்ன செய்கிறாய் இங்கே?” என்றார். “உன் சக நடிகர்களை எழுப்பிக் கொண்டிருக்கிறேன். ஏன்?” என்றேன். “இல்லை. ஒரு வேளை தனியாய் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்டிடம் Flirt செய்கிறாயோ என்று நினைத்தேன்” என்று சொல்ல.. நான் தயங்காமல் “நானெப்போதும் ஜூனியர் ஆர்டிஸ்டுகளிடம் Flirt செய்வதில்லை. ஹீரோயினிடம் மட்டும்தான்” என்றதும். ஒரு கணம் சட்டென கூர்ந்து கவனித்து மத்தாப்பாய் சிரித்தாள். கூட இருந்த பதிவரின் காதில் புகை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நிறைய பேர்  அவியல், கொத்து பரோட்டா போல தொகுப்பு விஷயங்களை வித்யாசமான தலைப்புகளில்  எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சில பேர் அதில் மிக நயமான விஷயங்களை எழுதுகிறார்கள். கவிதை, இலக்கியம், சினிமா, இல்லாவிட்டால் என்னை போல எத்தையாவது எழுதி டகால்டி செய்வது வரை. ஆனால் சில பேர் தினத்தந்தி பேப்பரை எடுத்து வைத்துக் கொண்டு அதில் வரும் செய்திகளையே எடுத்து மீண்டும் அதை ரீபப்ளிஷ் செய்கிறார்கள். ஒரு பரபரப்பான விஷயம் குறித்து தம் கருத்தை சொல்வதில் தவறில்லை. ஆனால் எப்போது பார்த்தாலும் தினப்பத்திரிக்கை செய்திகளை போடுவதில் என்ன லாபம். அதைத்தான் தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோமே..? ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்.. அப்புறம் அவங்க அவங்க இஷ்டம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
இந்த வார அநியாயம்
எல்லா தியேட்டர்களும் எந்திரன் படத்திற்கு 200,300 என்று டிக்கெட் வைத்து விற்க, சென்னையில் உள்ள மல்ட்டிப்ளெக்ஸுகள் மட்டும் அவர்களுக்கான அதே விலையான120க்கு விற்பனை செய்தது. ஆன்லைன் மூலம் புக் செய்வதற்கு ஐநாக்ஸ் வழக்கம் போல் 10 ரூபாயும், சத்யம், எஸ்கேப் இரண்டும் 5ரூபாயும், டிக்கெட் நியூ டாட்காம் போன்ற வெளி வெப்சைட்டுகள் மூலம் ஆன்லைன் புக்கிங் செய்யும் இணையதளங்கள் 15 ருபாயும் வாங்கியது. ஆனால் பி.வி.ஆர். மட்டும் ஆன்லைன் புக்கிங்குக்கு ரூ.30 சார்ஜ் செய்கிறது. இது எல்லா படத்திற்கும் பொருந்தும். தமிழ் நாட்டில் மணிநேரத்துக்கு பத்து ரூபாய்க்கும் மேல் பார்க்கிங் சார்ஜ வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது இவர்கள்தான். ஆன்லைனில் புக்கிங் செய்வதால் இவர்களூக்குதான் செலவுகள் குறைகிறது. அதுவே இவர்களுக்கு லாபம் தான். ஆனால் அதிலும் இவர்கள்காசு பார்க்க ஆரம்பிக்கிறாரக்ள். வெளிநாடுகளில் ஒரு சில வெப்சைட்டுகளின் மூலம் புக் செய்ய ஒரு டாலர் வரை சார்ஜ் செய்கிறார்கள். பின்பு தியேட்டரில் அதற்கு பதிலால பாப்கார்னோ, அல்லது டிரிங்குகளோ அதில் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது. இங்க யாரும் கேட்க மாட்டேன்கிறாங்களே..?ம்ஹும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
முழுக்க, முழுக்க, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம். அதற்கான ப்ரேமிங் அருமை. லைட்டிங்கில் சின்ன சின்ன காம்பரமைஸ் தெரிந்தாலும். க்யூட்டான லவ்ஸ்டோரி.. மிக இயல்பான நடிப்பு, இரண்டு பேரோடதும். மிக இயல்பான வசனங்கள், பின்னணியில் வரும் ப்ரிட்டோவின் காதல் பாடல் எல்லாமே படத்திற்கு பலம். வாழ்த்துக்கள் ரம்யா ஆனந்தி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்

இந்த இரண்டு  விளம்பரங்களின் முடிவில் வரும் பஞ்ச்கள் அட்டகாசம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்
காலித்.. இந்த பெயர் சுமார் பத்து வருடஙக்ளுக்கு உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகரக்ளை கட்டிப் போட்ட குரல். மொழி புரியாமலேயே மயங்கி போய் கிடக்க வைக்கும்  மாயக்குரல் காலித்துடையது. இந்த பாட்டை இந்தியாவின் அத்துனை மொழி சினிமாவிலும் சுட்டு போட்டிருக்கிறார்கள். ஹாண்டிங் வாய்ஸ். இவரை பற்றி சாரு கூட எழுதியிருக்கிறார்.ஆ.வியில். ராய் எனப்படும் இசை வடிவில் முக்கியமான ஒரு கலைஞர். ஏற்கனவே கேட்டவர்கள் மீண்டும் கேட்டு பார்த்து மகிழுங்கள், கேட்காதவர்கள்.. ஸ்டார்.. மியூசிக்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார கொடுமை
சவுதி அரேபியாவில்
திருமண பதிவாளராக வேலை பார்க்கும் ஒருவர் 12 வயதேயான ஒரு பெண் குழந்தையை திருமணம் செய்திருக்கிறார். இவ்விஷயம் எப்படி வெளியே வந்தது என்றால் அப்பெண் குழந்தையுடன் முதலிரவு கொண்டாட நாள் பிக்ஸ் செய்வதில் தான். அப்பெண் குழந்தையின் தாய் இன்னும் ஒரு மாதம் கழித்துதான் முதலிரவு வைக்க வேண்டுமெ என்று சொல்ல, அதற்கு மாப்பிள்ளை இல்லை இல்லை இன்றே வைக்க வேண்டும் என்று தகராறு செய்ய, ஒரு வழியாய் இரண்டரை மாதம் கழித்து முதலிரவு என்று முடிவு செய்துவிட்டார்களாம். பெண் என்று வந்துவிட்டாலே உடலுற்வுக்கென்று தனி மெச்சூர்ரிட்டி எல்லாம் தேவையில்லை. அவள் வயதுக்கு வரும் நாள் முதலே தயாரானவள் என்கிறார் இந்த மாப்பிள்ளை. என்ன கொடுமை சார். இது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார அறிமுகம்
www.thangameen.com என்றொரு இணையதளத்தை திரு.பாலு மணிமாறன் என்கிற சிங்கை நண்பர் ஆரம்பித்திருக்கிறார். இதில் தமிழ் பத்திரிக்கைக்கான அத்துனை அம்சங்களையும் தர முயன்றிருக்கிறார். என்பது சதவிகிதம் சிங்கை பதிவர்கள், எழுத்தாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் நம்ம சாருவும் எழுதுகிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
இந்த வார தத்துவம்
நான் என் நேரத்தை கொன்று கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என் மீது பொழியப் போகும் அர்த்தமுள்ள சந்தோஷ தருணங்களுக்காக- பில் வாட்டர்சன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
அடல்ட் கார்னர்
ஒரு சிறிய விஷயம்
கையில் பிடித்தால் நீளும்
பெண்களின் மார்புகளுகிடையே ஓடும்
ஒரு சின்ன ஹோலிலே நுழைந்துவிடும்
அது என்ன..?
கார் சீட் பெல்ட்
இதை தவிர வேறு எதையாவது நினைத்தால் கம்பெனி பொருப்பல்ல..

இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோரான தம்பதிகள் குழந்தைகளுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் மூடு வந்துவிட, ஒருவருக்கொருவர் சிக்னல் கொடுத்துக் கொண்டு, “பசங்களா.. நீங்க ரெண்டு பேரும் டிவி பார்த்துட்டு இருங்க. அப்பாவும் அம்மாவும் ரூம்ல ஒரு வேலை இருக்கு வ்ந்திடறோம்” என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் போவதை பார்த்த முதல் பையன் ஓட்டை வழியாய் எட்டி பார்த்துவிட்டு தன் தம்பியையும் அழைத்துக் காட்ட அவனையும் கிளப்பினான். கிளம்பும்முன் ‘ஒரு விஷயம் ஞாபகம் வச்சிக்க. நாம் இப்ப பாக்க போறது நாம நம்ம கட்டை விரலை சூப்பினத்துக்காக அடிச்ச அதே அம்மாவைத்தான்” என்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..கேபிள் சங்கர்

Comments

எனக்குத் தன் சுடு சோறு
vaazhthukkal.
இன்றும் கொத்து நல்லா வெந்திருக்கு எனது சோற்றை வைத்துக் கொண்டு கொத்தைத் தாங்க...
super kotthu may iknow ur film name? na..
Sheikmohamed said…
வழக்கம் போல் முதல் பாலிலே சிக்சர்.
ம்ம்ம் தொடரட்டும் தொடரட்டும்....போற போக்கில் ப்ளாக்கர்களுக்கும் ஒரு யோசனை சூப்பர்....
Romeoboy said…
தலைவரே யாரு இந்த Regina Cesandra பொண்ணு?? நிறைய குறும்படம்களில் நடிச்சி இருக்கே. அழகாவும் இருக்கா படமும் அருமை .
pichaikaaran said…
"அப்புறம் அவங்க அவங்க இஷ்டம்"

யாரை சொல்றீங்க... அடுத்த அக்கப்போர் ஆரம்பமா?
மோனி said…
ரைட்டுங்ணா...
www.thangameen.com - நல்லதொரு அறிமுகம்..
கூட இருந்த பதிவரின் காதில் புகை. //


யுரேக்கா....யுரேக்கா..
அட ஆர்க்கிமிடீஸ் பாஷையில் சொன்னேன்பா ;)
en college days la Khalid romba famous anne....

Gnabagam irukka...Karna movie la Mano apdiye ivar mariye kural mathi paduvar....

Mmm...good nostalgia,

http://www.tamilisai.net/tamilsongs/Karna_Songs.htm#
nandri cable sir
khaled in "didi" ennudaya favourite athuvum antha songin finish miga arumayana interlude lapping. oh superb.
mudinthal algeria band padagar "TAKFARINAS" in "ZAAMA ZAAMA" song kooda ungal pathivil podavum. romab paer antha songai ketturkka mattargal. romba jolly yana thullal isayudan dance song nandraga irukkum aanulum comparatively khaled in haunting voice didi scores more.
anbudan
sundar g (all blog vasagan only)
a said…
தல: போற போக்குல சங்க ஊதிட்டீங்க...
தராசு said…
பதிவர்களுக்கு நல்ல அட்வைஸ்.

தத்துவமே கவிதை மாதிரி இருக்குதே, ஆச்சரியக் குறி....
ஆனாலும் உங்க‌ளுக்கு அவ‌ங்க‌ அல‌வுக்கு புக‌ல் பெற‌ முடிய‌லைன்னு பொறாமை கேபிள்... கொஞ்ச‌நாளைக்கு முன்னால‌ ஒரு இணைய‌ எழுத்தாள‌ர் (இவ‌ர் எலுத்தை ப‌டிச்சிங்க‌ன்னா டான் பிர‌வுன் அக‌த்தா கிரிஸ்டி எல்லாம் அவ‌ரு எலுத்துல‌ ச‌ப்ளாங்கால் போட்டு குந்திகினு இருப்பாங்க‌, ச‌ர‌ஸ்வ‌தி தேவி கிடார் ஸாரி வீணை வாசிச்சிட்டு இருப்பாங்க‌) அவ‌ரு ந‌ம்ம‌ ப‌ரிச‌ல்கார‌ன்ட்ட‌ கேட்டாராம் "ஓ ப‌ரிச‌ல்கார‌னா? என் ஃப்ர‌ண்டு கூட‌ சொன்னாரு, ப‌ரிச‌ல்கார‌ன்னு ஒருத்த‌ன் ந‌ல்லா எழுதுரான்னு" அப்ப‌டின்னு...

ப‌ரிச‌லையே அவ‌ன் இவ‌ன் (பாலா ப‌ட‌ம் இல்லை இது) அப்ப‌டின்னு பேசுற‌வ‌ங்க‌ மேல‌ உங்க‌ளுக்கு எல்லாம் பொறாமை சார்...
anujanya said…
Di Di was a big hit in mid-90s in MTV India. Repeatedly showed it like they do now for Enthiran clippings in Sun TV :)

"காலிட் நசுருதீன் ஷாவின் தம்பி; அந்தப் பெண்களின் பளப்பள ஆடை பாம்பின் சட்டையைக் குறிக்கிறது; ஒரு ஆணின் வளைந்த பின்னல்; கண்ணாடியில் தெரியும் யுவதியின் முகம்; என்று பல்வேறு குறியீடுகள்" என்று என்னிடம் ஜல்லி அடித்த மகானுபாவரை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன் :)

அனுஜன்யா
damildumil said…
//தினப்பத்திரிக்கை செய்திகளை போடுவதில் என்ன லாபம். அதைத்தான் தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோமே..? ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்.. அப்புறம் அவங்க அவங்க இஷ்டம்//

நீங்க கூட தான் ஏ ஜோக்ஸை நெட்ல இருந்து உருவி கொத்து பரோட்டவுல போடறீங்க.ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்..
Vathiyar Paiyan said…
cable Ji,

Super A jokes..........
இந்த வார குறும்படம்
அருமை
Suthershan said…
கூட இருந்த பதிவரின் காதில் மட்டும் அல்ல எங்கள் காதிலும் தான் புகை. வாழ்க உமது ஜொள்ளு...
Katz said…
அண்ணே! படம் வந்து நடிகைய பார்த்த அப்புறம் நான் புகை விடறேன்.

நீங்க சொல்ற நியூஸ் பேப்பர் மேட்டர், நாந்தான்னு நினைக்கிறேன்.
எழுத மேட்டர் கிடைக்காததால் தான் அந்த மாதிரி. உங்க அறிவுரைக்கு ரொம்ப நன்றி. இனி நிப்பாட்டிகிறேன்.
Gnabagam irukka...Karna movie la Mano apdiye ivar mariye kural mathi paduvar....
////////////////////

குரல் மாத்தி எல்லாம் இல்லை, கர்ணா பாட்டு காலித்தோட "CHEBBA" பாட்டோட அட்டக்காப்பி.
Unknown said…
ஓகே ..ஓகே ...
@puthiya manitha
@mathi sudha
நன்றிகள்
@நிக்கிஜான்
நன்றி

@ரோமியோ
அந்த பெண் ஏறக்னவே ஒரு படத்தில் கதாநாயகியாய் நடித்துவிட்டு, விலகிவிட்டார். நான் எடுக்க விருந்த படத்தில் அவரைத்தான் கதாநாயகியாய் செலக்ட் செய்திருந்தேன். இப்போதுதிரும்பவும் சான்ஸ் இருக்கு.

@பார்வையாளன்
யாரையும் குறிப்பிட்டு சொல்லைங்க.. நான் இம்மாதிரி நிறைய பார்க்கிறேன். அதனை சொன்னேன்.

@மோனி
ஓகே
@கானாபிரபா
அவரில்லை
:))

@ரமேஷ்..

நன்றி

@ஸ்ரீநாராயணன்
நன்றி

@ரசனை
நன்றி

@வழிப்போக்கன்
யாருக்கு..?
@தராசு
ஏதோ தோணுச்சு சொன்னேன் என்னண்ணே ஆளையே காணம்?

@வெண்பூ
யாரு வெண்பூ அது.?

@அனுஜன்யா
ஆஹா.. தல கம்பேக்கா.. சந்தோஷம்
@டமால் டுமீல்
நான் என்னைககாவது நான் கண்டுபிடிச்சு ஏ ஜோக் எழுதுறேன்னு சொல்லியிருக்கேனா..? வேணுமின்னா ஒண்ணு சொல்லிக்கலாம்.. தமிழ்ல ட்ரான்ஸுலேட் பண்றேன்.. நன்றி..
@நர்சிம்
அஹா..

2ராஜகோபால்
நன்றி

@சுதர்சன்
ம்..

@பொன்கார்த்தி
:)

@காட்ஸ்
உபதேசத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி..:)

@பாண்டம் மோகன்
ஹி..ஹி
@கே.ஆர்.பி.செந்தில்
ஏன் போன் எடுக்கலை..?
Thamira said…
வழக்கம் போல கொ.ப சிறப்பு. கேம்ஸ் எனக்கு கொள்ளைப்பிரியம் எனினும் ஆட்ஸ் அவ்வளவாக ரசிக்கவில்லை.
Thamira said…
வழக்கம் போல கொ.ப சிறப்பு. கேம்ஸ் எனக்கு கொள்ளைப்பிரியம் எனினும் ஆட்ஸ் அவ்வளவாக ரசிக்கவில்லை.
அந்த குறும்படம் மிக அருமை
அடல்ட் சமாச்சாரம் சூப்பருங்கோ.....
என்ன கொடுமை (சங்கர) நாராயணன்.... :-)
கிசுகிசு மத்தவங்க காரியம் பண்ணினவங்களைப் பத்தி சொல்றது... இங்க காரியம் பண்ணினவர் புகைவிட்டவரைப் பார்த்து சொல்லியிருக்கிறீர்கள்...
இன்னும் வசனமெல்லாம் அதே ரேஞ்சுலதான் போகுதா தலைவரே!!! :-))
Anbu said…
Cable,

Sappatukadai ena achu. You dont go out for food nowadays???

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.