முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது.
நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல, அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்பரை அவருடன் விட்டு விட்டு, நண்பர் ஒருவர் கொடுத்திருந்த 1.5லிட்டர் அழைத்ததால், அவசர அவச்ரமாய் வெளியே வந்த போது, நடை பயின்ற பெண் இப்போது நைட்டியில் நடந்து கொண்டிருந்தாள்.
முதல் இரண்டு ரவுண்டுகளை முடித்து சாப்பிடுவதற்காக, வைரமாளிகைக்கு வந்து மல்லிகைபூ பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டு கோழியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, விட்டோம் குற்றாலத்துக்கு வண்டியை.. சுமார் 12 மணிக்கு போய் ரூம் போட்டுவிட்டு உடனடியாய் குளிப்பதற்கு கிளம்பினோம். ஆமாம் நடு இரவு 12 மணிக்கு தான் அப்போது தான் கும்பல் இருக்காது என்று உடன் வந்த ரவி சொன்னார். நேராக பழைய குற்றாலத்துக்கு போய் அங்கே கொஞ்சம் தொண்டையை நினைத்து கொண்டு, சோவென கொட்டும் அருவியில் போய் நின்றவுடன், உடலெல்லாம் சில்லிப்பு பரவி, ஊளே போயிருந்த அதுவும், வெளியே மேலிருந்த கொட்டிய இதுவும், சேர்ந்து உடலை ஒரு விதிர்ப்பு விதிர்க்க, குளிர் உடலை உலுக்க, அதை அடக்க, குடு குடுவென அருவிக்குள் ஓடி நின்றவுடன், சில நொடிகளில் குளிர் விட்டு போக, தலை மேல் தடதடவென் கொட்டும் அருவி மனதை உற்சாகபடுத்த குற்றாலம்.
விடிய விடிய 1.5லிட்டர் காலியாகும் வரை பழைய அருவியிலும், மெயின் பால்சிலும் குளிக்க, எண்ணெய் தேய்த்து வ்ந்த ஆட்கள் எல்லாம் அருவில் குளித்துதான் உடலில் உள்ள எண்ணெய் போகிறது என்று நினைத்தால் அது கற்பனை.. இவர்கள் குளிக்கிறேன் பேர்விழி என்று உள்ளே புகுந்து நம் உடலில் தடவி விட்டு போவது தான் நிஜம். வந்தவர்கள் பார்க்கும் போது நானெல்லாம் நாகேஷ் என்று தோன்றியது.
அடுத்த நாள் பாலாறு என்கிற் இடத்திற்கு போனோம். கேரளாவின் பார்டரில் இருக்கிறது. அங்கே செக் போஸ்ட் ஆட்கள், தமிழ்ர்களை நடத்திய விதம் மிக கொடுமை, அங்கே கொஞ்ச்ம் போராட்டம். பின்பு, பாலாறு.. ஆது ஆறு கிடையாது பாலருவி.. சுமார் 70-80 அடி உயரத்திலிருந்து வெறி கொண்டு விழும், காட்டருவி.. பதினெட்டு வயது பெண்ணின் மோகமும், காமமும் ஒரு சேர்ந்த வெறி கொண்ட முட்டல் போல, மூச்சு முட்டும், வேகம், வேகத்தில் நம்மை தூக்கி வெளியே போடும் உந்தல். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.
அதே போல் அன்று இரவு குற்றாலத்தில் ஒரு இட்லி கடை நடத்தும் நெகு நெகு பெண், ஐம்பது பேர் வ்ந்தாலும் தனியாளாய் நின்று இட்லி தோசை என்று ஆர்டர் எடுத்து, கடை நடத்திய விதத்தை பார்பதே அழகு.அடுத்த நாள் திருநெல்வேலிக்கு வந்து வழ்க்கம் போல் திருநெல்வேலி அல்வா வாங்கி கொண்டு, ரயிலேறினேன். ஸ்டேஷனில் கரு கும்னு ஒரு பெண், அவளுக்கு சம்மந்தமேயில்லாமல், ஜீன்ஸு, டீச்ர்ட்டும் தலையில் நல்ல மல்லிகைபூவும், எண்ணைய் தேய்த்து, பின்னல் வேறு போட்டிருந்தாள். இதுக்கு அவள் சுங்குடி சேலை கட்டி வந்திருக்கலாம்.
இவ்வளவு தூரம் போய் பார்டர் கடைக்கு போகாமல் வந்தது கொஞ்சம் வருத்தமாய்தான் இருந்தது .தயவு செய்து யாரும் குருவாயூர் ரயிலில் ஏறிவிடாதீர்கள்., யாராவது முதுகு சொறிய கை தூக்கினால் கூட நிறுத்திவிடுகிறார்கள். குற்றாலத்தின் சந்தோஷத்தை, இந்த ரயில் பயணம் கெடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.
குற்றாலம் முதல் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்
நிதர்சன கதைகள் -9- Lemon Treeயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
11 comments:
என்ஜாய்,நீங்க எப்பவுமே யூத்துதான்.
Sir,
Nadai paynra pen, idly kadai pen,station il karu kum pen.
Nee kalainjan sir.
You have described only girls you have seen in your trip.
The way you have enjoyed in Kutraalam make me to plan for a trip to kutraalam.
Good narative sir. Engae thaan ippadi ezutha kuthukittenglo.Sujatha, Bala 's inspirations ?
Never stop enjoying !
Cheers, Saidhai Sendhilkumar
"கும்னு ஒரு பெண்"
superrrrrrr
enna thala,
Romba short tour pola........
paal aruvi nala irrukum.......
enjoy
ippo nanbar eppudi irrukkaar
நான் குற்றாலம் அருகில் வசிப்பவன் என்ற முறையில் உங்கள் பயணத்தில் சிலமாற்றம் செய்திருந்தால் இத்தனை கஷ்டம் தேவையில்லை.நீங்கள் மதுரை வந்து சேர்ந்த அந்த மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலை பிடித்திருந்தால் இரவு 9மணிக்கு குற்றாலம் மிக எளிதாக வந்திருக்கலாம்.ரயில் கட்டணம் ரூ23 மட்டுமே தென்காசி வரை.(பேருந்து ரூ55)பாலருவி போன்று மணலாறு என்று ஒரு அருவியும் மிக அருகில் (கேரளாதான்) உள்ளது.பிரானூர் பார்டரை நீங்கள் மிஸ்செய்தது துரதிர்ஷ்டமே., அடுத்த முறை உங்களை சந்திக்கிறேன்.
தல : குற்றால குஷி பதிவில்............
even though driniking 1.5litre is ur personal thing, its a bad example of you telling that... u drank and went into the falls..it may not have influenced you.. but that is what influences many other people and when you go to singpore ... u ppl say that.. singapore is good and we cannot be like that and all blah blah.. but are we following the rules to take shower in the falls..???? just answer ur consious.please
குற்றாலம் என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரம்தான். அடுத்த முறை வரும் போது சொல்லிவிட்டு வாருங்கள் ! ! மிலிட்டரி Black&White அல்லது பக்கார்டி யுடன் ஜமாய்க்கலாம் ! ! நான் Ex-Airforce. பிரானுர் பார்டரில்தான் என் அலுவலகம்..
Hi,
Have u noticed tat M.M dam scenirio?
No updates on tat..
And on kerala check post.. they will charge 100 rps for a bike & 250 incase of car for all..
Too Much Mamool.
Post a Comment