ஏற்கனவே இப்படத்தை பற்றி நிறைய பேர் எழுதியிருப்பார்கள். இருந்தாலும் மீண்டும் இப்படத்தை நேற்று பார்த்தபோது, எழுதாமல் இருக்க முடியவில்லை. அதற்கு முதல் காரணம் ட்ரூ பேரிமோரும், ஆடம் சாண்ட்லரும், அருமையான திரைக்கதையும்தான். இதே படத்தை ஆங்காங்கே பார்ட் பார்ட்டாக பல படங்களில் எடுத்தாண்டிருந்தாலும், ஓரளவுக்கு தீபாவளி படத்தில் பாவனாவின் கேரக்டருக்கு பொறுத்தியிருப்பார்கள்.
ஆடம் சாண்டலர் ஒரு வெட்டினரி டாக்டர், அவனுடய கனவு தனியாய் ஒரு யாட்சை எடுத்துக் கொண்டு கடல் மார்கமாய் உலகை சுற்ற வேண்டும் என்பதுதான். சரியான ஸ்திரிலோலன். ஆன ஆடம் சொந்த ஊரில் காதலிகளை பிடிக்காமல் வெளி ஊர்களில் போய் ஒவ்வொருத்தியிடம் ஒவ்வொரு பொய் சொல்லி மேட்டர் செய்பவன். ஒருநாள் தான் வாங்கிய படகு ரிப்பேர் ஆகிவிட, வேறு வழியில்லாமல் ஒரு காபி ஷாப்பில் உட்கார்திருக்க, அப்போது அங்கே வரும் ட்ரூவை பார்க்கிறார். பார்ததவுடனே அவரை பிடித்துப் போக, அவரிடம் சகஜமாய் பேசி கரெக்ட் செய்ய, அடுத்த நாள் காலையில் மீண்டும் இதே ரெஸ்டாரண்டில் சந்திப்பதாய் முடிவெடுத்து போகிறார்கள்.
அடுத்த நாள் காலை அவளுக்காக காத்திருக்கும் சாண்ட்லர், ட்ரூ வந்ததும் பேச ஆரம்பிக்க, அவள் பயந்தலறி, உன்னை யாரென்றே தெரியாது என்கிறாள். மீண்டும் மீண்டும் தன்னை ஞாபகப்படுத்த முயலும் போது அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் அவனை தனியே அழைத்துப் போய் அவளை பற்றி சொல்கிறார். அவள் ஒரு ஸ்பெஷல் பெண் என்றும் அவளுக்கு மெமரி லாஸ் வியாதியிருப்பதாகவும், அவளை பொறுத்த வரை இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, அவளுடய அப்பாவின் பிறந்தநாள். அவ்வளவுதான். அவளூக்கு இரவு வரை நடப்பது மட்டுமே ஞாபகம் இருக்கும் தூங்கி எழுந்தால் மீண்டும் அதே ஞாயிறு, அப்பாவின் பிறந்தநாள். என்று தான் ஞாபகத்திலிருக்கும் என்று சொல்ல, அதிர்ந்து போகிறான். இருந்தாலும் அவளை மறக்க முடியாமல் தவிக்கிறான். மீண்டும் அடுத்த நாள் காலையில் அவளை பார்க்க போய், கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடன் இணைய ஆரம்பிக்கிறான். அவளுடய அப்பா, சகோதரனுடன் சேர்ந்து அவளுடன் பழகும் நாட்களை வீடியோ ரிக்கார்ட் செய்து, அடுத்த நாள் காலையில் போட்டுக்காட்டி ஞாபகத்தில் வைக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவனின் காதலை ஏற்க மறுக்கிறாள். தன்னால் அவன் கஷ்டப்படுவதை அவள் விரும்பவில்லை.
தொடர்ந்து அவள் அவனிடமிருந்து விலகியே இருப்பதால், அவனும் அவளிடமிருந்து விலகி தன் வாழ் நாள் கனவாக இருக்கும் கப்பலில் தனி பயணத்தை ஆரம்பிக்கிறான். அவனை வாழ்த்த வரும் ட்ரூவின் அப்பா, ஒரு பரிசை தர, அதில் அவனது படம் இருக்கிறது. உடனே ட்ரூவின் இருப்பிடம் தேடி அவள் அப்பாவிடம் கேட்க, அவள் ஒரு அசைலமிடம் சேர்ந்துவிட்ட்தாக சொல்ல, அங்கே போகிறான்.
அவளை கூப்பிட்டு தன்னை ஞாபகமிருக்கிறதா என்று கேட்க, கொஞ்சம் இருங்க என்று அவனை தன் ரூமிற்குள் அழைத்துச் செல்கிறாள். உள்ளே போனால் அவனது படங்கள் எல்லாம் பல விதங்களில் வரைந்து வைத்திருக்க, அவனை ஞாபகம் இல்லாவிட்டாலும், தன் ஆழ் மனக் கனவில் இந்த முகம் திரும்பத் திரும்ப வருவதாய் சொல்கிறாள். அடுத்த காட்சியில் காலையில் தூங்கி எழும் போது, அங்கிருக்கும் டிவியின் மேல் ஒரு வீடியோ இருக்க, அதில் போட்டுப் பார்க்க, அதில் சாம் தான் தான் அவள் கணவன், அவளின் அப்பா, அவளின் குழந்தை என்று சீன் விரிய, ஆடம் சாண்ட்லர் தன் கனவான தனி படகில் இருக்க, அங்கே அவளது குழந்தை அவளை வந்து கட்டியணைக்க, காட்சி முடிகிறது.
படம் முழுக்க வரும் ட்ரூ பேரிமோரின் அழகு கொஞ்சும் முகம் நம் நினைவில் வந்தாடும். அதே போல ஆடம் சாண்ட்லரும், அவரது நண்பராக வருபவரும் நச் கேரக்டர்கள்.படம் பார்த்து சில நாட்கள் கழித்தும், நம் மனதில் நிழலாடும் ஃபீல் குட் படமாய் அலைபாயும் ஒரு படம்.
Post a Comment
16 comments:
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்ண்ணே.. அப்புறண்ணே.. அது "First 50 Dates"
அட.. நான் தான் ஃபஸ்டா??? ஜூப்பரு..
Good one..
yaa.. good movie
This movie can watch youtube also
http://www.youtube.com/watch?v=yHMTDJoYQeU&feature=related
விமர்சனம் அருமை
இதை அப்படியே சுட்டு தெலுங்கில் பூமிகாவை வச்சு எடுத்திருந்தாங்க. அதை தமிழுக்கும் டப்பியிருந்தார்கள். ஹீரோ மணல் சிற்ப கலைஞர் என்ற பாத்திரம். கோவாவில் நடக்கும்.
அது "First 50 Dates" இல்ல 50 First Dates ஏன்பதே சரி, இந்த படத்தை நான் பார்த்து விட்டேன், நல்ல அருமையான விமர்சனம்
ரொம்பநாளா பார்க்கணும் பார்க்கணும்ன்னு நினைக்கிற படம் ஏனோ டைமே கிடைக்க மாட்டேங்குது.. கண்டிப்பா பார்த்திடணும்
ட்ரூ பேரிமோர் ஒன்றும் அந்த அழகு இல்லை. ஆனால் இந்த படம் பார்த்த பிறகு அவரை ரொம்ப பிடித்து போய்விட்டது. அருமையான படம். அதுவும் தினம் தினம் அவள் தந்தைக்கு 'Happy Birthday' சொல்வது அழகு...
தலைவா
நேத்திக்கு தான் "TRADE" பார்த்தேன்,நல்லாயிருக்கு.
இன்னைக்கு "EXAM"னு ஒரு படம் பார்த்தேன்.இப்படி கூட எடுக்க முடியுமான்னு தோனுச்சி,simply superb.
கூடிய சீக்கிரமே இதையும் பார்க்கணும்.
Yes Very Very Good movie in terms of LOVE..
:)
நல்ல படம் தல!
நான் பாத்திட்டேனே ... :)
சிறந்த காதல் கதை
சிறந்த காதல் கதை
ஹலோ சீனு, என்ன ட்ரூ பேரிமோர் ஒன்னும் அழகு இல்லைன்னு சொல்லிடிங்க,...
நம்ம ஊரு லைலா மாதிரி இவங்க செம cute.. Sexy யா நடிச்சாலும் அசிங்கமா இருக்காது...
இவங்களுக்கு நான் வெச்ச பேரு ஹாலிவுட் லைலா..
இவங்களுக்க்காகவே இதை பல தடவை பார்த்த ரசிகர்கள் நாங்க பல பேரு இருக்கோம்..
Post a Comment