Baava

baavareview1 பொம்மரில்லுக்கு பிறகு சித்தார்த்துக்கு பெரியதாய் ஏதும் தெலுங்கிலும் சரி, இந்தியிலும் சரி.. ஏதும் குதிரவில்லை. ஓயே என்று ஷாலினி தங்கை ஷாம்லியுடன் நடித்த படம் கொஞ்சம் ஓகே.  கொஞ்சம் கேப்பில் இந்தியிலும் சொல்லும் படியாக இல்லாமல் மிகவும் எதிர்பார்த்த படம் பாவா.

படத்தின் கதை ஒன்றும் புதியதில்லை. வழக்கமான சின்ன வயசு ப்ரெண்ட்ஷிப், இரண்டு கிராமம் பகை, கோயிலில்  ஆளுக்கு பாதி, சொந்த மாமாவையே தெரியாமல் காதலிப்பது, ஹீரோவின் அம்மா அந்த பணக்கார வீட்டு பெண், வீட்டிற்கு தெரியாமல் தாலி கட்டிக் கொண்டு அலையும் ஹீரோயின், சின்னத்தம்பி க்ளிஷேக்கள், என்று இந்திய சினிமாவில் எவ்வளவு டெம்ப்ளேட் விஷயங்கள் இருக்கிறதோ.. அவ்வளவு விஷயங்கள் படம் முழுக்க இருக்கிறது.
bava Wallpapers [THEMY3] சித்தார்த் என்னதான் தன்னுடய ப்ர்மாமென்சால் பரபரப்பாக போகும் திரைக்கதை என்று காட்ட நினைத்தாலும், நகரவே நகர மாட்டேன் என்கிறது திரைக்கதை என்கிற வஸ்து.  சமீப காலத்தில் இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸ பார்த்ததேயில்லை. சக்ரியின் இசையில் ரெண்டு பாட்டுகள் தேவலாம்

ராஜேந்திர ப்ரசாத் சித்தார்த்தின் அப்பாவாக வருகிறார். என்.டி.ஆரை இமிடேட் செய்கிறார். பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர் இல்லை. அவரது மனைவியாக வருபவர் நிச்சயம் ஒரு ரவூண்ட் வருவார். சீதாவுக்கு போட்டி ரெடியாகிவிட்டது. சிந்து துலானி ராஜேந்திர பிரசாத்தின் ப்ளாஷ் பேக்கில் வருகிறார். கொஞ்சம் பூசினார் போல இருக்கிறார்.
Bava-Movie-wallpapers1 (3) சித்தார்த்துக்கு சூட் ஆகாத கிராமத்து இளைஞன்  கேரக்டர். செட்டாகவில்லை. கதாநாயகி பரனிதா.. சட்டென பார்த்தால் பழைய நக்மா போல இருக்கிறார். சரியான இடுப்பூ…. பெரிய கண்கள்.. கீழ்நோக்கி தொங்கும் உதடு.. ஓகே.. மற்றும் பாராட்டும்படியான ஒளிப்பதிவு நம்ம அரவிந்த் கிருஷ்ணா. படத்தில் இயக்குனர் இங்கேயெல்லாம் காமெடி பிச்சிட்டு போகும் என்று நினைத்த இடங்களில் எல்லாம் சொதப்பியது வேறு கதை.
Baava- Better to wait for tv premier
கேபிள் சங்கர்

Comments

யாருய்யா இந்த சித்தார்த் பையனுக்கு சூனியம் வெச்சது.... நல்லாத்தான இருந்தான்...
ஓகே விட்ருலாம்....

லேட்டஸ்ட் நிதர்சன கதை சூப்பர்
//பழைய நக்மா போல இருக்கிறார். சரியான இடுப்பூ…. பெரிய கண்கள்.. கீழ்நோக்கி தொங்கும் உதடு..//

சகா என்ன பயங்கரமா வர்நிச்சுருக்கீங்க :))
ROBOT said…
சித்தார்த் அப்படின்னு ஒரு நடிகன் கொஞ்சம் நல்ல படங்களை கொடுத்து கொண்டிருந்தார் . அவரையும் காயடிச்சு உக்கார வச்சிட்டாங்களா .....
பாடல்கள் தான் கொஞ்சம் நிம்மதி என்று நினைக்கிறேன். இரண்டு மூன்று பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது .


//கதாநாயகி பரனிதா.. சட்டென பார்த்தால் பழைய நக்மா போல இருக்கிறார்.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . இப்படிக்கு பழைய நக்மா ரசிகர்களில் ஒருவன்.
Unknown said…
ok..ok..
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
Krishna said…
அண்ணே அண்ணனே மற்றும் ஒரு தெலுகு படம். என் அண்ணே
நம்ம சத்யராஜ் படம் கௌரவர்கள் பாக்கலையா அண்ணே ?
Krishna

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.