சில ஹாலிவுட் பெரிய பட்ஜெட் படங்களை பார்க்கும் போது தமிழில் இம்மாதிரி படங்கள் வராதா என்று ஏங்க வைக்கும், அந்த ஏக்கத்தை போக்க வந்திருக்கும் படம் தான் எந்திரன். தமிழ் கூறும் நல்லூலகம் எல்லாவிடத்திலேயும் ரேடியோ, டிவி, மக்கள் என்று பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள படம்
படத்தின் கதை என்ன என்பதை உலகறியும். இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம் வசிகரன் என்கிற விஞ்ஞானி மனிதனைப் போலவே ஒரு ரோபோட்டை உருவாக்குகிறார். அது ரோபோவாக இருக்கும் வரை பிரச்சனையில்லை.. ஆனால் அதற்கு ஆர்டிபீசியல் இண்டெலிஜெண்டின் மூலம் மனித உணர்வுகளை கொடுத்து சிந்திக்க ஆரம்பித்ததும் வரக் கூடிய ப்ரச்சனைதான் கதை. கடைசியில் நீதி சொல்லி முடிக்கிறார்கள்.
படம் முழுவதும் ரஜினி, ரஜினி, ரஜினி.. என்று ஒரே ரஜினி மயம்தான். வழக்கமாய் இம்மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களில் நிறைய கேரக்டர்கள வலம் வரும். இதில் பார்த்தால் மொத்தமே மொத்தம் நான்கு கேரக்டர்களில் படத்தின் திரைக்கதை ஓடுகிறது. ரஜினி, ஐஸ், ரோபோ ரஜினி, வில்லன். இவ்வளவுதான். வசீகரன் ரஜினியிடம் தெரிகிற முதிர்வு, சிட்டி ரோபோவை பார்க்கும் போது தெரியவில்லை.. அவ்வளவு சுறுசுறுப்பு.. அந்த வாய்ஸ் மாடுலேஷன், பாடி லேங்குவேஜ், டான்ஸ் ஆடும் ஸ்டைல், ரஜினியிடம் உள்ள பெரிய ப்ளஸ் பாயிண்ட் அவருடய சின்ன கண்கள். அதிலும் ஷார்ப்பாக முறைக்கும் காட்சிகளில் குத்தும். ஆனால் சிட்டி ரஜினி கண்களில் ஒரு கூலிங் கிளாஸை மாட்டியிருந்தாலும் அந்த லுக்கும், ஸ்டைலும் ஷார்ப்.
ஐஸ் வழக்கம் போல. க்யூட் ஆண்டியாகிவருகிறார். ஐஸ்ஸுடன் ரஜினி நடிக்கும் போது அவர் கண்கள் பள..பள.. ஆனால் அந்த பள பள வில்லன் ரோபோ ரஜினிக்கு வரும் போது அதன் வெளிப்பாடு இருக்கிறதே.. அட்டகாசம். இவ்வளவு பெரிய விஞ்ஞானியின் அஸிஸ்டெண்ட்டுகள் இப்படி பிக்கிலித் தனமாய் இருப்பார்களா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் படத்தின் மொதல் காட்சியிலேயே அவர்களின் மொக்கைத்தனம் வெளிப்பட்டுவிடுவதால் படத்தின் காமெடியை கொடுக்க வேண்டியவர்களே காமெடி பீஸாகி போனதில் வருத்தம்தான்.
ரத்னவேலுவின் ஓளிப்பதிவு அருமை என்பது சூரியனுக்கே டார்ச் வகை. முக்கியமாய் அந்த காதல் அணுக்கள் லொக்கேஷனும், பாடலும் சூப்பர். ரசூல் பூக்குட்டி, முதல் இந்திய, உலகின் சிறந்த டெக்னீஷியன்கள் பங்கேற்று சிறப்பு புரிந்திருக்கின்றார்கள். இப்படத்தின் கிராபிக்ஸ் கிரியேட்டர் ஷங்கர்.
எல்லோரும் ஒரே கதையை ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். கதையை சொல்லும் முறை என்பது அவரவர்கள் கை ரேகை மாதிரி. அது போலத்தான் ஷங்கர் இக்கதையை சொன்னதும். ஆரம்பித்த முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பிக்கிறார். பத்தாவது நிமிடத்தில் படம் எதை நோக்கி போகிறது என்று தெளிவாக்கிவிடுகிறார். பிறகென்ன. வெரி ஸ்மூத் ரைட்..தான் அதிலும் முதல் பாதியில் எந்திரனை நிறுபிப்பதற்காக வசீகரனும் செய்யும் முயற்சியும், சிட்டி அதில் தோல்வியடைவதும்.. அதற்காக ஷங்கர் அமைத்திருக்கும் காட்சிகள் சிம்ப்ளி சூப்பர்ப்.. ஏனென்றால் மிகவும் டெக்னிகலான ஒரு சப்ஜெக்டில் இம்மாதிரியான இயல்பான, டவுன் டு எர்த காட்சிகள், கொஞச்ம் ட்ராமாவாக, ஷங்கரின் க்ளிஷே காட்சிகளாய் இருந்தாலும் அது தான் வெற்றி பார்முலா. முக்கியமாய், அந்த தீ விபத்து காட்சியின் முடிவும். அந்த பிரசவக் காட்சியும். மொத்த தியேட்டரும் கை தட்டுகிறது. ஆனால் பாவம் ஷங்கரின் அடுத்த படமான 3 இடியட்ஸ் படத்தின் முக்கிய காட்சியே இது தான் எனும் போது அந்த படத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்று யோசிக்க வைக்கிறது.
முதல் பாதி முழுவதும் அவ்வளவு ஸ்மூத்தாக போகும் திரைக்கதை. ரெண்டாவது பாதியில் ஐஸ், ரோபோ, காதலுக்கு பின் கொஞ்சம் அலைபாய்வது என்னவோ நிஜம் தான். ஆனால் கடைசி இருபது நிமிடங்கள் விறுவிறு, மொறு மொறு கரம் மசாலா பாப்கார்ன் தான். படத்திற்கு வசனம சுஜாதா, ஷங்கர், கார்க்கி என்று போட்டாலும், முதல் பாதியின் திரைக்கதையிலிருந்து, வசனங்கள் முதல் எங்கு பார்த்தாலும் சுஜாதா. .சுஜாதா.. சுஜாதா.. படம் நெடுக அவருடய நாவல்களில் கொடுக்கும் தகவல்களை போல மிக இயல்பாக அறிவிக்காத தொனியில் இன்பர்மேஷன்கள் அள்ளிவிடப்படுகிறதும், ஆங்காங்கே வரும் ஷார்ப்பான கட் டைலாக்குகளும்.. ம்ஹும் வாத்யாரே.. இல்லாம போயிட்டியே..நீ.
ரஹ்மானின் இசையில் பாடல்கள் பற்றி பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும், மெல்ல மெல்ல ஏறும் விஷமாய் கேட்க, கேட்க, இனித்தது, இப்போது பார்க்க, கிடைக்க.. இன்னும் நன்றாகவேயிருக்கிறது. பின்னணி இசையில் அதிரடித்திருக்கிறார்.
படத்தின் க்ராபிக்ஸ், அனிமேட்ரானிக்ஸ், அது இது என்று ஏகப்பட்ட டெக்னிக்கல் விஷயங்கள் மேலோங்கி நம்மை கட்டிப் போட்டிருந்தாலும். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும் இரண்டாவது பாதி.. முக்கியமாய் ரோபோ ரஜினிக்கு ஐஸ்ஸின் மீது ஏற்படும் காதல் ஓகே. அதுவே அப்ஷஷனாக மாறி ஆக்கிரமிக்கும் போது, டாமினண்டாக இருக்கும் ரோபோவின் கேரக்டரைசேஷனுக்கு இன்னும் கொஞ்ச்ம் எத்திகல் ஃபீலீங்கோடு கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. படத்தை பற்றி பரபரப்பு, சன் டிவி, விளம்பரம், 150 கோடி செலவு என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதை விட, படத்தை பற்றி படிப்பதை விட ஒரு நடை உங்க வீட்டு பக்கத்து குட்டி தியேட்டரில் கூட எந்திரன் ஓடும் ஒரு நடை போய்விட்டு வந்து சொல்லுங்கள். நிச்சயம் உங்க குழந்தைகளை கூட்டி செல்லுங்கள்.. கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் அட்டகாசங்களுக்காக..
எந்திரன் – A Film To Watch
கேபிள் சங்கர்
Post a Comment
54 comments:
உங்க பதிவுக்குதான் காத்திருந்தேன்.. :)))
ஆனால் வாத்யாருக்கு ஒரு அஞ்சலி போட்டோ கூட போடவில்லையே..:(
எனக்கு படம் அந்த அளவுக்கு புடிக்கல, கிளைமாக்ஸ் இன்னும் massive வ காட்டி இருகனுமோனு தோணுது, எல்லாரும் இப்படி புகழர அளவுக்கு ENTHIRAN நல்ல படம் கிடையாது
விமர்சனத்தில் ஏதோவொன்று தவறியதாக உணர்வு.படத்தை விட தங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்த்திருந்ததால் இருக்கலாமோ ;-/.
மகாத்மாவை கொண்டாடுவோம்!
Enthiran our answer to Hollywood எல்லாரும் சொல்லுறாங்க, இத அவங்க 40 50 வருசத்துக்கு முன்னாடியே பண்ணிட்டாங்க, நம்மனால இன்னும் கூட அந்த quality குடுக்க முடியல, பணம் தான் ஒரு மேட்டர்னா low budgetla நல்ல quality யான படங்கள் நெறைய அங்க வருதே,
எந்திரன் படம் யூட்யூப் லிங்கில்
http://www.youtube.com/watch?v=PcIrst3Lx_4
உங்க பதிவிற்கு நன்றிங்க அண்ணா! நல்ல ஒரு அலசல். நன்றாக இருக்கு உங்க பதிவு!
tomorrow will go
Glad to see your review. Your review also seems to be a publicity for the film as you have written in one of your previous blogs..! Anyway, I am going to watch the movie this afternoon in South Mumbai.
எந்திரன்:
ரஜினி அடுத்த தலைமுறையைக் கவர சிறந்த படம்.
சிட்டி பாடி லாங்குவேஜ் கலக்கல்.. அந்த எகத்தாளமான சிரிப்பு.. அது போதும்..
ஐஸ்வரியா குளிர்ச்சி.. நடனத்தில் “இருவர்” நினைவிற்கு வருவதைத் தவிற்கமுடியவில்லை..
ரஜினி படம் பார்த்த எஃபெக்ட் இல்லை.. ரஜினியிடம் எதிர்பார்க்கும்(த்த) விஷயங்கள் மிஸ்ஸிங்.. ஸ்பைடர் மேனை ரோபோவாக உறுமாற்றம் செய்து, வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதை. கெட்டவனாக ரஜினி இருக்கமுடியாததால் இறுதியில் சிட்டி திருந்தியேயாக வேண்டிய கட்டாயம். கிளிமாஞ்சாரோ தினிப்பு, செல்லமுடியாத இடத்திற்கு செல்வோம் என்ற கொக்கறிப்பு..
மொத்தத்தில் எந்திரன்: Toy Story
(ஒரு வேளை ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகலையோ)
------------
இப்படி சொன்னா, என்னைத் திட்டுவாங்களா?? ஆட்டோ ஏதும் வருமா???
அண்ணே அடுத்த வாரம்தான் பார்க்கனும்
அண்ணே அடுத்த வாரம்தான் பார்க்கனும்
உங்க விமர்சனம் ரொம்ப சப்!!.தயவு செய்து உங்க சினிமா ஞானம் அப்படிங்கற கண்ணாடியை ஒதுக்கி வச்சுட்டு.. ரசிகனா விமர்சனம் பண்ண ட்ரை பண்ணுங்க.ரொம்ப பாரட்டிட கூடாதுங்குற எச்சரிக்கை உணர்வு நன்றாக தெரிகிறது.
நல்ல விமர்சனம் தரமான கருத்துக்கள்
மீண்டும் ஜீனே.. என் இனிய எந்திரா பாதிப்பு அப்படியே தெரிகிறது..
சமர்ப்பணம் போட்டுட்டு தொடங்கியிருக்கலாம்...
இன்னொரு விமர்சனம்http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.htm
Mr.Shankar, I think, your blog over exaggerates the quality of this movie. HINDI MOVIE ROBOT FIR has come. The result is very disappointing. Coming weeks, hereto the hype will decline and the real status will be known. Most of the scenes are copied from Hollywood movies and its really boring to see the same in this movie.
Mr.Shankar, I think, your blog over exaggerates the quality of this movie. HINDI MOVIE ROBOT FIR has come. The result is very disappointing. Coming weeks, hereto the hype will decline and the real status will be known. Most of the scenes are copied from Hollywood movies and its really boring to see the same in this movie.
Mr.Shankar, I think, your blog over exaggerates the quality of this movie. HINDI MOVIE ROBOT FIR has come. The result is very disappointing. Coming weeks, hereto the hype will decline and the real status will be known. Most of the scenes are copied from Hollywood movies and its really boring to see the same in this movie.
i got ticket for morning 8 o clock but today i woke up at 9 only so i lost it. lets see in the next week
nice shankarji!
i'm awaiting to watch..
specially for our 'thala' Sujatha's dialogs.
thanks.. :)
நக்கல் இல்ல..நிக்கல்...ஆசான் அங்க இருக்காரு கேபிளு...
அருமையான மற்றும் நேர்மையான விமர்சனம்...
ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படத்தில் பங்கு கொண்ட அனைவரின் உழைப்பும் சேர்ந்து படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது...
அமீரகத்தில் 30ம் தேதியே ரிலீஸானதால், நாங்கள் முதன் முதலில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது...
படம் இங்கும் பட்டையை கிளப்புகிறது.
ஹிந்தியிலும் மெதுவாக பிக்கப் ஆவதாக செய்தி....
நல்ல விமர்சனம் சார்.எனக்குப்பிடித்த வரிகள்.>>>
எல்லோரும் ஒரே கதையை ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். கதையை சொல்லும் முறை என்பது அவரவர்கள் கை ரேகை மாதிரி. >>>
எவ்வளவு சத்தியமான வரிகள்?
படம் பட்டைய கிளப்புது....
கமல் ரசிகர்கள் ரெண்டாவது காட்சி பாத்துட்டு போன் பண்ணி கதறி அழுறானுங்க.... எங்க தலைவர் மிஸ் பண்ணிட்டாரேன்னு.....
ஷாருக்... நேத்து நைட் ஃபுல் மப்பில் இருந்ததாக கேள்விப்பட்டேன்
http://www.hindustantimes.com/The-Robot-leader-takes-it-all/Article1-607029.aspx
வாழ்த்துகள்
Romba nalla pathivu. mikka nandri.
appo "endhiran" sujaathaavOda kadhai illaiyaa. avar vasanam mattumthaanaa.
கொஞ்சம் உஷாரா எழுதின மாதிரி தெரியுது!!!
ஹ்ம்ம்ம்ம்... நாளைக்கு தான் போகனும்..,
ரொம்ப நியாயமா எழுதி இருக்கீங்க பாஸ் இங்க பலரு மொக்கைன்னு மொக்கை மொக்கையா எழுதி கடுப்பேத்துறாங்க... நான் என்ன பீல் பண்ணினேனோ அதை அப்படியே சொல்லிருக்கீங்க ... தாங்ஸ் தலைவா..!!!
சினிமா வியாபாரம் தெரிந்தவர்களால்தான் இவ்வளவு பெரிய படம் எடுத்து அதனை லாபம் பார்க்கவும் முடியும் ...
ஷங்கரின் creativity ஐ விட நம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம். எப்படி இருந்தாலும் சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை.
என் விமர்சனத்தையும் டைம் இருந்தா செக் பண்ணுங்க..
http://suthershan.blogspot.com/
Shankar set a new milestone...NO BOLLYWOOD..NO HOLLYWOOD ITS TRULY "RAJINIWOOD"
Just now returned after watching the Enthiran Movie..! A very good entertainer..! A spectacular experience for Tamil movie fanatics. however in south mumbai, the theatre was less than half full. Should appreciate all the CREW and a special kudos to Shankar (Director shankar). Of course thanks to sankar (cable sankar....!!!!) for the nice review.
we cant watch it as a Tamil movie. it is hollywood masala movie.
we can match so many scene with other hollywood movies.
but it is a worth effort from Shankar and its Team.
Nothing to say about Rajini . He roocka always.
movie is very good enteriner
படித்ததில் உண்மையான விமர்சனம் உங்களதுதான் அண்ணா...
இரண்டாவது பாதி இழுவை...
சூப்பர் கேபிள் ஜீ... எந்திரன் பட்த்திற்கு இருந்த எதிர்பார்ப்பு , உங்க விமர்சனத்துக்கும் இருந்த்து.. படமும் அருமை, விமர்சனமும் அருமை..
I was waiting for ur Post for booking
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Mr.Shankar, as I told, ROBOT FLOPPED in Bollywood and Tollywood. The response is very poor in Mumbai and Andhra Pradhesh. Soon the same is going to happen here in Tamil Nadu also.
//VIRALGAL said...
Mr.Shankar, as I told, ROBOT FLOPPED in Bollywood and Tollywood. The response is very poor in Mumbai and Andhra Pradhesh. Soon the same is going to happen here in Tamil Nadu also.//
ஒரு கூடை “ஜெலுசில்” பார்சேல்...
\\அதுவே அப்ஷஷனாக மாறி ஆக்கிரமிக்கும் போது, டாமினண்டாக இருக்கும் ரோபோவின் கேரக்டரைசேஷனுக்கு இன்னும் கொஞ்ச்ம் எத்திகல் ஃபீலீங்கோடு கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது\\
சூப்பர், சேம்லைக் திஸ் தமிழ்ல சொன்னாதானே அண்டர்ஸ்டாண்ட் ஆகுது. வெல் செட் கேபிள்:-))
//அபி அப்பா said...
\\அதுவே அப்ஷஷனாக மாறி ஆக்கிரமிக்கும் போது, டாமினண்டாக இருக்கும் ரோபோவின் கேரக்டரைசேஷனுக்கு இன்னும் கொஞ்ச்ம் எத்திகல் ஃபீலீங்கோடு கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது\\
சூப்பர், சேம்லைக் திஸ் தமிழ்ல சொன்னாதானே அண்டர்ஸ்டாண்ட் ஆகுது. வெல் செட் கேபிள்:-))//
******
அசத்தல் கேபிளார்....
அட்டகாச கமெண்டுடன் அபி அப்பா...
ஹீ...ஹீ...ஹீ....
அனால் சுஜாதாவுக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை என்பது என் கருத்து. மலேசியா நிகழ்ச்சியில் கூட ஷங்கர் எல்லா டெக்னீஷியன் யும் விரிவாக பாராட்டினார். அனால் சுஜாதாவை பெயரை போகிற போக்கில் அவர் உச்சரித்தார்.
சூபர் படமாக இருக்கும் போலருக்கு.இந்த படம் மிக பெரிய ஹிட் ஆகும்.
But உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.
தங்களது பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்.நன்றி.
சுஜாதாவை மறந்திருக்க வேண்டாம். விளம்பரங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மற்றபடி நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம்
-ப்ரியமுடன்
சேரல்
//நிச்சயம் உங்க குழந்தைகளை கூட்டி செல்லுங்கள்.. கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் அட்டகாசங்களுக்காக..//
ரைட்டு. கூட்டம் கொறயட்டும். பாத்துருவோம்..
======
//நிச்சயம் உங்க குழந்தைகளை கூட்டி செல்லுங்கள்.. கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் அட்டகாசங்களுக்காக..//
ரைட்டு. கூட்டம் கொறயட்டும். பாத்துருவோம்.
=======
Appadiye theaterla old rate Rs.60 varattum... paathuralaam..
படம் முழுக்க தலைவன் வந்தாலும் இது நான் எதிர்பார்த்த எந்திரன் இல்ல
இது கொஞ்சம் என்னை ஏமாற்றிய படம்
விமர்சனம் நியாயமாக இல்லை. படம் படு மொக்கை. விமர்சனம் அதைவிட மொக்கை. மைனா, களவாணி போன்ற படங்களை மிகச்சாதாரணமாக சொல்லியிருக்கும் நீங்கள், இதை ஒரு உலகப்படம் என்ற ரேஞ்சில் எழுதியுருப்பது கேவலமாக உள்ளது. இதன் மூலம் உங்கள் விமர்சனங்களின் நம்பிக்கை கேள்விக்குறியாக உள்ளது. இப்படி எழுதுவதற்கு நீங்கள் தேவையில்லை. ஒரு சராசரி ரஜினி ரசிகனே இதை விட betterஆ எழுதுவான். படத்தின் photography நல்லாயிருப்பதாக எழுதியிருந்தீர்கள். Photography தெரிந்த எவனும் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை நன்றாக இருந்ததாக சத்தியமா சொல்லமாட்டான்.... You too Shankar...?
@hari :
Sarasari Rajni rasigan na , Review nalla ezhudha maattaangala???? chumma yedhavenumnaalum sollidaradhu...
Post a Comment