ரேஷன் கார்டை வைத்து ஜாமீன் கொடுப்பதையே வாழ்க்கையாய் கொண்டிருக்கும் மகாராஜா (எ) மகா. ஒரு நாள் மகா ஒருவனுக்கு ஜாமீன் கொடுக்க, அதனால் அவன் வாழ்க்கையே தலைகிழாக மாறிப் போகிறது. இது தான் தொட்டுப்பார்
வித்யார்த்தும், லக்ஷனாவும் அறிமுகங்கள். வித்யார்த் கூத்துப்பட்டறை தயாரிப்பாம். அனுஹாசனின் சாவுக் காட்சியில் நல்ல நடிப்பு தெரிகிறது. சண்டைக்காட்சிகளிலும், நடனங்களிலும் இன்னும் பயிற்சி தேவை. இவருக்கும் எஸ்.ஐ. ஹனீபாவுக்குமான உறவு இண்ட்ரஸ்டிங்கான ஒரு கெமிஸ்ட்ரி. அனுஹாசனும், அழகம் பெருமாள் கேரக்டர்கள் ஒரு குழப்ப லிங். கதாநாயகி லக்ஷணாவைவிட லட்சணமாய் நிறைய பெண்கள் படத்தில் வளைய வருகிறார்கள். நடிப்பதற்கோ, இல்லை சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லாத ஒரு கேரக்டர்.
வித்யார்த்தின் டாஸ்மாக் சப்ளையர் நண்பனாக நண்டு ஜெகன். பல இடங்களில் ஓவர்லாப்பில் டயலாக்குள் அபாரம். வில்லனாக ரமணா.. அதிரடியான கமிஷனர் குழந்தைகளையே கடத்தி மிரட்டும் அளவுக்கான ஒரு டெரர் கேரக்டர் என்று காட்டுகிறார்கள். ஆனால் ஒரு லோக்கல் வில்லன் போல ஆவூனென்றால் ஏன் எதற்கு என்று தெரியாமல் ஆட்களை அடித்தும், ஆசனவாயில் குச்சியை குத்தியும் கொல்கிறார். டெரர் வில்லனாமாம். இதில் சம்மந்தமேயில்லாமல் அரவாணி விஷயம் வேறு.
கொஞ்சமே கொஞ்சம் சூடேறும் போது, கெடுப்பதற்காகவே தொடர்ந்து வரும் ஸ்ரீகாந்த தேவாவின் பாட்டுக்கள் இம்சை. நிரவ்ஷாவின் உதவியாளர் சசியின் ஒளிப்பதிவு பற்றி ஏதும் பெரிதாய் சொல்ல முடியவில்லை.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பது நந்து. ஒன்லைனாக கதையை கேட்டால் அட நல்லாத்தானிருக்கும் போலருக்கே என்று நிமிர்ந்து உட்கார வைக்கும் லைன் தான் ஆனால் அதை திரைக்கதையாய் மாற்றும் போது சறுக்கியிருக்கிறார். அடுத்த காட்சி என்ன வரும் என்று ஜெட்டிக்ஸ் பார்க்கும் குழந்தை கூட சொல்லிவிடும்படியான திரைக்கதைதான் கல்ப்ரிட். ஆங்காங்கே டாஸ்மாக்கில் வரும் வசனங்கள் நச் ரகம். முக்கியமாய் டாஸ்மாக்கில் வரும் கேரக்டர்களுக்கான வசனங்கள். ஹீரோவை அறிமுகப்படுத்தும் போதே ஏதோ ஒன்னாம் நம்பர் தில்லாங்கடி போல ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் நோட்டு கொடுத்து ஏமாற்றுபவனாகவும், பெரிய ரவுடியை போலவும் காட்டுகிறார்கள். ஆனால் சென்னைக்கு வந்ததும் ஏதோ ஒரு அப்பாவியின் மேல் பழி விழுந்துவிட்டதை போல சித்தரிக்கப் படுவது எல்லாம் கேரக்டரைஷேஷனில் தவறாகிவிட்டதால் எமோஷன் ஏற மாட்டேனென்கிறது. காதல் காட்சிகள் வழக்கம் போல டெம்ப்ளேட் அபத்தங்கள். திடீர் திடீரென புது புது கேரக்டர்கள் வருகிறது. அவர்களுக்கான டீடெய்ல் கிடையாது. எங்கோ வசனங்களில் ஒளிந்திருக்கிறார்கள். ரமணாவின் அரவாணி அவதாரம் எதற்கு? வேஸ்ட் அப் எபர்ட்.. ஆங்காங்கே வ்ரும் டாஸ்மாக் காட்சிகளும், காந்தி ஜெயந்தி அன்று காந்திக்கு கொடை பிடிக்கும் காட்சியை தவிர.. குறிப்பிட்டு சொல்லும்படியாகா ஏதுமில்லை.
தொட்டுப்பார்- பாத்துக்கோயேன்..
கேபிள் சங்கர்
Post a Comment
11 comments:
மீ த ஃபஸ்டு..
அண்ணே.. நானாவது பின்னூட்டத்துக்கு தான் ஃபஸ்டு.. ”மீ த ஃபஸ்டு”ன்னு இந்த மொக்க படத்தைப் போய் பார்த்துட்டு வந்திருக்கியேன்ணே.. உன்ன என்னான்னு சொல்லறது..
வாழ்க நீ.. வளர்க உன் தொண்டு..
vidhi yarai vitudhu
ஆக சிறந்த படத்திற்கு ஆக சிறந்த விமர்சனம் எழுதிய எங்கள் யூத் அங்கிள் கேபிளாருக்கு நன்றிகள் பல :)
ஒச்சாயி விமர்சனம் இன்னும் போடலையா பாஸ்...
இந்த படம் பாக்குற அளவுக்கு உங்களுக்கு பக்குவம் உள்ளதற்கு
வாழ்த்துக்கள்
இப்படத்திர்க்கு நேரம் செலவிட்ட தலயை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்...
Nalla vimarsanam....
vazhththukkal.
http://dineshkarthi.blogspot.com/
see above blog of me. its just a demo blog. see its first post title. i have a blinking word called'New' at its end(the red colored word 'New' doesnt blink in chrome. It blinks only in mozilla)
if u too want a blinking word at end of post title just type this HTML code at the end of post title.
[blink style="color: red; font-size: 78%;"]NEW[/blink]
Note:
Replace [ and ] by < and >
கௌரவர்கள் - வாடா படம் பார்க்கவில்லையா கேபிள் சார்...
'HAPPYDAYS' தெலுங்கு படத்த அறுபது தடவைக்கு மேல் பார்த்த நீங்கள்...
எந்திரனை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று தெரிய வில்லை...
இனி எந்த படம் விமர்சனம் போட்டாலும் அது இன்னொரு படத்தை இணைத்து பேசுவதாகவே இருக்கும்...கொஞ்ச நாட்களுக்கு...பிறகு இதுவும் மறந்து போகும்...
எந்திரன் வியாபார டீட்டெய்ல்ஸ்க்காக வெயிட்டிங். நேரம் ஒதுக்கினால் நல்லது.
அடுத்து, நீங்கள் ஒர்க் செய்யும் படம் எந்தளவில் இருக்கிறது?
Post a Comment