கனிமொழி
படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்தவர்கள் எல்லாரும் ஆளாளுக்கு பயமுறுத்தி விட்டிருந்தார்கள். படு மொக்கை, உட்கார முடியவில்லை என்றெல்லாம். அவனா நீ படத்தையே பார்த்த வீரனாகிய எனக்கு இதெல்லாம் சும்மா.. என்று தைரியமாய் படம் பார்க்க போய்விட்டேன். சில பேர் நல்ல நாட் வைத்திருப்பார்கள் ஆனால் அதை சரியாய் சொல்ல முடியாமல் சொதப்பியிருப்பார்கள். சில பேருக்கு மொக்கையான ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல தெரிந்திருப்பார்கள். இப்படத்தின் இயக்குனர் முதல் வகையில் மாட்டிக் கொண்டார். இரண்டு இளைஞர்கள் ஒருவன் ஜெய், இன்னொருவர் வசந்த. ஜெய் ஒரு இண்ட்ரோவர்ட், வசந்த ஒரு எக்ஸ்ட்ரோவர்ட், ஜெய் தன்னுள் எழும்பிய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல தயங்கி அவனுள்ளே ஒரு கற்பனை கதையை வடித்துக் கொண்டிருப்பவன். அடுத்த நிலைக்கு கொண்டு போக முடியாமல், இழுத்தடித்துக் கொண்டிருப்பவன். அதே நேரத்தில் வசந்த எல்லா விஷயங்களிலும் தடாலடி. வீட்டிலாகட்டும், காதலாகட்டும் தாட் பூட் தஞ்சாவூர்தான். கல்யாணம் வரைக்கும் வந்து வாழ்க்கையில் வெற்றி பெருகிறான். இரண்டு காண்ட்ராஸ்டான கேரக்டர்கள். மிக அருமையாய் செய்திருக்க வேண்டிய படம்.. சவ சவ ஜெய் ...