இந்த வார சந்தோஷம்
இன்று மதுரையில் திருமண பந்தத்தில் இணையும் பதிவர்கள் தோழி அனுவும், ராஜாவும் பல்லாண்டு காலம் சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
##################################################################
தீபாவளியன்று மாலை கலைஞர் டிவியில் சிவாஜி த பாஸ் போடப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததுமே.. சன்னின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று எனக்கு ஆர்வமேற்பட்டது. ஒரு முறை விஜய் டிவி ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியபோது, அதற்கு ஈடாக, அன்றைய் மாலை நேர படமாய் ரோஜாவையும், அலைபாயுதேவையும் போட்டு டி.ஆர்.பியை கரெக்ட் செய்தவர்கள் என்பதால் இன்னும் ஆர்வம் மேலிட்டது. சரியாய் யோசித்து நிகழ்ச்சியை போட்டார்கள். மேக்கிங் ஆப் எந்திரனையும், புதிதாய் ரஜினியின் இண்டர்வியூவையும் போட்டது. அவர்களின் உழைப்பை காட்டுகிறது. நிச்சயம் சிவாஜி படத்தை பார்பதை விட எந்திரன் மேக்கிங்கும், ரஜினியின் இண்டர்வியூம் பல மடங்கு பார்வையாளர்களை இழுக்கும் என எதிர்பார்த்தது தான் சன்னின் முக்கிய மூவ்.. சும்மா வருமா வெற்றி? ஆனால் சன்னில் வந்த ரஜினி பேட்டி எனக்கு பிடிக்கவில்லை. ரஜினி மாதிரியான ஒரு கேலிபர் ஆட்களை வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டு அசத்தாமல் திருமப் , திரும்ப, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை பற்றியும், ஷங்கரை பற்றியும், எந்திரனை பற்றியுமே பேசியது செம போர் அடித்தது. இதில் ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்டார் விஜயசாரதி.. உங்க வீட்டில் விருந்தாளிங்களுக்கு என்ன பிடிக்குமோ அதுதான் அன்னைய சமையலாமே? ம்க்கும்.. ரொம்ப முக்கியம்.. இப்பேட்டியின் மூலம் ஒரு விஷயம் புரிந்தது. ரஜினிக்கு வேறு வழியில்லை மாறனை மீற.. என்று …

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் மகள் தீபாவளி பண்டிகைக்காக நண்பர்கள் வீட்டின் மொட்டைமாடியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்தது பெரும் சோகமாய் இருக்கிறது. அவருக்கு வயது 24. அவரது ஆன்மா சாந்தியடையவும், ஒளிப்பதிவாளர் குடும்பம் இந்த சோகத்திலிருந்து வெளி வர மன திடத்தையும், எல்லாம் வல்ல இறைவன் தந்தருள வேண்டுகிறேன்
:(((((((((((
#########################################################################
இந்த வார டிட்பிட்ஸ்
மணிரத்னத்தின் அடுத்த படம் கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று பேசப்படுகிறது. அதுவும் வரலாற்று படமாக இல்லாமல் சோஷியல் தீமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. முக்கியமாய் அப்படத்தில் கமல், விக்ரம், சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் ஒன்று சேரலாம் என்றும் சொல்லப்படுகிறது. சரி இந்த படத்தை எடுப்பதற்கு பெரும் செலவு பிடிக்குமே யார் தயாரிப்பாளர் என்று கேட்பவர்களுக்கு வேறு யாரு? சன் பிக்சர்ஸ் என்று பதில் வருகிறது.
சன் பிக்ஸர்ஸின் அடுத்த வெளியீடு அநேகமாய் கார்த்தியின் சிறுத்தை. தெலுங்கு விக்ரமார்குடுவின் ரீமேக்கான இப்படத்தில் கார்த்தி ஒரு முழு ஆக்ஷன் மசாலா ஹீரோவாக வெளிப்படுவார். கார்க்கியுடனான முதல் அவுட்டிங் சன்னுக்கு. ஏற்கனவே கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடனான அவுட்டிங் சன் ரிலீஸ் படங்களிலேயே நிஜ வெற்றி பெற்ற படங்களான அயன், சிங்கம் என்பதை மறுக்க முடியாது. மற்றபடங்கள் எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே சூப்பர் ஹிட் படங்கள்.
###################################################################
இந்த வார தத்துவம்
இந்த உலகத்தின் நிர்ணயத்துக்கோ, அல்லது மற்றவர்களின் எதிர்பார்புக்கோ வாழாதே. எவனொருவன் மற்றவர்களை தொடர்கிறானோ அவன் சீக்கிரமே அந்த கூட்டத்தில் காணாமல் போய்விடுவான். – சொன்னது பரிசல்காரன்.
உனக்கு உதவி செய்வதற்காக இரண்டு கைகள் எந்தவிதமான கஷ்டமான நேரங்களில் கூட காத்திருக்கிறது அது உன் தோள்களின் முடிவில் இருக்கிறது.

இந்த வார கேள்வி?
ஆயிரம் பையன்களுக்கு 842 பொண்ணுங்க தான் இருக்குதாம். அதனால பெண்களை காப்பாற்றுங்க.. புலிகளின் பெருக்கம் குறைந்துவிட்டது என்று சேவ் டைகர் ஆரம்பிச்சிருக்காங்க.. ஆனா அதை விடுங்க.. புலிகுட்டி வேணுமா? இல்ல புள்ளைக் குட்டி வேணுமா?

இந்த வார ஷாப்பிங்
தீபாவளிக்கு ஷாப்பிங் போகணும்னு நண்பர் ஒரே அடம்.. சரின்னு நானும், கார்க்கியும், நம்ம நண்பரும் கிளம்பினோம். டிநகர்ல ஒரு மூணு நாலு கிலோ மீட்டர் தள்ளி காரை நிறுத்திட்டு, நடந்துகிட்டே போனோம். நானும், கார்க்கியும் ஒவ்வொரு பிரபல கடை வரும் போதும் இங்க போலாமா.. இங்க போலாமா?ன்னு கேட்டுட்டே வந்தோம். நண்பர் தலையாட்டிக் கொண்டே வந்தார். கடைசியா ஒரு கடையுள்ள நுழைச்சி, டேபிள் மேல வச்சிருந்த பல சைஸ் ஒரே கலர் சட்டையில செலக்ஷன் செஞ்சி வாங்கினாரு. அந்த ஒரே கலர் வெள்ளை கலர் தான். எனக்கு பல சந்தேகம். இந்த அரசியல்வாதிங்க இல்லைன்னா ராமராஜ் வேஷ்டி சட்டை கடைக்காரங்க என்ன பண்ணுவாங்க? இருக்குற ஒரே கலர் சட்டைங்களை எதுக்கு டேபிள் பூராவும் டிஸ்ப்ளேவுக்கு வச்சிருந்தாங்க..? அதையெல்லாம் விட ஒரு முக்கிய கேள்வி? இந்த வெள்ளை வேட்டி சட்டை வாங்குறதுக்கு எதுக்காக அரை மணி நேரம் செலக்ஷன் செஞ்சாரு நம்ம அண்ணன் அப்துல்லா?

இந்த வார வீடியோ
உண்மையாகவே இந்த பாடலை இவர் பாடினால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ.. அருமையான சிங்கில் எடிட் செய்திருக்கிறார்கள்.

நண்பேண்டா
நண்பர் ஒருவர் அழைத்திருந்த பார்ட்டிக்கு சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த இரண்டு பேர் சுமார் முபப்து வருடஙக்ளாக நெருங்கிய நண்பர்களாக இருப்பதாகவும், அவர்களது நட்பு என்பது தான் மற்றவர்களுக்கு உதாரணம் என்று மப்பு ஏறிப் போயும் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கிளம்பும் போது அந்த இருவரில் ஒருவர் மட்டையாகிவிட, மட்டையான நண்பர் வெகு தூரம் போக வேண்டியராக இருந்தததாலும், எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் இருந்ததாலும், ஏதாவது ஒரு லாட்ஜ் அறையில் தங்க வைத்துவிட்டு காலையில் கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்த போது. முப்பது வருட சென்னையின் முக்கிய அரசுதுறை காண்ட்ரேக்டரான அவர் சொன்னது.. இவன் மட்டையானதுக்கும் எவன் ரூம் வாடகை கொடுக்கிறது? என்றார். நண்பேண்டா..

இந்த வார குறும்படம்
மிக அழகான சென்சிடிவ்வான ஒரு காதல் கதை. முதல் காதலையும், முதல் முத்தத்தையும் யாரால் மறக்க முடியும். இப்படத்தின் முடிவு கொஞ்சம் யோசிக்கக்கூடியதாக இருந்தாலும், அதை விஷுவல் செய்த முறையும், அந்த பெண்ணின் உதட்டுச் சுழிப்பும், அந்த ஆழகிய உதடுகளும், கண்களும். க்ளைமாக்ஸ் க்ளோசப்புகளும் நிறைய கதை சொல்கிறது..

இந்த வார என் ட்வீட்
உனக்கான மாற்று வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியாத போது அட்வைஸ் செய்வது போன்ற ஒரு அராஜகம் கிடையாது.
தவறு செய்யும் நண்பனை என்றுமே விட்டுக்கொடுக்காதே. அவனுக்கு ஆதரவாய் இரு.. அவன் செய்யும் தவறுக்கு அல்ல இந்த வார என் ட்வீட்
உனக்கான மாற்று வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியாத போது அட்வைஸ் செய்வது போன்ற ஒரு அராஜகம் கிடையாது.
###################################################################
இந்த வார தத்துவம்
ஒரு வேளையை எவ்வளவு சீக்கிரம் முடித்தாய் என்பதை விட எவ்வளவு சிறப்பாக செய்தாய் என்பதைதான் ஞாபகம் வைத்திருப்பார்கள்- ஹார்வர்ட் நியூட்டன்.
##################################################################
இந்த வார விளம்பரம்
பங்களாதேஷிய டிவி சேனலில் ஒளிப்பரப்பாகிய விளம்பரமாம். எவ்வளவு யோசிக்கிறாய்ங்கப்பா..?
###################################################################
இந்த வாரம் படித்தது.
அய்யனார் என்கிற பெயரில் எழுதும் இவரை கொஞ்சம் தீவிர இலக்கியம், கவிதை என்று உலாவுபவர்களுக்கு நிச்சயம் தெரியும். இவரது கவிதைகள் எனக்கு புரிந்ததில்லை.. கவிதைக்கும் எனக்குமான தூரம் எவ்வளவு.. என்பதை பற்றி நான் சொல்லித் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனால் இவர் அவருடய பதிவில் ஒரு தொடர் எழுதுகிறார்.
ஒரு ப்ரொபஷனல் கொலைகாரனின் வாழ்க்கையை பற்றிய கதை. மிக அருமையாய் இருக்கிறது. ஒரே மூச்சில் இதுவரை வந்த அத்துனை எபிசோடுகளையும் படித்து முடித்துவிட்டேன். படித்து முடித்த பின் ஒரு மாதிரி மூச்சு முட்டிக் கொண்டு வந்ததை அனுபவிக்க வேண்டுமென்றால் படியுங்கள். கலாச்சார காவலர்கள், வயது வந்தும் முதிர்ச்சியில்லாதவர்கள் தயவு செய்து க்ளிக் செய்யாமல் வேறு வேலை பார்க்கவும். http://www.ayyanaarv.com/

இந்த வார ப்ளாஷ்பேக்
இந்த பாடலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் தேசிய கீதமாய் இருந்த பாடல்தான். லதா மங்கேஷ்கரின் தேன் குரலும், ஷைலேந்தர் சிங்குனுடய ராவான குரலும், டிம்பிள் கபாடியாவின் வெளிர் தொடையும் இன்றும் நம்மை மயக்கத்தான் செய்கிறது. இப்பாடலில் டிம்பிளின் முகத்தில் தெரியும் அந்த வெட்கம் கலந்த இன்னொசென்ஸை பாருங்கள்.. ம்ஹும்…

அடல்ட் கார்னர்
இரண்டு முதிய தம்பதிகள் மெடிக்கல் செக்கப்புக்கு போய் வர, டாக்டர் முதியவரிடம் “உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிறது வேறு ஏதாவது என்னிடம் டிஸ்கஸ் செய்ய விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு முதியவர் “எனக்கு ஒரு பிரச்சனை.. என் மனைவியுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்டபின் உடல் முழுவதும் வியர்த்து, சூடாக இருக்கிறது. அடுத்த இரண்டாவத் முறையாக உறவு கொண்டு முடித்த பிறகு உடலெல்லாம் குளிர்ந்து சில்லென இருக்கிறது” என்றவுடன் டாக்டர் தான் அதை பற்றி ரிப்போர்டை செக் செய்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு அவரது மனைவியிடம் ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டு வேறு ஏதாவது கேட்க வேண்டுமா என்று கேட்டவுடன் அவர் ஏதும் இல்லை என்றார். அப்போது டாக்டர் அவரின் கணவர் சொன்ன விஷயத்தை சொல்ல இது பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, மனைவி சிரித்தபடி “அது ஒண்ணுமில்லைங்க.. முதல் தடவை மே மாசத்திலேயும், ரெண்டாவது தடவை டிசம்பர்லேயும் நடந்திச்சு அதனால இருக்கும் என்றார்.
###################################################################
கேபிள் சங்கர்

Post a Comment
52 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
அண்ணே அது கார்க்கி இல்லை கார்த்தி சிறுத்தை படத்துல.
இம்முறை பரோட்டாவில் இனிப்பை விட காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது போல இருக்கிறது...
இந்த வார கொத்து புரோட்டா சூப்பர்.
சன் ஒன்னும் அவசரத்துக்கு டி.வி. ஆரம்பிச்சு ஓட்டலையே 15 வருஷம் அனுபவத்துல தான் இவ்வளவு தில்லாலங்கடி பண்ணி போட்டி போடா முடிகிறது.
பங்களாதேஷ் விளம்பரம் .. எப்படி எல்லாம் யோசிக்குறாங்க !!
ராம்ராஜ் கடைல வெள்ளை கலர்லே 15 வெள்ளை காட்டுறாங்க. அப்புறம் அரை மணி நேரம் ஆகாதா?
// ராம்ராஜ் கடைல வெள்ளை கலர்லே 15 வெள்ளை காட்டுறாங்க. அப்புறம் அரை மணி நேரம் ஆகாதா?
//
க்கும்..நல்லாக் கேளுங்கண்னே.ஒரு மனுஷன் வெள்ளைச் சட்டை போடுறது குத்தமாய்யா???
அப்புறம் உள்ள நுழைஞ்சதும் கேபிள் அந்தக் கடை சேல்ஸ்மேனிடம் “நல்ல கலரா வெள்ளைக் கலர்ல அண்ணனுக்கு சட்டை காட்டுங்க”ங்குறாரு. இவராவது பரவாயில்லை..கார்க்கி அவரிடம் “சாயம் போகாத சட்டையா காட்டுங்கங்க”ங்குறான். அடி வாங்காம அங்கேந்து வந்தது பெரிய விஷயம் :)))
பொன்னியின் செல்வன.- Mani should stop making these cheap remake's.
SUN should spend money to make it the real way, like AC Thirulogachander.
Instead of giving Crores to Kamal,Surya,Vikram and Mani, they should spend on sets and make it real.. They can make "Indian Gladiator.."
Rajini probably will not act in another SUN movie. Not for anything.. just for this SUNTV making interview thollai.
There are plenty of varieties in White (Color) and Fabric. So the range. Politcian's white are the costliest shirts..
Poor PC. Hard to loose a loved one like this... :(
அண்ணே வந்தாச்சா..?
//உங்க வீட்டில் விருந்தாளிங்களுக்கு என்ன பிடிக்குமோ அதுதான் அன்னைய சமையலாமே? ம்க்கும்..//
அது ரஜினி பட விமர்சன தொனியில் கேட்டதாகவும், அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பதைத்தானே செய்ய முடியும் என்ற ரீதியில் பதில் அளித்ததாகவும் நினைவு.
//மணிரத்னத்தின் அடுத்த படம் கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று பேசப்படுகிறது//
ஐயோ! மணிரத்னம் கெடுக்கிறதுன்னே sorry எடுக்கிறதுன்னே முடிவு பண்ணிட்டாரா?
பிரகதீஸ்வரர்தான் காப்பாற்.. :((((
கொத்து சூப்பர்ணா :)
வாழ்த்துகள்.
மணிரத்னம் அடுத்த படமா..??? அய்யோ...
பி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
//
ரஜினி மாதிரியான ஒரு கேலிபர் ஆட்களை வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டு அசத்தாமல் திருமப் , திரும்ப, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை பற்றியும், ஷங்கரை பற்றியும், எந்திரனை பற்றியுமே பேசியது செம போர் அடித்தது
//
rompa sariyaga soneergal. nan ninaithathum athuve...
//ரஜினி மாதிரியான ஒரு கேலிபர் ஆட்களை வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டு அசத்தாமல் திருமப் , திரும்ப, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை பற்றியும், ஷங்கரை பற்றியும், எந்திரனை பற்றியுமே பேசியது செம போர் அடித்தது//
என்னக்கும் அதுவே .. நான் ரஜினின் தீவீர ரசிகன் . பேட்டியை முழுவதும் கேட்க வில்லை . தமிழ்நாடுல மு க குடும்ப கொடுமை தாங்க முடியல .. மன்னர் ஆட்சி போல உள்ளது எதோ இந்திரன் வெற்றிக்கு மாறன் தான் காரணம் என சொல்ல வில்லையே அதுவரைக்கும் மகிழ்ச்சி .
---
டி ஆர் வீடியோ சூப்பர்
---
தமிழ் குறும் படங்களை அதிகம் வெளியிடலாமே .. இந்த வாரம் கலைஞர் தொலைகச்சில் 'நாளைய இயக்குனர் ' இல் சில படங்கள் எனக்கு பிடித்து இருந்தது . எதோ தோனுச்சு சொல்லிட்டேன்
தமிழுடன்
முத்துக்குமார்
பி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
கமல் பேட்டியப் பத்தி எதுவுமே எழுதலியே தல!
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கமல் பேட்டியப் பத்தி எதுவுமே எழுதலியே தல!///
புரஞ்சிரிந்தா எழுதிருப்பாரு......
பி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
//மற்றபடங்கள் எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே சூப்பர் ஹிட் படங்கள். ///
அப்போ எந்திரன்????/
ரஜினி சம்பந்தப்பட்ட நிக்ழ்ச்சி என்றாலே குறை கண்டு பிடிப்பது உங்கள் வாடிக்கை ஆகி விட்டது
//
//மற்றபடங்கள் எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே சூப்பர் ஹிட் படங்கள். ///
அப்போ எந்திரன்????//
*******
சிவகாசி மாப்பிள்ளை... பதிவை மற்றொரு முறை தெளிவாக, அல்லது புரியும் படியாக படியுங்கள்... அவர் சொன்னது இதோ :
// சன் ரிலீஸ் படங்களிலேயே //
எந்திரன் சன் பிக்சர்ஸாரின் முழு முதல் தயாரிப்பு... முந்தைய படங்கள் எல்லாம் யாரோ தயாரித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டது...
அய்யனாரின் கதை கட்டிப்போடுகிறது படிப்பவரை..
வாழ்த்துகள் கேபிள்ஜி
ஷங்கர் ஜி...
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன படங்களை விட “எந்திரன்” படத்தின் வசூல் தீபாவளி வீக் எண்டில் அதிகமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்....
விஜயசாரதியின் கேள்விகள் மொக்கையே மொக்கை தான்... ஆனால், அது எந்திரன் படத்திற்கான ஒரு நேர்காணலே என்று நினைக்கிறேன்...
இல்லையென்றால், வேறு கேள்விகள் கேட்டிருக்க வாய்ப்புண்டு...
மேக்கிங் ஆஃப் எந்திரன் தான் தீபாவளி நிகழ்ச்சிகளிலேயே பெரிய வெற்றியை பெற்ற நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.. ப்ளீஸ் கன்ஃபர்ம்....
கேபிள்.. அய்யனார் பதிவு பற்றி எனக்கும் மேற்கோள் வந்தது.. நானும் வாசித்தேன்...
ஒரு இடத்திலும் கலாச்சார காவலர்கள்... பொதுவெளியில் இப்படி எழுதுகின்றாரே என்று அவர் பெயரை இழுக்காதவரை சந்தோஷமே...
இனி சத்தியவான் சாவித்திரிகள்.. அய்யனாரை பின்தொடர்வார்கள்..தலையில் முக்காடு போட்டபடி..
இந்த உலகத்தின் நிர்ணயத்துக்கோ, அல்லது மற்றவர்களின் எதிர்பார்புக்கோ வாழாதே. எவனொருவன் மற்றவர்களை தொடர்கிறானோ அவன் சீக்கிரமே அந்த கூட்டத்தில் காணாமல் போய்விடுவான். – சொன்னது பரிசல்காரன்.//
பரிசல் தம்பி தத்துவம் சூப்பர்...
அவர் வெள்ளைல நல்ல கலர்தானே வாங்கினாரு? சாயம் போயிறலையே?
ஏன்னா, நமக்கு அப்துல்லா அண்ணன் முக்கியம் !! :))
புரோட்டா வீடியோ நறுக்!
:)
அப்துல்லா அண்ணன் தன் மனசுக்கு மேட்ச் ஆகுற மாதிரி ஒரு சட்டை தேடியிருப்பாரு
//
க்கும்..நல்லாக் கேளுங்கண்னே.ஒரு மனுஷன் வெள்ளைச் சட்டை போடுறது குத்தமாய்யா???
அப்புறம் உள்ள நுழைஞ்சதும் கேபிள் அந்தக் கடை சேல்ஸ்மேனிடம் “நல்ல கலரா வெள்ளைக் கலர்ல அண்ணனுக்கு சட்டை காட்டுங்க”ங்குறாரு. இவராவது பரவாயில்லை..கார்க்கி அவரிடம் “சாயம் போகாத சட்டையா காட்டுங்கங்க”ங்குறான். அடி வாங்காம அங்கேந்து வந்தது பெரிய விஷயம் :))) //
:)))
செங்கோட்டை பார்டர் புரோட்டா மாதிரி சுவையாக இருந்தது....
பி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
//
எந்திரன் சன் பிக்சர்ஸாரின் முழு முதல் தயாரிப்பு
//
அப்போ எந்திரன் ரிலீஸ் பண்ணது யாரு??????????????
கொத்து பரோட்டா அருமை,தத்துவம்,ட்வீட்,விளம்பரம் சூப்பர்,
மணி அவர்களின் அடுத்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதா?
அப்துல்லா கமெண்ட் அருமை..
//மணிரத்னத்தின் அடுத்த படம் கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று பேசப்படுகிறது. அதுவும் வரலாற்று படமாக இல்லாமல் சோஷியல் தீமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. //
வால்மீகியை கடிச்சு, கம்பரை கடிச்சு இப்ப கல்கியா
கடவுளே !!
//sivakasi maappillai said...
//
எந்திரன் சன் பிக்சர்ஸாரின் முழு முதல் தயாரிப்பு//
அப்போ எந்திரன் ரிலீஸ் பண்ணது யாரு??????????????
******
இண்டர்நெட்டில் தேடிப்பாருங்களேன்..
சென்னை சிட்டி - அன்பு பிக்சர்ஸ்
USA - FICUS MOVIES
AYNGARAN INTERNATIONAL
ஆந்திராவில் ஒருவர்
கேரளாவிற்கு ஒருவர்
கர்நாடகாவிற்கு ஒருவர்
வட மாநிலங்களில் ஒருவர்
என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்....
டேஸ்டி கொத்து... as usual :)
அப்துல்லா பற்றி எழுதியதை ரசித்து வாசித்தேன். அப்படியே நேரில் பார்க்கிற feeling வந்துடுச்சு . வெள்ளை சட்டை வேந்தர் அப்துல்லா நல்லா இருக்காரா?
அது ரஜினியோட பேட்டின்னு நீங்க தப்பா நெனச்சிட்டீங்க.. எந்திரன் ப்ரோமோ + கொஞ்சம் வேற கேள்விகளும்.. அவ்வளவுதான். சன் பிகசர்ஸோட ட்ரிக் :-))
மணிரத்னம் அப்படி ஒரு படம் எடுத்தால் தமிழ்நாடு தாங்குமா தல?
இந்த இடுகையைப் பாருங்கள். போன்னியின் செல்வனை அவர் எடுத்தால் இப்படித்தான் இருக்கும்
பிசி மகள் இறந்தது மிகவும் துரதிர்ஷமானது என் ஆழ்ந்த அஞ்சலிகள். பகிர்விற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.
@ம.தி.சுதா
அப்படியா..?
@குரு
நன்றி
அதுசரி
@அப்துல்லா
பின்ன அண்ணனுக்கு சட்டை எடுக்குறதுன்னா சும்மா போய் எடுத்துட்டு வந்துடறதா..?
@மிஒ
நீங்க சொன்ன ரஜினி மேட்டர் நடந்தாலும் நடக்கலாம்.
@லதாமகன்
இன்னொருக்கா பாருங்க..
@ஜீ
பார்க்கலாம்
@இராமசாமி கண்ணன்
நன்றி
@பட்டர்ப்ளை சூர்யா
வாழ்த்து எதுக்கு, மணிரத்னம் படத்துக்கா?
@வழிப்போக்கன் யோகேஷ்
நிறைய பேர் அதைத்தான் நினைத்திருக்கிறார்கள்.
@முத்துகுமார்
நான் ஏற்கனவே நிறைய தமிழ் குறும்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். முத்து. நிச்சயம் தொடருவேன். உங்கள் கருத்தை சொன்னதில் எனக்கு சந்தோஷமே..
@ஷங்கர்
நான் கமல் பேட்டி பாக்கலை..
@சிவகாசிமாப்பிள்ளை
சூப்பர் ஹிட்..
@நிகழ்காலத்தில்
நன்றி தலைவரே.. நிச்சயம் ஒரு வித்யாசமான அனுபவத்தைதரும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை..
@ஆர்.கோபி..
இல்லை தலைவரே. தீபாவளி ரிலீஸ் அன்று பல தியேட்டர்களில் எந்திரன் எடுக்கப்பட்டுவிட்டது தற்போது மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில்மட்டும் ஒரு ஸ்கீரினில் ஓடுகிறது..
மேக்கிங் ஆப் எந்திரன் ஒரு நல்ல நிகழ்ச்சி..
@ஜாக்கிசேகர்
அப்படியா.?
@சுரேகா
அது சரி.. நன்றி
@முகிலன்
அஹா..
@சென்ஷி
அட நீங்களெல்லாம் நம்ம பதிவுக்கு.. சந்தோஷம்.
@பொன்சந்தர்
சே.. அந்த ஊருக்கு போய் சாப்புடாம வந்த ஒரே கடை அதுதான்..
@சிவகாசி மாப்பிள்ளை..
சன்னில்லை..
ஆனா சன் தான்..
@அருண்
பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது..
@அப்துல்லா
நன்றி
@பிரபு.எம்
நன்றி
2மோகன்குமார்
நன்றி
2சிம்பிள் மேன்
ஹா..ஹா..
@சுரேஷ்
பார்க்கிறேன் தலைவரே
@அய்யனார்
உங்கள் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி அய்யனார் அவர்களே..
படித்தும் பார்த்தும் ரசித்தேனு..ங்க
அய்யனார் தள அறிமுகத்திற்கு நன்றி, தொடரை படித்தேன் அருமை.
சங்கர்சாரு.. நான் எழுதினததான் படிக்கனும் அட்வைஸ் கூடாதுங்றது உங்க உரிமை.. சினிமா துறையில சாதிக்கனும்ங்றதுக்காக சங்கர், மணிரத்தினம் சன் இப்படி எல்லோரையும் சாப்டா டச் பன்றது உங்க ப்யூட்சர்.. ஆனா ஸ்ரீராம் மகள் நள்ளிரவு பார்ட்டியில் விழுந்ததாய் இரண்டு நாளிதழில் படித்தேன்.. ஆனால் பட்டாசு வெடிக்கும்போது என நீங்கள் எழுதி உள்ளீர்கள் எது உண்மை .. ஒரு வேளை நல்ல கலைஞன் மனம் புன்படக்கூடாது என நல்ல மனதில் எழுதியிருக்கலாம் .. இப்படி கமெண்ட் போட்டதால் உங்களை பிடிக்காத ஆள் என நினைக்காதீர்கள் உங்கள் ரெகுலர் வாசகர் நான்
நன்றி வாழ்த்துக்கள்
இந்த வார கொத்து புரோட்டா சூப்பர்.
இவன்
http://tamilcinemablog.com/
மணிரத்னம் படத்தை மட்டுமல்ல டி.ஆர், படத்தையும் எதிர்பார்க்கிறேன்
Post a Comment