Thottal Thodarum

Nov 15, 2010

கொத்து பரோட்டா-15/11/10

தமிழ் சினிமாவில் உள்ள உதவி இயக்குனர்கள் எல்லாருமே கொதித்தெழுந்து போய் இருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் மீதான கோபத்தோடு. போன வாரம் அவர் ஒரு பேட்டியில் இப்போதைய உதவி இயக்குனர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்க்மே கிடையாது. ஆயிரம் முறை சுயமைதுனம் அறிவு தானிருக்கிறது. அப்படிப்பட்டவனிடம் எப்படி ஒரு நல்ல சிறந்த படத்தை பெற முடியும்?. என்றும், தான் இதுவரை இயக்கிய இரண்டு படங்களும் குப்பை என்றும், நந்தலாலா போன்ற நல்ல படங்கள் வெளிவர மாட்டேனென்கிறது என்றும், சமீபத்தில் அவர் ஒன்னறை லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி வந்தேன் என்று எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டு நாய்க்குட்டியிடமிருந்து துண்டு பிரசுரம் வரை சொல்லி மாய்ந்துவிட்டார். உதவி இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவர்களுக்கும் ஒரு மன்னிப்பு கடிதத்தை கொடுத்துவிட்டதாய் கேள்வி. அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை என்றும் ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் புத்தகங்கள் படிப்பதை பற்றி சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும். அதை சொல்லிய விதம் தான் குடிக்கும் டீயில் தானே எச்சை துப்பி குடிப்பதற்கு சமம். சரி விடுங்க பாஸு.. அவரு இரண்டு ஹிட் கொடுத்திருக்காரு. அவ்வளவுதானே. நாம எவ்வளவு பேரை பாத்திருப்போம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று என் அப்பா இறந்த தினம். அதை குறித்து என் அப்பா பதிவை படித்து நேரிலும், போனிலும் எனக்கு ஆறுதல் சொல்லியும், உற்சாகபடுத்தியும், உத்வேகமெழுப்பிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார அரசியல் நேற்றைய பேப்பரில் ராமதாஸும், குட்டி ராமதாஸும் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள். இரண்டரை கோடியோ அல்லது லட்சமோ.. வ்ன்னியர்கள் இருந்தும் கூட ப.மா.க ஆட்சிக்கு வராதது ஜாதிக்காரர்கள் தவறு என்றும் தாங்களுடன் யார் கூட்டணி சேருகிறார்கள் என்று முக்கியமில்லை. தாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணியென்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். இவர்கள் ஸ்டாராங்காக நினைக்கும் விழுப்புரத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பொன்முடி எந்த ஜாதி? என்று தெரியுமா? தாரமங்கலம் என்று நினைக்கிறேன்.. அங்கு வேலு என்றொருவர் இருக்கிறார். அவர் என்ன ஜாதி என்று தெரியுமா? ராமதாஸுக்கும்.. குட்டி ராமதாஸுக்கும்.. சரக்கடிகாமலயே ஒளறுகிறார்கள் என்று தோன்றுகிறது. அதனால் தானோ என்னவோ.. சரக்கு வாணாம்னு சொல்றாங்க போலருக்கு..

ராசாவின் ராஜினாமாவினால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் ப்ரச்சனை வரும் என்று ஜெ தரப்பு எதிர்பார்க்கிறது. அதை எதிர்பார்த்துதான் காங்கிரஸ் மேல் நிச்சயமாய் தவறு இருக்க வாய்ப்பில்லை என்பது போல அறிக்கைவிட்டிருக்கிறார். ராஜாவை தூக்க கலைஞர் அனுமதிக்க மாட்டார் என்ற ஜெவின் நினைப்பில் கலைஞர் மண்ணை போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இனி அடுத்த ஜெவின் மூவ் என்ன என்பதை பார்ப்போம். தேர்தல் வர..வர.. செம இண்ட்ரஸ்டிங்தான்ங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சோஷியல் நெட்வொர்க்கில் முடி சூடாத ராஜாவாக இருக்கும் பேஸ்புக் விரைவில் தங்களுடய நெட்வொர்கில் இமெயில் சர்வீஸ் ஆரம்பிக்க போகிறார்கள். ஏற்கனவே கூகுளின் ஜிமெயிலின் ஆர்குட்டுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக்கின் இமெயில் வரவால் ஜாம்பவான்களான கூகுள், ஹாட்மெயில், யாஹு போன்றவர்கள் கொஞ்சம் ஆடிப் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.. ஏனென்றால் பேஸ்புக்கிடம் இருக்கும் 500 மில்லியனுக்கு மேற்பட்ட டேட்டாபேஸ்தான் காரணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார செவிக்கினிமை
பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் “எங்கேயும் காதல்” பாடல்கள் கேட்டேன். மீண்டும் ஹாரிஸ் ஹிட்டடிப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் ஹாரிஸின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஏற்கனவே ஹிட்டான பாடல்களை, தமிழோ, ஆங்கிலமோ, எஸ்கிமோ பாஷையோ.. சரியான கலவையில் போட்டுவிடுகிறார். இதோ இப்படத்தில் நெஞ்சில் நெஞ்சில் என்று ஒரு பாட்டு கேட்டவுடன் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது..  டெம்போ குறைந்த தில்சேரே.. நங்கை என்றொரு பாட்டு.. அப்படியே மைக்கேல் ஜாக்ஸன்.. கேட்டு பாருங்கள். நிச்சயம் ஹிட்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார டிட்பிட்ஸ்
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த படம் ஆரம்பித்துவிட்டார். விஷால் ஹீரோ, தெலுங்கில் கோபி சந்த நடித்து ஓடிய சவுரியம் என்கிற படத்தின் ரீமேக் என்கிறார்கள். பார்ப்போம்..

கரண் நடித்து விரைவில் வர இருக்கும் சூரன் படத்தில் ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம என்னவென்றால் அவருக்கு காதல் உண்டு, ஆனால் டூயட் கிடையாதாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்
ரஹ்மான் வந்து தமிழ் சினிமாவை வைரமுத்துவுடன் கலக்கிக் கொண்டிருந்த நேரம். ரஹ்மானின் இசையில் வார்த்தைகள் புரியாமல் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு உச்சத்திலிருந்த காலத்தில் இப்பாடலின் வரிகளுக்காக மிகவும் ரசிக்கப்பட்டதாகும். ஸ்ரீனிவாசின் சுகந்த குரலில் அருமையான காம்போசிஷனினில் அமைந்த பாடல். பின்னர் இதே பாடலை ஹாரிஸ் சுட்டு தாம் தூம் படத்தில் போட்டது வேறு கதை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
பாலாஜியின்
அழகான ஒரு குறும்படம்.. முக்கியமாய் சிறுவர்களை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட படம். அவர்களை பயன்படுத்திய விதமும், படமாக்கிய விதமும் நிச்சயம் ஒரு  நல்ல இயக்குனரை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை கொடுக்கும் ப்டம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
எக்ஸலண்ட் விடியோ.. விளம்பரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் பூராவும் தீபாவளி மகிழ்ச்சி செய்தியாக பேசிக் கொண்டாடியது.. கோவை சிறுவர்கள் கொலை குற்றவாளி என்கவுண்டரில் போடப்பட்ட்துதான். பெரும்பாலான மக்கள் வரவேற்று நிஜமாகவே தீபாவளியை கொண்டாடினார்கள். இன்னொரு பக்கம் அவன் குற்றவாளி என்று முடிவு செய்யாமல் அவனை ப்ளான் செய்து வேறு யாருடய கம்பெல்ஷனில் போட்டுவிட்டார்கள் என்று கும்பல். இப்படி தப்பு செய்தவன் எல்லாத்தையும் போடறதுன்னா இருக்கிற அத்துனை அரசியல் வாதிங்களை என்ன செய்யலாம் என்று ஒரு கும்பலும் பேசிக் கொண்டிருந்தாலும். வெகுஜன மக்களுக்கு தீர்ப்பு உடனே வந்தது பெரு மகிழ்ச்சியாகவே தெரிந்தது. அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். இது அரச தீர்ப்பு.. அவ்வளவுதான். அரச தீர்ப்புகு பின் ஆயிரம் தெய்வ தீர்ப்பு இருக்கலாம். அதையெல்லாம் ஆராயப்படாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் மணம் இந்த வாரத்திலிருந்து டாப்20 பதிவுகளை வாராவாரம் தெரிந்தெடுத்து கொடுக்க போகிறது என்று ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் இந்த வாரம் என்னுடய பதிவு ஆறாவது இடத்தில் இருக்கிறது. சந்தோஷம். ஆனால் அவர்களின் தெரிவு செய்யும் முறையில்  கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருக்கும் போலருக்கு.. ஏனென்றால் பின்னூட்டஙக்ளை வைத்தும், ஹிட்ஸுகளை வைத்தும், ஓட்டுக்களை வைத்தும் தான் லிஸ்ட் எடுக்கிறார்கள் என்கிற பட்சத்தில் எனக்கெல்லாம் தமிழ் மணத்தில் பத்து ஓட்டுக்களுக்கு மேல் விழுவதே இல்லை. அப்படியிருக்கு ஓட்டை வைத்து செலக்ட் செய்வதும், பின்னூட்டங்களை வைத்து தெரிவு செய்வதும் அவ்வளவு  சரியாக இருக்காது என்று என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வாரம் படித்தது
போட்டோகிராபி பற்றி தெளிவாய் தமிழில் ஒரு ஃபோரமில் படிக்க நேர்ந்தது. அதிலிருந்து தொடர்ந்து அந்த போரமில் இயங்கி வருகிறேன். புதுசாய் ஆரம்பித்திருக்கிறார்கள். இண்ட்ரஸ்டிங்.. http://udanz.com/photography/index.php?topic=11.0

இப்போதெல்லாம் இணையத்தில் தான் நல்ல சிறுகதைகள் படிக்க கிடைக்கிறது. அதில் சமீபத்தில் படித்த மூன்று கதைகள் உங்களுக்காக
இரா.முருகனின் ரங்கா சேட் http://www.eramurukan.in/tamil/magazines.php
பா.ராகவனின் தமிழ்பேப்பர் தீபாவளி மலர் சிறுகதை 108 வடைகள் http://www.tamilpaper.net/?cat=111 
பதிவர் விந்தை மனிதனின் அஸ்வதாமாக்கள் சாவதில்லை. மகாபாரதகதையின் இன்னொரு பார்வை http://vinthaimanithan.blogspot.com/2010/11/blog-post.html. இவ்மூன்று கதைகளுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படித்துவிட்டு அவர்களிடம் சொல்லுங்கள். அஹா.. தோ…பார்டா.. சூரியனுக்கே டார்ச்சா? என்கிற ரீதியில் எல்லா எளக்கியவாதிகளும் சேர்ந்து பஸ்ஸோ.. ட்ரைனோ விடுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். நல்லா ,,,,,,,,,,,….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ட்வீட் 
வெற்றியோ தோல்வியோ தலையில ஏத்திககதே.. பின் நாட்களில் அது ரெண்டும் இல்லாமயே தலை கனத்து போயிரும்
சில சமயங்களில் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்வதை விட எப்படி செய்யக்கூடாது என்று கற்பது கட்டாயம் என்று தோன்றுகிறது.
என்னை ட்வீட்டுகளில் தொடர http://twitter.com/#!/sankara4
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
மற்றவர்கள் செய்யும் தவறிலிருந்து  உன் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்.  ஏனென்றால் உன்னால் எல்லா தவறையும் செய்து பார்த்து கற்றுக் கொள்ள முடியாது.- ஜான் கென்னடி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
பெண்களின் வாழ்க்கை மிகவும் கடுமையானது. காலையில் துணிகளை துவைக்கிறாள், மதியம் துணிகளை காய வைக்கிறாள். மாலையில் துணிகளை அயர்ன் செய்து வைக்கிறாள். இரவில் துணிகளை அவிழ்க்கிறாள். நடு இரவில் துணிகளை தேடுகிறாள்..ம்ஹும்..

ஒரு பெண்கள் விடுதியில் கரண்ட் கட் ஆகிவிட, வார்டன் உடனடியாக ஈ.பிக்கு போன் செய்தார் உடனடியாக கரண்ட் வர செய்யுங்கள் அல்லது உங்கள் ஆட்கள் ரெண்டு பேரை வரச்சொல்லுங்க.. இங்க இருக்கிற மெழுகுவர்த்தியெல்லாம் காணம்.

ஓரு பழைய ஜோக்.. குழந்தை தன் அப்பா அம்மாவின் தேனிலவு போட்டோவை காட்டி.. அப்ப நான் எங்க இருந்தேன்? என்று கேட்க.. அப்பா.. போகும்போது என்கிட்ட இருந்தே.. வரும்போது அம்மா கிட்ட இருந்தே என்று சொல்ல.. அம்மா ரகசியமாய்.. மகனிடம்..”அப்பா பொய் சொல்வாருடா.. செல்லம்.. நீ போகும் போதே அம்மாகிட்டதான் இருந்தே செல்லம்” என்றாளாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்.
Post a Comment

29 comments:

Bruno said...

In more than 90 percent ARR songs words are clearly audible . . That words are not audible was a rumour spread by one loser and his pr machinery

Cable சங்கர் said...

dr. அதற்காகத்தான் இதை கொடுத்திருக்கிறேன்..

vinthaimanithan said...

ஆஹா... தல! அப்டியே உசர தூக்கி வெச்சிட்டீங்க! நன்றின்னு சொன்னா போதுமா என்ன?!

bandhu said...

//ராஜாவை தூக்க கலைஞர் அனுமதிக்க மாட்டார் என்ற ஜெவின் நினைப்பில் கலைஞர் மண்ணை போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.//
மண் ஒட்டவில்லை..
// இனி அடுத்த ஜெவின் மூவ் என்ன என்பதை பார்ப்போம். தேர்தல் வர..வர.. செம இண்ட்ரஸ்டிங்தான்ங்க.//
ராமன் ஆண்டா என்ன.. இராவணன் ஆண்டா என்ன.. நமக்கு இருக்கவே இருக்கு வேடிக்கை பார்க்கும் மனது..

bandhu said...

//In more than 90 percent ARR songs words are clearly audible . .//

பாய்ஸ் படத்தில் வரும் "சா ரே க மே" உண்மையில் "ச ரி க ம" என்பது உண்மையில் தெளிவாக தெரிகிறதா? may be it is in the 10% :-)

pichaikaaran said...

எப்போதும் சாதாரண மனிதனின் குரலை பிரதிபலிக்கும் நீங்கள் , கோவை என்கவுண்டர் விஷயத்தில் , அறிவு ஜீவிகளின் குரலை பிரதிபலித்து இருக்கிறீர்கள் . நல்ல மாற்றம் . அடுத்த கட்டத்துக்கு செல்வதை உணர முடிகிறது . வாழ்த்துக்கள்

அருண் said...

கொத்து பரோட்டா அருமை,ஹாரிஸ் ஏற்கனவே ஹிட்டான பாடல்களையே தொடர்ந்து கலவையாக தருவது "எங்கேயும் காதல்"லில் தெளிவாய் தெரிகிறது.அடுத்து "கோ"விலாவது தனித்து தெரிவாரா பார்ப்போம்.இருந்தாலும் மைக்கேல் ஜாக்சனை காப்பியடிப்பதை நிறுத்தினால் நல்லது,சிறுகதைகள்,ட்வீட்,அடல்ட் கார்னர் அருமை தத்துவம் சூப்பர்.

மாணவன் said...

வழக்கம்போலவே அசத்தல் சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

THOPPITHOPPI said...

இப்பலாம் திங்கள் என்றவுடன் உங்கள் கொத்து பரோட்டா தான் ஞாபகத்துக்கு வருது. அருமையாக தொகுத்து போடுறிங்க

வாழ்த்துக்கள்

ரைட்டர் நட்சத்திரா said...

அருமை

test said...

//மிஷ்கின் புத்தகங்கள் படிப்பதை பற்றி சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும். அதை சொல்லிய விதம் தான் குடிக்கும் டீயில் தானே எச்சை துப்பி குடிப்பதற்கு சமம்//
true! :)
அடல்ட் கார்னர் Super! /:))

அரவிந்தன் said...

பெங்களுர் புத்தக கண்காட்சியில் உங்களின் சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கினேன்.சிலர் உங்கள் புத்தகத்தை கேட்டு வாங்குவதாக விற்பனையாளர் சொன்னார்.

Prabu M said...

சூப்பர் கொத்துபொரோட்டா...
ஹாரிஸின் இசை ஓகேதான் என்னைப் பொறுத்தவரை...
he manages to give good numbers somehow...

ciniposter said...

கேபிள் சார் இந் த வார கொத்து பரோட்டா சூப்பர்....
அலர்ட் கார்னர் மிகவும் அருமை
ஹி...ஹி...
www.tamilrange.com
(kollywood,tollywood hot updates)

ஜோ/Joe said...

//ஆனால் அவர்களின் தெரிவு செய்யும் முறையில் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருக்கும் போலருக்கு.. ஏனென்றால் பின்னூட்டஙக்ளை வைத்தும், ஹிட்ஸுகளை வைத்தும், ஓட்டுக்களை வைத்தும் தான் லிஸ்ட் எடுக்கிறார்கள் என்கிற பட்சத்தில் எனக்கெல்லாம் தமிழ் மணத்தில் பத்து ஓட்டுக்களுக்கு மேல் விழுவதே இல்லை. அப்படியிருக்கு ஓட்டை வைத்து செலக்ட் செய்வதும், பின்னூட்டங்களை வைத்து தெரிவு செய்வதும் அவ்வளவு சரியாக இருக்காது என்று என் எண்ணம். //

சுருக்கமா சொன்னா உங்க பதிவு செலக்ட் ஆகுற மாதிரி தேர்வு முறைய மாத்தணுங்குறீங்க :)

jayaramprakash said...

Kalakkunga ji.

சுரேகா.. said...

ட்வீட்டுல இருக்குற விஷயம் எனக்கு பிடிச்சிருக்கு! அதைவிட...புரிஞ்சிருக்கு!! :))

அந்த ட்ரீ...! அழகான லீட் வீடியோ.! இதை நான் பல இடங்களில் பயிற்சிக்காக பயன்படுத்தியிருக்கேன்..!

பின்னுங்க!!

Unknown said...

இன்னைக்கு கலக்கிடீங்க.. பா.ராகவனின் அண்ணன், இரா.முருகனின், மற்றும் விந்தைமனிதன் கதைகள் அருமை..

Bruno said...

//சுருக்கமா சொன்னா உங்க பதிவு செலக்ட் ஆகுற மாதிரி தேர்வு முறைய மாத்தணுங்குறீங்க :)//

அதில் என்ன தப்பு

அப்படித்தான் மாற்ற வேண்டும் :)

Philosophy Prabhakaran said...

பேஸ்புக் பற்றிய செய்திக்கு Source...?
அடல்ட் கார்னர் அபத்தம்...

a said...

விளம்பரம் மற்றும் குறும்படம் ரெண்டும் அருமை....

shortfilmindia.com said...

@விந்தை மனிதன்
நன்றியெல்லாம் வேணாம் இதே போல இன்னொரு நல்ல கதை எழுதுங்க..

@பந்து
அதுசரி

@பந்து
அது வேண்டுமென்றே பாடப்பட்டது.. வெஸ்டர்ன் ஸ்டைலுக்காக

2பார்வையாளன்
நிஜமா வாஆஆ.. சொல்றீங்க?:))

shortfilmindia.com said...

@அருண்
நன்றி
@மாணவன்
நன்றி
@தொப்பிதொப்பி
உங்கள் எதிர்பார்பை திருப்தி செய்ய பார்க்கிறேன்

2கார்த்திகேயனி
நன்றி

shortfilmindia.com said...

@ஜீ
நன்றி

@அரவிந்தன்
புத்தகம் வாங்கியதற்கு நன்றி. படித்துவிட்டு கருத்து சொல்லவும்.. உங்கள் பீட் பேக்குக்கும் மிக்க் நன்றி தலைவரே..

shortfilmindia.com said...

@பிரபு.எம்
அதென்னவோ சரிதான் தலைவரே

@சினிபோஸ்டர்
நன்றி

@ஜோ
பின்ன :))

@ஜயராம் ப்ரகாஷ்
நன்றி

shortfilmindia.com said...

@சுரேகா
ந்ன்றி
ட்வீட் உங்களுக்கு புரியாம இருந்தாத்தான் ஆச்சர்யம்.

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி

@புருனோ
சரியா புரிஞ்சிட்டீங்க டாக்டரு...

shortfilmindia.com said...

@பிலாசபி பிரபாகரன்
ஹிண்டு
ஒவ்வொருவருக்கு ஒரு டேஸ்ட்..:))

@வழிப்போக்கன் யோகேஷ்
நன்றி

ஜெயகாந்தன் said...

ஆகா, அற்ப்புதம், அருமை, அபாரம், சூப்பர், மார்வலஸ், கிரேட் (வேற ஏதும் இருக்கா) சரி போய் மொதல்ல பதிவ படிக்கறேன் :)

ஜெயகாந்தன் said...

//சமீபத்தில் அவர் ஒன்னறை லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி வந்தேன் என்று எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டு நாய்க்குட்டியிடமிருந்து துண்டு பிரசுரம் வரை சொல்லி மாய்ந்துவிட்டார்.//

அட!! நாமெல்லாம் LKG'ல இருந்து புக்ஸ் வாங்கிட்ருக்கோம் அதெல்லாம் வெளிய சொல்லிட்ருக்கோமா என்ன?!
(அவசரத்துக்கு ஒரு பஞ்ச் டயலாக்கூட வரமாட்டேனுதே ஆங்!! இப்ப சொல்றேன்)
-----------------
புக்கு படிச்சவனெல்லாம் புத்தருமில்ல, புக்கு படிக்காதவனெல்லாம் புண்ணாக்குமில்ல (அடடே ஆச்சர்யக்குறி)
-----------------
:)