பகுதி-2
மூன்று நாட்கள் மட்டுமே ஓடிய அந்த படத்தின் மூலமாய் என் நண்பர் பெரிய லாபம் ஏதும் சம்பாதிக்கவில்லை என்றாலும் நல்ல அனுபவத்தை கிடைக்கப் பெற்றார். அந்த அனுபவம் அவருள் இன்னும் இறங்கி எப்படியாவது ஒரு தியேட்டர் நடத்தணும் என்று முடிவெடுக்க முக்கிய காரணமாய் இருந்தது.
மூன்று நாட்கள் மட்டுமே ஓடிய அந்த படத்தின் மூலமாய் என் நண்பர் பெரிய லாபம் ஏதும் சம்பாதிக்கவில்லை என்றாலும் நல்ல அனுபவத்தை கிடைக்கப் பெற்றார். அந்த அனுபவம் அவருள் இன்னும் இறங்கி எப்படியாவது ஒரு தியேட்டர் நடத்தணும் என்று முடிவெடுக்க முக்கிய காரணமாய் இருந்தது.
இதற்கு நடுவில் “சேது”வில் ஆசைப்பட்டு, உயிரிலே கலந்தது படத்தில் செட்டிலாகி அதை வெளியிட்டு முழு நேர விநியோகஸ்தராக ஆகிய கதை சினிமா வியாபாரம் புத்தகத்தில் பார்த்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்(விளம்பரம்).
பின்பு சென்னையில் ஒரு பிரபல பழைய தியேட்டர் ஒன்று லீஸுக்கு வருகிறது என்று கேள்விப்பட.. எங்கள் காட்பாதருக்கு தெரிந்த நண்பர் தான் அந்த தியேட்டர் ஓனர் என்பதால் உடனடியாய் பேச்சு வார்த்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்தார். தியேட்டர் தொடங்குவது என்று முடிவாகி அட்வான்ஸ் எல்லாம் பேசி.. மாத வாடகைக்கு தியேட்டரை லீஸுக்கு எடுத்தாயிற்று.
தியேட்டரை நாமே கட்டி பார்ப்பது என்பது ஒரு வகை. ஆனால் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டரை அதன் அதன் நிலையில் இருக்கும் தியேட்டரை எடுக்கும் போது சில பல பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் தியேட்டரை ஒரிஜினல் ஓனரே நடத்தாமல் வாடகைக்கு விடுகிறார்?. அவராலேயே நடத்த முடியாத ஒரு தியேட்டரை எப்படி வேறொருவர் எடுத்து வெற்றிகரமாக நடத்த முடியும்? என்று கேட்கிறீர்களா? அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
ஒரு தியேட்டரை வெற்றிகரமாக நிர்வகிப்பது சாதாரண வேலையில்லை. மிகவும் கஷ்டமான வேலை. பணம் போட்டு பணம் எடுக்க வேண்டிய வேலை. அப்படி போட்ட பணம் திரும்பாமல் நொடித்து போன பல தியேட்டர் அதிபர்கள் தியேட்டரையே கல்யாண மண்டபமாகவோ, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, இல்லை இடத்தையே விற்று விட்டு போன கதை நிறைய உண்டு.
இம்மாதிரி லீஸுக்கு வரும் தியேட்டர்கள் ஏற்கனவே மிக மோசமான நிலையில் தான் இருக்கும். முக்கியமாய் உட்காரும் வசதி, மற்றும், கழிவறைகள் போன்றவை படு மட்டமாய் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டர்களில் “பிட்டு” படங்கள் எனப்படும் செக்ஸ் படங்களை வெளியிட்டு அந்த தியேட்டருக்கே ஒரு அழுக்கு இமேஜ் மார்க்கெட்டில் இருக்கும் நேரத்தில் அம்மாதிரியான தியேட்டரை கையில் எடுத்து மீண்டும் அதை பழைய நிலைக்கு கொண்டு வர நிறைய உழைக்க வேண்டும்.
தியேட்டர் எங்கள் கையில் வந்ததும், முதல் வேலையாய் படம் திரையிடப்படுவதை நிறுத்திவிட்டு சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தோம். மிகவும் மோசமாய் இருந்தது கழிவறையும், சுற்று புறமும், உட்காரும் சீட்டுகளும் தான். உடனடியாய் அதை சரி செய்ய ஆட்களை பிடித்து வேலையை ஆரம்பித்து, புதியதாய் கழிவறை ஒன்றை கட்டி, சீட்டுகளை ரிப்பேர் செய்து, புதியதாய் வெள்ளை அடித்து, சீட்டுகளுக்கு நம்பர் எல்லாம் போட்டு, அழுக்கேறியிருந்த திரைக்கு புதியதாய் சில்வர் கோட்டிங் அடித்து பள பளவென ஆக்கி, புதுப் பெண்ணப் போல நிறுத்தி வைக்க சில லட்சங்கள் ஆனது. சரி தியேட்டரை புதுப்பித்தாகி விட்டது. முதல் படமாய் நல்ல பெரிய படத்தை போட வேண்டும். அதன் மூலம் மீண்டும் மக்கள் இந்த திரையரங்குக்கு வர வைக்க வேண்டும் என்று முயன்ற போதுதான் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரிந்தது.
Post a Comment
22 comments:
me first
2
3
4
5
மாப்ளே.. ஏன் இந்த கொலை வெறி?:))
வாழ்த்துக்கள் தல :)
சீக்கிரம் எழுதுங்க அடுத்தத... நல்லா இருக்கு! :)
அட........... இப்படி முடிச்சிட்டீங்களே...........
தலைவா ரொம்ப சுருக்கமா முடிச்சிடீங்களே ! ரொம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்
http://www.grajmohan.blogspot.com .
:)
உண்மைதான் அண்ணா... எனது நண்பர் ஒருவர் பல்லாவரத்தில் இருக்கும் ஒரு தியேட்டரை சில காலங்கள் லீசுக்கு எடுத்து நடத்தியபோது அவர் பட்ட அனுபவங்கள் என் கண் முன் காட்சியாய் விரிகிறது.
Sankar sir romba than thillu !
பதிவை விட...
அந்த 1,2,3,4 ஐ விட
அதற்கான உங்களின் பின்னூட்டம் ஹீ...ஹீ...ஹீ....
சினிமா மோகம் என்பது இப்படிதான் ஆரம்பிக்குமோ...
வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்.
சிலர் இதிலேயே கணிசமாக பணம் பார்ப்பதும் நடக்கிறது. தனி நபர் நிறுவனங்கள் சில விளம்பரமெல்லாம் தருகின்றன!
வெகுஜன ஊடகங்களில் எட்டிப் பார்க்காத அறிவு ஜீவித்தனங்களும் இவற்றில் உண்டு... அதேநேரம் அங்கே காட்ட முடியாத வக்கிரங்கள், ஆபாசங்களையும் சிலர் கொட்டித் தீர்ப்பதையும் பார்க்க முடிகிறது. பலர் ஏற்கெனவே வந்ததை காப்பி பேஸ்ட் செய்வதே ப்ளாக் எழுதுவது என்பதில் தெளிவாக உள்ளனர்.
இவர்களுக்கென்று சங்கமெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 3000 பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிலருக்கென வாசகர் வட்டமும் உள்ளன. பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறார்கள். நாலு வரி, நாலு பக்கம் என்று அவரவர் நோக்கத்துக்கு எழுதுகிறார்கள்.
இப்போது இந்த விமர்சனங்களுக்கு ஒரு அங்கீகாரம் தரும் நோக்கில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது மந்திரப் புன்னகை படத்துக்காக தனி ஷோ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஞாநி உள்பட 50க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர்.
இது கரு பழனியப்பனுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், ஏற்கெனவே இணையதள பத்திரிகையாளர்களை தடுப்பதில் குறியாக உள்ள சில பிஆர்ஓக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.
'இவிங்களும் இனி ரெகுலர் ஷோவுக்கு வருவாங்களோ...' என்று ஒருவருக்கொருவர் கவலையுடன் பேசிக் கொண்டதுதான் கரு பழனியப்பனின் ப்ளாக்கர்ஸ் ஷோவின் ஹைலைட்!
http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/24-karu-pazhaniyappan-bloggers-show.html
சினிமா உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உங்களது கட்டுரைகள் மிக நன்றாக உள்ளன. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள் !
அண்ணா நெக்ஸ்ட் க்கு waiting..
அந்த தியேட்டர் பெயரை சொல்லவே இல்லை ?
அந்த தியேட்டர் பெயரை சொல்லவே இல்லை ?
அந்த தியேட்டர் பெயரை சொல்லவே இல்லை ?
Post a Comment