இப்படியெல்லாம் படம் வந்திருக்கிறதா? எப்போ ரிலீஸாச்சு? ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் சினிமா ஆர்வம் சார்னெல்லாம் பேசப்படாது.. ஓகே. சந்தோஷமோ, துக்கமோ அதை நாம தான் வரவழைச்சிக்கிறோம்ன்னு சொல்லிட்டேயிருப்பேன். இந்த துக்கத்தை நானே தான் வரவழைச்சிக்கிட்டேன். இப்படத்தின் பி.ஆர்.ஓ. எனது நண்பர். அவர் படத்தின் ப்ரஸ் காட்சி இருக்கிறது என்று சொல்லியிருந்தார். நான் மறந்திருந்த போது தந்தி பேப்பரில் தமிழ் சினிமாவின் தற்போதை சின்ன பட்ஜெட் அன்னதாதாவான டாக்டர் சீனிவாசன் வேறு நடித்திருக்கிறார் என்ற விளம்பரத்தை பார்த்ததும் அவரை வெண் திரையில் பார்க்க ஆர்வப்பட்டு நானே போய் உட்கார்ந்துக் கொண்ட ஆப்புதான் இந்தப் படம்.
பட்ஜெட் படமென்றால் அவ்வளவு பட்ஜெட். எல்லாரும் ஏதாவது ஒரு சோபாவிலோ, அல்லது நின்று கொண்டோ பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். முதல் சீனுக்கும் அடுத்த சீனுக்கும் ஸ்தானப்ராப்தி கூட இல்லாத ஒரு காட்சியமைப்புகள். முதல் காட்சியில் காலேஜில் கூட படிக்கிறேன் எனும் ஹீரோயின், இரண்டாவது காட்சியில் நம் காதல் என்னானது என்கிறாள்?. அவளே தன் தந்தையிடம் அடியாளாக சேர்த்துவிட்டு, அடுத்த காட்சியில் நீ ஏன் ரவுடியாயிட்டே? என்று கேட்கிறாள். முதல் காட்சியில் தனக்கு பதிலாய் தன் தந்தையை ஜெயிலுக்கும் அனுப்பிவிட்டு வரும் ஹீரோ.. அடுத்த சில நிமிடங்களில் வரும் காட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் தன் அப்பாவை தேட இன்ஸ்பெக்ட்ர, கான்ஸ்டபிளூக்கு இவர் யார் என்று தெரியவில்லையாம். என்ன கொடுமைடா சரவணா? ங்கொய்யால இங்க போயும் லாஜிக் தேடுறியான்னு நீங்க கேக்குறது தெரியுது.
படம் முழுக்க ஸ்ரீமனும், வையாபுரியும் சீரியஸாய் நடித்து காமெடி செய்கிறார்கள். இருப்பதிலேயே உட்சபட்ச காமெடி நம்ம தல டாக்டர் சீனிவாசன் தான். எந்திரன் படத்தில் இவர் நடித்திருந்தால் அவ்வளவு தத்ரூபமாய் இருந்திருக்கும். வில்லனாக நடித்தாலும் குலுங்க, குலுங்க் சிரிக்க வைக்கிறார்.. ஒரு ஆக்ஷனுக்கே இங்கே ததிங்கினத்தோம். இந்த லட்சணத்தில் டபுள் ஆக்ஷன் வேறு. இவர் ரேப் செய்யும் பெண்கள் எல்லாமே அட்டு பிகர்களாகவும் பாதி கிழவியாகவும் இருப்பதற்கு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏதாவது காரணம் இருக்குமா..? படத்தின் இயக்குனர் ஒரு பைட் மாஸ்டர். பஞ்ச் பரத் என்று பெயர். அட்லிஸ்ட் சண்டைக் காட்சிகளையாவது ஒழுங்காக வைத்தாரா அதுவும் இல்லை..?
இந்த ஒரு கலவர காட்சிக்காகவே அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்.
நீ தானா அவன்?- போவியா நீ.. போவியா நீ?
கேபிள் சங்கர்
இந்த ஒரு கலவர காட்சிக்காகவே அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்.
நீ தானா அவன்?- போவியா நீ.. போவியா நீ?
Post a Comment
46 comments:
தல,இதுப்போன்ற படங்கள் பெங்களுரில் வெளியாகாதா.?
அரவிந்தன் ஏன் இவ்வளவு சொல்லியுமா..?:))
Annae, nee thaanae avan part 2 eppo?
கர்மம்... கர்மம்..
கேபிள் இந்த படத்தின் விளம்பரத்தை பேப்பரில் பார்த்து மூர்ச்சையாகி போனவன். அரவிந் விதி வலியது.... உனக்கு தெரியலை... அனுபவி ராஜா அனுபவி
மெல்ல தமிழ் சினிமா இனி சாகும்.
நீதானா அவன் பார்டூ வேறயா? அதுல கேபிளை நடிக்கவச்சி டிரை பண்ணலாம்..
இன்னும் சிங்கபூர்ல வரலையே... வந்தவுடன் பார்க்கணும்..(வருமா)
வெறும்பய.. வேணுமின்னா சொல்லு சிங்கப்பூர்ல ரிலீஸ் செயய வாங்கி தரேன்
// அரவிந்தன் said...
தல,இதுப்போன்ற படங்கள் பெங்களுரில் வெளியாகாதா.//
ஏன் இந்த கொலைவெறி? நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா!
ஆனா கேபிள் சார் நீங்க ரொம்ப நல்லவரு. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.இந்த படத்த பார்த்துட்டு விமர்சனம்(?) வேற போட்டு இருக்கீங்க!
yoov.. ஜாக்கி.. நான் நடிக்கிறதா இருந்தா சீனிவாசன் கேரக்டர் உனக்குதான்..
தில்லு தொர கேபிள்ஜி!! :-)
யோவ் கேபிள் எனக்கு சீனுவாசன் கேரக்டர் பண்றதுல எந்த ஆட்சேபனையும் இல்லை... ஆனா ரேப் சின்ல சின்ன பட்ஜெட்டுன்னு சொல்லி என்னை மூட் அவுட் பண்ணாத புர்ரியுதா????
அதுக்குள்ள எவன்னயா? அது????
பர்ஸ்ட் பார்டுலயாவது அரை கிழவிய போட்டாங்க. நீ நடிக்கிறபடத்துல போஸ்டர் மட்டும்தான்..
பர்ஸ்ட் பார்டுலயாவது அரை கிழவிய போட்டாங்க. நீ நடிக்கிறபடத்துல போஸ்டர் மட்டும்தான்..
உன் குரூர எண்ணம் எனக்கு தெரிந்து விட்டது...அடப்பாவிஏன்யா???இந்த போங்கு???
நீ மட்டும் சந்தோஷமா இருக்க விட்டிருவேனா?
கேபிள் நீ தமிழேன்டா...
//
இவர் ரேப் செய்யும் பெண்கள் எல்லாமே அட்டு பிகர்களாகவும் பாதி கிழவியாகவும் இருப்பதற்கு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏதாவது காரணம் இருக்குமா..?
//
தல : நீங்க எங்கயோ போயிடீங்க...
மெல்ல தமிழ் சினிமா இனி சாகும்.
//
hehe
யோவ் கேபிளு... (சும்மா தமாஷு தல..)
எந்திரன் படத்துக்கு 20 பேர் தான் இருந்தாங்க... எல்லாம் தீபாவளி வரைதான்... கல்லா கட்டி முடிஞ்சாச்சுன்னா கிளம்பிர வேண்டியது தானே!!ன்னு நேத்து எழுதுனீங்க இல்ல.. அதுக்கு தண்டனை தான்யா இந்த படம்..
அந்த படத்த தியேட்டர்ல இருந்து எடுத்தா இந்த “தலைவலி சீனீவாசன” போய்தான் பார்க்கணும்... இப்போ தெரியுதா, ஏன் தியேட்டர்காரங்க தீபாவளி வரைக்கும் எந்திரன் படத்த எடுக்காம வச்சு இருக்காங்கன்னு...
தீபாவளி படங்கள் வரட்டும்... அது எல்லாம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்...
என்ன ஸ்டில் போடுறீங்க நீங்க? எவ்ளோ செம ஸ்டில் எல்லாம் இருக்கு? அதப் போட்டுருந்தீங்கன்னா வந்ததுக்கு கொஞ்சமாவது பிரயோஜனமா இருந்திருக்கும்.
ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலி சார்..
உங்கள் பக்கத்தில் உங்களது அறிமுகத்திற்கு நன்றி தலைவா
ஆனாலும் உங்களுக்கு பொறுமை அதிகம்... முழு படத்தையும் பார்த்திருக்கீங்களே ! ! !
கேபிள்,
இந்த தல சீனிவாசனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனுமே யார காண்டாக்ட் பண்றதுன்னே தெரியல?
காமடிக்குப் பஞ்சம் இருக்கிற தமிழ் சினிமாவுக்கு, ஒரு அருமையான(?) காமடி படம் கெடச்சுருக்கு. பகிர்தலுக்கு நன்றி தலைவரே... :)))
thank you
http://www.thangamonline.com/sites/default/files/dr.JPG?1271740988
நடிப்பு,திரைக்கதை,வசனம்,இசை,தயாரிப்பு,இயக்கம் என அனைத்திலும் 'சிறந்து' விளங்கும் டாக்டர் ஸ்ரீனிவாசனை இந்தியாவின் MEL GIBSON என்று சொன்னால் அது மிகையாகாது.
'தில்' கேபிள்ஜி..! :(
தயவு செய்து யாரவது டாக்டர் ஸ்ரீனிவாசனை தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்து விடுங்கள் . அதுதான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. 'கானல் நீர்' ரித்தீஷிடமிருந்து இப்படித்தான் தப்பித்தோம் என்பதை நினைவில் கொள்க!!!
போவியா நீ.. போவியா நீ?
நீங்களுமா?
உங்களால மட்டும் எப்பிடி முடியுது? ஸ்டில்ஸ் பாத்தாலே டீ.வி.சீரியல் மாதிரி இருக்கே...நீங்க ரொம்மம்ம்ப நல்லவர் பாஸ்!
தல, உங்க தைரியத்தை பாராட்டி ஆலய மணி படத்துல சரோஜாதேவி பயன்படுத்தின கைக்குட்டைய பரிசா தரலாம்னு இருக்கேன் .....
படத்தோட போஸ்டர்களைப் பார்த்தாலே இங்க பெங்களூர்ல ஒரு நாடக அரங்குல டிராமா நடக்கும் அதுக்கு கொஞ்சமும் இயல்புத்தன்மையே இல்லாம போஸ்டர் ஒட்டி இருப்பாங்க.. அந்த ரேஞ்சுல இருக்கு.. எப்படி தைரியமா போய் உக்காந்து பாத்திங்களோ.. உண்மையிலேயே பெரிய ஆளுதான் நீங்க...
கேபிளு..
உ.த உங்கள மாதிரி எண்டர் கவுஜ எழுத ஆரம்பிச்சிட்டாருன்னு தானே அவர பழி வாங்க அவர மாதிரியே மொக்கை படங்களை பாத்து விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க??
நாடு தாங்காது கேபிள், மொக்க கவுஜைக்கு நீங்களும் மொக்க பட விமர்சனத்துக்கு உ த வும் மட்டுமே போதும்.
ஒன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு ஒருத்தற பாத்து ஒருத்தர் கெட்டுப் போறதினால, கேபிளும் உ.தவும் பழகுவது இன்று முதல் தடை செய்யப் படுகிறது..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//யோவ் கேபிள் எனக்கு சீனுவாசன் கேரக்டர் பண்றதுல எந்த ஆட்சேபனையும் இல்லை... ஆனா ரேப் சின்ல சின்ன பட்ஜெட்டுன்னு சொல்லி என்னை மூட் அவுட் பண்ணாத புர்ரியுதா????//
ஜாக்கி.. ஏண்டா இந்த கொலைவெறி??
கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி கருப்பு சத்யராஜ் ஆகிரலாமுன்னு நெனப்பா (உதாரணம் ஏன்னு ஒனக்கே தெரியும்)
ரேப் சீன் ஆசை வேறயா ஒனக்கு.. நடக்காது மகனே...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நீங்க "யாருக்கு யாரோ" படம் பாத்திருக்கீங்களா? அந்தப் படத்துக்கு ஈடா எந்தப் படமும் வராது சீனியர். கவலைப் படாம அடுத்த படத்தைப் பாக்க தயாராகுங்க. விமர்சனம் படிக்க ரெடியா இருக்கோம்.
வணக்கம் தமிழகம் ஜெயஸ்ரீ ஆன்டி ரொம்ப அழகா இருக்காங்க அவங்களை பத்தி எதாவது சொல்லிருக்கலாம்
இந்த லிங்கில் பாருங்க ஸ்ரீநிவாசனோட ரோமான்சை Lathika Movie Stills
நான்கூட ஸ்ரீநிவாசன் சாருக்காக பாக்கனும்னு நெனச்சேன்... சரி லத்திகா வந்ததும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்...
இந்த டாக்டர் (இவருமா!!) சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில ஒரு முக்கிய (அந்த முக்கிய இல்ல) பதவியில இருக்காராமே!!
தல
ஏன் இந்த கொலவெறி?
இந்த நேரத்துல நீங்க பார்த்த ஒரு நல்லசினிமாவை பத்தி அறிமுகம் செஞ்சிருக்கலாமே?:)
ஜாக்கி.. ஏண்டா இந்த கொலைவெறி??
கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி கருப்பு சத்யராஜ் ஆகிரலாமுன்னு நெனப்பா (உதாரணம் ஏன்னு ஒனக்கே தெரியும்)
ரேப் சீன் ஆசை வேறயா ஒனக்கு.. நடக்காது மகனே... --//
என்டா எல்லாரும் சேர்ந்து என்னை ரவுண்ட் கட்டறிங்க....
கொஞ்சம் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டிங்களா??
Post a Comment