நீ தானா அவன்?
இப்படியெல்லாம் படம் வந்திருக்கிறதா? எப்போ ரிலீஸாச்சு? ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் சினிமா ஆர்வம் சார்னெல்லாம் பேசப்படாது.. ஓகே. சந்தோஷமோ, துக்கமோ அதை நாம தான் வரவழைச்சிக்கிறோம்ன்னு சொல்லிட்டேயிருப்பேன். இந்த துக்கத்தை நானே தான் வரவழைச்சிக்கிட்டேன். இப்படத்தின் பி.ஆர்.ஓ. எனது நண்பர். அவர் படத்தின் ப்ரஸ் காட்சி இருக்கிறது என்று சொல்லியிருந்தார். நான் மறந்திருந்த போது தந்தி பேப்பரில் தமிழ் சினிமாவின் தற்போதை சின்ன பட்ஜெட் அன்னதாதாவான டாக்டர் சீனிவாசன் வேறு நடித்திருக்கிறார் என்ற விளம்பரத்தை பார்த்ததும் அவரை வெண் திரையில் பார்க்க ஆர்வப்பட்டு நானே போய் உட்கார்ந்துக் கொண்ட ஆப்புதான் இந்தப் படம்.
பட்ஜெட் படமென்றால் அவ்வளவு பட்ஜெட். எல்லாரும் ஏதாவது ஒரு சோபாவிலோ, அல்லது நின்று கொண்டோ பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். முதல் சீனுக்கும் அடுத்த சீனுக்கும் ஸ்தானப்ராப்தி கூட இல்லாத ஒரு காட்சியமைப்புகள். முதல் காட்சியில் காலேஜில் கூட படிக்கிறேன் எனும் ஹீரோயின், இரண்டாவது காட்சியில் நம் காதல் என்னானது என்கிறாள்?. அவளே தன் தந்தையிடம் அடியாளாக சேர்த்துவிட்டு, அடுத்த காட்சியில் நீ ஏன் ரவுடியாயிட்டே? என்று கேட்கிறாள். முதல் காட்சியில் தனக்கு பதிலாய் தன் தந்தையை ஜெயிலுக்கும் அனுப்பிவிட்டு வரும் ஹீரோ.. அடுத்த சில நிமிடங்களில் வரும் காட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் தன் அப்பாவை தேட இன்ஸ்பெக்ட்ர, கான்ஸ்டபிளூக்கு இவர் யார் என்று தெரியவில்லையாம். என்ன கொடுமைடா சரவணா? ங்கொய்யால இங்க போயும் லாஜிக் தேடுறியான்னு நீங்க கேக்குறது தெரியுது.
படம் முழுக்க ஸ்ரீமனும், வையாபுரியும் சீரியஸாய் நடித்து காமெடி செய்கிறார்கள். இருப்பதிலேயே உட்சபட்ச காமெடி நம்ம தல டாக்டர் சீனிவாசன் தான். எந்திரன் படத்தில் இவர் நடித்திருந்தால் அவ்வளவு தத்ரூபமாய் இருந்திருக்கும். வில்லனாக நடித்தாலும் குலுங்க, குலுங்க் சிரிக்க வைக்கிறார்.. ஒரு ஆக்ஷனுக்கே இங்கே ததிங்கினத்தோம். இந்த லட்சணத்தில் டபுள் ஆக்ஷன் வேறு. இவர் ரேப் செய்யும் பெண்கள் எல்லாமே அட்டு பிகர்களாகவும் பாதி கிழவியாகவும் இருப்பதற்கு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏதாவது காரணம் இருக்குமா..? படத்தின் இயக்குனர் ஒரு பைட் மாஸ்டர். பஞ்ச் பரத் என்று பெயர். அட்லிஸ்ட் சண்டைக் காட்சிகளையாவது ஒழுங்காக வைத்தாரா அதுவும் இல்லை..?
இந்த ஒரு கலவர காட்சிக்காகவே அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன்.
நீ தானா அவன்?- போவியா நீ.. போவியா நீ?
கேபிள் சங்கர்
நீ தானா அவன்?- போவியா நீ.. போவியா நீ?
Comments
தல,இதுப்போன்ற படங்கள் பெங்களுரில் வெளியாகாதா.//
ஏன் இந்த கொலைவெறி? நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா!
ஆனா கேபிள் சார் நீங்க ரொம்ப நல்லவரு. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.இந்த படத்த பார்த்துட்டு விமர்சனம்(?) வேற போட்டு இருக்கீங்க!
இவர் ரேப் செய்யும் பெண்கள் எல்லாமே அட்டு பிகர்களாகவும் பாதி கிழவியாகவும் இருப்பதற்கு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏதாவது காரணம் இருக்குமா..?
//
தல : நீங்க எங்கயோ போயிடீங்க...
//
hehe
எந்திரன் படத்துக்கு 20 பேர் தான் இருந்தாங்க... எல்லாம் தீபாவளி வரைதான்... கல்லா கட்டி முடிஞ்சாச்சுன்னா கிளம்பிர வேண்டியது தானே!!ன்னு நேத்து எழுதுனீங்க இல்ல.. அதுக்கு தண்டனை தான்யா இந்த படம்..
அந்த படத்த தியேட்டர்ல இருந்து எடுத்தா இந்த “தலைவலி சீனீவாசன” போய்தான் பார்க்கணும்... இப்போ தெரியுதா, ஏன் தியேட்டர்காரங்க தீபாவளி வரைக்கும் எந்திரன் படத்த எடுக்காம வச்சு இருக்காங்கன்னு...
தீபாவளி படங்கள் வரட்டும்... அது எல்லாம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்...
இந்த தல சீனிவாசனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனுமே யார காண்டாக்ட் பண்றதுன்னே தெரியல?
http://www.thangamonline.com/sites/default/files/dr.JPG?1271740988
நீங்களுமா?
உ.த உங்கள மாதிரி எண்டர் கவுஜ எழுத ஆரம்பிச்சிட்டாருன்னு தானே அவர பழி வாங்க அவர மாதிரியே மொக்கை படங்களை பாத்து விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க??
நாடு தாங்காது கேபிள், மொக்க கவுஜைக்கு நீங்களும் மொக்க பட விமர்சனத்துக்கு உ த வும் மட்டுமே போதும்.
ஒன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு ஒருத்தற பாத்து ஒருத்தர் கெட்டுப் போறதினால, கேபிளும் உ.தவும் பழகுவது இன்று முதல் தடை செய்யப் படுகிறது..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஜாக்கி.. ஏண்டா இந்த கொலைவெறி??
கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி கருப்பு சத்யராஜ் ஆகிரலாமுன்னு நெனப்பா (உதாரணம் ஏன்னு ஒனக்கே தெரியும்)
ரேப் சீன் ஆசை வேறயா ஒனக்கு.. நடக்காது மகனே...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஏன் இந்த கொலவெறி?
இந்த நேரத்துல நீங்க பார்த்த ஒரு நல்லசினிமாவை பத்தி அறிமுகம் செஞ்சிருக்கலாமே?:)
கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி கருப்பு சத்யராஜ் ஆகிரலாமுன்னு நெனப்பா (உதாரணம் ஏன்னு ஒனக்கே தெரியும்)
ரேப் சீன் ஆசை வேறயா ஒனக்கு.. நடக்காது மகனே... --//
என்டா எல்லாரும் சேர்ந்து என்னை ரவுண்ட் கட்டறிங்க....
கொஞ்சம் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டிங்களா??