Thottal Thodarum

Nov 9, 2010

வ- குவாட்டர் கட்டிங்

va
தமிழ் சினிமாவில் சினிமாவை கிண்டலடித்து நிறைய நகைச்சுவை காட்சிகள் வந்திருந்தாலும், முழு முதல் ஸ்பூப் வகை படமாய் வந்து வெற்றிப் பெற்ற படம் தமிழ்படம். அப்படத்தை வழங்கிய அதே டீம் மீண்டும் இம்முறை குவாட்டர் கட்டிங் என்கிற பெயரில் ஒரு வித்யாசமான கல்ட் படத்தை தர முயன்றிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் harold and kumar என்கிற பெயரில் white Castle என்கிற படம் ஒன்று வந்ததாய் ஞாபகம். அதில் அந்த வைட் காஸ்டில் என்கிற இடத்தில் கிடைக்கும் பர்கரை சாப்பிடுவதற்காக நண்பர்கள் இருவரும் கிளம்பி போய், பல பிரச்சனைகளீல் மாட்டிக் கொண்டு அவஸ்தை படுவார்கள். அக்கதையின் லைனை ஞாபகப்படுத்தும் கதை தான் வா குவாட்டர் கட்டிங் படத்தின் கதை என்றாலும். நிச்சயமாய் அதனுடய ரிப்ளீக்கா அல்ல என்பதை சொல்லத்தான் வேண்டும்.

VA_Quarter_Cutting_posters_wallpapers1
புஷ்கர் காயத்ரி இயக்கிய ஒரம்போ எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் ஆதாரத் தழுவலாய் இருந்தாலும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்களின் மூலம் நன்றாகவே தந்திருந்தார்கள்.  அந்த நம்பிக்கையில் இப்படத்திற்கு போய் உட்கார்ந்தேன்.
சவுதி அரேபியாவில் சரக்கு அடிக்க முடியாது என்பதற்காக அங்கே வேலை கிடைத்த சிவா ஊருக்கு போவதற்கு முன் ஒரு குவாட்டர் அடிக்க ஆசைப் படுகிறான். அவனுடய வருங்கால அக்கா புருஷனுடன் சரக்கு அடிக்க கிளம்ப, தேர்தல் சமையமாதலால் சரக்கு இல்லாமல் இருக்க, வேற் வழியில்லாமல் சரக்கு கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் பயணப்பட ஆர்ம்பிக்கிறார்கள். போன இடத்தில் இவர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள, நடுவில் இவர்கள் வீட்டில் குடியிருக்கும் பெண் தற்கொலைக்கு முயற்சிக்க, அவளையும் காப்பாற்றிக் கொண்டு க்ளைமாக்ஸ் வரையில் அலைவதுதான் படம்.

பாலகிருஷ்ணா படத்தை பஸ்ஸிலேறி உட்கார்ந்து  பார்த்து முடித்தபின் இம்ப்ரஸ் ஆகும் காட்சியை பார்த்ததும் அட போடத்தான் தோன்றுகிறது. சிவாவுக்கு சுறா என்ற மறுபெயரைக் கொண்டு, கலாய்க்க ஆரம்பித்ததும் அட இன்னொரு தமிழ்படம் போன்ற ஸ்பூப் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அதற்கு அப்புறம் ஒன்றுமே காணோம். பேசி பேசி மாய்கிறார்கள். இம்மாதிரி படங்களுக்கு மிக முக்கியம் நடிகர் நடிகர்களின் பர்பாமென்ஸும், அதற்கான விறுவிறுப்பான திரைக்கதையும்தான். முதல் விஷயத்தில் ஏதோ எஸ்.பி.பி. சரண் காப்பாற்றினாலும் இரண்டாவது பாதியில் இயக்குனர் ஜோடிகள் கவிழ்த்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். எஸ்.பி.பி. சரண் கடைசியாய் கொழுக்கு மொழுக்கென்று இருந்த படம். சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பார்த்து பயந்தே போய்விட்டேன். மனுஷன் முருங்கைக்காய் போல இருக்கிறார். முழுவதும் ஸ்பூப்பாகவும் இல்லாமல், ஹூயூமரான காட்சிகள் இல்லாததாலும்,  படம் முழுக்க ஒரே ராத்திரியில் நடக்கும் கதையில் ஏகப்பட்ட தில்லாலங்கடி, சேஸிங் என்று காட்சிகள் இருந்தாலும் படு மொக்கையாக படம் போகிறது.

ஆங்காங்கே ஒன்லைனராக நச் நச்சென டயலாக்குகள் வந்தாலும் அதற்கான காட்சிகளில் இம்பாக்ட் இல்லாததால் வெறுப்பாகத்தான் இருக்கிறது. ஒரு குவாட்டர் அடிப்பதற்காக ஒருவன் அலைவானா? என்று யோசிப்பவர்களூக்கு இப்படத்தின் மூலம், லாஜிக், போன்ற வஸ்துக்களை தேடுபவர்களுக்கு நிச்சயம் கடுப்பாகி கட்டிங் அடிக்கத்தான் போவார்கள். அல்லது அடித்துவிட்டு வந்தவர்களுக்கு இறங்கி போய்விடும் அபாயம் இருக்கிறது.

படத்தின் இண்ட்ரஸ்டிங்கான விஷயம் நிரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான். அந்த யெல்லோ டோனும் நைட் எபெக்ட்டும் தான். ஜி.வி. பிரகாஷின் பின்னணியிசை பரவாயில்ல. ஒரு பாடல் ஓகே ரகம். புஷ்கர் தம்பதிகளுக்கு மீண்டும் அடுத்த முறை முயற்சிக்கவும்.

வ- குவாட்டர் கட்டிங்- வாங்குடா ஒரு குவாட்டரை… மட்டையாவுறேன்
.
கேபிள் சங்கர்
Post a Comment

32 comments:

Rafeek said...

Romba rasichu parthu irrukinga nu theriyuthu CABIL G:)

Cable சங்கர் said...

ம்க்கும்...

Rafeek said...

"புஷ்கர் தம்பதிகளுக்கு மீண்டும் அடுத்த முறை முயற்சிக்கவும்."

Marubadiyumaa? they r fit for advertisements only!!

Unknown said...

வா நெடிலல்ல வ குறில்

Cable சங்கர் said...

மப்புல கொஞ்சம் ஓவராயிருச்சு.. மாத்திட்டேன்ணே..

க ரா said...

குவாட்டருக்கே மப்பாகுதா உங்களுக்கு.. கொஞ்சம் ஒவர்தான் :)

ஸ்ரீநாராயணன் said...

Enga oorla, nanum en wife um thaniya ukkandhu pathom.

Wife sema kaduppula irunda...enakku padam pudichi irukkunnu solli samalichen....Ana romba nondhu poitten...(one liner pathu than emandhen :-( )

a said...

//
இப்படத்தின் மூலம், லாஜிக், போன்ற வஸ்துக்களை தேடுபவர்களுக்கு நிச்சயம் கடுப்பாகி கட்டிங் அடிக்கத்தான் போவார்கள். அல்லது அடித்துவிட்டு வந்தவர்களுக்கு இறங்கி போய்விடும் அபாயம் இருக்கிறது.
//
அடடா.............

Unknown said...

இனிமே குவாட்டர் கட்டிங்க்னு சொல்லகூடாது பாஸ். கலக்குரோம்ஜி கலக்குறோம்னு தான் சொல்லணும்.

Paleo God said...

பொறுத்தது போதும். பொங்கி எழு தல! தயா நிதியோ, உதய நிதியோ ஒரு கதைய சொல்லி அட்வான்ஸ வாங்குங்க!

:))

பிரபாகர் said...

ஷங்கர் சொல்றதுதான் கரெக்ட்... பொங்கி எழுங்கண்ணா!
தியேட்டர்ல பார்க்கிற ஐடியா டிராப்... தேன்க்ஸ் அண்ணே!

பிரபாகர்...

அருண் said...

படம் நல்லாயிருக்கும்னு நினைச்சேன்,அப்ப மொக்கையா?

//பொறுத்தது போதும். பொங்கி எழு தல! தயா நிதியோ, உதய நிதியோ ஒரு கதைய சொல்லி அட்வான்ஸ வாங்குங்க!//
என்ன இவ்வளோ சிம்பிளா சொல்லிட்டிங்க.

Prabu M said...

தெளிவான விமர்சனம்...
நன்றி அண்ணா

Unknown said...

online 51 mmmmmmm

Ashok D said...

விமர்சனம் interesting தலைவரே :)

CS. Mohan Kumar said...

Looks like the film is a big failure.

test said...

//இப்படத்தின் மூலம், லாஜிக், போன்ற வஸ்துக்களை தேடுபவர்களுக்கு நிச்சயம் கடுப்பாகி கட்டிங் அடிக்கத்தான் போவார்கள். அல்லது அடித்துவிட்டு வந்தவர்களுக்கு இறங்கி போய்விடும் அபாயம் இருக்கிறது//

என்ன ஒரு தெளிவான பார்வை! அக்கறை!! நன்றி பாஸ்!! :)

'பரிவை' சே.குமார் said...

தெளிவான விமர்சனம்..!

'பரிவை' சே.குமார் said...

தெளிவான விமர்சனம்..!

'பரிவை' சே.குமார் said...

தெளிவான விமர்சனம்..!

'பரிவை' சே.குமார் said...

தெளிவான விமர்சனம்..!

'பரிவை' சே.குமார் said...

தெளிவான விமர்சனம்..!

Unknown said...

ஒரம் போ வை நம்பி ஏமாந்தவர் களில் நானும் ஒருவன்.உங்க விமர்சனம் ஏமாத்தலை.

ராஜன் said...

சில படம் விளம்பரம் பார்த்தாலே படம் பார்க்க பிடிக்காது அதில் வ படம் இடம்பெறும்

Unknown said...

படம் எப்படி இருக்குனு கண்டக்டர் கேட்கும் போதே சிவா சொல்லுவாரு “மொக்க படங்கண்ணா”-னு! உண்மையாவே மொக்க படம் தாங்கோ!!!!!

Village வின்ஞானி said...

@rajan..Mr. tell me the truth, u dont lik the trailer....ungalai ellam chair la katti pottu 10 murai sura padam paaka vekkanum....

@mr.cable, when u r going to direct a movie..?? let c how u r directing...i never saw any positive reviews in ur blog..

Krishna said...

KADISI line nachu
வாங்குடா ஒரு குவாட்டரை… மட்டையாவுறேன். So athukkala mattayaaaaa
sad .. Sankar
but I need one half to become mattai..

Krishna

பிரசன்னா கண்ணன் said...

//அப்படத்தை வழங்கிய அதே டீம் மீண்டும் இம்முறை குவாட்டர் கட்டிங் என்கிற பெயரில் ஒரு வித்யாசமான கல்ட் படத்தை தர முயன்றிருக்கிறார்கள்.

சங்கர் அண்ணா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சிவா/நீரவ் ஷா மட்டும் தான் தமிழ்படம் டீம்ல இதுல நடிச்சிருக்காரு.. மத்தபடி இது முழுக்க வேற டீம்னு தான் நெனைக்கிறேன்..

vels-erode said...

Totally different team dear !
Are u talking about producer & hero?

All in all cinema said...

immm...super...

Thamira said...

நான் மிக எதிர்பார்த்த படம். பார்த்துட்டேன். கடுப்பேத்திட்டாங்க.. :-((

DREAMER said...

Same Blood..!

-
DREAMER