உத்தமபுத்திரன்
பாக்ய்ராஜ் தலைமையில் உள்ள ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் உள்ள தன் முறை பெண்ணுக்கு அவனுடய காதலனுடன் சேர்த்து வைத்ததால் வீட்டை விட்டு தனியே இருக்க வேண்டியதாகி போய்விடுகிறது தனுஷுக்கு. இதற்கு இன்னொரு பிரச்சனை தன் நண்பனின் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்றதும் அப்பெண்ணை கடத்துகிறார்கள். ஆனால் கல்யாண மண்டபம் மாறியதால் மணப் பெண்ணும் மாறிவிட, செய்வதறியாது நிற்கும் நேரத்தில். மணப்பெண் தனக்கு அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று தான் புதுக்கோட்டையில் உள்ள தன் மாமா வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்ல, இதனிடையே இருவருக்கும் காதல் வர, ஜெனிலியாவை தன் வீட்டிலேயே தனுஷ் தங்க வைக்க, இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று குடும்பமே நினைக்கும் போது ஜெனிலியா கடத்தப்படுகிறார். காரணம் ஜெனிலியாவின் சொத்துக்காக இரண்டு மாமன்களுக்கிடையே லடாய். இரண்டு பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது. இருவரையும் சமாளித்து தனுஷ் எப்படி ஜெனிலியாவை அடைகிறார் என்பதை நீட்டி முழக்கி இரண்டேமுக்கால் மணி நேரம் சொல்லியிருக்கிறார்கள்.
தனுஷ் குடும்பத்தில் ஒரு கும்பல் என்றால். இந்த பக்கம் ஜெனிலியா மாமன் குடும்பத்தில் ஒரு நடிகர் கும்பல். எல்லார் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் தாவூ திர்ந்துவிடுமாதலால் முடிஞ்சா தியேட்டல படம் பார்க்கும் போது தெரிஞ்சிக்கோங்க.. இந்த குடும்பத்தை ஏதோ கவுண்டன் குடும்பம் என்று சொல்லி ஒரு மாதிரி நோகடிச்சிருக்காங்க.. உக்கார முடியல. டிவி சீரியல் கணக்கா லைனா ஆளாளுக்கு வரிசை கட்டி வந்து சீனுக்கு சீன் திருப்பம் தர்றோம்னு காமெடி செய்யற காமெடிய காண சகிக்க கண் கோடி வேண்டும்.
விஜய் ஆண்டனி நடிக்க போயிட்டதினால பாட்டு போடறதில சுரத்தில்லாம இருக்காரு போல.. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பளிச்.. தனுஷுக்கு இந்த மாதிரி படங்கள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
உத்தமபுத்திரன் - சோப்ளாங்கி
கேபிள் சங்கர்
Comments
http://enathupayanangal.blogspot.com
அர்ஜுன், இயக்குனர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் எல்லோரும் பார்த்தாங்களாம் நண்பா...
பார்க்கலாமா வேணாமா... பாஸ் ? //
இவ்ளோ சொன்ன பிறகு இப்படி கேக்குறாரே.. இவர் ரொம்ம்ப்ப நல்லவரோ?
//
இந்தச் சின்ன விஷயத்தை ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்கன்னுதாங்க புரியவே மாட்டேங்குது!!
கதையை வாசிக்க முயற்சிபண்ணேன்.... பூமிசுத்துறது கண்ணுல தெரியுது!!
விவேக் நல்ல ரிலாக்ஸ் போல... உங்க விமர்சனம் படிச்சாலே படம் பார்த்தமாதிரி ஆகிடுது.... ஆனால் உங்க இண்டஸ்ட்ரிக்கு பிரச்னைதான் அண்ணா... நாங்க தியேட்டருக்குப் போகவாபோறோம்!! :)
உங்கள் விமர்சனம் அருமை.
நம்ம வலைப்பூவுக்கும் ஒரு எட்டு வந்துட்டுப் போறது அண்ணா.
கேபிளார் இன்னமும் “வல்லக்கோட்டை” பாக்கல போலிருக்கு.....
பார்த்துட்டு விமர்சனம் எழுதிடப்போறீங்க....
இன்னமுமா இந்த அர்ஜுன் வச்சு படம் எடுத்துட்டு இருக்காங்க?
எப்படி தல இதெல்லாம் நடக்குது... கொஞ்சம் எங்களுக்கு எல்லாம் புரியற மாதிரி சொல்லுங்களேன்...
:)))
மிகவும் பிடித்த மற்றும் வெறுத்த ஸீன் எது என்பன போன்றும் பதிவு செய்யவும்..
//* அங்கே அப்படம் ஹிட்டானதற்கான காரணம் என்ன? *//
இதே மாதிரி தான் தில்லாலங்கடியும் பலாப் ஆச்சு
:)))
ஐயோ அப்ப நம்ம டாக்டரோட வாழ்க்கை? :))