இயக்குனர்கள் நடித்து மூன்று படங்கள் வெளி வந்திருக்கிற வாரமிது. மந்திரபுன்னகையில் கரு.பழனியப்பன், நகரத்தில் சுந்தர்.சி, மகிழ்ச்சியில் வ.கெளதமனும், சீமான் ஆகியோர் நடித்து இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. இதில் வ. கெளதமனும், கரு.பழனியப்பனும் முதல் முறை.
வழக்கமாய் கரு.பழனியப்பன் எடுத்தாளும் குடும்ப கதை களன் இல்லாமல் ஒரு வித்யாசமான களனை எடுத்தாண்டிருக்கிறார். பேசும் பேச்சினால் மற்றவர்களின் நெஞ்சை சாட்டையால் அடித்து காயப்படுத்தும் அரகண்ட் கேரக்டர் பழனியப்பனுக்கு. எந்த ஒரு வரைமுறைக்கும் ஆட்படாத ஒரு கேரக்டராய் ஒரு பெரிய கம்பெனியில் ஆர்கிடெக்காய் வலம் வரும் ஸ்திரிலோலன், குடிகாரன், எப்ப்பப்பார் புகைப்பவன் தன்னருகே யாரையும் நெருங்க விடாதவன் என எல்லா விதமாக நெகட்டிவ் விஷயங்களும் உள்ளவனுக்கும், மிகவும் போல்டான, சுதந்திரமான, தன்னம்பிக்கையான, சுய சிந்தனையுள்ள மீனாட்சியுடனான நட்பு காதலாகி கனியும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட். பின்பு அந்த ட்விஸ்டை வைத்து க்ளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு போயிருக்கிறார்கள்.
படத்திற்கு மிக முக்கியமான, பலமான ஒரு விஷயம் வசனங்கள். பாஸ்கர்சக்தியின் பெயரையும் போடுகிறார்கள். வழக்கமாக கரு.பழனியப்பனின் வசனங்களே ஷார்பாக இருக்கும். அதிலும் ஷார்ப் நாக்கு கேரக்டர் என்றவுடன் கேட்கவா வேண்டும் பல காட்சிகள் ரசிக்கத்தக்கதாய் அமைவதற்கு காரணமே அவரது வசனங்கள் தான்.
“உடம்ப கெடுக்கிற குவாட்டரை சத்தம் போட்டு கேட்குறோம். உடம்புக்கு பாதுகாப்பான காண்டமை ஏன் சத்தம் போட்டு வாங்க கூடாது?”
“காதல்னு ஒண்ணு இல்லவேயில்லை.. அரிக்குது சொரிஞ்சிக்கிறோம். அதுக்கு பேர் காதலா?”
“என் புள்ள மக்கா போயிட்டான்னா.. பேசாம சினிமாவுல ஹீரோவாக்கிக்கிறேன்.”
“பார்த்தசாரதி.. இனிமே கதிர் என்னை கூப்பிட்டான்னா அவனுக்கு என்னை அனுப்பாதே.. ஒரு நிமிஷம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி நினைச்சிட்டேன். அது எனக்கும் நல்லதில்லை.. அவனுக்கும் நல்லதில்லை”
“பார்த்தசாரதி.. இனிமே கதிர் என்னை கூப்பிட்டான்னா அவனுக்கு என்னை அனுப்பாதே.. ஒரு நிமிஷம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி நினைச்சிட்டேன். அது எனக்கும் நல்லதில்லை.. அவனுக்கும் நல்லதில்லை”
“அவன் என்னை எங்க பார்த்து பேசினான்னு எனக்கு தெரியும்.. அதனால என் கற்பு ஒண்ணூம் கெட்டுப் போயிறாது”
“மொத்த புத்திசாலித்தனத்தையும் நாக்கில விஷம் மாதிரி வச்சிருக்கியே?”
இப்படி படம் முழுவதும் நறுக் நறுக் வசனங்களால் நிரம்பியிருக்கிறது.
இப்படிபட்ட படங்களின் மிகப் பெரிய பலம் திரைக்கதை வசனமும், நடிப்பும் தான். முதல் பாதி வரை கூட கேரக்டர்களை அறிமுகப்படுத்தி செட்டிலாவதற்கு லேட்டானாலும், இரண்டாம் பாதி வந்ததும், திரும்ப, திரும்ப ஒரே மாதிரி காட்சிகள் வந்து ஏதோ அவசரமாக முடித்துவிட்ட பீல் இருக்கத்தான் செய்கிறது.
இப்படிபட்ட படங்களின் மிகப் பெரிய பலம் திரைக்கதை வசனமும், நடிப்பும் தான். முதல் பாதி வரை கூட கேரக்டர்களை அறிமுகப்படுத்தி செட்டிலாவதற்கு லேட்டானாலும், இரண்டாம் பாதி வந்ததும், திரும்ப, திரும்ப ஒரே மாதிரி காட்சிகள் வந்து ஏதோ அவசரமாக முடித்துவிட்ட பீல் இருக்கத்தான் செய்கிறது.
கரு.பழனியப்பனுக்கு முதல் படம் என்பதை காட்சிக்கு காட்சி தெரிவு படுத்துகிறார். நிச்சயமாய் இக்கேரக்டருக்கு அவரின் இருண்ட தாடிமுகம் செட்டாயிருக்கலாம் ஆனால் சுத்தமாக பாடி லேங்குவேஜ் இல்லை.. ஒரு வித கான்ஷியஸோடுதான் படம் முழுவதும் வளைய வருகிறார். முக்கியமாய் அருமையான டயலாக்குகள் எல்லாவற்றையும் மாடுலேஷன், பாடி லேங்குவேஜ் இல்லாமல் ஒருவித மனப்பாடத் தன்மையோடு இருப்பது கேரக்டரோடு ஒன்றவிடாமல் செய்கிறது.
ஒரு அல்ட்ரா மார்டன் பெண்ணாக மீனாட்சி. ஆரம்ப காட்சிகளில் தெரியும் அந்நியத்தனம் போக, போக மறைந்து நந்தினியாகவே மாறிவிடுகிறார். ஆனால் பாவம் மிக ஸ்ட்ராங்கான கேரக்டராய் கொண்டு வந்து, இரண்டாம்பாதிக்கு பிறகு ஹீரோ செண்ட்ரிக்காக மாறிவிடுவதால், அவரது கேரக்டர் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை மறுக்க முடியாது. அவள் தன்னை வெறுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தான் அப்படி பேசுகிறான் என்று உணர்ந்தும் மீனாட்சி ஒவ்வொரு கட்டத்திலும் டாக்டரிடம் போய் பேசுவது கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. படம் முழுவதும் ஒரு மாதிரி அப்பிய மேக்கப் நெருடுகிறது.
சந்தானமும், தற்போதைய ஹாட் ஆர்டிஸ்டான தம்பி ராமையாவும் வருகிறார்கள். பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆங்காங்கே சிற்சில இடங்களில் உதடு பிரிக்காமல் புன்னகைக்க வைக்கிறார்கள்.
வித்யாசாகரின் இசை ஆர்ப்பாட்டமாய் இல்லாவிட்டாலும், படத்திற்கு ஏற்றதாய் இருக்கிறது. அதில் ஒரு பாடலில் அறிவுமதியின் வரிகள் அருமை. ‘இந்த காதல் கொள்ள எத்தனை காமம் கடந்து வந்தேன்”.
முக்கியமாய் அந்த ப்ளாஷ்பேக் காட்சி நிதர்சனம். அதில் நடித்திருக்கும் மனோஜ்கிருஷ்ணா, இயக்குனர் நகுலன் பொன்னுசாமி ஆகியோரின் நடிப்பு மிக யதார்த்தம். அநாவசிய ட்ராமாவை டோட்டலாக தவிர்த்தற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும். மெல்ல கதை அன்போல்ட் ஆனாலும் இரண்டாவது பாதியில் டாப் கியரில் போயிருக்க வேண்டிய படம். க்ரைம், மனநலம் என்றலைந்து டீவியேட் ஆகிவிடுவது சோகமே.. கதிர், நந்தினிக்குமிடையே ஆன விஷயங்களில், அவர்களுக்குண்டான உணர்வு போராட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். ரிஷி என்கிற கேரக்டரை அறிமுகப்படுத்திவிட்டு உபயோகிக்காமல் விட்டது. அவ்வளவு ட்ரீட்மெண்ட், மருந்து என்று எடுத்துக் கொள்ளும் கதிர் கேரக்டர் நந்தினி பேசும் பேச்சை கேட்டு சரியாவது எப்படி? எனபது போன்ற பல கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. ஒரு அருமையான சைக்கலாஜிகல் காதல் கதையாய் வந்திருக்க வேண்டியது..
மந்திரபுன்னகை- :)
கேபிள் சங்கர்
Post a Comment
20 comments:
ம்ம்ம்.. மிகவும் எதிர்பார்த்த படம்..கவுத்துடுச்சே :-(
தலைவா விமர்சனம் நச் ! கரு. பழனியப்பன் எங்க காரைக்குடிகாரர் .படம் வெற்றி பெற
வாழ்த்துகிறேன் . அப்புறம் ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு பாடலாசிரியர் அண்ணன் அறிவுமதிக்கு
அருள்மதினு மாத்தி எழுதீடிங்க!http://www.grajmohan.blogspot.com
நான் இன்னிக்கு பாக்கலாம்னு இருந்தனே..
ஒரு அருமையான சைக்கலாஜிகல் காதல் கதையாய் வந்திருக்க வேண்டியது..
Absolutely Right
“என் புள்ள மக்கா ''படிக்காம' போயிட்டான்னா.. பேசாம சினிமாவுல ஹீரோவாக்கிக்கிறேன்.” முன்னெல்லாம் அரசியல்வாதி ஆவான்னு சொல்வாங்க, இப்ப அவிங்க மக்களே சினிமாவுக்கு வந்ததாலே இந்த நக்கல் போல...
THANKS JI.KAAPPAATHANATHUKKU.
அண்ணே பார்க்க ட்ரை பண்றேன்...
பார்க்கலாம்னு தோணுது!
உங்க விமர்சனம் பேக் டு ஃபார்ம்! சூப்பர்ப்!! :)
padam,,mokka masala padam illa...Ithai kekkava santhosama irukku..
http://enathupayanangal.blogspot.com
விமர்சனத்தை பார்க்கும்போது ஒருமுறை பார்க்கலாம் என்றே நினைக்கிறேன். சரிதானே சார்?
www.tamilrange.com
(kollywood,tollywood hot updates)
ஆடியோ ரிலீஸ் அன்னிக்கு டைரக்டர் ஹரி சார் ஒரு கருத்து சொன்னாரே கவனிச்சீங்களா, இருக்கு அந்த கிளிப் http://laavi.blogspot.com/2010/11/mystic-smile.html
விமர்சனம் நச்
பார்க்கல, பார்க்கோணும்
//
கரு.பழனியப்பனுக்கு முதல் படம் என்பதை காட்சிக்கு காட்சி தெரிவு படுத்துகிறார். நிச்சயமாய் இக்கேரக்டருக்கு அவரின் இருண்ட தாடிமுகம் செட்டாயிருக்கலாம் ஆனால் சுத்தமாக பாடி லேங்குவேஜ் இல்லை..
//
ஆட்டிவைப்பவர்கள் பலபேர் தாங்கள் ஆடும்போது கொஞ்சம் தடுமாறுவதுண்டு...
//இந்த காதல் கொள்ள எத்தனை காமம் கடந்து வந்தேன்”.
//
இந்தக் காதலை நான் அடைய
எத்தனை காமம் கடந்து வந்தேன் - இதான் சரியான வரி
சுதா ரகுநாதன் பாடுன என்னக் குறையோ பாட்டப் பத்தி சொல்லாம விட்டது குறையா இருக்கு.
சட்ட சடவென பாடலும் நல்லா இருக்கு.
ரொம்ப நல்ல விமர்சனம் தல
your comment on santhanam is not justfied. please develop your humour sense anna
வசனம் அது தான் படத்தோட தூக்கல்
Film is very nice!
I recently saw this movie and impressed with dialogues, it is an different movie compare to regular masala movies.
Post a Comment