நகரம்
சிறு வயது நணபர்கள் சுந்தர் சியும் போஸ் வெங்கட்டும், ஒருவர் ரவுடியாகிறார், மற்றொருவர் போலீஸ் ஆகிறார். போஸ் கெட்ட போலீஸ். சுந்தர் சி ஒரு பெரிய கள்ளக்கடத்தல் தாதாவிடம் வேலைப் பார்க்கும் போது மாட்டிக் கொண்டுவிட, அவரை கை காட்டாமல் ஜெயிலுக்கு போகிறார். சுந்தர்சியை போஸ் வெங்கட் வெளியே எடுத்து தன்னுடய இரண்டாம் படை வேளைக்கெல்லாம் உபயோகப்படுத்தி சம்பாதிக்கிறார். நடுவில் சுந்தர் சிக்கும், எதிர் வீட்டு அனயாவுக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையில் நண்பனுக்கு பிரச்சனை என்றதும் அவரை காப்பாற்ற மீண்டும் ரவுடித்தனத்தை எடுக்க, அதை பார்த்த அனயா சுந்தரிடமிருந்து விலகுகிறார். தன்னை பற்றி விளக்கி மீண்டும் தனக்கொரு சான்ஸ் கொடுக்கும் படி கேட்கிறார். அனயாவும் கொடுக்கிறார். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
சமீபத்திய சூப்பர் ஹிட்டான கமீனேவை அப்படியே உல்டா அடித்திருக்கிறார்கள். கமினே போன்ற படங்களை உல்டா செய்யும் போது அதன் மேக்கிங்கையும் கேரக்டரைஷேஷன்களை கொஞ்சமே, கொஞ்சம் கவனித்திருந்தார்களானால் எடுத்திருக்க மாட்டார்கள். பாவம் படு சொதப்பலாய் போய்விட்டது. இயக்குனர் சுந்தர் கே.விஐயன் கூட நடித்திருக்கிறார். இவர்கள் மிகவும் நம்பியது வடிவேலின் காமெடிதான். போஸ்டரில் இருக்கும் வடிவேலின் காமெடி கெட்டப்பை நம்பி போபவர்கள் ஏமாந்துதான் போவார்கள். புன்னகைக்ககூட முடியவில்லை. அதிலும் ஆரம்ப காட்சியில் அவர் செய்யும் அல்டாப்புகள் எல்லாம் தலைநகரத்திலேயே சலிக்க சலிக்க பார்த்து விட்டதால் முடியலை..
தமனின் இசையை பற்றி பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. வழக்கம்போல டெக்னோ மியூசிக்காக ஏற்றி,ஏற்றி பாடுகிறார்கள். விரைவில் தமன் இதிலிருந்து வருவாராக.. ஒளிப்பதிவு, நன்றாகவே இருக்கிறது.
கடைசி அரை மணி நேரப் படம் கொஞ்ச விறுவிறுப்பாக போவதால் வெளி வரும் போது எரிச்சல் குறைந்த நிலையில் வருகிறோம். இல்லாவிட்டால்.. முடியாது. சுந்தர் சியின் மிகப்பெரிய அசெட் நகைச்சுவை கலந்த திரைக்கதை. அவர் அதை மீண்டும் கையிலெடுத்து தான் நடிக்காமல் இருந்தால் இன்னும் விஷேஷம்.. அனயா மாதிரியான பெண்ணுடன் இவர் நடக்கும் போது மாமா மாதிரி இருக்கிறார். சாகும் போது கூட பெரிதாய் ரியாக்ஷன் இல்லாமல் வழக்கமான டோனிலேயே பேசுவது.. எரிச்சல்..
நகரம்- கொஞ்சம் நரகம்.
கேபிள் சங்கர்
Comments
போபவர்கள் - kku bathila
Selbavargal..innum nalla irukkadhu?
--Sri
காமெடி நல்லாய்ருக்குன்னு கேள்விப்பட்டேன்...
:)))
nice
நல்ல விமர்சனம்.
அவுங்க வீட்டுக்கார அம்மாவே எடுத்தாங்க அதுவும் புட்டுக்கிச்சா!
http://www.grajmohan.blogspot.com
உண்மை தமிழன், லக்கிலுக் வேறமாதிரி சொல்லீருக்காங்க....
இங்க ரிலீஸ் ஆகல... நெட்ல பாத்துதான் கருத்து சொல்ல முடியும்
மன்மதன் அம்பு
விருத்தகிரி
இந்த மாபெரும் இரு படங்களின் ஆடியோ விமர்சனம் எதிர்பார்க்கலாமா?
போட்டோ கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு //
Yes Yes....
மாற்றிவிடுகிறேன்
@ம.தி.சுத
பாருங்க
@வினோ
நன்றி
@கனவரோ
ம்..
2வழிப்போக்கன்
என்னை பொறுத்த வரை சுத்த வேஸ்ட்
@ரமேஷ்
ம்..
எல்.கே
சந்தோசமா இருந்தா சரி..
@குழலி
ஏன்பேசாம ஆபீஸில வந்து பாத்திருக்கலாமில்லண்ணே..
@மோகன் குஆர்
ம்..
@008
ம்
@சே.குமார்
உங்க வசதி
@ஜி.ராஜமோகன்
அதுவும் சரிதான்
@சிவகாசி மாப்பிள்ளை
அப்படி நினைத்தால் உங்கள் தலைவிதிக்கு நான்பொறுபில்லை
உ.த. லக்கிலுக் தான் உங்கள் அளவு கோல் என்றால் நிச்சயம் பார்க்கவும்..:))
2ஆர்.கோபி
விரைவில்
@காரா
ம்
@கே.ஆர்.பி.செந்தில்
ம்ஹும்
குறைஒன்றும் இல்லை
பாருங்க.. எனக்கு பிடிக்கலை என்றால் பிடிக்கலை என்றுதான் எழுதுவேன்..தலைவரே..
மேக்ஸோ
ஆமா.