Thottal Thodarum

Nov 24, 2010

சேர்ந்து வாழ்வது

Together_by_Carcin09 சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்  லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவர்களிடத்து செக்ஸ் மட்டுமே தான் வாழ்க்கையாக இருக்குமா..?

அவர்களது வாழ்க்கையை பற்றிய தெளிந்த பார்வை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்கள் வாழ்க்கைக்கு அவரவர்கள் எடுக்கும் முடிவே நல்லது. எத்தனை கல்யாணங்கள் திருப்திகரமாய் இருந்திருக்கிறது?. திருமணமாகி மூன்று மாதத்திற்கெல்லாம் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு படியேறும் தம்பதிகளை என்னவென்று பார்க்கும் இந்த சமூகம்?.  செக்ஸ் தான் பிரச்சனை என்றால்? டைவர்ஸ் செய்யும் பெண்களையும் கற்பு கெட்டுப் போனப் பெண் என்றுதான் சொல்வீர்களா? திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கர்பமாகி, அதற்கு பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, டைவர்ஸ் வாங்கிய என் உறவினர் பெண்ணையும் எனக்கு தெரியும். அந்த குழந்தைக்கு வேண்டுமானால் இனிஷியல் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?. ஜீவனாம்சம் கூட வேண்டாம் என்று தன் காலில் சுயமாய் என் குழந்தையை வளர்கிறேன் என்று நிற்கும் பெண்ணுக்கு தோள் கொடுப்பதுதான் என் கடமையாய் தெரிகிறதே தவிர, அவள் கன்னிப் பெண்ணல்ல, செகண்ட் ஹாண்ட் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் செகண்ட் ஹாண்ட் என்றால் அந்த ஆணும் செகண்ட் ஹாண்ட்தான். ஆம்பளைக்கு ஆயிரம் கல்யாணம் என்பதெல்லாம் அந்தக்காலம் நல்ல சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் நிறைய பேருக்கு இன்றளவில் வயதேறிக் கொண்டிருக்கிறதே தவிர திருமணம் நடந்த பாடில்லை. டைவர்சியான ஆணுக்கும் மீண்டும் திருமணம் எனும் போது பல பிரச்சனைகளை கடந்துதான் திருமணமாகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நிஜத்தில் நடக்கும் விஷயங்களை அறிய, தெரிய மறுப்பவர்களுக்கு நான் சொல்லி மட்டும் தெரிந்து விடவா போகிறது.

இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள். தினசரி பேப்பரை திறந்தால் கள்ளக்காதலினால் மனைவி கொலை, மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்றாள். குழந்தைகளோடு விஷம் குடித்து சாவு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் நம் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்படிப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநலம் குன்றி, பின்னாளில் ஒரு ரவுடியாகவோ, அல்லது வக்கிரம்பிடித்தவனாகவோ, வன்முறையை கையாளுபவனாகக்கூட இருக்கக்கூடும்.  என் நண்பருடய குடும்பத்தில் தினம் ஒரு பிரச்சனை, கணவர் மீது சந்தேகம், அதனால் மனைவி கொடுக்கும் டார்சர் தாங்க முடியவில்லை இதனால் நிதம் சண்டை இந்த சண்டையை பார்த்த அவரது மகன் மன அழுத்தம் தாங்காமல் ஒரு நாள் கை நரம்பை அறுத்து கொண்டான் அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக, அவனை காப்பாற்றுவதற்குள் பெரும் பாடு பட்டு விட்டார்கள். ஆனால் மீண்டும் பிரச்சனை என்னவென்றால் இதற்கெல்லாம் காரணம் நீதான்? என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு பிரச்சனையுடன் இவர்களும் கலாச்சாரப்படி சேர்ந்துதான் வாழ்கிறார்கள். ஏன்?

குடும்பம்னா ஆயிரம் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்பவர்களுக்கு ஒன்று. ஆயிரம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆயிரத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தால் நல்லது. பொழுதன்னைக்கு பிரச்ச்னைதான் வாழ்க்கைன்னா சரிவராதவங்க பிரிஞ்சு போயிடறது நல்லதுதானே. அப்படி விவாகரத்துன்னு வர்றவங்களுக்கு ஜீவனாம்சம் அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டி இருக்கு, அந்த கஷ்டம் எல்லாம் டைவர்ஸ் பண்ணி பார்த்தவனுகும், கூட அலைஞ்சவனுக்கும் தான் தெரியும். டைவர்ஸுக்கு பிறகு நல்ல வாழ்க்கை செட்டான ஆண், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிலும் பல பிரச்சனைகல் இருக்கத்தான் செய்கிறது. முதலில் வயதில் ஏற்படும் காதல் , காமம் வகையராக்களை தாண்டி வருவதற்குள் இவர்களிடமும் பிரச்சனை ஏற்படத்தான் செய்கிறது. என்ன கொஞ்சம் பொறுத்துப் பார்த்து பின்பு ஒரு முடிவுக்கு வந்து பிரிந்துவிடுகிறார்கள். கோர்ட்டு, வழக்கு, மற்றும் பல பிரச்சனைகள் கிடையாது. இதில் இன்னும் சில பேர் சொத்துகள் வாங்கி அதை ரிஜிஸ்டர் செய்யும் போது அக்ரிமெண்ட் கூட போட்டுக் கொள்கிறார்கள்.  அதே போல குழ்ந்தை பிறந்து ரெண்டு வருடம் கழித்து பிரிந்த ஒரு ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ப்ளான் செய்யும் நேரத்திலேயே அக்குழந்தைக்கான சேப்டி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டுதான் குழந்தையே பெற்றுக் கொண்டார்கள். அக்குழந்தைக்கான எதிர்காலம், அவனுக்கான இனிஷியல் உள்பட. இன்று அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனும் தான்.

இந்த சமூகம் பல விஷயங்களை தனக்கேற்றார் போல மாற்றிக் கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் என் தாத்தாவுக்கு மூணு பொண்டாட்டி என்று சொன்னதையெல்லாம் இப்போது சொல்ல முடிவதில்லை.. ஏனென்றால் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிசு என்றாகிவிட்டதும் ஒரு காரணம். இன்றைய காலகட்டத்தில் வாழ்வதே பிரச்சனையாய் நினைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர். தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் நிறைய பேர்.

தன்னுடய் அக்காள்கள் எவரும் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவில்லை. அவரவர்களுக்கு வாழ வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேர்ந்திருக்கிறார்கள் எனறு என் தோழி திருமணமே வேண்டாமென்று ஒற்றைக்காலில் நின்றாள்.  கடைசியில் வீட்டில் இருப்பவர்க்ள் எல்லோரும் ஒரு வ்ழியாய் சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அவள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தற்கொலை செய்து கொண்டாள். ஊரில் எல்லோரும் அவளூக்கு காதல் தோல்வி என்றார்கள். எனக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு வாழ்க்கையே தோல்வியென்று.. என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..
Technorati Tags: ,,
கேபிள் சங்கர்
Post a Comment

57 comments:

test said...

//லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்//

உண்மை! இங்கும்(கொழும்பில்) அப்படியே! எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஒரு வயது முதிர்ந்த ஜோடியை காட்டி என் நண்பன் அப்படியான ஒரு முகபாவனையில்தான் கூறினான். இளைஞர்களே இப்படி என்றால்??

test said...

//என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை.//
point!
எந்த முறை சேர்ந்து வாழ்தலிலும் அதன் , வெற்றி, தோல்வி என்பது சம்பந்தப்பட்டவர்களின் புரிந்துணர்வு, நேர்மை, தனிமனித ஒழுக்கம் சார்ந்தது! :-)

Jude said...

It's great to see your spreading the right message at the right time. I loved it! Please continue your good work :-)

சிவகுமார் said...

Nothing sir , Mannam irutha mhairgam undu pa.

அமுதா கிருஷ்ணா said...

சுற்றத்தாருக்கு, ஃப்ரெண்ட்ஸ்க்கு தெரிந்து இப்படி வாழ்ந்தால் கொஞ்ச நாள் அந்த ஜோடி பற்றி பேசி இருந்து விட்டு அப்புறம் மறந்தும் போவோம்..ஆனால் இப்படி வாழ்பவர்கள் நிறைய பேர் யாருக்கும் தெரியாமல் தான் வாழ்கிறார்கள். ஏனெனில், பிரச்சனை என்று பிரிய நேரிடும் போது அடுத்தவர்களை ஏமாற்றுவது ஈஸி..திருமணம், விவாகரத்து ரகஸியமாய் நடப்பது இல்லை..

Unknown said...

உண்மையை சொன்னீர்கள்.///என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை///இந்த பாய்ண்ட்லதான் நானும் நிக்கிறேன்....

துமிழ் said...

நீங்கள் சொல்லும் படி நடந்தால் ரொம்ப சந்தோசம் நண்பரே.

ஆனால் சிலபேர் சேர்ந்து வாழ்தல் என்பது இருவர் விரும்பி(மனம் ஒத்து) வாழ்ந்துபார்த்து அவர்கள் அவர்களின் மன
ஒருமைப்பாடு பிடித்திருந்தால் தொடர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து விடுவது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிலேயும் திருப்திப் படாத நிலையான தடுமாறும் உள்ள மனநிலையில் உள்ள ஒருவர்
எத்தனை முறை இப்படி வாழ்ந்து பார்க்கவேண்டும் என்று நினைக்கும் போதுதான் கொஞ்சம்
உறுத்துகிறது.

shortfilmindia.com said...

//எதிலேயும் திருப்திப் படாத நிலையான தடுமாறும் உள்ள மனநிலையில் உள்ள ஒருவர்
எத்தனை முறை இப்படி வாழ்ந்து பார்க்கவேண்டும் என்று நினைக்கும் போதுதான் கொஞ்சம்
உறுத்துகிறது//

அப்படி யாரும் இருப்பதில்லை ந்ண்பரே.. பெரும்பாலான சேர்ந்து வாழும் தம்பதிகள் பிரிந்த பின்பு இன்னொரு உறவுக்கு தயாராவதில்லை. ஒரு டைவர்ஸியின் மனநிலையில் தான் அவர்களும் வாழ்கிறார்கள். இருவருக்கும் உண்டான மன உளைசச்ல் ஒன்றேதான். பெரும்பாலானவர்கள் நினைக்கும் மாற்றி, மாற்றி வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள் என்று நினைப்பது தான் மன விகாரமாய் இருக்கிறது.

chillsam said...

உறவின் ஆதாரமே இனவிருத்திதான்;
அதுவே அனைத்து உயிர்களின் ஜீவமரண போராட்டத்துக்கு ஆதாரமாக இருக்கிறது;

பரிணாமக் கொள்கையிலும்கூட‌ ஒவ்வொரு இனமும் தன் இனத்தை நிலைநிறுத்தப் போராடியது ஏற்கப்படும்;

இறைவனே உயிர்களின் ஆதாரம் என்ற கொள்கையிலும் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு ஒரு ஜோடியை மட்டுமே துணையாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது;

மிருகங்களிலும் பறவையினங்களிலும் கூட சிறப்பான குடும்ப அமைப்பைக் காணலாம்;அப்படியானால் படைப்பின் சிகரமான மனிதன் தன் தாறுமாறுகளால் உறவுகளில் நேர்மையற்று இருந்தால் அவனது எதிர்கால சந்ததியில் உறவுகளின் ஆரோக்கியமும் வாழ்வியலில் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்;

இறைவன் ஆதியில் அனைத்து உயிர்களையும் ஜோடி ஜோடியாகப் படைத்தார் என்ற கொள்கையின் படி ஒவ்வொரு ஜோடியும் தனது ஜோடிக்கு பொறுப்பாகவும் அது மாறும்போது சொல்லமுடியாத துக்கமும் ஏற்படும்;இது சிருஷ்டியின் இரகசியமாகும்.

Unknown said...

சேர்ந்து வாழுதல் பற்றி தெளிவுரை பதவுரை தேவையென்றால் தெரு நாய் போல் அடிக்கடி ஆளை மாற்றிகொண்டிருக்கும் நம்ம ஒலக நாயகனை? கேட்டால் பிட்டு பிட்டு வைப்பாரே.

Wanderer said...

அடுத்தவரை தொந்தரவு, கெடுதல செய்யாமல் தன் போக்கில் வாழ ஒவ்வொரு ஜீவனுக்கும் உரிமை இருக்கிறது.
சேர்ந்து வாழ்பவர்கள் திருமணம் செய்து தான் ஆகவேண்டும் என வற்புறுத்துவது, அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
நம் மக்களுக்கு, எந்த ஒரு புதிய விஷயத்தையும் தனக்கு தெரிந்த கட்டமைப்புக்குள் அடக்கி பார்ப்பதும், அடங்கா விட்டால் அதனை ஆராயாமல் எதிர்ப்பதும் வாடிக்கையான ஒன்றாகும். இவர்களைப்பற்றியெல்லாம் நினைக்காமல், உங்கள் கருத்துக்களை தெளிவாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்!

பிரபல பதிவர் said...

ஏன்,, என்னாச்சி.... திடீர்னு ஒரு கான்ட்ராவர்ஸி பதிவு....

யாரும் இன்னும் திட்டி பின்னூட்டம் போடல....

சமுதாயமே... சமுதாயமே... சீக்கிரம் பின்னூட்டம் போடுங்க...

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா!அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு . மிகச்சரியான வார்த்தை .பெற்றோர் பார்த்து
திருமணம் செய்து வைத்தாலும் .நாமே காதல் கல்யாணம் செய்தாலும் விட்டு கொடுத்து
வாழ்ந்தால் தான் வாழ்க்கை . இன்று மாறி வரும் சூழ்நிலையில் நமது தலைமுறையினருக்கு
எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற தீர்க்கமாக இருக்கத்தெரிகிறது .http://www.grajmohan.blogspot.com

பிரபல பதிவர் said...

சேர்ந்து வாழ்றது ஜஸ்ட் ஒரு மணி நேரமா இருந்தா அதுக்கு வேற மாதிரி பேர் சொல்றாங்களே தல... ஒரே குழப்பமா இருக்கு..

பிரபல பதிவர் said...

//இன்று மாறி வரும் சூழ்நிலையில் நமது தலைமுறையினருக்கு
எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற தீர்க்கமாக இருக்கத்தெரிகிறது //

ராஜ் இவ்ளோ அப்பாவியா நீங்க... இளைய தலைமுறைய இப்படி சரியா கணிச்சிருக்கீக... கேபிள் இளைய தலைமுறையா?? மூத்த தலைமுறையா... சரியா பதில் சொல்லுங்க‌

பிரபல பதிவர் said...

//kudakku said...
சேர்ந்து வாழுதல் பற்றி தெளிவுரை பதவுரை தேவையென்றால் தெரு நாய் போல் அடிக்கடி ஆளை மாற்றிகொண்டிருக்கும் நம்ம ஒலக நாயகனை? கேட்டால் பிட்டு பிட்டு வைப்பாரே
//

தெரு நாயை கேவலப்பத்திய குடாக்குவை வன்மையாக கண்டிக்கிறேன்...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஏன் ரஜினி சுத்தாத பொம்பளையா.. நடிகையா.. என்னவோ ஒழுக்க சீலர் மாதிரி சொல்லியிருக்காரு.. அதான் கேபிள் அண்ணன் சொல்றாருஇல்ல.. அது அவங்க வாழ்க்கை.. அதுல ஏன் உங்க மூக்கைநுழைக்கிறீங்க..?

Unknown said...

இது தனி மனித சுதந்திரத்தின் இன்னொரு பரிணாமம், கலாசாரம் என்பதே நேற்றைக்கு நம் முன்னோர்கள் செய்தது இன்றைய கலாசாரம், நாம் வாழ்ந்தது நாளைய இளையோரின் கலாசாரம் .. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மாறிவருகிறது என்றாலும், நமக்கான சமூக கட்டமைப்பை சில விசயங்கள் மீறும்போது போலியாய் கலாச்சாரம் பற்றி பேசுபவர்கள் (சிவசேனா போன்றவர்கள்) தடி எடுப்பதைத்தான் ஏற்றுகொள்ள முடியவில்லை..

'பரிவை' சே.குமார் said...

இந்த கலாச்சாரம் ஏற்றுக் கொள்ளத்தக்கதா இல்லையா என்பதை யோசிப்பதைவிட இப்படி இணைந்து வாழ்பவர்கள் சமுதாயத்தில் நாங்கள் இப்படித்தான் வாழ்கிறோம்... எங்களுக்கு இது பிடித்திருக்கிறது... என்று பொது இடங்களுக்கு வருகிறார்களா... இல்லையே... அப்படியிருக்க கள்ளத்தனத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்... இன்று சேர்ந்து வாழ்வது யாருக்கும் தெரியாமல் இருந்தால் நாளை பிரியும்போது நாம் மற்றொரு ஆளுடன் பழசை மறந்து வாழலாம் என்ற எண்ணம்தானே...

பிரபல பதிவர் said...

//adangapidari said...
ஏன் ரஜினி சுத்தாத பொம்பளையா.. நடிகையா..
//

அடங்காபிடாரி... நீங்க ரஜினிக்கு விளக்கு புடிச்சீங்களா???
இவ்ளோ கான்பிடன்டா சொல்றீங்க‌

புருனோ Bruno said...

//சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லிவிங் டு கெதர் என்பதுதான். //

ஙே ஙே ஙே ஙே !!

பதிவர்களில் யார் இரண்டு பேர் இப்ப சேர்ந்து வாழ்கிறார்கள் ???

vinthaimanithan said...

//லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.// சத்தியமா நான் இல்லீங்கோ!

//அப்படி விவாகரத்துன்னு வர்றவங்களுக்கு ஜீவனாம்சம் அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டி இருக்கு, அந்த கஷ்டம் எல்லாம் டைவர்ஸ் பண்ணி பார்த்தவனுகும், கூட அலைஞ்சவனுக்கும் தான் தெரியும். // மனமொத்துப் பிரியிறங்களுக்கு mutual consent முறையில ஒரே ஒரு ஹியரிங்ல கூட டைவர்ஸ் கிடைச்சிடுதுங்க... சட்டத்துல மாத்தி கொஞ்சகாலம் ஆச்சு.

//முதலில் வயதில் ஏற்படும் காதல் , காமம் வகையராக்களை தாண்டி வருவதற்குள் இவர்களிடமும் பிரச்சனை ஏற்படத்தான் செய்கிறது. என்ன கொஞ்சம் பொறுத்துப் பார்த்து பின்பு ஒரு முடிவுக்கு வந்து பிரிந்துவிடுகிறார்கள்.//
இதுலதாங்க டேஞ்சரே! நம்மோட சமூகத்துல லிவிங் டுகெதர் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

பதிவுத் திருமணத்திலேயே mutual consent in divorce னு பிரியற வழிமுறைகள் சுலபமா இருக்குறப்போ ஏன் பதிவு பண்ண மறுக்கணும்? மனமொத்து வாழ்றவங்க மனமொத்துப் பிரியலாம்ங்கிறதுக்கு லிவிங் டுகெதர் அளவுக்குப் போகவேணாமே! பதிவுத் திருமணம் போதுமே!

//இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள். தினசரி பேப்பரை திறந்தால் கள்ளக்காதலினால் மனைவி கொலை, மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்றாள். குழந்தைகளோடு விஷம் குடித்து சாவு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் நம் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்படிப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநலம் குன்றி, பின்னாளில் ஒரு ரவுடியாகவோ, அல்லது வக்கிரம்பிடித்தவனாகவோ, வன்முறையை கையாளுபவனாகக்கூட இருக்கக்கூடும். என் நண்பருடய குடும்பத்தில் தினம் ஒரு பிரச்சனை, கணவர் மீது சந்தேகம், அதனால் மனைவி கொடுக்கும் டார்சர் தாங்க முடியவில்லை இதனால் நிதம் சண்டை இந்த சண்டையை பார்த்த அவரது மகன் மன அழுத்தம் தாங்காமல் ஒரு நாள் கை நரம்பை அறுத்து கொண்டான்//

விகிதாச்சாரத்தைக் கணக்கில எடுத்துக்கோங்க தலைவரே! அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு பெருமளவு ஆணிவேர் இந்த வாழ்க்கைமுறைதான் அப்டீன்னு சமூகவியலாளர்களோட ஆய்வு சொல்லுது.

கலாச்சாரமாற்றங்களை நாங்கள் கண்மூடித்தனமா எதிர்க்கல... அதே சமயம் அதனோட சாதக பாதகங்களை முழுசா அலசாம ஒரு சில couple ஐ மட்டும் முன்னுதாரணமாக்கி 'ஜே' போடுறது தப்புன்னுதான் சொல்றோம்.

இம்பார் said...

நோகாமல் நொங்கு திங்க நினைக்கும் கோழைகள் மட்டுமே தேர்வு செய்யும் வழி தான் லிவ்விங் டுகேதர். இவர்களுக்கும் நாய்களுக்கும், ஆடு, மாடு மந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்...?

சமுதாயத்தில் வரதச்சனை, ஜாதகம் நம்மிக்கைகள் பெருகி திருமணம் என்பது கடினமாகிப்போனதுதான் அடிப்படை காரணம் என்று நினைக்கிறேன்.

இம்பார் said...
This comment has been removed by the author.
பலூன்காரன் said...
This comment has been removed by the author.
பலூன்காரன் said...

தாய் அல்லது தகப்பன் இல்லாத குழந்தைகளையும், அனாதை முதியோர்களையும் உருவாக்காத வரை 'சேர்ந்து வாழும்' முறையில் எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து.

சேர்ந்து இருப்பது வேறு சேர்ந்து வாழ்வது வேறு. சேர்ந்து வாழ்வது என்பது almost திருமண வாழ்க்கை போல் தான். தாலி / மோதிரம் மட்டும் தான் வேறுபாடாக இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்

RK நண்பன்.. said...

சமூகத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களாக கருதப்படும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, ஜெயமோகன், சாருநிவேதிதா உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களும் தங்களுக்கென்று வலைப்பூ வைத்திருக்கிறார்கள். வலைப்பூக்களில் எழுதப்படும் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குறிப்பாக கேபிள் சங்கர், உண்மை தமிழன், அதிஷா, சிபிசெந்தில்குமார், தண்டோரா, பட்டர்ஃபிளை இன்னும் ஏராளமான வலைஞர்கள் எழுதுகிற விமர்சனங்களுக்கு பதிவுலகத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர்கள் ஒரு படத்தை 'மொக்கை' என்று எழுதிவிட்டால், 'நீங்க சொல்லிட்டீங்க... டிக்கெட்டையே கிழிச்சு போட்டுட்டேன்' என்று பின்னு£ட்டம் எழுதி டைரக்டரையும் தயாரிப்பாளரையும் அதிர வைக்கிறார்கள் வாசகர்கள்.

இந்த நிலையில் இந்த வலைஞர்களுக்காக தனி ஷோ ஏற்பாடு செய்து புதிய அத்தியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய 'மந்திரப்புன்னகை' படத்தின் பிரத்யேக காட்சி வலைப்பதிவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் திரண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைப்பூ எழுத்தாளர்களை முன்னதாக வந்திருந்து வரவேற்றிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த ஐம்பது பேரில் மிக முக்கியமான ஒருவரும் வந்திருந்தார். அவர்... எழுத்தளார் ஞாநி!

ஓ போடுறாரா பார்க்கலாம்...

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/november/241110.asp


என்றும் நட்புடன்,
ஆர்.கே.நண்பன்

RK நண்பன்.. said...

சமூகத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களாக கருதப்படும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, ஜெயமோகன், சாருநிவேதிதா உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களும் தங்களுக்கென்று வலைப்பூ வைத்திருக்கிறார்கள். வலைப்பூக்களில் எழுதப்படும் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குறிப்பாக கேபிள் சங்கர், உண்மை தமிழன், அதிஷா, சிபிசெந்தில்குமார், தண்டோரா, பட்டர்ஃபிளை இன்னும் ஏராளமான வலைஞர்கள் எழுதுகிற விமர்சனங்களுக்கு பதிவுலகத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர்கள் ஒரு படத்தை 'மொக்கை' என்று எழுதிவிட்டால், 'நீங்க சொல்லிட்டீங்க... டிக்கெட்டையே கிழிச்சு போட்டுட்டேன்' என்று பின்னு£ட்டம் எழுதி டைரக்டரையும் தயாரிப்பாளரையும் அதிர வைக்கிறார்கள் வாசகர்கள்.

இந்த நிலையில் இந்த வலைஞர்களுக்காக தனி ஷோ ஏற்பாடு செய்து புதிய அத்தியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய 'மந்திரப்புன்னகை' படத்தின் பிரத்யேக காட்சி வலைப்பதிவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் திரண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைப்பூ எழுத்தாளர்களை முன்னதாக வந்திருந்து வரவேற்றிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த ஐம்பது பேரில் மிக முக்கியமான ஒருவரும் வந்திருந்தார். அவர்... எழுத்தளார் ஞாநி!

ஓ போடுறாரா பார்க்கலாம்...

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/november/241110.asp


என்றும் நட்புடன்,
ஆர்.கே.நண்பன்

RK நண்பன்.. said...

சமூகத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களாக கருதப்படும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, ஜெயமோகன், சாருநிவேதிதா உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களும் தங்களுக்கென்று வலைப்பூ வைத்திருக்கிறார்கள். வலைப்பூக்களில் எழுதப்படும் விமர்சனங்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குறிப்பாக கேபிள் சங்கர், உண்மை தமிழன், அதிஷா, சிபிசெந்தில்குமார், தண்டோரா, பட்டர்ஃபிளை இன்னும் ஏராளமான வலைஞர்கள் எழுதுகிற விமர்சனங்களுக்கு பதிவுலகத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர்கள் ஒரு படத்தை 'மொக்கை' என்று எழுதிவிட்டால், 'நீங்க சொல்லிட்டீங்க... டிக்கெட்டையே கிழிச்சு போட்டுட்டேன்' என்று பின்னு£ட்டம் எழுதி டைரக்டரையும் தயாரிப்பாளரையும் அதிர வைக்கிறார்கள் வாசகர்கள்.

இந்த நிலையில் இந்த வலைஞர்களுக்காக தனி ஷோ ஏற்பாடு செய்து புதிய அத்தியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய 'மந்திரப்புன்னகை' படத்தின் பிரத்யேக காட்சி வலைப்பதிவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் திரண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைப்பூ எழுத்தாளர்களை முன்னதாக வந்திருந்து வரவேற்றிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த ஐம்பது பேரில் மிக முக்கியமான ஒருவரும் வந்திருந்தார். அவர்... எழுத்தளார் ஞாநி!

ஓ போடுறாரா பார்க்கலாம்...

www.tamilcinema.com


என்றும் நட்புடன்,
ஆர்.கே.நண்பன்

RK நண்பன்.. said...

குறிப்பாக கேபிள் சங்கர், உண்மை தமிழன், அதிஷா, சிபிசெந்தில்குமார், தண்டோரா, பட்டர்ஃபிளை இன்னும் ஏராளமான வலைஞர்கள் எழுதுகிற விமர்சனங்களுக்கு பதிவுலகத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இவர்கள் ஒரு படத்தை 'மொக்கை' என்று எழுதிவிட்டால், 'நீங்க சொல்லிட்டீங்க... டிக்கெட்டையே கிழிச்சு போட்டுட்டேன்' என்று பின்னு£ட்டம் எழுதி டைரக்டரையும் தயாரிப்பாளரையும் அதிர வைக்கிறார்கள் வாசகர்கள்.

இந்த நிலையில் இந்த வலைஞர்களுக்காக தனி ஷோ ஏற்பாடு செய்து புதிய அத்தியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய 'மந்திரப்புன்னகை' படத்தின் பிரத்யேக காட்சி வலைப்பதிவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் திரண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைப்பூ எழுத்தாளர்களை முன்னதாக வந்திருந்து வரவேற்றிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த ஐம்பது பேரில் மிக முக்கியமான ஒருவரும் வந்திருந்தார். அவர்... எழுத்தளார் ஞாநி!

ஓ போடுறாரா பார்க்கலாம்...

www.tamilcinema.com


என்றும் நட்புடன்,
ஆர்.கே.நண்பன்

Mohan said...

கல்யாணமென்பதே நம்பிக்கையின் பேரில் நடப்பதுதான். ஆனால்,இவருடன் நம்மால் சேர்ந்து வாழமுடியுமா என்ற நம்பிக்கையின்மையில் வரும் 'லிவிங் டுகெதர்' சரியா என்பது தெரியவில்லை. புரிந்து கொள்வதுதான் பிரச்சனை என்றால் காதலர்களாகவே இருந்து விடலாமே!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கு என்னமோ இந்த கலாச்சாரத்தை எதிர்ப்பவர்களில் பாதி பேர் இது நமக்கு வாய்க்கவில்லையே எனும் ஆதங்கத்தினால் தான் என தோணுகிறது.. கவனிக்க நான் பாதி பேர் என தான் சொல்லி இருக்கிறேன் !!! அப்போ மீதி ? சாரி நோ கமெண்ட்ஸ் !!!

ராமுடு said...

I don't know whether our bloggers trying to follow our politicians? They are only culprits tried to refer - "Look at America", "Look at Singapore", Look at Australia - They will make all the reference, without knowing the fact of law, fact of individual capability (at mind level).. Here at America, 40-50% of people able to know how to lead their life. But that kind of education is very very less in india.

When economoy was down in 2007 at world level, only Asian countries able to survive without major issue and India is leading in that. Its only because of Family binding, which inturn creates a mindset of earning for family OR saving for family.. (I m not talking about of saving money for 102nd Generation like our CM). If we start encourage this culture, we will loose our identity and people may read in Text in future - "Once upon a time in Tamilnadu, people lived together for 50 years after marriage".

வானவன் யோகி said...

நண்பர் நிகழ்காலத்தில் சிவா அவர்களின் பதிவைப் படித்துவிட்டு உங்கள் பதிவைப் பார்த்தால்

தலையே சுத்துது.எங்கள் முதுகு தெரியவில்லை என்றாலும்

யாரோ தொரத்தித் தொரத்தி உதைக்கவருவது போல் தோன்றுகிறது.

அம்பி,கலிகாலம் என்னா நாஞ் சொல்றதுண்ணேன்......!!!!

எல்லாம் பகவான் பார்த்திண்டுதான் இருப்பா.......

Ganesan said...

அப்படி யாரும் இருப்பதில்லை ந்ண்பரே.. பெரும்பாலான சேர்ந்து வாழும் தம்பதிகள் பிரிந்த பின்பு இன்னொரு உறவுக்கு தயாராவதில்லை. ஒரு டைவர்ஸியின் மனநிலையில் தான் அவர்களும் வாழ்கிறார்கள். இருவருக்கும் உண்டான மன உளைசச்ல் ஒன்றேதான். பெரும்பாலானவர்கள் நினைக்கும் மாற்றி, மாற்றி வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள் என்று நினைப்பது தான் மன விகாரமாய் இருக்கிறது.



WELL SAID CABLE..

vasu balaji said...

good one cableji:)

shortfilmindia.com said...

//பதிவுத் திருமணத்திலேயே mutual consent in divorce னு பிரியற வழிமுறைகள் சுலபமா இருக்குறப்போ ஏன் பதிவு பண்ண மறுக்கணும்? மனமொத்து வாழ்றவங்க மனமொத்துப் பிரியலாம்ங்கிறதுக்கு லிவிங் டுகெதர் அளவுக்குப் போகவேணாமே! பதிவுத் திருமணம் போதுமே!//

அவன் வாழ்க்கை அவன் வாழ்ந்திட்டு போறான் உங்களுக்கு ஏன்..? இப்படி செய்.. அப்படி செய்யுன்னு..

மோனி said...

பட்டையக் கிளப்பிட்டே சங்கரு :-)
இது .. இது ... இதுதான் பதில் .

தெய்வசுகந்தி said...

///என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை///

அதேதாங்க. நல்லா சொல்லியிருக்கீங்க.

கலகலப்ரியா said...

||சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள்||

இப்டி ஒன்னு இருக்கா... =))

||லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்||

அந்தக் கருமத்த என்னன்னு சொல்றது..

கலகலப்ரியா said...

||இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள்.||

எவ்ளோ மேலோட்டமாக இருக்கிறார்கள்.. :(

கலகலப்ரியா said...

||இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.||

உங்களுக்குத் தமிழ்ப்பட இயக்குனராகும் அடிப்படைத் தகுதி தாராளமாக இருக்கு கேபிள்ஜி...

கலகலப்ரியா said...

||அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..||

இது அன்புமயமான சூழல்.. :).. தமிழ்க்கனவு...

கலகலப்ரியா said...

மொத்தத்ல... நல்ல புரிதல்.. பரந்த மனம்..

Vadivelan said...

Hi Sankar,

I am frequently viewing your blog.. It is one of the good blogs in tamil.

Vadivelan.
http://manage-geospatial.blogspot.com/

Test said...

//என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..
//

Me Too..

வருண் said...

***Blogger புருனோ Bruno said...

//சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லிவிங் டு கெதர் என்பதுதான். //

ஙே ஙே ஙே ஙே !!

பதிவர்களில் யார் இரண்டு பேர் இப்ப சேர்ந்து வாழ்கிறார்கள் ???

2:10 PM***

Nobody answered you YET, Dr. B!!! :))

shortfilmindia.com said...

@jii
அது சரி

@ஜூட்
நன்றி ஜூட்

@சிவகுமார்
அதென்னவோ சரிதான்

@அமுதா கிருஷ்ணன்
யார் சொன்னது மேடம்..காதல் திருமணங்கள், டைவர்ஸுகள் கூட நெருங்கிய உறவினர்களுக்கு கூட தெரியாமல் நடக்கத்தான் செய்கிறது.

2நந்தா ஆண்டாள் மகன்
நன்றி

@

shortfilmindia.com said...

@சில்சம்
நன்றி

@குடாக்கு
நண்பா.. இப்போதுதானே சொன்னேன்.. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழவிடுங்கள் என்று.. :))

2இ.சி.ஆர்
நன்றி

@சிவகாசி மாப்பிள்ளை
ஏன் ஏன் இந்த கொலைவெறி..

shortfilmindia.com said...

@ஜி.ராஜ்மோகன்
ஆமாம்

@சிவகாசி மாப்பிள்ளை
அப்படியா.. அதுக்கு வேற பேருதான்..அதுக்கு பேரு சேர்றதுதான்.. வாழ்றது இல்லை..

@சிவகாசி மாப்பிள்ளை
யோவ்.. அவருதான் சொல்லிட்டாரு இல்லை இளைய தலைமுறைன்னு மறுக்கா திரும்ப திரும்ப என்ன கேள்வி..

shortfilmindia.com said...

@அடங்காபிடாரி
குடாக்கு சொன்னதுடஹன் உங்களுக்கும் பிடாரி.. உங்க பேர் எனக்கு பிடிச்சிருக்கு..

@கே.ஆர்.பிசெந்தில்
அதுச் அரி

@சே.குமார்
ஏன் வரவில்லை குமார்.இவர்கள் யாரும் சமுதாயத்தோடு இணைந்துதான் வாழ்கிறார்களே தவிர.. தனியாக வாழவில்லையே

shortfilmindia.com said...

@சிவகாசி மாப்பிள்ளை
உங்களூக்கு குடாக்கு பதில்தான்..

@புருனோ..
ஐ.. அத நான் சொல்ல மாட்டேனே.. எனக்கு தெரியுமே..?

இம்பார்கான்
சரி நொந்து நொங்கு தின்னும் வீரர்கள் ஏன் இம்மாரல் வாழ்க்கை வாழ்கிறார்கள் இம்பார்கான்

@பலூன் காரன்
உங்க பர்ஷப்ஷன் நல்லாருக்கு

@ஆர்.கே.நண்பன்
நன்றி..

shortfilmindia.com said...

@மோகன்
அதிலும் நம்பிக்கையின்மை இருக்கத்தானே செய்கிறது மோகன்

@குறை ஒன்றும் இல்லை
ஹா..ஹா..

@ராமுடு

எம்.எம்.அப்துல்லா said...

எல்லாரும் அவனவன் பொண்டாட்டியோட லிவிங் டு கேதர்தான். பின்ன என்ன தனித்தனி வீட்லயா வாழ்றோம்??

tamil said...

பிடிச்சு இருந்தா என்ன வேண்டும் என்றாலும் பண்ணலாம் அப்படி தானே....

இன்னும் கொஞ்ச நாளில் பெத்த அம்மா கூட வாழ்ந்தால் பிடிச்சு போயி எல்லாம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று கூட சொல்லுவீங்க போல?

அதை என்னப்பா என்று கேட்டா, இரு மனம் இணைந்து விட்டது, மூக்கை நுழைக்காதீர்கள் என்று சொல்லுவீங்க...

என்னமோ நடத்துங்க

பிடிச்சு இருக்கு என்று சொல்லி கக்கூஸ்-ல கக்கா இருந்து கொண்டே இருந்து சாப்பிடுறவங்க சாப்பிடட்டும்...

நாங்க சமையலறையில் மணக்க மணக்க சாப்பிட்டுக்கிறோம்...

தமிழ் நண்பன்

வருண் said...

இப்போ கணவன் - மனைவி இருக்காங்க. இடையில் ஒரு நயன்ந்தாரா வர்றார். கணவன் இளமையா உள்ள அவளோட உறவுகொள்ளுகிறார்.

இது சட்டப்படி தப்பு. மனைவி இன்ஃபெடிலிட்டி கேஸ் போட்டு அவரிடம் விவாகரத்து வாங்கலாம். அவரிடம் நஷ்ட ஈடு வாங்கலாம்.

"சேர்ந்து வாழ்தல்" போல் வாழ்ந்தாலும், இதுபோல் இன்னொருவருடன் காதல் வந்தால், சட்டப்படி அனுக முடியாதுனு நினைக்கிறேன். ஒருவர் நல்லவராக இருந்தால், கெட்டவர் நல்லவரை ஈஸியா தட்டிவிடலாம்.

சேர்ந்து வாழ்றவங்க எல்லாம் மெச்சூர், நாகரிகமானவங்கனு நினைப்பது படு முட்டாள்த்தனம். இதில் பொறுக்கிகளும் இருக்கலாம். நெறையப்பேருடன் படுக்க விரும்புபவர்கள் இதை ப்ரிஃபெர் பண்ணலாம் இல்லையா

மறுபடியும், கல்யானத்திலும் பொறுக்கி இருக்காங்க. ஆனா சட்டம் உதவும்.

பொண்டாட்டி "போர்" அடிக்கும்போது சேர்ந்து வாழ்ற பெண்ணோ/ஆணோ போர் அடிக்கலாம்தானே?. சேர்ந்து வாழும் உறவுகள் முறிவதால் ஹார்ட் ப்ரோகன் ஆகலாம் என்பதை பலர் கவனிக்க மறுக்கிறாங்க.

சட்டத்துக்காக (பயந்து) சேர்ந்து வாழனுமா? என்பார்கள்!

சட்டத்துக்கு பயந்துதான் நம்ம நெறையா தப்பு செய்யாமல் இருக்கிறோம் என்பது முட்ட்டாளுக்குக்கூட விளங்கும். ஆனா ஒரு சில மேதாவிகள் "இல்லை" நாங்க ரொம்ப சிவிலைஸ்ட்னு வாய்கிழிய பேசுவாங்க!