Posts

Showing posts from December, 2010

Ragada

Image
நாகார்ஜுன், அனுஷ்கா, ப்ரியாமணி என்று நட்சத்திர பட்டாளம், அதிரடியான ஓப்பனிங், குத்து பாடல்கள், ஸ்கின் ஷோக்கள் என்று ஒரு பரபர மசாலாவை இயக்குனர் வீரு போட்லா கொடுத்திருக்கிறார். அது சுவையாக இருந்ததா இலலையா என்று சொல்ல வேண்டுமென்றால் அங்கு தான் பிரச்சனை. நாகார்ஜுன் கடப்பாவிலிருந்து வந்து ஒரு ரவுடி கேங்கில் ஜாயின் செய்கிறான். அவர்களுடன் சேர்ந்து அந்த ரவுடியின் எதிரிகளை தன்னுடய புத்திசாலித்தனமான ஆட்டத்தால் காய் நகர்த்துகிறான் (அப்படித்தான் இயக்குனர் ஃபீல் செய்திருக்கிறார்). அப்போது அங்கே கிட்டத்தட்ட பெண் டானாக இருக்கும் அனுஷ்காவின் காதலில் விழுகிறார். அப்போது திடீரென ப்ரியாமணி அவருடன் வந்து சேருகிறார். நாகார்ஜுனின் காதல் பார்வை அவர் மேல் விழ, ஒரு சுபயோக சுபதினத்தில் ப்ரியாமணி நாகார்ஜுனை வைத்து ஒரு பெரிய அமெளண்டை ஆட்டையை போட்டு விட்டு எஸ்ஸாகிவிட,  அந்த பணம் ஊர் பெரிய தாதாவான பெத்தண்ணாவுடயது. ஏற்கனவே அப்பணத்தை டபுள் கிராஸ் செய்து கொள்ளையடித்த பணத்தைதான் கைப்பற்ற கடத்தியவனை பிடித்து வைத்திருக்க, ப்ரியாமணியின் தில்லாலங்கடியால் அவனை தப்பிக்க வைத்துவிட்டு,  துமபை விட்டு வாலை பிடிக்...

தென்மேற்கு பருவக்காற்று.

Image
கூடல் நகர் சீனு ராமசாமியின் இரண்டாவது படம். எனக்கு அந்த படத்தின் லவ் ட்ராக் ரொம்ப பிடிக்கும். இப்படத்தின் மெயின் லைனும் காதல் தான். ஆடுகளை மேய்ப்பனுக்கும், அதை திருடி பொழைப்பு நடத்தும் கூட்டத்தின் பெண்ணிற்குமான காதல் கதை. லைனில் இருக்கும் காண்ட்ராஸ்டான விஷயமே கொக்கி போடத்தான் செய்கிறது. தன் பட்டியில் ஆடுகளை திருட வரும் கும்பலில் ஒருவரை மடக்கி பார்க்கும் போது அது பெண்ணாக இருக்க, முருகையன் அவளின் முகத்தை பார்த்த கணத்தில் காதலாகிறான். அந்த காதலினால் தன் தாய் வீராயி பார்த்து வைத்திருக்கும் முறைப் பெண்ணையும் விலக்கி வைக்கிறான். களவாணிக் குடும்பத்திலிருந்து நிச்சயம் நான் பெண்ணெடுக்க மாட்டேன் அப்படி மீறி அவளை திருமணம் செய்தால் சங்கரத்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள் வீராயி. முருகையா எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று அவனை கொலை செய்ய முயற்சிக்கிறது களவாணிப் பெண்ணின் அண்ணன் கும்பல். அதனால் அவர்களை போலீஸில் காட்டிக் கொடுக்கிறான் முருகையன்.  மேலும் காண்டாகி சுத்தும்  அவர்களிடமிருந்து காதல் ஜோடி ஜெயித்ததா என்பதுதான் கதை. படத்தின் முக்கிய கேரக்டர் என்றால் அது செழியனின் ஒளிப்பதிவு...

தமிழ் சினிமா-2010-2

Image
ஜூலை அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசபட்டினம், அனந்தபுரத்து வீடு, தில்லாலங்கடி, மற்றும் சில சின்ன படங்கள் வெளியாயின. சன் தொடுப்பில்லாம வெளியான கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி அவரது  சொந்தப்படம். படம் சுமாராக இருந்தாலும் பெரியதாய் செல்ப் எடுக்கவில்லை. ஆர்யா, விஜய் கூட்டணியில் வெளிவந்த மதராச பட்டினம் தான் இம்மாதத்திய பெரிய ஹிட் என்று சொல்ல வேண்டும், படத்தின் கதாநாயகிக்காகவே நிறைய பேர் படம் பார்த்தார்கள். டைட்டானிக்கின் உல்டா என்று சொல்லப்ப்ட்டாலும் சுவாரஸ்யமாக கதை சொல்லப்பட்டதால் வெற்றி நிச்சயமானது. மீண்டும் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ஆனந்தபுரத்துவிடு ஒரு பெரிய தோல்வியை சந்தித்தது. வித்யாசமான பேய் படமாய் அமைந்திருந்தாலும் வெகு ஜன ரசிகர்களை சென்றடையாதது சோகமே. சன் டிவியில் மட்டுமே மாபெரும் வெற்றி என்று சொல்லிக் கொண்ட இந்த வருடத்தின் அடுத்த தோல்வி படம் தில்லாலங்கடி. மதராச பட்டினம் சுமார் பதினான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு சுமார் 20 கோடி வரை வசூல் செய்ததாய் சொல்லப்படுகிறது. ஹிட்: மதராசபட்டிணம் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ஆகஸ்ட் பாண...

கொத்து பரோட்டா-28/12/10

Image
சென்ற வாரம் பல பத்திரிக்கைகளில், இணைய பத்திரிக்கைகளிலும் ஒரு அதிர்ச்சி செய்தி என்று போட்டிருந்தார்கள். அந்த அதிர்ச்சி என்னவென்றால் இயக்குனர் சேரனிடம் உதவியாளராக சேர விருப்பமென்றால் ஐந்து லட்சம் ரூபாய் கட்டிவிட்டு  தன்னுடன் மூன்று படங்களுக்கு வேலை செய்தவுடன் அவர்களுக்கு காண்டேக்ட் சர்டிபிகேட்டோடு பணத்தையும் திரும்பித் தருவார் என்று. என்ன காரணம் என்று கேட்டால் ஒவ்வொரு படத்திற்கு அஸிஸ்டெண்ட் செட்டாகவே மாட்டேனென்கிறதால். நிலையான ஒரு அஸிஸ்டெண்டுக்காகவும், தன்னிடம் உதவியாளர்களாய் இருக்கும் போது அவர்களுக்கும் சினிமா பற்றிய அறிவை முழுக்க தெரிந்து கொள்ள பணம் கட்டி படிப்பது போல பணம் கட்டினால் தான் சரியாக படிக்க  உதவியாக இருக்குமென்று  சொல்லியிருப்பதாக தெரிகிறது. ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டரின் வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டு வந்திருப்பான் என்று சேரனுக்கு தெரியாததில்லை.  அவன் வாழ்நாளில் முதல் ஒரு லட்ச் ரூபாயை முழுசாக பார்பதற்கே ஒரு படம் இயக்கினால் மட்டுமே. சேரன் ஒன்றும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ரவிக்குமாரிடம் அஸிஸ்டெண்டாய் சேரவில்லை. அப்படியிருந்திருந்தால் சேரன் சினிமாவிற்கு வந...

வேரைத்தேடி - கும்பகோணம்

ரெண்டு மூன்று வருடமிருக்கும் குல தெய்வ கோயில் ஊரான கும்பகோணத்துக்கு போய். ரெண்டு வருடம் முன்பு போகவேண்டுமென்று ப்ளான் செய்த போது போக முடியவில்லை. அதற்குபிறகு அப்பாவின் மறைவினால் போகக் கூடதென்று சொன்னதால் இந்த வருடப் பயணம். குழந்தைகளின் விடுமுறையை முன்னிட்டு திடீரென கிளம்ப ப்ளான் செய்தாகிவிட்டது. என் நண்பர்களின் புத்தக வெளியீட்டை மிஸ் செய்துவிட்டு போக வேண்டிய கட்டாயம். அன்றே என் புத்தக விமர்சனமும் கூட நிகழ்ந்தது. வேறு வழியில்லை. விழாக்களும், விமர்சனக் கூட்டமும் சிறப்பாக நடைப் பெற்றது என்றார்கள். பங்கு கொண்டு சிறப்பித்த நண்பர்கள், பதிவர்கள், வாசகர்களுக்கு மிக்க நன்றி. நெடுந்தூர கார் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் திண்டிவனம் ரோட்டில் போவதென்றால் அது ஒருவிதமான எக்ஸ்டஸி என்று கூட சொல்லலாம். மிதமான 80-100ல் அந்த நாற்கர சாலையில் இடதும் வலதுமாய் வேகம் குறைக்காமல் செல்வது மிகவும் உற்சாகத்தை தரும் விஷயம். காலை ஏழு மணிக்கு கிளம்பினேன். நடுவில் சேத்தியாத்தோப்பு போகும் வரை சுமார் 20 கி.மீட்டர் ரோடு அவ்வளவு நன்றாக இல்லை. சாப்பாடு, இயற்கை இம்சை, பையன்களின் அதை வாங்கு, இதை வாங்கு என்ற எல்ல...

புத்தகக் கொண்டாட்டம்

Image
ஆம் கொண்டாட்டம் தான். டிசம்பர் வந்து விட்டால் எப்படி சங்கீத சீசன் ஆரம்பித்துவிடுமோ அது போல புத்தக கண்காட்சியையொட்டி புதிய, பழைய, சமகால எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியாக ஆரம்பித்துவிடும். அவ்வகையில் வலைப்பதிவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அவர்களின் எழுத்து புத்தக வடிவில்  அதிகம் வெளியாவதும் இம்மாதத்தில் தான். அவ்வகையில் இம்மாதம் நம் சக பதிவர்களின் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. சுரேகா மிக இனிமையாக பழக்கக்கூடிய நண்பர். பல விஷயங்கள் அறிந்த சுய புத்திக்காரர். சந்தித்த மறு நிமிட மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் புரிந்துணர்வு கொண்டவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரின் முதல் நூலான “நீங்கதான் சாவி” என்கிற தன்னம்பிக்கை நூலை நாகரத்னா பதிப்பக உரிமையாளரும், பதிவருமாகிய குகன் வெளியிடுகிறார். அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் நேரம் : 4.30 மணி, தேதி:25.12.10 நர்சிம் இவரை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிரபல பதிவர், ஏற்கனவே அய்யனார் கம்மா எனும் சிறுகதை தொகுதி வெளியிட்டவர். தமிழின் பால் ஈடுபாடு கொண்டவர். நல்ல...

மன்மதன் அம்பு

Image
சென்ற வருட வெற்றிப் படமான உன்னைப் போல் ஒருவனுக்கு பிறகு கமலின் அடுத்த படம். மன்மதன் அம்பு. மன்னார், மதன், அம்புஜாக்‌ஷி எனும் மூன்று பேரை குறிக்கும் பெயர் தான் என்றாலும் மன்மதனின் அம்பு பாய்ந்ததில் காதலர்களுக்கிடையே நடக்கும் ஊடலையும், பிரிவையும் பற்றிய  நகைச்சுவை படம் தான். அம்புஜாக்‌ஷி என்கிற நிஷா ஒரு வெற்றி பட நடிகை. அவளுடய காதலனும், வருங்கால கணவனுமாகிய மதன கோபாலுக்கு அவள் மற்ற நடிகர்களிடம் நெருக்கமாய் பழகுவது பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவனுடய அம்மா. அவளுக்கு ஒரு நடிகை தன் மருமகளாய் வருவது பிடிக்கவில்லை. மதன கோபாலின் சந்தேகப் புத்தியினால் அம்புஜாக்‌ஷி என்கிற நிஷா அவனை விட்டு பிரிகிறாள். மூன்று வருடங்களுக்கு பிறகு தன் பள்ளித் தோழியான தீபாவுடன் ஒரு ஹாலிடே டூருக்காக வெனீஸ் வருகிறாள். தீபா ரெண்டு குழந்தைகளுடன் வாழும் டைவர்ஸி.  அம்புஜாக்‌ஷியை பற்றி டிடெக்டிவ் வேலை செய்யச் சொல்லி மன்னார் என்கிற மேஜர் ராஜ மன்னாரை அனுப்புகிறான் மதன கோபால். மன்னார் அவளை பற்றி நல்ல தகவலாய் கொடுக்கிறான். நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்கு நான் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மதன் பணம் தர மறுக...

சினிமா வியாபாரம்-2-4

Image
பகுதி-4 ஆமாம் நண்பர் கொண்டு வந்த செய்தி கொஞ்சம் சந்தோஷம் கொடுக்கத்தான் செய்தது. ஒரு புதிய பட நிறுவனம் தயாரித்த படமொன்றை நண்பர் ஒருவர் வாங்கியிருப்பதாகவும், சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் அலைவதாகவும் சொன்னார். அது முரளி நடித்த மனுநீதி என்கிற படம். இன்றைய பிரபல நடிகராய் இருக்கும் தம்பி ராமையா இயக்கிய படம். மறைந்த நடிகை பிரதிக்யுஷா அறிமுக மான படம் என்றும் நினைக்கிறேன். உடனடியாய் அந்த விநியோக கம்பெனிக்கு போனவுடன், எங்களை வரவேற்றவர், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் சுரத்து குறைந்துவிட்டார். அவர் சொன்னதும் கடைசி காலங்களில் பிட்டு படங்கள் வெளியிட்டதால் முகம் சுளித்தார். அதனால் தான் யோசிக்கிறேன் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவர் கொஞ்சம் பிகு செய்வதாய் தான் தெரிந்தது. என் நண்பரிடமும், வாத்தியாரிடமும் லேசாக சைகை காட்டிவிட்டு.. சரி விடுங்க சார்... என்று கிளம்ப எத்தனித்த போது.. அவர் வாத்தியாரை பார்த்து.. என்ன சார் கோச்சிட்டு போறாரு.. இப்படி கோவப்பட்டா நம்ம தொழிலுக்கு ஆவுமா? உட்காருங்க.. என்றார்.. எனக்கு மனசுக்குள் ஒரு சந்தோஷம் கூத்தாடியது. நான் போட்ட கணக்கு ஒர்க்கவு...

2010- தமிழ் சினிமா-1

Image
பெரிய படத்திற்கு நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்களினால் பெரிய ஓப்பனிங் கிடைத்துவிடும். அட்லீஸ்ட் இரண்டு வாரம் கேரண்டி. அதே சிறிய படங்களை பற்றிய செய்தி மக்களிடம் போய் சேருவதற்கே ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிடும். ஆனால் அப்படி நல்லாருக்கு என்று சொல்லி மக்கள் போய் பார்ப்பதற்குள் திரையரங்கிலிருந்து படம் எடுக்கப்பட்டுவிடுகிறது என்பது மிகப் பெரிய சோகமே. அப்படி ஓரளவுக்கு சுமாரான படங்கள் கூட வந்த சுவடு தெரியாம போன வருடமும் இந்த 2010 தான். ஜனவரி புகைப்படம், ஆயிரத்தில் ஒருவன், நாணயம், குட்டி, போர்களம், தமிழ்படம், கோவா ஆகிய படங்களுடன் இன்னும் சில சின்ன படங்கள் வந்தது. அதில் புகைப்படம் மேக்கிங்கிலும் ஒளிப்பதிவிலும் பேசப்பட்டாலும் பெரிதாக போகவில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் கிரிட்டிக்கலாக நிறைய விவாதிக்கப்பட்டாலும், பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த மாதத்திய சிறந்த ஓப்பனிங் என்று தான் சொல்ல வேண்டும், நாணயம், குட்டி, போன்ற படங்கள் எல்லாம் பெரிதாக பேசப்படவேயில்லை. போர்களம் அதன் மேக்கிங்குக்காக பேசப்பட்டது. கோவா பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி புஸ்ஸானது. இந்த மாதத்திய ஆச்சர்யப்படுத்தும் ஹி...

நில்.. கவனி.. செல்லாதே…

Image
வெண்ணிலாக் கபடிக்குழு படத்தயாரிப்பாளர் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு சின்ன பட்ஜெட் படம். இப்படி வாரம் ஐந்து படங்கள் புற்றீசல் போல வந்துக் கொண்டிருந்தால் படத்தில் அடுத்தடுத்து விழும் சாவு போல படங்களும் விழுந்து கொண்டேத்தானிருக்கும். சம காலத்தில் பெரிதாய் ஒரு ஹாரர் பேஸ்டு த்ரில்லர் படங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது த்ரில்லர் ஜெனரை  தொடுவது கூட இல்லை. அப்படியில்லாமல் இப்படம்.. ஓரளவுக்கு ஆரம்பத்திலிருந்து நல்ல ப்ளோவோடு போவது சந்தோஷமாய் இருந்தது. புதிதாய் ஏதுமில்லை வழக்கமான ஒரு ஆளில்லாத இடத்தில் நான்கு பேர் மாட்டிக் கொள்வது, ஒவ்வொருவராய் சாவது, ஏன்? எது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் கதை.  நண்பர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள். அதில் ஒருவர் காமெடியன், மற்றவர்கள் காதலர்கள். கதையில் இவர்களது காதலுக்கோ… அல்லது இவர்களுக்கோ வீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. வழக்கமான ஆரம்ப பூர்வாங்க காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாம் முடிந்து இண்டர்வெல்லின் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதற்கு அப்புறம் நடக்கும் விஷயங்கள் எல்லாம் வழக்கமாய் ஹ...

Band Baaja Baarat

Image
ரொம்ப நாளாகிவிட்டது I hate Luv storyக்கு பிறகு ஒரு நல்ல ரொமாண்டிக் காமெடி வகை ஃபீல் குட் படம் பார்த்து. ஒரு ஸ்ட்ராங் மைண்டட் பெண்ணுக்கும், இலக்கில்லாமல் அலையும் பையனும் சேர்ந்து ஒரு ”பிஜி”னெஸ் ஆரம்பிக்கிறார்கள். அது என்ன தெரியுமா? வெட்டிங் ப்ளேனர் எனும் திருமண ஏற்பாட்டாளர்கள் தொழில். வெட்டிங் ப்ளானர் என்றதும் நிறைய பேர் உடனே இது அதே பெயரில் வெளிவந்த ஒரு ஆங்கிலப்படத்தின் உட்டாலக்கடி என்று கையை தூக்குவது தெரிகிறது. அலோ.. ப்ளீஸ்.. கொஞ்சம் கையை இறக்குங்கள். இது அதில்லை. ஆங்கில படத்தில் வெட்டிங் ப்ளானர் செய்யும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் காதல் வந்துவிடும். ஆனால் இங்கே வெட்டிங் ப்ளானர் தொழில் செய்யும் இரண்டு பேர் காதலில் விழுகிறார்கள். வேண்டுமானால் இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை கதை மாந்தர் செய்யும் தொழில் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரி கதைக்கு வருவோம் 20 வயது ஸ்ருதி ஒரு ஸ்ட்ராங் மைண்ட் கொண்டவள். ஒரு பெரிய வெட்டிங் ப்ளானர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவள். பிட்டு ஷர்மா ஒர் இலக்கில்லாத, இளைஞன். ஒரு கல்யாணத்தில் ஸ்ருதியை பார்த்துவிட்டு, அவளிடம் இம்பரஸ் ஆகி அவளை நூல் விடும் போ...

கொத்து பரோட்டா-20/12/10

இந்த வார சந்தோஷம் இந்த வாரம் பூராவும் பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப்படவும், விமர்சிக்கப்படவும் போகிற வாரமாய் அமைய இருக்கிறது. வருகிற சனிக்கிழமை நண்பர் பதிவர் சுரேகாவின் “நீங்கதான் சாவி” என்கிற நூலின் வெளியீடும், பரிசல் மற்றும் என்னுடய லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகங்களின் விமர்சனக் கூட்டம், நம் எல்லோருக்கும் தெரிந்த டிஸ்கவரி புக் பேலஸில் 25ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. அடுத்த நாள் 26 ஆன்று நண்பர் நர்சிம், மற்றும் நிலாரசிகன், அகநாழிகை வாசுவின் கவிதை தொகுப்புகள் மவுண்ட் ரோடில் உள்ள எல்.எல்.ஏ. பில்டிங்கில் வெளியாகிறது.  புத்தக விமர்சனக்கூட்டத்தில் ஏற்கனவே படித்த நண்பர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை பற்றி பேசினால் தன்யநாவேன். நம் பதிவுலக நண்பர்கள், வாசகர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு அவர்கள் சார்பாக அழைக்கிறேன். வருக.. வருக… ####################################################### இந்த வார ப்ளாஷ் பேக் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்.. படம் வெளியான போது முகேஷுக்கும் ராஜ்கபூருக்கு பெரும் பாராட்டை பெற்றுத்தந்த பாடல். கேட்டால்...