விருதகிரி
இணையத்தில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் இது அதிலிருந்து எடுத்தது, இதிலிருந்து எடுத்தது என்று சொல்லி டேக்கன் படத்தை சொல்லலாம். ஆனால் விஜயகாந்த் படம் பார்க்க வருபவர்களுக்கு அதெல்லாம் முக்கியமில்லை என்பது அண்ணா தியேட்டரில் கூடியிருந்த ஆல்மோஸ்ட் ஹவுஸ்புல் கூட்டத்தை பார்த்தால் தெரிந்தது.
வழக்கமான விஜயகாந்த படமாகத்தான் ஆரம்பிக்கிறது. கூடுதலாக ரெண்டு லைனுக்கு ஒரு முறை பஞ்ச் டயலாக் பேசி, ஆளும் கட்சியை விமர்சித்து, டைட் க்ளோசப்பில் சிவந்த கண்களுடன் பேசுகிறார். அதையெல்லாம் மீறி வில்லன்கள் கூட சண்டை போடுவதற்கு முன் ஒரு அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக விஜயகாந்த்தின் அரசியல் பார்வையை பற்றியும், அவரது கொள்கைகளை பற்றி அவரை பேச வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள் என்பது போன்ற ஒரு சில இடர்பாடுகளை தவிர, இண்ட்ரஸ்டாக பொழுது போக்க வைத்திருக்கிறார்கள்.
உலக போலீஸெல்லாம் சல்யூட் அடிக்கும் போலீஸ் பெரிய ஆபீஸர் விருதகிரி, ஓப்பனிங் சீனே.. ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இந்தியா போலீஸ் திறமையை காட்டி கலக்கியிருக்கிறார் கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்யும்.. . அந்த ஸ்பிரிங் ஷூ போட்ட் சண்டை நல்ல கற்பனை.. ஆனால் அத்துனை பேரையும் மனுஷன் ஒத்தக்கையிலேயே சமாளித்து பொறி கலங்க வைப்பது அட்டகாச காமெடி. வழக்கமாய் பாகிஸ்தானிய தீவிரவாதியாக இருந்தாலும் தமிழிலேயே பேச வைக்கும் விஜய் காந்த் இப்படத்தின் மூலம் கே டிவி இங்கிலீஷ் டப்பிங் முறையை பயன் படுத்தி, எல்லா வில்லன்களுக்கும் லாஜிக்கலாக தமிழில் டப் செய்துவிட்டிருக்கிறார். சப்டைட்டில் படிப்பதை விட நல்ல தாட்..
என்ன தான் டேக்கன் படத்தை எடுத்தாலும் அதையெல்லாம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரச்சனையோடு இணைத்து, அரவாணிகள், உடல் உறுப்பு திருட்டு, வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் பிரச்சனை என்று எல்லாவற்றையும் கலந்து கட்டியதில் நல்ல சுர்ருன்னு ஏத்தித்தான் விட்டிருக்கிறார்கள். நிஜமாக்வே படத்தின் இரண்டாம் பாகம் படு விறுவிறுப்பு..
ஆஸ்திரேலியா என்று படம் பூராவும் மலேசியாவில் உட்டாலக்கடி அடித்திருப்பது மலேசியா, சிங்கை தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். தனக்கென ஜோடி என்று ஏதுவும் இல்லாமல்.. தன் வயதுக்கேற்ற சரியான ரோலைத்தான் கேப்டன் செலக்ட் செய்திருக்கிறார். கதை திரைக்கதை இயக்கம் செய்த கேப்டன், வசனத்தை மட்டும் வேலுமணி என்பவரின் பெயர் போட்டதற்கு பின் குறிப்பு ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகளில் அந்த உடம்பை வைத்து அலட்டாமல் வெறும் ப்ரேமை ஆட்டியே ஒரு பெரிய பில்டப்பை கொடுத்திருப்பது.. நல்ல ஐடியா…
சுந்தர் சி. பாபுவின் பின்னணியிசையும், பாடல்களும் செம இரைச்சல் இவைகள் இல்லாவிட்டால் இன்னும் சுறுசுறுப்பாக போயிருக்கும் படம். விஜய்காந்த் படம் என்ற எண்ணத்தை தூக்கி வைத்துவிட்டு, படம் பார்த்தால் நிச்சயம் விறுவிறுப்பான படம் தான். Inspite Of Taken
விருதகிரி- ”Taken”
Comments
நானும் பார்த்தேன். பிடித்திருந்தது. நகைச்சுவை இல்லாதது சலிப்படைய வைக்கிறது. (விஜயகாந்த் வந்தாலே நகைச்சுவை தானே என கேட்கப்படாது கண்டியளோ!)
படத்துக்கு சம்பந்தமில்லாமல் இடையிடையே நகைச்சுவையை செருகியிந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் போல் தெரிகிறது.
http://scrazyidiot.blogspot.com
ok.. ok... புரியுது...
Onnume puriyala ulagathile,,ennomo nadakuthu,marmamai irukkuthu...
http://enathupayanangal.blogspot.com
--செங்கோவி
சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை
இதை விட சிறப்பாக கமல் ஒருவரால் மட்டுமே செய்திருக்க முடியும் என்ற அளவுக்கு கேப்டன் பெர்ஃபார்ம் செய்து இருக்கிறார்..
இதை விட விறுவிறுப்பான படம் பார்க்க வேண்டுமானால் மன்மதன் அம்புவரை காத்து இருக்க வேண்டும் (
இனிமேல் இப்படித்தான் பின் ஊட்டம் இட வேண்டும்... சாரு நிகழ்ச்சியில் உங்களை பார்த்தும் பேசவில்லை... சர்ச்சைகளை மனதில் வைத்து, ஆஃபிஸ் ரூமுக்க்கு கூட்டி போய் கும்மு கும்மு என கும்மிவிடுவீர்களோ என பயம் :)
எதை நம்பியாக வேண்டும்?
விஜயகாந்த் இயக்கி இருக்கிறார் என்றா? இல்லை.....
இந்தப் படத்தை இயக்குபவரையும் 'இயக்குனர்' என்றுதான் சொல்வார்கள் என்றா?
போச்...இனி சிரிப்பு போலீச கைலேயே புடிக்க முடியாது....!
விருதகிரி - http://3.ly/dydn
http://kaviyulagam.blogspot.com/2010/12/blog-post_10.html
விருத்தகிரி விளம்பரம் வரவில்லை. உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது ! எங்க கூப்ட்டு வச்சு கும்மி அடிச்சுடுவாங்கலோ அப்படின்னு
ரொம்ப பயந்துகிட்டே படம் படம் பார்க்க போனது மாதிரி தெரியுது தலைவா !
http://grajmohan.blogspot.com
ஏன்னா இந்த பிரபல பத்திரிக்கைக்கரங்களுக்கு கவர் கொடுப்பாங்களே அதனால கேட்டேன்!
ன்னா கோச்சிக்காதிங்க ஆங்!
ரொம்ப நாள் அங்க போடுவாங்க, இங்க போடுவாங்க, அவிய்ங்க போடுவாங்க, இவிய்ங்க போடுவாங்கன்னு பார்த்து, இப்போ நீங்க விமர்சன் போட்டுட்டீங்க..
ஜென்ம சாபல்யம் ஆயிடுச்சு தலைவா..
அதுவும் ரொம்ப அதிசயமா “படம் நல்லா இருக்கு”ன்னு வேற சொல்றீங்க....
இங்க வருமா தெரியாது... இருக்கவே இருக்கு டிவிடி...
Heroine pattthi orrru varthai kuda ezhtulaiya anna
அட..கொடுத்தாத்தான் நல்ல்லாருக்குமே
@இராமசாமி
அட ஆமாமில்லை
@கனாவரோ
நகைச்சுவைக்குத்தான் கேப்டன் இருக்கிறாரே..
aamaa
#தமிழ் அனானி
புரிஞ்சா சரி
@திருமலை கந்தசாமி
அதுக்காக ரெண்டு பேரையும் கம்பேர் பண்றது அடுக்காது சாமி
@செங்கோவி
அதானே..
@ஜி
எதை வேணுமின்னாலும்
@கே.ஆர்.பி.செந்தில்
ஓகே ரைட்
@ரமேஷ்
நன்றி
@பன்னிக்குட்டி ராமசாமி
அட ஆமாங்க..
@ஷண்முகா
எனக்கே ஆச்சர்யமாயிருக்கு
@சாம்ராஜ்யப்ரியன்
ஆமா
@மைந்தன் சிவா
ஆமாம்
@ஜி.ராஜமோகன்
எதுக்கும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து போங்க
@விக்கி உலகம்
பொட்டி கொடுத்தாத்தான் நல்லாருக்குமே..
2கிருஷணா
அதுக்கெல்லாம் படத்தில நேரமே இல்லை
@விகே
நன்றி
@சிவகுமார்
நீங்கள் படம் பார்க்கவில்லை என்று தெரிகிறது. விஜய்காந்த் படத்தையெல்லாம் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது..