Thottal Thodarum

Dec 14, 2010

சித்து +2

siddu 2 தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இயக்குனர் வந்து கோலோச்சுவார்கள். பீம்சிங் படம், ஏ.பி.நாகராஜன் படம், பாலசந்தர் படம், பாரதிராஜா படம் என்றிருந்த காலத்தில் பாக்யராஜ் படமென்றால் ஒரு குதூகலத்தோடு குடும்பம் குடும்பமாய் பார்த்த நாட்களை சினிமாவிற்கு தந்தவர் இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர் என்று பெயர் பெற்ற  இயக்குனர், நடிகர் பாக்யராஜ்.

தன் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்து ஊட்டி எஸ்டேட்டில் பக்கத்து வீட்டில் ஒரு டெலஸ்கோபிக் கன்னை வைத்துவிட்டு, ஊருக்கு போவதாய் ட்ரைனில் கிளம்ப, போலீஸ்காரர் கராத்தே மணி அவரை ட்ரைனில் வைத்து ஊருக்கு போகிறாரா என்று செக் செய்வார். அவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் டிரைனை நிறுத்தி பக்கத்து வீட்டு மாடியேறி, அங்கு பனியில் நினைந்திருக்கும் டெலஸ்கோபிக் கன்னை எடுத்து தன் கர்சீப்பால் இரண்டு வீயு பாயிண்டையும் துடைத்துவிட்டு குறிபார்த்து சுடுவார்.. இது விடியும் வரை காத்திரு படத்தில் வரும் ஒரு காட்சி.
siddu 21 விடியற்காலையில் கிளம்பி கோலம் போடும் பெண்களை சைட் அடிக்கும் போட்டியில் ஒரு பெண்ணை கட்டி பிடித்துவிட்டு வருகிறேன் என்று சபதம் போடுகிறான். கோலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அருகில் போய் நின்றதும், அவள் குய்யோ முறையோ என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டிலிருக்கும் பெரியவர்களை அழைத்து வந்துவிட, திரு திருவென முழித்தபடி அடிவாங்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது.. செத்துப் போன தங்கச்சி என்று அப்பெண்ணை கட்டிப் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து தப்பிப்பார்.. இது இன்று போய் நாளை வா என்ற படத்தில் ஒரு காட்சி.

பஞ்சாயத்தில் ஊரில் ஒரு பெண்ணின் கேரக்டர் மேல் பழி வந்துவிடும், அப்போது அங்கிருக்கும் பெரியவர்களிடம் உங்களுக்கு தெரிந்த பத்தினிகள் பெயர்களை சொல்லுங்க என்று கேட்பார். எல்லோரும் ஆளுக்கொரு பெயரை சொல்வார்கள். அப்போது அவர்களிடம் பத்தினி என்றதும் யார் யார் பெயரையோ சொல்கிறீர்களே..உங்கள்  மனைவியர்கள் எல்லாம் பத்தினிகள் இல்லையா? என்று கேட்பார். இது விதி என்ற படத்தில் அவருக்காக காட்சியை அவரே எழுதி இயக்கியது.

பாரதிராஜா தன் பட ஹீரோவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பார். அப்போது பேசப்படும் டையலாக் சரியாக வராமல் ஷூட்டிங் ப்ரேக் செய்துவிட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துக் கொண்டிருக்கும் பாக்யராஜ், தன் தங்கைகளின் நிலையை நினைத்து, ஒரு டயலாக் பேசுவார். அந்த காட்சியை பார்த்து படத்தில் பாரதிராஜா மட்டுமல்ல மொத்த தியேட்டரே கை தட்டியது. இது தாவணிக்கனவுகள் படத்தில் வரும் காட்சி.

தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு,  அந்த ஏழு நாட்கள் க்ளைமாக்ஸ் என்று சொல்லிக் கொண்டே போக ஏகப்பட்ட படங்கள். அவரின் பெயிலிர் படங்களில் கூட அவருக்கான முத்திரையோடு இருக்கும்.  இப்படி எதையும் வித்யாசமான பார்வையோடு அணுகும் காட்சிகளை கொடுத்த பாக்யராஜ் எழுதி இயக்கிய படமா இது என்று தலையிலடித்துக் கொண்டு பார்க்க வேண்டியிருந்தது சித்து+2வை.

ஆரம்பக் காட்சியிலிருந்தே படுசொதப்பலாக படம் ஆரம்பிக்கிறது. +2வில் ஸ்கூல் பர்ஸ்ட் வரும் பெண்ணுக்கு கம்ப்யூட்டரில் தவறு நேர்ந்துவிட்டது என்று யோசிக்காமல் வீட்டை விட்டு ஒடி வருவாளா? அதுவும் கையில் போன் நம்பரை மட்டுமே வைத்துக் கொண்டு சென்னை வருவாளா? அதற்கு மொட்டை வியாக்கியானம் வேறு ஒரு தோழி மூலமாய். இப்படி பல காட்சிகளில் வியாக்கியானம் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

பாக்ய்ராஜ் போன்ற சிறந்த வசனகர்தாவிடமிருந்து சிறப்பாக வந்திருக்க வேண்டிய படம். ஒரு இளைஞனும், இளைஞியும் +2 பெயில் ஆனதால் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிடுகிறார்கள். சந்தர்ப்ப வசத்தில் இருவரும் சந்திக்க நேருகிறது. அந்த சந்திப்பு நட்பாய் மாறி காதலாய் மாறுகிறது. திடீரென பெண் காணாமல் போகிறாள். அவளை தேடி அவனும் போய் அவளை எப்படி அடைகிறான் என்பதே கதை. இதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் டெக்னாலஜியும், கதை சொல்லும் முறையும் மாறி ரொம்ப நாளாகிவிட்டது என்று அவருக்கு யாராவது சொல்வார்களா? தன் படத்தில் ஒரு காட்சியில் வரும் கேரக்டருக்கு கூட ஒரு டெபனிஷன் வைப்பவர் இவ்வளவு கேர்லெஸ்ஸாக கேரக்டர்களை வடிவமைத்திருப்பது ஏனோ? எல்லா காட்சிகளும் டிவி சீரியலை விட மோசமாக இருக்கிறது. முக்கியமாய்.. அந்த பொருட்காட்சி சீன் இதையெல்லாம் விஜய் காந்த் செய்தே இருபது வருஷமாகிறது. படத்தில் எள்ளவும் காதலே இல்லை.. அப்படியிருந்தால் தானே.. அவர்கள் சேர்வார்களா? மாட்டார்களா? என்று ஒரு அர்வமிருக்கும். அது மட்டுமில்லாமல் கேரிகேச்சர் போன்ற கேரக்டர்கள்.. அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், முறை மாமன், ஹீரோயின் அப்பா, அவரது மாமியார் சீமா.. இவர் ஒரு காட்சியில் என்னடான்னா அரக்க பரக்க தெருவே புழுதி பரக்க நடந்து வராங்க. மத்த காட்சியில் எல்லாம் எப்ப்பப்பாரு வீல் சேருல உக்காந்திருக்காங்க.. மொத சீன்ல ராஜேஷ் க்ளீன் ஷேவ்வுடன் வருகிறார், அடுத்த் காட்சியில் முழு தாடியோடு இருக்கிறார்.. பாக்யராஜ் படம் தான் பார்க்கிறோமா என்று ஒரே அதிர்ச்சியாய் இருக்கிறது.

அதை விட கொடுமை என்னன்னா.. பின்னணியிசை.. லேகா ரத்னகுமார் எனப்வர் வெளிநாட்டு படங்களின் ட்ராக்குளை எடுத்து பின்னணியிசை அமைக்கும் ஒருகம்பெனியை நிறுவியிருக்கிறார். காமெடி சீன் என்றால் சைனீஸ் மீசிக்கும், சீரியஸ் சீனில் பின்னணியில் ஒரு ஓபராவே நடத்துகிறார். ஒரு படத்தின் நிகழ்வுகளை மக்களிடம் கடத்த பின்னணியிசை எவ்வளவு முக்கியம் என்று அறியாதவரா..? இன்றளவிலும் கூட பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தின் இண்டர்வெல் ப்ளாக்கி இளையராஜாவின் பின்னணியிசை கேட்டுப்பாருங்கள்.

படத்தில் கொஞச்மேனும் பாராட்ட வேண்டுமென்றால். சாந்தனுவின் நடனம் மட்டுமே நடிப்பல்ல.. அப்புறம் ஆங்காங்கே தெரியும் பாக்யராஜின் நகைச்சுவை. முக்கியமாய் கதாநாயகி தன் தந்தையை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் போதெல்லாம் முதல் வரியிலேயே தூங்கி விடும் சாந்தனு.. என்று ஆங்காங்கே சில காட்சிகள் மட்டுமே..
சித்து +2- நோ.. அடெம்ப்ட்
கேபிள் சங்கர்
Post a Comment

27 comments:

பிரபல பதிவர் said...

1

பிரபல பதிவர் said...

3

பிரபல பதிவர் said...

4

பெசொவி said...

உண்மைதான். பாக்கியராஜ் படம்னு நினைச்சு எதிர்பார்ப்போட போனா, ஏமாற வேண்டியதுதான்.

பிரபல பதிவர் said...

விருதகிரி பாக்கலையா???

அகமது சுபைர் said...

//இதையெல்லாம் விஜய் காந்த் செய்தே இருபது வருஷமாகிறது//

ஹா ஹா ஹா.... பாக்யராஜின் மற்றுமொரு ஃப்ளாப் :)

பெசொவி said...

@ sivakasi maappillai

ஹலோ நம்பர் கமெண்ட்ஸ் எல்லாம் இந்த ப்ளாகில கூட வர ஆரம்பிச்சுடுச்சா?

test said...

அப்போ அவ்வளவுதானா?

பெசொவி said...

எனக்குப் பிடிச்ச பாக்கியராஜ் பட சீன்களை நீங்களும் சொல்லியிருக்கீங்க! அதுக்காக நன்றி!
(கொஞ்சம் வீடியோவாவே போட்டிருந்தா இன்னும் ரசிசிருப்பேன்)

எஸ்.கே said...

attempt fail?!

CS. Mohan Kumar said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
உண்மைதான். பாக்கியராஜ் படம்னு நினைச்சு எதிர்பார்ப்போட போனா, ஏமாற வேண்டியது தான் //


ஹலோ பெயர் சொல்ல ஏதோ படம் பாத்த மாதிரியே பேசுறீங்க. நீங்க தியேட்டர் போயி எத்தனை வருஷம் ஆகுது!!

bandhu said...

sad to see the movie fail..

கோவி.கண்ணன் said...

//பஞ்சாயத்தில் ஊரில் ஒரு பெண்ணின் கேரக்டர் மேல் பழி வந்துவிடும், அப்போது அங்கிருக்கும் பெரியவர்களிடம் உங்களுக்கு தெரிந்த பத்தினிகள் பெயர்களை சொல்லுங்க என்று கேட்பார். எல்லோரும் ஆளுக்கொரு பெயரை சொல்வார்கள். அப்போது அவர்களிடம் பத்தினி என்றதும் யார் யார் பெயரையோ சொல்கிறீர்களே..உங்கள் மனைவியர்கள் எல்லாம் பத்தினிகள் இல்லையா? என்று கேட்பார். இது விதி என்ற படத்தில் அவருக்காக காட்சியை அவரே எழுதி இயக்கியது.
// அது விதி இல்லை, ரஜினி நடித்த படம் 'நான் சிகப்பு மனிதன்', எஸ் ஏ சந்திரசேகர் இயக்கம், பாக்கியராஜ் கெஸ்ட் ரோல்

Cable சங்கர் said...

இல்லை தலைவரே.. அது விதிதான் என்று என் ஞாபக அடுக்குகள் சொல்கிறது. ஏனென்றால் அதில் தான் அவர் போஸ்ட்மேனாக வந்து சொல்வார்.

செங்கோவி said...

பாக்கியராஜின் வீழ்ச்சியை மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறீர்கள்..நன்றி!

மாணவன் said...

//சித்து +2- நோ.. அடெம்ப்ட்//

ஒகே ரைட்டு...

Ram said...

@ கோவி.கண்ணன்: நானும் அந்த படம் விதி என்று தான் நினைக்கிறேன்.. அதில் கூட இந்த காட்சிக்கு பிறகு அவர் ஒரு பேட்டி அளிப்பார்.. அருமையான காட்சி..

கேபிள் அண்ணா உங்க விமர்சனத்துலயே நீங்க எதிர்பார்த்ததிலிருந்து பயங்கரமா ஏமாந்துட்டீங்கன்னு தெரியுது... உங்களுக்காகவாவது பாக்கியராஜ் இன்னொரு சிறந்த படத்த வெளியிடனும்

Ganesan said...

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புத்தக வெளீயிடு :

http://kaveriganesh.blogspot.com/2010/12/7.html

'பரிவை' சே.குமார் said...

பாக்கியராஜின் வீழ்ச்சியை மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறீர்கள்.

உங்களுக்காகவாவது பாக்கியராஜ் இன்னொரு சிறந்த படத்த வெளியிடனும்.

Ramesh said...

இந்தியாவிலேயே சிறந்த வசனகர்த்தா என்று பெயரெடுத்தவர்... சுமாரான திரைக்கதையில்... ஏன்.. சொதப்பாத திரைக்கதையில் கூட படம் எடுத்த முடியாமல் திணறுவது உண்மையில் வருத்தமளிக்கச் செய்கிறது.. என்ன ஆச்சு அவருக்கு...

அவரோட டார்லிங் டார்லிங் டார்லிங் இன்னும் என்னோட ஃபேவரிட்.. கிளைமேக்ஸ் சீன் (இப்போது அது மொக்கை சீனாகவே ஆகிவிட்டாலும், சின்ன வயசில் பதட்டத்துடன் ரசித்த சீன் அது) எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதுவும் அவரோட அப்பா கேரக்டர் ஒரே அதகளம்தான்.. உண்மையில் அவர்தான் அந்தப் படத்தின் ஹீரோ....

உண்மையில் இந்தப் பதிவை படிக்கும் போது வருத்தமாகவே இருக்கிறது..

ஜி.ராஜ்மோகன் said...

பாக்கியராஜ் ஒரு நல்ல படைப்பாளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த தலைமுறை சினிமாவிற்கு
ஏற்ற மாதிரி அவரால் சிந்திக்க முடியவில்லையோ என்னவோ ! அது சரி விருத்தகிரி அப்படின்னு ஒரு
டப்பிங் படம் வந்திருக்காமே உண்மையா தலைவரே !

Ganesan said...

அந்த படம் விதி தான்.

பெசொவி said...

..மோகன் குமார் said...
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
உண்மைதான். பாக்கியராஜ் படம்னு நினைச்சு எதிர்பார்ப்போட போனா, ஏமாற வேண்டியது தான் //


ஹலோ பெயர் சொல்ல ஏதோ படம் பாத்த மாதிரியே பேசுறீங்க. நீங்க தியேட்டர் போயி எத்தனை வருஷம் ஆகுது!!
//

Public, public!

Thirumalai Kandasami said...

Captain Kalkal ,,Bakkyaraj sothapal..

Onnume puriyala ulagathile,,ennomo nadakuthu,marmamai irukkuthu...


http://enathupayanangal.blogspot.com

Guru said...

@செங்கோவி

இதை வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. ஒரு சறுக்கல் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். நிச்சயம் பாக்யராஜ் ஒரு நல்ல திரைப்படம் தருவார். அவர் பையன் நடிக்கும் படம், சாந்தனுவுக்கு ஒரு பிரேக் வேண்டும் அல்லது சில கமர்சியல் காரணங்களுக்காக சொதப்பியிருக்க கூடும்.

அமர பாரதி said...

//பாக்யராஜ் எழுதி இயக்கிய படமா இது என்று // கிட்டத்தட்ட இதே மாதிரி அவருடைய "வேட்டியை மடிச்சுக் கட்டு" என்ற படமும் இருக்கும். அவருடைய வெற்றிப் படங்களுக்கு அவருடைய அசிஸ்டென்ட்டுகள் காரணமாக இருந்திருக்குமோ?

Ba La said...

கேபிள் சார், நீங்க koodal, viduppu போன்ற வெப்புகளிலும் விமா்சனம் எழுதுகின்றீர்களா? அல்லது அவர்களேதான் “சுட்டுப்” போடுகிறார்களா?