Band Baaja Baarat
வெட்டிங் ப்ளானர் என்றதும் நிறைய பேர் உடனே இது அதே பெயரில் வெளிவந்த ஒரு ஆங்கிலப்படத்தின் உட்டாலக்கடி என்று கையை தூக்குவது தெரிகிறது. அலோ.. ப்ளீஸ்.. கொஞ்சம் கையை இறக்குங்கள். இது அதில்லை. ஆங்கில படத்தில் வெட்டிங் ப்ளானர் செய்யும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் காதல் வந்துவிடும். ஆனால் இங்கே வெட்டிங் ப்ளானர் தொழில் செய்யும் இரண்டு பேர் காதலில் விழுகிறார்கள். வேண்டுமானால் இரண்டு படங்களுக்குமான ஒற்றுமை கதை மாந்தர் செய்யும் தொழில் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சரி கதைக்கு வருவோம் 20 வயது ஸ்ருதி ஒரு ஸ்ட்ராங் மைண்ட் கொண்டவள். ஒரு பெரிய வெட்டிங் ப்ளானர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவள். பிட்டு ஷர்மா ஒர் இலக்கில்லாத, இளைஞன். ஒரு கல்யாணத்தில் ஸ்ருதியை பார்த்துவிட்டு, அவளிடம் இம்பரஸ் ஆகி அவளை நூல் விடும் போது.. அவள் தன்னிடம் இந்த கடலை எல்லாம் வேண்டாம். எனக்கென ஒரு இலக்கு இருக்கிறது என்று முகத்திலடித்தார் போல் சொல்லிவிடுகிறாள். காலேஜ் முடிந்து கிராமத்துக்கு போவதை தவிர்க்க அவளுடன் சேர்ந்து பிஜினெஸ் ஆரம்பிக்க போவதாய் சொல்லி விட்டு அவளிடம் கெஞ்சி கூத்தாடி பார்ட்னராய் சேர்ந்து, ஷாதி முபாரக் என்ற வெட்டிங் ப்ளானர் கம்பெனியை ஆரம்பிக்கிறார்கள். அதன் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாய் காதல் வரை போய் ஒரு சின்ன பிரச்சனையில் பிரிகிறார்கள். அவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா என்பதுதான் கதை.

இது வழக்கமான ரொம்-காம் வகையான படம் தான் என்றாலும். மிகவும் ப்ரெஷ்ஷான திரைக்கதையாலும், அனுஷ்கா ஷர்மா, ரன்வீர்சிங்கின் நடிப்பினாலும் நம்மை கட்டிப் போடுகிறார்கள். யாஷ் சோப்ராவின் கம்பெனியின் தொடர் தோல்விக்கு பிறகு இப்படம் ஒரு ஸ்வீட் ஆக்ஸிஜன் என்றே சொல்ல வேண்டும்.
பிஜினெஸ் ஆரம்பிப்பது என்று முடிவாவதற்கு முன்பு, ஒரு பெரிய வெட்டிங் ப்ளானரிடம் வேலை பார்க்க இரண்டு பேரும் போக, அங்கே அவளுக்கு ஏற்படும் பிரச்சனைக்காக பொங்கி எழுகிறான் ரன்வீர். அப்புறம் என்ன பிஸினெஸ் ஆரம்பித்தாகிவிட்டது. முதல் கஸ்டமரை எங்கே போய் தேடுவது? என்று அலையும் போது ஒரு சாதாரண நடுத்தர குடும்பஸ்தரிடமிருந்து ஆரம்பிகிறது அவர்களது முதல் பயணம். பெரிய வெட்டிங் ப்ளானரிடம் வேலை பார்த்த தான் செய்த தவறினால் பிரச்சனைக்குள்ளானவன் இவர்களுடன் சேர, கொஞ்சம் கொஞ்சமாய் டீம் செட்டாக ஆரம்பிக்கிறது. அதற்கு பிறகு எங்குமே திரும்பி பார்க்க முடியாத வளர்ச்சி. என்ன தான் இருவரும் வேலை காரணமாய் ஒரே ஆபீஸில், கட்டிலில் படுத்திருந்தாலும் அவர்களுக்குள் ஏதுவும் இல்லை என்றுதான் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அனுஷ்கா இம்பரஸ் ஆக, ஆக ரன்வீரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெரிய ஆர்டர் முடித்து செக்கோடு வந்து பார்ட்டி கொண்டாட, பார்ட்டியின் முடிவில் இருவருக்கு உடலுறவு வரை சென்று விடுகிறது. தான் தான் தவறு செய்துவிட்டோம் என்று ரன்வீர் மருக, அவளோ.. தன் காதலை புரிந்து கொள்ளாதவனாய் இருக்கிறானே என்று அவனிடம் தன் காதலை சொல்லாமல் அலைகிறாள்.

இந்த காட்சியில் இருவருக்குமான நடிப்பில் யார் முந்தி என்று போட்டி போடுகிறார். அனுஷ்கா.. ஒரு ஸ்ட்ராங் மைண்டட் இளம் பெண்ணை கண் முன்னே நிறுத்துகிறார். புது முகம் ரன்வீரும் தன் பங்குக்கு மிக இயல்பான பாய் நெக்ஸ்ட் டோர் வகையான, ஒரு துறு,துறு, பையனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆங்காங்கே சிறப்பான வசனங்கள் படத்திற்கு பலம். புதிதாய் தொழில் ஆரம்பிக்க, சமையல்காரனை தேடும் போது குழுவில் உள்ளவர் ஒருவரை அறிமுகம் செய்கிறார். “அவரு புதுசாச்சே..?” என்று யோசிக்கும் ரன்வீரை பார்த்து..” நீ மட்டும் என்ன பழசா...?. புதுசு நீயே அவனை வச்சிக்கலைன்னா.. வேற யாரு வச்சிப்பாங்க.. உன்னை நம்பி அவங்க புதுசுன்னு யோசிக்காம கொடுக்கலை?”. என்பது போன்ற இயல்பான வசனங்கள்.
இயக்குனர் மணீஷ் சர்மா முதல் படத்திலேயே வெற்றியை பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு துணையாய் ஹபீப் பைசலும் தன் பங்கிற்கு ஒரு இண்ட்ரஸ்டிங்கான திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். யாஷ் சோப்ராவுக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு ஹிட்.
Band Baaja Baraat – A Feel Good Rom- Com
கேபிள் சங்கர்
Comments
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
நல்ல பதிவு
----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்