அய்யனார்

775வது பதிவு..
Ayyanar--Stills-022 சொந்த தம்பியை கொலை செய்து புதைத்துவிட்டு மிகவும் கூலாக இருக்கும் ஆதியோடு ஆர்ம்பிக்கிறது படம்.  உயிரிலே கலந்தது படத்தில் அண்ணன் தம்பிக்கிடையே நடக்கும ப்ரச்சனையை வைத்து ஒரு மசாலா படத்தை அளித்திருக்கிறார்கள்.

ஆதி ஒரு வாலிபால் ப்ளேயர். தமிழ் சினிமாவின் அடிப்படை தகுதியான குடி, ரவுடி, குத்து பாட்டு, வெளியில் அலப்பறை என்று முன் சொன்ன விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லாமல் இருப்பவர். அவருடய தம்பி சரவணனோ.. நன்றாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுபவன்.ஒரு டிவி சேனல் கேமராமேன். திக்குவாயன், தான் என்ற அகந்தையும், அவ்வப்போது அண்ணன் ஆதியை போட்டுக் கொடுத்து வீட்டில் நல்ல பெயர் வாங்குபவன்.  என்ன தான் ஆயிரம் சண்டைகள் அண்ணன் தம்பிக்குள் இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது தம்பிக்காக அண்ணன் பழிவாங்குகிறான். ஆனால் கொலைப் பழி அவன் மேல் விழுகிறது.

Ayyanar--Stills-026
படம் மொத்தமும் மூன்று டிராக்குகளில் போகிறது. ஒரு பக்கம் தம்பியின் உடலை புதைத்துவிட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாமல் அடியாளாய் சேர்ந்து கொண்டு சுற்றுவது, ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அரசியல் வாதிகளின் அரசியல் குத்து வெட்டுகள், இன்னொரு பக்கம் ப்ளாஷ்பேக் ட்ராக், காதல், குத்து பாட்டு, குடும்பம் என்று நெஞ்சை நக்கும் செண்டிமெண்டுகள் என்று பரபரப்பாக ஓடுகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் இப்படி கொஞ்சம் ஜிக்ஜாக்காக சொன்னதால் தான் வழக்கமான கதை கொஞ்சம் சுவாரஸ்யப்பட்டது. கடைசி அரை மணி நேரம் பொசுக்கென போய்விட்டது வருத்தமாக இருந்த்து.

ஆதி மிருகம், ஈரம் படத்திற்கு பிறகு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். கொஞ்சம் தூரத்தில் பார்த்தால் நெடிதுயர்ந்த விஷால் போல இருக்கிறார். பர்பாமென்ஸுக்கு பெரிய ஸ்கோப் இல்லாவிட்டாலும் முடிந்த வரை சொதப்பாமல் நடித்திருப்பதே நல்ல விஷயமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் நல்ல வேகம்.  சந்தானம் வழக்கம் போல வந்து கலகலத்துவிட்டு பாதியில் காணாமல் போகிறார்.

கதாநாயகி மீரா நந்தன். பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. ஒரு சில ஆங்கிள்களில் முத்தலாகவும் இன்னொரு பக்கம் துளிராகவும் மிளிர்கிறார். பாடல்கள் பாடுவதற்கும், சில சீன்களை கடத்துவதற்கு மட்டுமே உபயோகப்படுகிறார்.
Ayyanar--Stills-033 தமனின் பாடல்களில் ஏற்கனவே ஆத்தாடி.. ஆத்தாடியும், குத்து குத்து கும்மாங்குத்து பாடல்கள் ஹிட் ரகம்.   ஸ்ரீஸ்ரீராமின் ஒளிப்பதிவு ஓகே.. எழுதி இயக்கியவர் ராஜரத்னம். முடிந்த வரை சுவார்ஸ்யமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார். அண்ணன் தம்பி சண்டைகளினான் முதல் பாதியில் ஆதி கொலை செய்திருப்பாரோ என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு ஆதியின்  செய்ல்களுக்கான காரணங்களை நம்ப வைத்ததே அவருக்கு வெற்றிதான். ரொம்ப யோசித்தால் நிறைய கேள்விகள் தோன்றிக் கொண்டுதானிருக்கிறது.
அய்யனார்-பார்வை கொஞ்சம் ஷார்பாக இருந்திருக்கலாம்
கேபிள் சங்கர்

Comments

க ரா said…
பார்தாச்சுன்னா .... புடிக்கல...
நானும் அதைத்தான் சொல்லிய்ருக்கேன் இராமசாமி..
வினோ said…
பாதி பார்த்தேன் அண்ணா, :(
// 775வது பதிவு.. //

ஆயிரம் பதிவுகண்ட அபூர்வ சிந்தாமணி ஆக வாழ்த்துக்கள்...
// உயிரிலே கலந்தது படத்தில் //

அது சூர்யா - ஜோதிகா நடித்து தோல்வியடைந்த படம்தானே... அந்த படத்தை கூட பார்த்திருக்கிறீர்களா...
// சந்தானம் வழக்கம் போல வந்து கலகலத்துவிட்டு பாதியில் காணாமல் போகிறார். //

ஒரே வரியில் முடித்து விட்டீர்களே... அந்த ஜக்குபாய் கெட்டப் பற்றி...???
//அய்யனார்-பார்வை கொஞ்சம் ஷார்பாக இருந்திருக்கலாம்//

ஓகே ரைட்டு...

775 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
Prabu M said…
//// சந்தானம் வழக்கம் போல வந்து கலகலத்துவிட்டு பாதியில் காணாமல் போகிறார். //

ஒரே வரியில் முடித்து விட்டீர்களே... அந்த ஜக்குபாய் கெட்டப் பற்றி...??? //


I repeat....
நானும் பாத்தேன் எனக்கு உயிரிலே கலந்தது படம்தான் நியாபகம் வந்தது
CS. Mohan Kumar said…
Congrats. Surely you will reach 1000 posts in 2011. Advance wishes for that.
என்ன சார், கதைய சொல்லிடீங்க ..
அப்படியா.. செந்தில் அப்ப கதைய சொல்லுங்க பாப்போம்..:))
Unknown said…
// உயிரிலே கலந்தது படத்தில் //

//அது சூர்யா - ஜோதிகா நடித்து தோல்வியடைந்த படம்தானே... அந்த படத்தை கூட பார்த்திருக்கிறீர்களா..//

அந்த படத்தை விநியோகம் செய்து நஷ்டப்பட்டும் இருக்கிறார் - பார்க்க சினிமா வியாபாரம் ...
Rajan said…
சார், உங்களுக்கு படம் பார்ப்பதை தவிர வேறு வேலை கிடையாதா?
rajan.. ஏன் ஏதாவது வேலை தருகிறீர்களா? ..:))

ஜோக்ஸ் அபார்ட்.. சினிமா தான் என்னுடய வேலையே..
அய்யனார் - அய்யோஆனார்! 775 விரைவில் 1000 தொட வாழ்த்துக்கள்
775 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா....

நானும் கொஞ்சம் தான் பார்த்தேன்.. எனக்கு பிடிக்கல.. மேலே சொன்னதுபோல "உயிரிலே கலந்த" ஞாபகம் வந்தது..
//அய்யனார்-பார்வை கொஞ்சம் ஷார்பாக இருந்திருக்கலாம்//

ஓகே.

775 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா....
775வது பதிவுக்கு வாழ்த்துகள்..இந்த வாரம் விமர்சன மழை பொழிகிறதே!

---செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்
Anonymous said…
தங்களின் 775 வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.சந்தானம் காமெடியில் கலக்கிஇருக்கிறார் ..தமன் இசை நன்றாக இருந்தது ... ஆதி நடிப்பு ok ரகம் ....


மேலும் உங்களுடைய சினிமா சம்பதமான பதிப்புகள் பிரபலம் அடைய எங்களுடைய Filmics.com பதிவு செய்க....
Unknown said…
Boss Congrats. Surely you will reach 1000 posts in 2011. Advance wishes for that.

recently i watch Sunder.C's movie "Nagaram -Marupakkam".
its copy of 'Carlito's Way (1993)' acted by 'Al Pacino'

its a good movie.none of the bloggers mented it.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.