Thottal Thodarum

Dec 17, 2010

கொண்டாட்டங்களும்.. நண்பனின் துரோகமும்.

இதோ ஆரம்பித்துவிட்டது.. இனி தொடர்ந்து பல விழாக்கள் நடைபெற போகிறது. அதற்கு அச்சாரமாய் கொண்ட்டாட்டத்தோடு ஆரம்பித்தது சாருவின்  7 புத்தகங்களின் வெளியீடு. இம்முறை சற்றே பெரிய காமராஜ் அரங்கில். சாரு அரங்கை நிரப்ப அழைத்திருந்தார். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் சாருவை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் பிடிக்காதவர்கள் தான் அதிக அளவில் எனக்கு தெரிந்து ஹாலில் இருந்தார்கள். முதலில் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் போகப் போக நிறைவாகவே இருந்தது. முக்கால் வாசி இடம் நிரம்பியதே அதற்கு சாட்சி. ஆனால் மனுஷ்யபுத்ரன் ஏகத்துக்கும் வருத்தப்பட்டார். குப்பையாய் பாடும் சினிமா பாடல்களுக்கு நிறைய கூட்டமிருப்பதாய் சொன்னார்.. குப்பை எது கோமேதகம் எது என்பது அவரவர் தனிப்பட்ட பர்ஷப்ஷன் என்பது என் எண்ணம்

ஏகப்பட்ட விருந்தினர்கள். ஏ.நடராசன், மதன், கனிமொழி, எஸ்.ரா, மிஷ்கின், ரவிக்குமார், நல்லி செட்டியார், இவர்களுடன் தமிழ்ச்சி தங்க பாண்டியன். நல்லி செட்டியார் மிகவும் நல்லவர். சாருவுக்கெல்லாம் படியளந்த அன்னதாதாவானதினால் அவர் பேச்சை பற்றி பெரிதாக சொல்ல ஏதுமில்லை. இருந்தாலும் அவர் சொன்ன ஜோக் மிக பெரிய தமாஷ். ரவிகுமார் சாருவுக்கு புனைவே எழுத தெரியாது என்றார். ஆனால் கட்டுரைகளில் நிறைய கற்பனையிருக்கும் என்றார். நிறைய ப்ளாஷ்பேக்குகள் சொல்லி எல்லோரும் கைதட்டி முடித்தார். சிறந்த பேச்சு.

அதற்கு முன்னால் சாருவுடய நண்பர்களுக்கு தான் வெளியிட்ட புத்தகத்தின் முதல் பிரதியை கொடுத்தார். அதில் நர்சிம் வாங்கிய புத்தகத்திற்கு என்ன பெயர் என்று வந்திருந்த பதிவர்கள் சொன்னால் சிறப்பாக இருக்கும்.:).

கனிமொழி.. புத்தகத்தை பற்றி பேசாமல் பொதுவாக சாருவுடனான காண்ட்ரடிக்‌ஷனை பற்றி பேசினார். அவருடனான நட்பை பற்றி பேசினார். நஸ்ரத் ஃபதே அலிகான அறிமுகப்படுத்தியதே சாருதான் என்றார். நன்றி ஃபதே அலிகான். ஆ. நடராசன் கையில் பேப்பர் எல்லாம் எடுத்து வைத்து பேச வந்ததால் நிறைய பேர் தம்மடிக்க போய் விட்டார்கள். திரும்ப வந்த போது அவர் சீட்டில் கூட இல்லை. நடுவே வெளியே அவர்கள் கொடுத்த காப்பி நன்றாக இருந்தது விசேஷம். உள் நுழைகையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பாவும், மிக்சரும், தண்ணீர் பாட்டிலும் நிறைவை தந்தது.

மதன் வழக்கம் போல சபையை தன் அநாயசமான இயல்பான பேச்சால் கட்டிப் போட்டார். மிஷ்கினுக்காக நிறைய பாராட்டிவிட்டதாய் குறைபட்டார். வந்தார் மேடையை வென்றார்.. சென்றார். எஸ்.ரா..வின் பேச்சு வழக்கத்தைவிட சுவாரஸ்யமாய் இருந்தது. நிறைய உதாரணங்களோடு நிறைய விஷயங்களை சொன்னார். அந்த ஜி.நாகராஜன் மேட்டர்.. இண்ட்ரஸ்டிங் கேரக்டர்.

கடைசியா மிஷ்கின் பேசினார். முழுக்க, முழுக்க, நந்தலாலாவை பற்றி பேசினார். கொஞ்ச்மே கொஞ்சம் சாருவின் தேகம் பற்றி பேசினார். சரோஜாதேவி புக்கு கெட்டது என்றார். சாருவின் நடிப்பு பற்றி கிண்டலடித்தார். அவரை நடிக்கக் கூடாது என்றார். உணர்ச்சிவசப்பட்டார். அந்த இலக்கிய மேடையை தன் துறை சார்ந்த மேடையாய் ஆக்கிக் கொண்டார்.  சாருவின் விழா மேடை தனக்கான மேடையாகக் கூட உபயோகப்படுத்தலாம் என்று நட்பின் உரிமையில் உயிர்மை மேடை பயன்படுத்திக் கொண்டாரோ மிஷ்கின்?. ஒரு வேளை நட்பினிடையே உள்ள புரிதல் காரணமாய் கூட இருக்கலாமோ..?. சரி விடுங்க.. இரண்டு பேருமே காண்ட்ரவர்ஸியான ஆட்கள் தான். அதனால் நட்பும் அப்படித்தானே இருக்கும்.  நிறைய பேர் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் அந்த ராத்திரி இருட்டில் கரு கும்மென கூலிங் க்ளாஸ் போட்டு தடுக்கி விழாமல் இருப்பதே பெரிய சாதனைதான். படம் பெயிலியர் என்று அவரே சொன்னார். சரி விடுங்க.. ஊர் ஒலகத்தில ஒலக படம்னு சொல்ற பல படங்கள் அவங்க அவங்க ஊர்ல ஓடாத படம்தான்..

சாரு நன்றி சொன்னார்.. செட்டியாரை.. செட்டியார் என்றே அழைத்ததில் அவர்களுக்குண்டான நெருக்கமோ. அல்லது பழக்கமோ தெரிந்தது. ஒருத்தர் விடாமல் நன்றி சொன்னவர், கடைசியாய் ஓடி வந்து தொகுத்தளித்த அழகு தேவதை என்று கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பாராட்டியது.. சரி விடுங்கப்பா.. இதக்கூட செய்யலைன்னா எப்படி?.

ஆ.. சொல்ல மறந்துவிட்டேன் நடுவில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். சாத்தர், மினி ஸ்கர்ட்.. பெரிய ஸ்கர்ட் என்று குறிப்பெல்லாம் எடுத்து வந்து நிறைய நேரம் பேசியதாய் சொன்னார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டேயிருந்தோம். சாருவின் தேகம் வாங்க வேண்டும்.
கேபிள் சங்கர்
Post a Comment

17 comments:

யுவா said...

என்னடா காணோமேன்னு பார்த்தேன். அருமை!

யுவா said...

தங்களின் ஈசன்-க்காக வெய்டிங்.

pichaikaaran said...

நர்சிம் என்ன புத்தகம் வாங்கினார் ? சொல்லுங்க ப்ளீஸ் .

யுவா said...

//பார்வையாளன் said...
நர்சிம் என்ன புத்தகம் வாங்கினார் ? சொல்லுங்க ப்ளீஸ் .//

ச... ச.... சா...

செங்கோவி said...

சுருக்கமாக, அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..நர்சிம் வாங்கியது ‘சரசம்..சல்லாபம்..சாமியார்’தானே?


---செங்கோவி
ஈசன் - விமர்சனம்

iniyavan said...

கேபிள்,

என்ன ஒரு வேகம். கலக்கீட்டிங்க.

செவ்வாய் கிழமை எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தா? வெள்ளிக்கிழமை சாயந்தரம் வருது?

ரொம்ப பிஸியா?

Cable சங்கர் said...

aaMaam ulaganathan annee..

தினேஷ் ராம் said...

நானும் இதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கேனே!!

"மலை முழுங்கிகள்" - http://3.ly/BUET

'பரிவை' சே.குமார் said...

என்ன ஒரு வேகம். கலக்கீட்டிங்க.

crazyidiot said...

nice one..!! hav to buy tat book...

http://scrazyidiot.blogspot.com/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Yuva said...

தங்களின் ஈசன்-க்காக வெய்டிங். ////

ஈசன்-திரை விமர்சனம்

http://sirippupolice.blogspot.com/2010/12/blog-post_17.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கேபிள், அது சாக்கர் இல்லை, சார்த்தர் :)

ஆண்மை குறையேல்.... said...

thala,

ithula nanbanin throgam yaaru? nejama therila...

Cable சங்கர் said...

//கேபிள், அது சாக்கர் இல்லை, சார்த்தர் :)//

சாரி கரெக்ட் பண்ணிட்டே ஜ்யோவ்.. அது சரி கேட்டிருந்தா கரெட்டா தெரியும் பாத்திட்டு தானே இருந்தோம்.. அதான்.. (இல்லாட்டி மட்டும்னு கேக்குறது தெரியுது..ஹி..ஹி)

Unknown said...

நீங்களுமா?...

shortfilmindia.com said...

எதைண்ணே சொல்றீங்க?

Thamira said...

பெண்டிங்லாம் படிச்சாச்சு.. ஆஜர்.!