Thottal Thodarum

Dec 18, 2010

ஈசன்

eesan-movie-stillsதமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம் சசிகுமாரை. தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட படங்களின் வெற்றி அவருக்கு தந்த மகுடம் அது. அவர் இயக்கும்  இரண்டாவது படம் என்கிற போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது  ஒன்றும் ஆச்சர்யமில்லை.. அது தியேட்டர்களில் கூடியிருந்த கூட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம். இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, சசிகுமாரோ நடிக்காத படம்.

eesan-movie-stills-1
கிராமம் சார்ந்த படங்களிலிருந்து  விலகி நகரம் சார்ந்த கதைக்களனை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியே சென்னையின்  டிஸ்கோ பப்பிலிருந்து கிளம்பும் ஒரு பெண்ணை துரத்தி அவள் இறந்து போவதில் ஆரம்பிக்கிறது. முழுக்க, முழுக்க, ஹைஃபை பப் கலாச்சாரம் பழகும் இளைஞர்களை  சுற்றி நடக்கும் கதையாய் ஆரம்பித்து, அரசியல்வாதி, நேர்மையான ஆனால் எதுவும் செய்ய முடியாமல் கையாலாகமல் இருக்கும் போலீஸ், அரசியல்வாதியின் மகன், அரசியல் வாதியின் ஆதிக்க ஆக்ரமிப்புகள், அதற்கான கொலைகள், அரசு அதிகாரியின் அதிகாரம். அரசியல் வாதிகளை உருவாக்கும் பணம் கொழுத்த தொழிலதிபர். அவரின் மகள். அவளுக்கும் அரசியல் வாதி மகனுக்குமான காதல். காதலை அறுக்க தொழிலதிபர் செய்யும் சூழ்ச்சி, அதற்கு அரசியல் வாதி நடத்தும் சைக்கலாஜிக்கல் கேம். காதல் ஓகே என்று எல்லாம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, அரசியல்வாதி மகன் தனியாக கடத்தப்பட்டு ஒரு பெரிய கியர் ஹாண்டிலால் தாக்கப் படுகிறான். யார்ரா நீ என்று கேட்கும் போது ஈசன் என்கிறான். அப்புறம் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க.

டைட்டில் காட்சியில் நம்மை நிமிர உட்கார வைத்தவர்கள்.. அதற்கு பிறகு எழுப்ப முயலவேயில்லை என்பது சோகமே..  மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் சரியான நேரேஷனில் சொல்லியிருந்தால் சும்மா பின்னி பெடலெடுத்திருக்கும். நிச்சயமாய் தமிழ் சினிமாவில் ஒரு கார்பரேட், மற்றும் அரசியல் பொறுக்கித்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட படமாய் அமைந்திருக்கும். ஆனால் அதற்கு பிறகு வரும் காட்சிகள் எல்லாம் வழக்கமான பழி வாங்கும் கதையாய் போய்விட, அட இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சசிகுமார் ரசிகனே என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். எதையோ சுவாரஸ்யமாய் சொல்ல போகிறார்கள் என்று முதல் பாதியை பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. பெரிய ஏமாற்றம்தான்.
eesan-movie-stills-6 ஜேம்ஸ் வசந்தனின் பாடல்களில் நா.முத்துக்குமாரின் வரிகளில் வரும் இந்த இரவுதான் போதுமே போதுமேவும், அந்த தஞ்சை செல்வியின் குத்து பாடலையும் தவிர பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. பின்னணியிசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும் தலைவரே.. ஆனால் டிஸ்கோ பப்புகளில் தமிழ் பாடல் ஒலிபரப்புவது பெரிய ஆச்சர்யம். எனக்கு தெரிந்து வெகு சில இடங்களில் அதுவும் யுவன், ஏ.ஆர். ஆரின் பாடல்கள் மட்டும் விதிவிலக்கு. இதில் ஒரு பப்பில் பின்னணியில் வரும் ராஜாவின் ‘நேத்து ஒருத்தரை ஒருத்தர பாத்தோம்” ரீமிக்ஸ் அட்டகாசம்.

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு, இயக்குனர் நமக்கு சொல்ல நினைத்த உணர்வுகளை முடிந்த வரை நம்மிடம் கடத்த முயற்சி செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அந்த ஓப்பனிங் ஒயின் க்ளாஸில் ஒயின் ஊற்றப்படும் காட்சியும். ஒரு ஏரியல் வைட்டில் போரூர் இடத்தை காட்டும் டாப் ஆங்கிள் ஷாட் என்று பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்.

eesan-movie-stills-11
நிஜமாகவே ஒரு ஹானஸ்ட் மற்றும் கையாலாகத அஸிஸ்டெண்ட் கமிஷனரை சரியாக பிரதிபலித்திருக்கிறார் சமுத்திரகனி. அமைச்சர் தெய்வநாயகமாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். உணர்வுகளை வெளிக்காட்டாமல் குளிர் கண்ணாடிக்குள் யோசிக்கும் அரசியல்வாதி கேரக்டரில் பொருந்துகிறார்.  சரியான இடங்களில் அவர் முகத்தில் உணர்வுகளை நடிப்பாக கொண்டுவர முடியாமல் திணறுகிற பல இடங்களில் கூலிங் கிளாஸ் நன்றாக நடித்திருக்கிறது. அவருடய அல்லக்கையாக வரும் துபாய் ராஜா கலக்குகிறார். முதலமைச்சருக்கு க்ளோசான கலெக்டர், அந்த பிம்ப் நாகராஜ், ரெய்டின் போது நிர்வாண பெண்ணை கடமையாய் வீடியோ எடுக்கும் கான்ஸ்டபிள், என்று நிறைய டீடெயிலிங்கே படத்தின் வேகத்தையும் குறைக்கிறது.

தயாரிப்பாளர் காஜாமைதீன் கமிஷனராக வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸி அபிநயாவின் அப்பாவாக வருகிறார். அவர் வரும் கிராமத்து எபிஸோடில் தேவையிலலாத சுப்ரமணியபுர திருவிழா காட்சிகள் இடிக்கிறது. என்னதான் சாமியாடி ஒரு ஆட்டின் ரத்தத்தை சொட்டு விடாமல் குடிப்பவர் என்றெல்லாம் காட்டி பில்டப் செய்தது எதற்கு?. பின்னால் அவர் எடுக்கும் முடிவுக்குமான காண்ட்ரடிக்ஸனை காட்ட உபயோகப்படுத்த என்றால் சாரி.. அது ஏறவில்லை. அதற்கு பதிலாய் அக்காவை கிண்டல் செய்த மூன்று பேரை அடிக்கும் பையன் மேட்டர் ஓகே.

eesan-movie-stills-12
எழுதி இயக்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் செய்த சசியா? என்று ஒரு ஆச்சர்ய கேள்வி எழத்தான் செய்கிறது. அவ்வளவு திருத்தமான திரைக்கதையும், இயக்கமும் இருக்கும் அப்படத்தில். ஒரு கதை என்றால் அதில் மூன்று நான்கு கோணங்களில் கதை சொன்னாலும் யார் மீதாவது ட்ராவல் ஆக வேண்டும். ஆனால் இப்படத்தில் மிகப் பெரிய குறையே.. அதுதான்.. அராஜக அமைச்சர் மீதும் ஓடவில்லை, இன்னொரு பக்கம் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சங்கையாவின் மீதும் ஓடவில்லை, இப்படி யார் மீதும் ட்ராவல் ஆகாத திரைக்கதையை என்ன காரணத்துக்காக முதல் பாதி முழுவதும் காட்ட வேண்டும். இவர்களை பழிவாங்க வரும் கேரக்டருக்கு ஒரே காட்சியில் சொல்ல முடிந்தவர் தானே நீங்கள்? இவர்களின் கேரக்டர்கள் பற்றி, சுற்றி கதை சொல்லி யார் அமைச்சர் பையனை கடத்தியிருப்பார்கள் என்று ஒரு கேள்வியை போட்டு முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தினால் திடுக்கிடும் திருப்பமாய் இருக்கும் என்று நினைத்தீர்களோ..? சாரி.. இது தானா உங்கள் திடுக் சசி?. முதல் பாதியிலிருந்து தனியாய் துண்டாய் நிற்கிறது இரண்டாம் பாதி.  எப்போது ஒரு அழகான அக்கா, அதிலும் வாய் பேச முடியாத ஊமை என்று காட்டி விட்டீர்களோ.. அப்பவே கதை என்ன என்ன தெரிந்து விடுகிறது.

இவ்வளவு கூட்டமில்லாத, கொஞ்சம் கூட உற்சாகமேயிலலாத பார்களை பப்புகளை எங்கே பாத்திருக்கிறீர்கள் சார்..? எனக்கு தெரிந்து சமீப காலத்தில் ஒரு ரியல் பப் டிஸ்கோ பார்த்தது ஆயுத எழுத்து யாக்கைத்திரியில் மட்டுமே..  இப்படி டிஸ்கோக்களில் சுற்றும் இளைஞர்களை கொஞமேனும் கவனித்திருந்தால் நிச்சயம் அவர்களின்  பாடி லேங்குவேஜுகளை உங்களால் கவனித்திருக்க முடியும். சுண்டக் கஞ்சி காட்சியில் நடிக்கும் நடிகர்களின் உடல் மொழியையும், சாமியாடும் கிராமத்து காட்சிகளில் தெரியும் இயல்புத்தன்மை உள்ளுக்குள் இன்னமும் மதுரைக்காரனாகவே இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. சென்னையின் ஹைஃபை கலாசாரத்தில் மூழ்கியிருக்கும் இடங்கள் இவ்வளவு உற்சாகமிழந்தா காணப்படுகிறது. அரசியல் வாதியின் பலத்தை காட்டும் குற்றச் செயல்  காட்சிகள் கூட மிகவும் மெதுவாகத்தான் செல்கிறது. பையனை காணவில்லை என்றதும் முதல் நாள் கவலைப்படாமல் இருப்பது ஓகே. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் கூட கொஞ்சம் கூட பதட்டமேயில்லாத அப்பாவை.. அதுவும் எல்லா சொத்துக்கும் ஒரே வாரிசான பையனை தொலைத்த அப்பாவை இப்படத்தில்தான் பார்க்கிறேன்.
eesan-movie-stills-2 பாராட்ட வேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் நேர்மையான போலீஸுக்கு இருக்கும் இயலாமை. அரசியல் வாதிகளுக்கு வளைந்து கொடுக்கும் அரசு அதிகாரம். அதே அரசு அதிகாரம் செய்யும் துஷ்பிரயோகம், தொழிலதிபர்களின் கமிஷன். அவர்களுக்காக செய்யும் அரசியல். ஆங்காங்கே நச்சென வரும் வசனங்கள் “ அய்யா.. நாம வேணுமின்னா பணம் சம்பாரிச்சு தொழிலதிபர் ஆயிரலாம். ஆனா அவனுங்க எவ்வளவுதான் சம்பாரிச்சாலும் அரசியல்வாதி ஆக முடியாது.” போலீஸ் விசாரணையின் நுணுக்கங்கள் என்று  ஆங்காங்கே தெரியும் ஒரு சில நல்ல விஷயங்களோடு நல்ல திரைக்கதையும் இருந்திருந்தால் நிச்சயம் மீண்டும் ஒரு ஹிட் படம் கிடைத்திருக்கும்.
ஈசன் – சிவன்.. சொத்து..
கேபிள் சங்கர்
Post a Comment

38 comments:

மணிஜி said...

சும்மா வடைக்காக..:-)))

எம்.எம்.அப்துல்லா said...

// இப்படி டிஸ்கோக்களில் சுற்றும் இளைஞர்களை கொஞமேனும் கவனித்திருந்தால் நிச்சயம் அவர்களின் பாடி லேங்குவேஜுகளை உங்களால் கவனித்திருக்க முடியும்.

//

நம்பர்.10, டவுனிங் வழியாகச் செல்லும்போது அவரை அங்கு பலமுறை பார்த்து இருக்கிறேன். நிச்சயம் அங்க வர்ற போற பசங்க,பொண்ணுங்களை கவனிச்சிருப்பாரு.ஆனா மனசளவில் இன்னும் மதுரையிலேயே இருக்காரு போல.அதான் பிரச்சனை.மீண்டும் தென்மாவட்ட கிராம அல்லது அங்குள்ள நகரப் பிண்ணனியில் வந்தா நிச்சயம் கலக்குவாரு

பனித்துளி சங்கர் said...

தல உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் ஒரு படத்தின் தரத்தை தொடக்கித்திலையே நிர்னைத்து விடுகிறது . இன்னும் படம் பார்க்கவில்லை . விமர்சனம் சிறப்பு .

Unknown said...

கேபிள் உங்க நேர்மை பிடிச்சுருக்கு '
நல்லா இருக்கு விமர்சனம்

ungalsudhar said...

அப்போ..!!! சசிகுமாரும் அடிவாங்கிட்டாரா..?!!

செங்கோவி said...

இந்தப் படத்தில் முதலில் 50 வயது ஆள்தான் ஹீரோ என்று படத்தை ஆரம்பித்தார்கள்..பிறகு நகரம் என பெயர் வைத்து மேல்தட்டு வாழ்க்கையைப் பற்றிய படம் என்றார்கள்..கடைசியில் ஈசன் என பெயர் வைத்து இப்படி எடுத்திருக்கிறார்கள்..ஒருவேளை ஷூட்டிங் போய்விட்டு அப்புறம் கதையை மாற்றினார்களா..உங்க சினிமா நண்பர்களிடம் விசாரிங்களேன்..மற்றபடி ஒய் ப்ளட்..சேம் ப்ளட்!

---செங்கோவி
ஈசன் - விமர்சனம்

guru said...

தெளிவான விமர்சனம்..

நீங்க சொல்றத பார்த்தா, சசிகுமாரின் அடுத்த படத்துக்காக காத்திருக்க வேண்டியதுதானா..? ....

shameer said...

EESAN 1st half directed by SASIKUMAR,2nd half directed by the great S.A.CHANDRASEKAR [who else can make story of RAPE & REVENGE]

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல நடுநிலையான ஒரு விமர்சனம். நன்றி கேபிள் சார்.

Unknown said...

படம் எதாவது ரிலீஸ் ஆச்சுன்னா முதல்ல ஓடி வர்றது உங்க பதிவுக்குத் தான். நல்ல விமர்சனம் once again :-)

Unknown said...

சுப்பிரமணிய(புறம்)னுக்கு அப்பன் ஈசன்... http://theskystudios.blogspot.com/2010/12/english-easan.html

விஜய் மகேந்திரன் said...

நகரத்தின் பப்களின் உற்சாகத்தை சரியாய் படம் பிடிக்கவில்லை...என ட்ரைலர் பார்க்கும்போதே உணர்ந்தேன்.நீங்களும் குறிப்பிடுள்ளிர்கள்.படம் ஏதோ தெரியாத இடத்தில சென்று மாட்டிக்கொண்டுள்ளார் சசி குமார் என்றே பார்த்தவர்கள் சொன்னார்கள்.விமர்சனம் நன்று.

Sivakumar said...

நேற்று சத்யம் அரங்கில் படம் பார்த்தேன். கிளைமாக்ஸ் கொலை காட்சிகள் அரங்கில் படம் பார்த்த மக்களை முகம் சுளிக்க வைத்தது...சங்கர் சார்!

Balaji said...

படம் எதாவது ரிலீஸ் ஆச்சுன்னா முதல்ல ஓடி வர்றது உங்க பதிவுக்குத் தான். நல்ல விமர்சனம் once again :-)

Repeat

thecinemagallery said...

நல்ல விமர்சனம். நானும் ஏமாற்ந்ததில் நானும் ஒருவன்.
www.tamilrange.com
(kollywood,tollywood hot updates)

blogpaandi said...

Great escape by Vikram.

Unknown said...

இதைதான் ஓவர் கான்பிடென்ட் என்கிறார்களோ...

கா.கி said...

என் இன்செப்ஷன் வேலை செஞ்சிருச்சுன்னு எடுத்துக்கலாமா?? நான் நினைச்ச எல்லா விஷயத்தையும் சொல்லிட்டீங்க.. அந்த் பையனோட நடிப்பைப் பத்தி கொஞ்சம் சொல்லிருக்கலாம்...

Ram said...

சுப்ரமணியபுரம் பார்த்தபோதே இவரின் அடுத்த இயக்கத்தை கண்டிப்பாக முதல்நாளே பார்த்திட வேண்டும் என்றிருந்தேன்.. அதன் பின் நடந்த சில பல பிரச்சனைகள் அந்த எண்ணத்தை யோசிக்க வைத்தது.. மேலும், அவரின் பேச்சு மன்னிக்கவும் கொஞ்சம் ஓவராக பேசுகிறது போல் இருந்தது.. மண் மனம் மாறாது ஒரு நல்ல திரைகதை கொண்ட சசியே நான் விரும்பியவர்... இவரில்லை..

karthik said...

Thala, your review is copy pasted in another blog.

http://kavithaiveedhi.blogspot.com/2010/12/blog-post_1784.html

how ppl can do this.

Thx.

Karthik.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

300rs pochu.avvvvvvvvvvvv

tamilcinemablog said...

சசியின் அடுத்த படைப்பு சூப்பர்
http://tamilcinemablog.com

ம.தி.சுதா said...

////இவ்வளவு கூட்டமில்லாத, கொஞ்சம் கூட உற்சாகமேயிலலாத பார்களை பப்புகளை எங்கே பாத்திருக்கிறீர்கள் சார்..?////

இப்படியெல்லாம் கூட இருக்கிறதோ... குடும்பத்தாருடன் சேர்ந்து பார்க்கக் கூடிய மாதிரி இருந்தால் சரி...

Suthershan said...

படத்தின் வன்முறை காட்சிகள் ரொம்ப அதிகம்னு சொல்லுறாங்க.. சசிகுமாரின் அடுத்த படத்தை குடும்பத்தோட பாத்துக்குங்க

Anonymous said...

சசி அண்ணாவும் ஏமாத்திட்டாங்களா? நல்ல படமே நீ வா வா

Unknown said...

இந்தப் படம் ஹேரி ப்ரவுனின் காப்பியா இல்லையா??

அப்பா அரவிந்து உன் பஸ்ஸெல்லாம் புஸ்ஸா?

நையாண்டி நைனா said...

சோர்ந்து போக மாட்டார் எங்கள் அண்ணன் சசி குமார்... வீறு கொண்டு வருவார் மீண்டும்...

Anand said...

Length is the only one biggest problem in this film. If we cut atleast 20 mins from the first half and 15 mins from second half (especially the scenes like Abinaya's death), then this movie will be the biggest hit

ஆண்மை குறையேல்.... said...

athu ellame pub illa. its called private party.. thala ungaluku than therila.vayasayducho?
unga movie varatum pakalam. EASAN super ila..But nalla than iruku.

Cable சங்கர் said...

ஓப்பனிங் சாங் பப்பா.. இல்லை ப்ரைவேட் பார்ட்டியா..? அதன் பிறகு மோக்‌ஷாவில் நடக்கும் விஷயம்.. பாஸ். ப்ரைவேட் பார்ட்டியில் என்ன நடக்கும் எப்படிநடக்கும் என்று உங்களுக்கு வேண்டுமானால் நான் சொல்லித்தருகிறேன். எப்ப போவலாம்..:))

CS. Mohan Kumar said...

Todays Times of India says that the film is good & watchable!!!

Unknown said...

உங்களுடைய விமர்சனம் நல்லாயிருக்குங்க..

சுப்பிரமணிய புரம் ஏற்ப்படுத்திய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாமல் சசிக்குமார் சறுக்கியதில் ரொம்ப வருத்தமே.
ஸ்கோர் செய்த சமுத்திர கனிக்கு வாழ்த்துக்கள்.

மாணவன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

இதைதான் ஓவர் கான்பிடென்ட் என்கிறார்களோ... //

அதேதான் அண்ணே,

சசி படம்ன்னு எதிர்பார்ப்புடன் படம் பார்க்க போனோம் ஏமாற்றிவிட்டார்....

Sami said...

பராசக்தி (கலைஞர்) பாதிப்பு இன்னும் போகல சென்னை மேல அப்படி என்ன கோபம் "கலைஞர் அப்போ இருந்த சென்னைய குறை சொன்னாரு சசி இப்போ இருக்குற சென்னைய குறை
சொல்லுறாரு" இதையும் சேர்ந்து சொல்லறாரு அதுல கல்யாணி , சிவாஜி இதுல அபிராமி , ஈசன்.
இது ஈசன்ல
"நல்லவுங்கள வாழ விடமாட்டங்க"
இது பராசக்தில
"வாழ விட்டார்கள என்ன கல்யாணியை "
என்ன வித்யாசம்

Jagadeeskumar said...

படத்தின் கிளைமாக்ஸின் அதிகபட்ச வன்முறையை கண்டு எனக்கு முன் இருக்கையிலிருந்த நடுத்தற வயது பெண் மயக்கமடைந்தார். மேலும் இப்படத்தின் கதையில் விசில் படத்தின் கதையின் பாதிப்பு உள்ளது என்பது என் கருத்து

karthik said...

pub means goa movie only come to my mind,the pubs shown in easan is very different from real ones

கோவில்பட்டி ராஜ் said...

பப் கலாச்சாரத்தை கடந்து படத்துல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு .இங்க எழுதி இருக்கிற விஷயங்கள் படம் மோசம்னு சொல்ற மாதிரி இருக்கு ...மதுரை காரர் மதுரைய தாண்டி பல விசயங்களை புரிஞ்சு படம் பன்னி இருக்கார்...உங்கள் விமர்சனம் படித்து படம் பாக்க வேண்டாம் என முடிவு செய்து இருந்தேன் .நண்பர் ஒருவர் விருப்பத்திற்காக படம் பார்க்க கூட சென்றேன் .ஆனால் படத்தை நல்ல படியாக ரசிக்க முடிந்தது ...

SIV said...

நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு படம் மோசமில்லை. போரடிக்காமல் செல்கிறது