வெண்ணிலாக் கபடிக்குழு படத்தயாரிப்பாளர் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் மற்றொரு சின்ன பட்ஜெட் படம். இப்படி வாரம் ஐந்து படங்கள் புற்றீசல் போல வந்துக் கொண்டிருந்தால் படத்தில் அடுத்தடுத்து விழும் சாவு போல படங்களும் விழுந்து கொண்டேத்தானிருக்கும்.
சம காலத்தில் பெரிதாய் ஒரு ஹாரர் பேஸ்டு த்ரில்லர் படங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது த்ரில்லர் ஜெனரை தொடுவது கூட இல்லை. அப்படியில்லாமல் இப்படம்.. ஓரளவுக்கு ஆரம்பத்திலிருந்து நல்ல ப்ளோவோடு போவது சந்தோஷமாய் இருந்தது.
புதிதாய் ஏதுமில்லை வழக்கமான ஒரு ஆளில்லாத இடத்தில் நான்கு பேர் மாட்டிக் கொள்வது, ஒவ்வொருவராய் சாவது, ஏன்? எது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் கதை. நண்பர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள். அதில் ஒருவர் காமெடியன், மற்றவர்கள் காதலர்கள். கதையில் இவர்களது காதலுக்கோ… அல்லது இவர்களுக்கோ வீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. வழக்கமான ஆரம்ப பூர்வாங்க காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாம் முடிந்து இண்டர்வெல்லின் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.
அதற்கு அப்புறம் நடக்கும் விஷயங்கள் எல்லாம் வழக்கமாய் ஹாலிவுட் பி கிரேட் சி கிரேட் ஹாரர் படங்களில் பார்த்த அத்தனை விஷயங்களும் தொடர்ந்து வருகிறது. அதே தரத்துடன். எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு பக்கா காரணம் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை அவர்கள் சொல்லும் கதை பொசுக்கென ஆகிவிடுகிறது.
டெக்னிக்கலாய் ஆரம்ப டாப் ஆங்கிள் ரோடு காட்சியிலிருந்து, எல்லா காட்சிகளுமே ஒளிப்பதிவாளர் லஷ்மண் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார். த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின் எதற்காக பாடல்கள். ஒரு வகையில் அவை இப்படத்தின் முதல் பாதியை ஓட்ட பயன்படுகிறது என்றாலும் செல்வ கணேஷின் பாடல்கள் பெரிதாய் சோபிக்கவில்லை. டூர் பாடல் ஒன்று தில் சாதாஹேவில் ஆரம்பித்து ஒரு பழைய் இளையராஜாவின் பாடலில் முடிகிறது. பின்னணியிசையும் ஓகே தான். நடிப்பு என்று பார்த்தால் பெரிதாய் யாரையும் சொல்ல முடியாது. நண்டு ஜெகன் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பெண்ணின் பின்புறம் லாரி ஹெட்லைட்டாய் உருவெடுக்கும் காட்சியை தவிர நகைக்க முடியவில்லை.
நில்…கவனி.. செல்லாதே- போவறதும் போவாததும் உங்க இஷ்டம்.
கேபிள் சங்கர்
Post a Comment
22 comments:
ஹாய் அங்கிள்...
(மிச்சர் இன்னும் வரலை)
வரலாற்று சிறப்புமிக்க முதல் காமெண்ட்.
:)
சுருக்கமான பளீச் விமர்சனம்.
உங்களிடம் தப்பித்தது ஒளிப்பதிவாளர் மதன் குணதேவா மட்டும் தான் .
//இப்படி வாரம் ஐந்து படங்கள் புற்றீசல் போல வந்துக் கொண்டிருந்தால் படத்தில் அடுத்தடுத்து விழும் சாவு போல படங்களும் விழுந்து கொண்டேத்தானிருக்கும்.//
//ஹாய் அங்கிள்...//
ஏதோ உள் குத்து இருக்குதுங்க..
"உண்மையை" அமைதியாக்கிய அவாள், "வயரை" வருத்தப்பட வைத்த நடிகர்- பதிவுலக கிசுகிசு
சகா "தா" அப்படின்னு ஒரு படம் வந்துச்சே படம் நல்ல இருக்குன்னு பரவலா பேச்சு எங்க உங்க பக்கத்தில இருந்து எந்த செய்தியும் இல்லையே..
செல்லாதேன்னு அவங்களே சொன்னப்புறம் நாங்க ஏன் போகப்போறோம்!
----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்
/////நில்…கவனி.. செல்லாதே- போவறதும் போவாததும் உங்க இஷ்டம்////
முன்னமே எல்லாம் பிளான் பண்ணித் தான் செய்யிறாங்களோ....
நின்னுடோம் கவனிச்சுட்டோம் போகமாட்டோம்.
/*நான்கு நண்பர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள். */
அண்ணே... நீங்க எனக்கு கணக்கு டுயூசன் எடுங்க அண்ணே...
/* டூர் பாடல் ஒன்று தில் சாதாஹேவில் ஆரம்பித்து ஒரு பழைய் இளையராஜாவின் முடிகிறது.*/
Ilayaraja-vil. pls change..
நில்,(விமர்சனத்தை) கவனி-செல்லாதே
நான் பாஸ்கர்சக்தி சங்கர்....இந்த படத்தின் ஒளிப்பதிவு ஜெ.லஷ்மண்...(மதன் குணதேவா அல்ல)வெண்ணிலா கபடிக் குழுவுக்கும் லஷ்மண்தான் ஒளிப்பதிவு.
நன்றி பாஸ்கர்சக்தி சார்.. எப்படியிருக்கீங்க..? .. மாத்திட்டேன்..
@pon.karthik
அப்ப நீங்க தா விமர்சனம் படிக்கலையா./
தன்சிகாவிற்காக பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்...
ஹ்ம்ம்ம். பெயரிலயே கலக்கிறாங்க.... செல்வதா. வேணாமானு நாம் முடிவு செய்யலாம்
பட்ஜெட் - சிக்கனம்
ஹாரர் பேஸ்டு த்ரில்லர் - குலைநடுங்கும் திகில்
ப்ளோவோடு - நீரோடை போல்,
சந்தோஷமாய் - மகிழ்ச்சியாய்
காமெடியன் - கோமாளி
இண்டர்வெல்லின் - இடைவேளையின்
முடியல......
எச்சிலைக்கூட குப்பைத் தொட்டியில்தான் துப்ப வேண்டும். தகுதில்லாத இடத்தில் அதைக்கூட துப்பக் கூடாது.
----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-டிச'2010)
அதான் நில் கவனி செல்லாதேனு அவங்களே பேர் வைச்சுட்டாங்களோ?
@அப்பாவி முரு
யாருப்பா அது.. வயசான ஆளா தெரியுது..
@பாரத் பாரதி
நல்ல ஒளிப்பதிவு
@பார்வையாளன்
தேவையில்லாதபதிவு என தோன்றுகிறது நண்பா..
@செங்கோவி
என்னன்னு பாக்க வேணாமா?
@மதி.சுதா
அக்காங்
@பலே பாண்டியா
ரைட்டு
@நையாண்டி நைனா
ஓகேண்ணே
@பாலாஜி
ரைட்டு
@ஷண்முகவேல்
நன்றி
@பிலாசபி பாண்டியன்
தன்சிகா என்ன இருந்து என்ன..?
@அங்கிதா வர்மா
உங்க இஷ்டம்.
@தருதலை
ஏன் முடியலைங்க..? கடைசி பஞ்ச் டைலாக்நல்லாருக்கு..
2அருண்
ஆமாம்’
http://www.imdb.com/title/tt0324216/
Visit the original version.
Post a Comment