Thottal Thodarum

Dec 8, 2010

Butterfly On A Wheel (2007)


Butterfly on a Wheel (2007)48631_f
திடு, திப்பென ஒருவன் காரோட்டும் போது துப்பாக்கியை நெற்றியில் வைத்து, நான் சொன்னபடி செய் இல்லாவிட்டால் உன் குழந்தை காலி என்றால் எப்படி இருக்கும்?. தூக்கி வாரிப் போடாது. அப்படித்தான் தூக்கி வாரிப் போட்டது ராண்டலுக்கும், அவன் மனைவிக்கும்.

butterfly_on_a_wheel_001
நல்ல சந்தோஷமான வாழ்க்கை, இரண்டு வயதில் குட்டி தேவதையாய் ஒரு பெண் குழந்தை, அருமையான கணவன், விரைவில் தன் ஆபீஸில் உயர் நிலை அடைவதை மிகவும் எதிர்பார்த்திருக்கும் ராண்டலின் வாழ்வில் திடீரென ஒரு நாள் சூறாவளி வீசுகிறது. தன் பாஸுடன் வெளியூர் செல்லும் ப்ரோக்ராமுக்கு ராண்டல் கிளம்ப, அவனது மனைவியும் ஒரு பார்ட்டிக்கு கிளம்ப வேண்டியிருப்பதால் ஒரு பேபி சிட்டரை -குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஆளை- ஏஜென்ஸி மூலம் ஏற்பாடு  செய்கிறார்கள். குழந்தையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் பின் சீட்டிலிருக்கும் ஒருவன் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறான். பதிவின் மேற்ச் சொன்ன விஷயத்தை சொல்லி, பயந்து போன இருவரும் அவன் சொல்வதை கேட்கிறார்கள்.

butterfly_on_a_wheel_002
ராண்டலின் அக்கவுண்டில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதை துல்லியமாய் சொல்லும் அவன் எல்லா பணத்தையும் வித்ட்ரா செய்யச் சொல்லி அதை எடுத்து பெட்டியோடு எரித்துவிடுகிறான். அடுத்து அவர்கள் கையில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் காசு, கார்டுகள் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு காஸ்ட்லி பாரில் உட்கார்ந்து, தண்ணியடிப்பதற்கு 300 டாலர்கள் எங்கிருந்தாவது அரை மணி நேரத்திற்குள் வாங்கி வா என்கிறான். கையில் ஒரு பைசா இல்லாமல் ஆளாளுக்கு அலைய.. தன் மோதிரத்தையும், வாட்சையும் விற்று பணம் கொண்டு வருகிறார்கள்.  தன்னை பற்றியோ தன் வாழ்க்கையை பற்றியோ கொஞ்சம் கூட கவலைப்படாத வில்லனான அவனுக்கு என்ன தேவை? எதற்காக இம்மாதிரியெல்லாம் செய்கிறான்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு அதிரடியான பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

butterfly_on_a_wheel_004
படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் படத்தில் கேரக்டர்களுக்கு டென்ஷன் ஏறுவதை போல பார்க்கும் நமக்கும் ஏற்றிவிடுகிறார்கள் டென்ஷனை. பெரிய ஆர்பாட்டமில்லாத, எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிடும் மிருகம் போல இழப்பதற்கு ஒன்றுமில்லை ... என்று மிரட்டும் வில்லன் கேரக்டரில் பியர்ஸ் பிராஸ்னன். மனிதர் பாடி லேங்குவேஜிலும், சின்ன சின்ன பார்வையிலும் அசத்துக்கிறார். ராண்டலாக நடிக்கும் ஜெரார்டு பட்லர் தன்னை ஏன் இப்படி சித்ரவதை செய்கிறான் என்று தெரியாமல் அலறும் காட்சியில் நம்மை பாவப்பட வைக்கிறார். அதே சமயம் தெரிந்தபின் அவரின் நடிப்பில் இருக்கும் கயமை அருமை. அவரின் மனைவியாக வரும் மரியா பெல்லாவின் நடிப்பு க்ளாஸ். க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது டயலாக் டெலிவரியும் பார்வையும் உள்ளுக்குள் ஊடுருவும் நடிப்பு.

2007 ஆம் வெளிவந்த ஹிட்டான கனடிய படம் இது.  இதே படத்தை சென்ற வருடம் மலையாளத்தில் காக்டெயில் என்று ரீமேக்கினார்கள். அதுவும்  ஆவரேஜாக போனதாக செய்தி. நிச்சயம் ஒரு இண்ட்ரஸ்டிங்கான சைக்கலாஜிகல் த்ரில்லர்.

Buttefly On A Wheel – Engrossing Thriller
கேபிள் சங்கர்
Post a Comment

32 comments:

ம.தி.சுதா said...

நிங்க சொல்லறத பார்க்கவே தெரியுது படம் கொஞ்சம் வித்தியாசமானது தான் என்று...

நேசமித்ரன் said...

க்ளாஸ் விமர்சனம்னு சொல்லுவேன் தலைவரே ! இதில் ஒரு 2 வரிக்காக ..

:)

க ரா said...

download started :)

Unknown said...

I have seen the movie... and it was fantastic and the screenplay was superb... enjoyed till the last moment...

மாணவன் said...

அருமையான விமர்சனம் சார்,

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி

pichaikaaran said...

இது போல எழுதுங்கள் . கனிமொழி , வாடா , மன்மதன்அம்பு போன்ற படங்கள் பற்றி உங்கள் நேரத்தையும் ,எங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்

Cable சங்கர் said...

பார்வையாளன் வர வர.நீங்கள் உங்கள் பால்யத்துக்கு திரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். :))

பிராட்வே பையன் said...

எதிர்பாராமல் சந்தித்ததில் மகிழ்ச்சி. வரும் சனி சாயங்காலம் 5 மணிக்குள்
விமர்சனம் எதிர்பார்க்கிர்றேன்.

Cable சங்கர் said...

ungal num anuppunga.. broadway paiya..:))

Cable சங்கர் said...

@நேசமித்ரன்
அண்ணே.. அதென்னன்ணே..??:))

jayaramprakash said...

வணக்கம் ஜி.உங்க ஸ்கிரிப்ட் டோட பட்ஜெட் எவ்வளவுன்னு சொல்லுங்களேன்.என்னிடம் சில யோசனைகள் இருக்கு.

Cable சங்கர் said...

ungal தொலைபேசி எண்ணை கொடுக்க முடியுமா.. ஜெயராம் ப்ரகாஷ்.

jayaramprakash said...

ஊர் கூடி தேர் இழுக்க ஓர் திட்டம்.இந்த திட்டம் வெற்றி பெற்றால் பதிஉலகம் அடுத்த கட்டத்தை அடையும். முயற்சி செய்வோம் வெற்றி நோக்கி.

jayaramprakash said...

என் கைபேசி எண் உங்களுக்கு குறுந்தகவலில் அனுப்பி உள்ளேன் ஜி.

ஜி.ராஜ்மோகன் said...

இதை தமிழில் ரீ மேக் பண்ணா யார ஹீரோவா போடலாம் ! நீங்களே சொல்லுங்க ! நல்ல விமர்சனம் !

jayaramprakash said...

தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி ஜி.

THOPPITHOPPI said...

கேபிள் சங்கர் சார், கொஞ்சம் வெட்டி பேச்சி சித்ரா மேடம் அவர்கள் வீட்டு பக்கத்தில் நடந்ததாக ஒரு தற்கொலை முயற்சி பற்றி எழுதி இருந்தாங்க அத குறும் படமா எடுத்தா கண்டிப்பா பேசப்படும் என்று எனக்கு தோன்றுகிறது அது மட்டும் இல்லாமல் விழிப்புணர்வாகவும் இருக்கும். நேரம் இருந்தா படிச்சி பாருங்க.


வாழ்த்துக்கள்

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

நல்ல விமர்சனம்.. பியர்ஸ் ப்ராஸ்னனுக்காகவே பார்க்கணும்.. சங்கர்..:))

a said...

நல்ல விமர்சனம் தல.......

jayaramprakash said...

வருக!ஆதரவு தருக!! trjprakash.blogspot.com

Thamira said...

யோவ் லூசு.. புது படத்துக்கு சரி, கிளைமாக்ஸ் சொல்லவேண்டாம். பழைய படத்துக்கு இந்த மாதிரி சஸ்பென்ஸெல்லாம் வைக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஒரு வேலை படம் பாக்காம போனாலும் அந்தக் கதையோட முடிவு என்னன்னு தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்ல..

தன்னாலயும் தெரியாது, சொன்னாலும் புரியாது.. உம்மையெல்லாம்..

அப்புறம் அதென்ன 'திடு, திப்பு'? அது 'திடுதிப்பென'. வைக்கவேண்டிய இடத்துலயெல்லாம் கமா, புல்ஸ்டாப் வைக்கிறதில்ல. வேற எங்கனயாச்சும் வைக்குறது.!

pichaikaaran said...

ஆங்கில படங்களில் விறுவிறுப்பான , புரியும்படியான படங்களுக்கு விருது கொடுக்கிறார்கள்..

தமிழில், ஓடாத, பார்க்கமுடியாத , மேக் அப்பை நம்பி வாழும் நடிகர்கள் படத்திற்கு விருது கொடுக்கிறார்கள்..

இந்த இருவேறு இயல்பு ஏன் ?

Cable சங்கர் said...

அதுக்கு மொதல்ல படம் பாக்க கத்துக்கங்க.. அப்புறம் புரியும் எது நல்ல படம்? எந்த படத்துக்கு விருது கொடுப்பாங்க/ கொடுக்குறாங்கன்னு..? :))

pichaikaaran said...

fugitive னு ஒரு படம் ஒரு காலத்துல பார்த்தேன்...

விறுவிறுப்பா இருந்துச்சு,,, அது தமிழில் வந்தால் அவார்ட் கிடைத்து இருக்காது..’
ஆனால் அதில் நடித்தவர்களுக்கு அவ்ர்ட் கிடைத்து இருக்கு..

நம்ம ஊர்ல, மணிரத்னம் தான் டைரக்டர், கமல்தான் நடிகர், மேக் அப் போடுவதுதான் நடிப்பு, சோகம்தான் படம் அப்படீனு ஒரு எண்ணம் இருக்கு நு நினைக்கிறேன்..

உங்க கருத்து ?

pichaikaaran said...

பாஸ்,
ஜெயமோகன் பாணில படம் பார்க்க பயிற்சி வேனும்னு சொல்லாதீங்க...

சாதாரண ரசிகனா , எனக்கு பிடித்து இருக்கும் ஆங்கில படங்களுக்கு விருது கிடைக்குது...
ஆனால் தமிழில் எனக்கு பிடித்த படங்களுக்கு பாமரர்களின் படம் என ஒதுக்கப்படுது...
அதைதான் நான் சுட்டி காட்டுறேன்

Cable சங்கர் said...

எனக்கு ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகள் சொன்னதை பற்றி தெரியாது.. நீங்கள் வெளியே வந்து படம் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் இன்னும் ரஜினி கமல் மாயையிலிருந்து வராததால் அதே கம்பேரிசனில் இருக்கிறீர்கள். மேலும் அதை தாண்டி வாருங்கள். இங்கே பின்னூட்டம் இடுவதை விட நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ.. பேசுவோம். அப்போது நீங்கள் சுட்டிக் காட்டியது.. சரியா இல்லையா என்று தெரியும்.. மேக்க்ப பற்றி பேசும் நீங்கள் சேம் சைட் கோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் அறியாமல் செய்கிறீர்கள். ஸோ.. இனி என் விளக்கமெல்லாம் நேரிலோ, அல்லது போனிலோ தான் நண்பரே.. நன்றி..:))

ரமேஷ் கார்த்திகேயன் said...
This comment has been removed by the author.
ரமேஷ் கார்த்திகேயன் said...

last week yetho chanel intha padam pottan pathi thaan pathen.

a amalraaj said...

GOOD

அப்பாதுரை said...

சாதா ஜானி டெப் நடிச்சு பல்டியடிச்ச கதையை மறுபடி எடுத்து வெளியிட்டிருக்காங்க போல. கொஞ்சம் டப்பா படம் தான் சார் - மன்னிச்சுக்குங்க. இதை மலையாளத்துல வெளியிட்டாங்களா - பார்க்கணும்னு தோணுது. ஆதிமூலகிருஷ்ணனின் பின்னூட்டம் டாப்ஸ்.

Anonymous said...

awesome post.this is a fantastic work.i like it so much,so thanx.