Butterfly On A Wheel (2007)
திடு, திப்பென ஒருவன் காரோட்டும் போது துப்பாக்கியை நெற்றியில் வைத்து, நான் சொன்னபடி செய் இல்லாவிட்டால் உன் குழந்தை காலி என்றால் எப்படி இருக்கும்?. தூக்கி வாரிப் போடாது. அப்படித்தான் தூக்கி வாரிப் போட்டது ராண்டலுக்கும், அவன் மனைவிக்கும்.
நல்ல சந்தோஷமான வாழ்க்கை, இரண்டு வயதில் குட்டி தேவதையாய் ஒரு பெண் குழந்தை, அருமையான கணவன், விரைவில் தன் ஆபீஸில் உயர் நிலை அடைவதை மிகவும் எதிர்பார்த்திருக்கும் ராண்டலின் வாழ்வில் திடீரென ஒரு நாள் சூறாவளி வீசுகிறது. தன் பாஸுடன் வெளியூர் செல்லும் ப்ரோக்ராமுக்கு ராண்டல் கிளம்ப, அவனது மனைவியும் ஒரு பார்ட்டிக்கு கிளம்ப வேண்டியிருப்பதால் ஒரு பேபி சிட்டரை -குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஆளை- ஏஜென்ஸி மூலம் ஏற்பாடு செய்கிறார்கள். குழந்தையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் பின் சீட்டிலிருக்கும் ஒருவன் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறான். பதிவின் மேற்ச் சொன்ன விஷயத்தை சொல்லி, பயந்து போன இருவரும் அவன் சொல்வதை கேட்கிறார்கள்.
ராண்டலின் அக்கவுண்டில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதை துல்லியமாய் சொல்லும் அவன் எல்லா பணத்தையும் வித்ட்ரா செய்யச் சொல்லி அதை எடுத்து பெட்டியோடு எரித்துவிடுகிறான். அடுத்து அவர்கள் கையில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் காசு, கார்டுகள் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு காஸ்ட்லி பாரில் உட்கார்ந்து, தண்ணியடிப்பதற்கு 300 டாலர்கள் எங்கிருந்தாவது அரை மணி நேரத்திற்குள் வாங்கி வா என்கிறான். கையில் ஒரு பைசா இல்லாமல் ஆளாளுக்கு அலைய.. தன் மோதிரத்தையும், வாட்சையும் விற்று பணம் கொண்டு வருகிறார்கள். தன்னை பற்றியோ தன் வாழ்க்கையை பற்றியோ கொஞ்சம் கூட கவலைப்படாத வில்லனான அவனுக்கு என்ன தேவை? எதற்காக இம்மாதிரியெல்லாம் செய்கிறான்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு அதிரடியான பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் படத்தில் கேரக்டர்களுக்கு டென்ஷன் ஏறுவதை போல பார்க்கும் நமக்கும் ஏற்றிவிடுகிறார்கள் டென்ஷனை. பெரிய ஆர்பாட்டமில்லாத, எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிடும் மிருகம் போல இழப்பதற்கு ஒன்றுமில்லை ... என்று மிரட்டும் வில்லன் கேரக்டரில் பியர்ஸ் பிராஸ்னன். மனிதர் பாடி லேங்குவேஜிலும், சின்ன சின்ன பார்வையிலும் அசத்துக்கிறார். ராண்டலாக நடிக்கும் ஜெரார்டு பட்லர் தன்னை ஏன் இப்படி சித்ரவதை செய்கிறான் என்று தெரியாமல் அலறும் காட்சியில் நம்மை பாவப்பட வைக்கிறார். அதே சமயம் தெரிந்தபின் அவரின் நடிப்பில் இருக்கும் கயமை அருமை. அவரின் மனைவியாக வரும் மரியா பெல்லாவின் நடிப்பு க்ளாஸ். க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது டயலாக் டெலிவரியும் பார்வையும் உள்ளுக்குள் ஊடுருவும் நடிப்பு.
2007 ஆம் வெளிவந்த ஹிட்டான கனடிய படம் இது. இதே படத்தை சென்ற வருடம் மலையாளத்தில் காக்டெயில் என்று ரீமேக்கினார்கள். அதுவும் ஆவரேஜாக போனதாக செய்தி. நிச்சயம் ஒரு இண்ட்ரஸ்டிங்கான சைக்கலாஜிகல் த்ரில்லர்.
Buttefly On A Wheel – Engrossing Thriller
Comments
:)
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி
விமர்சனம் எதிர்பார்க்கிர்றேன்.
அண்ணே.. அதென்னன்ணே..??:))
வாழ்த்துக்கள்
தன்னாலயும் தெரியாது, சொன்னாலும் புரியாது.. உம்மையெல்லாம்..
அப்புறம் அதென்ன 'திடு, திப்பு'? அது 'திடுதிப்பென'. வைக்கவேண்டிய இடத்துலயெல்லாம் கமா, புல்ஸ்டாப் வைக்கிறதில்ல. வேற எங்கனயாச்சும் வைக்குறது.!
தமிழில், ஓடாத, பார்க்கமுடியாத , மேக் அப்பை நம்பி வாழும் நடிகர்கள் படத்திற்கு விருது கொடுக்கிறார்கள்..
இந்த இருவேறு இயல்பு ஏன் ?
விறுவிறுப்பா இருந்துச்சு,,, அது தமிழில் வந்தால் அவார்ட் கிடைத்து இருக்காது..’
ஆனால் அதில் நடித்தவர்களுக்கு அவ்ர்ட் கிடைத்து இருக்கு..
நம்ம ஊர்ல, மணிரத்னம் தான் டைரக்டர், கமல்தான் நடிகர், மேக் அப் போடுவதுதான் நடிப்பு, சோகம்தான் படம் அப்படீனு ஒரு எண்ணம் இருக்கு நு நினைக்கிறேன்..
உங்க கருத்து ?
ஜெயமோகன் பாணில படம் பார்க்க பயிற்சி வேனும்னு சொல்லாதீங்க...
சாதாரண ரசிகனா , எனக்கு பிடித்து இருக்கும் ஆங்கில படங்களுக்கு விருது கிடைக்குது...
ஆனால் தமிழில் எனக்கு பிடித்த படங்களுக்கு பாமரர்களின் படம் என ஒதுக்கப்படுது...
அதைதான் நான் சுட்டி காட்டுறேன்