Nagavalli

Nagavalli_Movie_Wallpapers சந்திரமுகியின் வெற்றிக்கு பின் பி.வாசு அதே கண்டெண்டை வைத்து கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து எடுத்த படம் ஆப்த மித்ரா..  மனுஷன் படம் வெளியாவதற்கு முன் இறந்துவிட.. படம் சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படமாய் போனதால் ஹிட்டோ ஹிட்டென ஓடியது வரலாறு. அதே கதையை திரும்பவும் ரஜினிக்கு போட்டுக் காட்டி செகண்ட் பார்ட் சந்திரமுகி எடுக்கிறேன் என்று பிட்டை போட ரஜினி எஸ்கேப்பானது கடவுள் அருள்.

nagavalli-7
தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க வந்து 25வது வருடம் நடக்கும் இந்நாளில் சந்திரமுகி பேய் வாசு ரூபத்தில் பிடித்தது அவரது கெட்ட நேரமாய் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே சவுத் இந்தியாவிலேயே பெரிய ஹிட் படமான சந்திரமுகியை அதுவும் தெலுங்கில் கூட சூப்பர் ஹிட்டான சந்திரமுகியை நாகவல்லி என்கிற பெயரில் திரும்பவும் ரீமேக்கும் படத்தில் நடிப்பாரா..?
பெரிய பணக்காரரான சரத்பாபுவின் வீட்டில் இரண்டு சாவு விழுந்துவிட, அதை பற்றி விவரம் தெரிய ஒரிஜினல் சந்திரமுகி சாமியார் இவர் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கெலலாம் காரணம் அவரது மூத்த மகள் கமலினி முகர்ஜி கொண்டு வந்த சந்திரமுகி படம் தான் என்கிறார். சந்திரமுகியின் பேய் இவ்வீட்டில் இருப்பதாகவும் அதை கண்டு பிடிக்க இரண்டே பேர் தான் இந்தியாவில் இருப்பதாகவும் அதில் ஒருவர் சந்திரமுகி ரஜினி, இரண்டாவது அவரது அஸிஸ்டெண்ட் வெங்கடேஷ் என்கிறார். அதற்கப்புறம் எல்லாமே சந்திரமுகியில் ரஜினி அறிமுகம் ஆகும் பில்டப்பாட்டிலிருந்து, வடிவேலு, நாசர், மாள்விகா, என்று எல்லா கேரக்டர்களும் பெயர் மற்றும் மாற்றிக் கொண்டு வேறு நடிகர்கள் நடிக்க நாகவல்லியாக வந்திருக்கிறது.

இதில் ஒரு மாற்றம் என்னவென்றால் வேட்டையான ரஜினி செய்த ரோலை மீண்டும் அதே போல கொஞ்சம் எக்ஸ்டெண்டட் வர்ஷனாக வெங்கடேஷ் செய்திருக்கிறார். அது தவிர.. நூறு வயசுக்கு மேல் வாழும் வேட்டையனாக படு யூத்தான கெட்டப்பில் சும்மா பறந்து, பற்ந்து வேறு அடிக்கிறார் கிழவன் வெங்கடேஷ்.  இந்த கிழவன் எபிஸோடை தவிர படத்தில் ஒன்றுமில்லை.. அது மட்டுமில்லாமல் வெங்கடேஷுக்கு ஜோடியில்லை. மற்றவையெல்லாம் அப்படியே சந்திரமுகி.

nagavalli-5
ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தபின் அடுத்த படம் செய்யும் போது படு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய நேரத்தில் ஒரு சூப்பர் ஹிட்படத்தின் செகண்ட் பார்ட் எடுக்கும் போது எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். பி.வாசுவுக்கு அது தெரியவில்லையா.? அல்லது இது போதும் என்றிருந்துவிட்டாரா..?

வெங்கடேஷின் டாக்டர் கேரக்டர் ஓகே.. ஆனால் அந்த வேட்டையன் கேரக்டரிலும் கூட கொஞ்சம் ஓகே தான்.. ஆனால் அந்த நூறு வயசு கிழவன் கேரக்டர் படு கொடுமை.  ரஜினியின் பத்து நிமிஷ அதிரடி எவ்வளவு இம்பாக்டை கொடுத்தது என்பது இப்படத்தை பார்த்தால் தெரியும். கொஞ்சமே வ்ந்தாலும் தலைவி அனுஷ்கா.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்கககாகாகாகா… ம்ஹும். கமலினி முகர்ஜியும் ஓகே. பிரம்மானந்தம் ஏதோ ஆங்காங்கே கலகலக்க வைக்கிறார். பார்த்திபன் வடிவேலு, டயலாக் மேட்டரையெல்லாம் இதில் சேர்த்திருக்கிறார்கள்.

குருகிரணின் இசையும் பெரிய லெட்டவுன் தான். சந்திரமுகி படத்தில் கடைசி பாட்டு தெலுங்கில் வரும். ஆனால் தெலுங்கு சந்திரமுகியில் தமிழ் பாட்டு வரும் அப்பாட்டை இப்படத்தில் கேட்க விரும்புகிறவர்கள் போய் வேண்டுமானால் படம் பார்க்கலாம். வழக்கப்படி ஒளிப்பதிவு எல்லாம் ஓகேதான். இயக்குனர் தான் சொதப்பிவிட்டார். ஏற்கனவே இருப்பது போதாதென்று அருந்ததியை வேறு உட்டாலக்கடி செய்து இன்னும் கொடுமையாக்கியிருக்கிறார் திரைக்கதையை. விரைவில் யாராவது இவரிடம் பிடித்திருக்கும் சந்திரமுகி பேயை விரட்டி பல ஹீரோக்களை காப்பாற்ற வேண்டும்.

Nagavalli- Better to watch Chandramukhi and Arundhadhi in dvd
கேபிள் சங்கர்

Comments

test said…
//விரைவில் யாராவது இவரிடம் பிடித்திருக்கும் சந்திரமுகி பேயை விரட்டி பல ஹீரோக்களை காப்பாற்ற வேண்டும்//
Super boss! :-)
test said…
//சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படமாய் போனதால் ஹிட்டோ ஹிட்டென ஓடியது வரலாறு//

அதாலதான் ஒடிச்சா? நானும் நல்ல படமோன்னு....!:-)

//அதே கதையை திரும்பவும் ரஜினிக்கு போட்டுக் காட்டி செகண்ட் பார்ட் சந்திரமுகி எடுக்கிறேன் என்று பிட்டை போட ரஜினி எஸ்கேப்பானது கடவுள் அருள்//

நாங்களும் எஸ்கேப்!! :-)
க ரா said…
கமலினியோட ஒரு போட்டோவ போட்ருகலாம்ல ... உங்கள சுந்தர்.சீ யோட வாடா படத்த தனியா ஒரு நூறுதடவ பாக்க விடனும் இதுக்கு தணடனையா :)
Mohan said…
//சந்திரமுகியின் வெற்றிக்கு பின் பி.வாசு அதே கண்டெண்டை வைத்து கன்னத்தில் விஷ்ணுவர்தனை வைத்து எடுத்த படம் ஆப்த மித்ரா.//

முதலில் ஆப்தமித்ரா(கன்னடம்) வந்தது. அதன் ரீமேக்குதான் சந்திரமுகி.பின் ஆப்தரக்சகா(கன்னடம்),இப்போது அதன் ரீமேக்காக நாகவல்லி(தெலுங்கு) வந்துள்ளது.

ஆப்தரக்சகா படம் உண்மையிலேயே(சந்திரமுகியை விட) நன்றாக இருந்தது.விஷ்ணுவர்த்தனுக்கு மூன்று வேடங்களுமே நன்றாகவே பொருந்தியிருந்தது.இந்தப் படத்திற்கு வெங்கடேஷ் ஒரு தப்பான தேர்வு.
என்னதான் மூன்று கேரக்டர்களும் விஷ்ணுவுக்கு நன்றாக இருந்தாலும் கூட சந்திரமுகியையும், அருந்ததியையும் மீண்டும் அதே காட்சிகளை வேறு நடிகர்கள் நடித்து பார்ப்பது டிவிடி பார்பது போல் இருக்கிறது.
VISA said…
யாரு?
பி.வாசு?
அந்தாளு இன்னும் படம் எடுத்துகிட்டு இருக்கானா. எவ்வளவு துணிச்சல்?
விமர்சனம் எழுதி, பி.வாசுவை பிடிச்ச சந்திரமுகி பேயை விரட்டு விரட்டுன்னு விரட்டுறீங்களே! இதை வாசு படிச்சாலே போதும்.

----செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்
இந்த பேய் தொல்லை, பெரும் தொல்லை.

http://enathupayanangal.blogspot.com
//சந்திரமுகியின் வெற்றிக்கு பின் பி.வாசு அதே கண்டெண்டை வைத்து // நீங்களே இப்படி சொன்னா எப்படி. ஒரு வார்த்தை கூட ஒரிஜினலான மணிச் சித்திரத்தாழ் பற்றி சொல்லாமல் இருக்கலாமா? ஒரிஜினல் பார்த்தீர்கள் தானே? மோஹன்லால் நடிப்பும் சோபனாவின் நடனமும் அருமையாக இருந்ததே.
s.mohammed said…
any one in online now
Chitra said…
நல்ல வேளை ...... ரஜினி - பார்ட் 2 வில் ஹீரோவாக ஒத்துக்கல. :-) escappu!
ரஜினி ஒரே ஒரு காட்சியில் வருகிறாராமே...?
Unknown said…
///ரஜினியின் பத்து நிமிஷ அதிரடி எவ்வளவு இம்பாக்டை கொடுத்தது///

பத்து நிமிஷமா? ரண்டே ரண்டு நிமிஷம்தான் அந்த வேடத்தில் வருகிறார். மிஞ்சினா மூண்டு நிமிஷம். அந்தப் பட டி.வி.டி. வச்சிருக்கிறதே அந்த ரண்டு நிமிஷத்துக்காகத்தான். என்னா வில்லத்தனம்::))
pichaikaaran said…
escape
அண்ணே இது சந்திரமுகியா இல்ல சந்திரமுகி பார்ட்- 2 வாண்ணே??
ரொம்ப கன்பூஸிங்கா இருக்கு
This comment has been removed by the author.
Prasanna Rajan said…
பாஸ்!! 'மணிசித்ரதாள்' கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' ஆகி, பின்னர் தமிழில் 'சந்திரமுகி' ஆனது. நீங்கள் சொல்வது 'ஆப்தமித்ரா - 2'.

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.