இன்றைய ப்ளாஸ்டிக் உலகில் க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பர்சனல் லோன் போன்றவைகளிலிருந்து தப்பித்தோ, அல்லது அதில் மூழ்கி போய் எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டோ இருப்பவர்களை தவிர்க்கவே முடியாது. தானா வர ஸ்ரீதேவிய எவனாவது வேணாம்னு சொல்வானான்னு வாங்கிட்டு பின்னாடி அதுவே மூதேவியாகிப் போன நிஜங்கள் நிறைய. இப்படம் அதைத்தான் சொல்கிறது.
Dec 31, 2011
மகான் கணக்கு
இன்றைய ப்ளாஸ்டிக் உலகில் க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பர்சனல் லோன் போன்றவைகளிலிருந்து தப்பித்தோ, அல்லது அதில் மூழ்கி போய் எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டோ இருப்பவர்களை தவிர்க்கவே முடியாது. தானா வர ஸ்ரீதேவிய எவனாவது வேணாம்னு சொல்வானான்னு வாங்கிட்டு பின்னாடி அதுவே மூதேவியாகிப் போன நிஜங்கள் நிறைய. இப்படம் அதைத்தான் சொல்கிறது.
Dec 30, 2011
Don-2
சாதாரணமாகவே இரண்டாவது பாகம் பெரும்பாலும் சொதப்பும். அது ஆங்கில படங்களுக்கு மட்டுமலல், இந்திய சினிமாக்களுக்கும் பொருந்தும் என்பதை இந்தப் படம் நிருபித்திருக்கிறது. ஷாருக், ப்ரியங்கா சோப்ரா, லாராதத்தா, குனால் கபூர், போமன் இரானி, ஓம்பூரி, பர்ஹான் அக்தர், மற்றும் பல ஸ்லீக் டெக்னீஷியன்கள் லிஸ்ட் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் ஷாருக்கின் ரா 1 படு தோல்விக்கு பிறகு இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம்.
Dec 29, 2011
Dec 27, 2011
Rajanna
நாகார்ஜுனாவின் நடிப்பில், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ப்ரீயட் படம். வெள்ளையனிடமிருந்து இந்தியா சுதந்திரம் வாங்கி விட்டாலும், நிஜாம் மன்னர்களிடமிருந்தும், ஜமீந்தார்களிடமிருந்து விடுதலை கிடைக்காமல் போராடிய மக்களின் கதை. அவர்களுக்காக போராடிய ராஜண்ணாவையும், அவரின் மகள் மல்லம்மாவை சுற்றியும் பின்னப்பட்ட கதை.
Dec 25, 2011
கொத்து பரோட்டா –26/12/11
மேலே நீங்கள் காணும் படங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது அல்ல. நேற்று மாலை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு சப்வேயில் நடந்த ஒரு விபத்தின் போது எடுத்தபடம். சப்வேயின் மேலேயிருந்து விழுந்து இறந்து போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.விபத்து நடந்து கிட்டத்தட்டஅரை மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஆனால் விசாரணைக்கு ஒரு பெரிய போலீஸ் படையே அங்கே வந்திருந்தும். ஒரு துணியை வைத்து போர்த்தி அந்த உடலை மறைத்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் ரோடெங்கும் வழிந்தோடும் ரத்தத்தைப் பார்த்து குழந்தையுடன் வந்த ஒர் நடுத்தர வயது பெண் அதிர்ந்து போய் கிட்டத்தட்ட மயங்கிப் போகும் நிலைக்கு வந்து குடுகுடுவென ஓடிப் போய் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். போலீஸார் கொஞ்சம் கவனிக்கலாமே..?
#################################
Dec 23, 2011
ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.
வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.
Dec 22, 2011
சாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்
பெயரைப் பார்த்தாலே எவ்வளவு காலமாய் ஓட்டல் நடத்துகிறவர்கள் என்று தெரிந்துவிடும். ஏனென்றால் இப்போதெல்லாம் மிலிட்டரி ஓட்டல் என்று யாரும் பெயர் வைப்பதேயில்லை. வழக்கொழிந்து போய்விட்டது. அப்படியிருக்க, சேலத்தில் 65 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டல், சென்னையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
Dec 21, 2011
Dec 20, 2011
நான் – ஷர்மி - வைரம் -12
12 ஷர்மி
என் வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போனதற்கு ஒரு விதத்தில் ஜெயலலிதாவும் காரணம். அதற்கு முன் அர்ஜுனைப் பற்றி சொல்லியாக வேண்டும்.அர்ஜுனை எவ்வளவுதான் துரத்தி விட்டாலும் எப்படியாவது நானிருக்கும் இடங்களுக்கெல்லாம் வந்து நின்று விடுவான். எப்போதெல்லாம் என் முதுகில் உறுத்துகிறதோ அங்கேயெல்லாம் அர்ஜுன் இருப்பான்.
Dec 19, 2011
கொத்து பரோட்டா –19/12/11
ஆதி+பரிசல்+யுடான்ஸ் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள், இயக்குனர்கள் பத்ரி, நவீன், சிபி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். பத்ரி பதிவர்களிடையே இருக்கும் திறமைகளை கண்டு ரசிப்பதாகவும், அவர்களது திறமைகளுக்கு இன்றைய சினிமா, மற்றும் சீரியல் உலகில் வாய்ப்பிருக்கிறது என்றார். நவீன் தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகவும், தன்னுடய அடுத்த படத்தில் பதிவுலகில் உள்ள ஆறு கவிஞர்களை பாடலாசிரியராக உயர்த்தப் போவதாய் அறிவித்தார். ரமேஷ்வைத்யா இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற அளவிற்கு சிற்றுரை ஆற்றினார். அண்ணன் சிறுகதைகளைப் பற்றிய விமர்சனஙக்ளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் நச்சென அளித்தார். நிகழ்ச்சியை தொகுத்தளித்த கார்க்கிக்கு இது முதல் மேடை. அந்தவகையில் சிறப்பாகவே செய்தார். முதல் பரிசு பெற்ற ஆர்.வி.எஸ் தான் மைக் நெளிய பேசியதாய் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். நன்றி சொன்ன பரிசல், ஆதி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு மாற்றி, மாற்றி நன்றி தெரிவித்தார்கள். பரிசல் தன் புத்தகத்தைப் பற்றி பேசிய சில விஷயங்களை திருத்த வந்து பேசினார் கவிஞர், எழுத்தாளர் ராஜ சுந்தர்ராஜன். அவர் பேசியதற்கான மாற்றுக் கருத்தும் ஃபேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது இடம் அளித்து, வெற்றியாளர்களுக்கு தன் பங்காய் சிறப்பு பரிசளித்து வாழ்த்திய டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி. இதில் வழக்கமாய் நிறைய பேசும் நான் தான் ரெண்டு வரியில் வரவேற்று சொதப்பினேன் என்று நினைக்கிறேன். சிலர் அதை வரவேற்று கை தட்டியதிலிருந்து என் பேச்சிலிருந்து அவர்களுக்கு கிடைத்த சந்தோஷம் தெரிந்தது. மற்றபடி விழா இனிதே நடைபெற்றது. வந்திருந்து நடத்திக் கொடுத்த நண்பர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் யுடான்ஸின் சார்பாக எங்கள் நன்றிகள்.
##########################Dec 17, 2011
பதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக..
பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டியான “யுடான்ஸ்” நடத்தும் முதல் விழா. ஆதி+பரிசல்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் விழா. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நம்ம திரட்டிக்கு நீங்க கொடுத்த ஆதரவு கொஞ்ச நஞ்சமல்ல. அபாரமான ஆதரவு. மூன்று மாதங்களில் 50 ஆயிரம் அலெக்ஸா ரேங்கிங்கிற்கு வந்துள்ளது எல்லாம் உங்களால் தான். அதே போல சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் மறக்கவே முடியாது. இவையெல்லாம் வெற்றிகரமாய் நடந்தேறியது உங்களால் தான். அதற்கு யுடான்ஸ் சார்பாக என் நன்றிகள் பல.
Dec 16, 2011
சாப்பாட்டுக்கடை –பாரதி மெஸ்
திருவல்லிக்கேணி என்றதும் அங்கிருக்கும் மேன்ஷன்களும், பெரியதும், சின்னதுமாய் இருக்கும் ஹோட்டல்களையும், மெஸ்களையும் யாரும் மறக்க முடியாது. எந்த ஊரிலிருந்து வந்தாலும் பெரும்பலான இளைஞர்களின் முதல் அடைக்கலம் திருவல்லிக்கேணியாகத்தான் இருக்கும். நண்பர், பத்திரிக்கையாளர் பாலாவை சந்திக்க மதியம் திருவல்லிக்கேணிக்கு போயிருந்தேன். நல்ல பசி, ”தலைவரே நல்ல மெஸ்சா சொல்லுங்க” என்றேன்.
Dec 14, 2011
Dec 12, 2011
படித்து கிழித்தவை 2011
சென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Dec 11, 2011
25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி தலைவர்
நம் எதிர்கட்சி தலைவர் மானஸ்தர். வீரர். சூரர் என்றெல்லாம் எலக்ஷனினின் போது பேசினார்கள். அவர் சினிமாவில் மட்டுமே மாத்தி மாத்தி கைநீட்டி அறிக்கை விடத் தெரிந்தவர் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே சொல்ல வேண்டும். நித்யானந்தாவின் லீலைகள் பிரபலமான பின் எல்லாம் அடங்கிவிட்டபின் இவர்களின் செய்திகளுக்கு ஏதாவது பரபரப்பூட்ட வேண்டும் என்று அச்சமயத்தில் நடிகை மாளவிகா அவரின் ஆஸரமத்துக்கு போனதை ஸ்ரோலில் போட்டு எட்டு மணி செய்திகளை பாருங்க.. பாருங்க என்று இம்சித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகளிலும் காட்டினார்கள். இது நடந்தவுடன் நித்யானந்தாவின் சீடர் அவரைப் பற்றி செய்திகளை போடக்கூடாது என்று கோர்ட் ஸ்டே வாங்கி வந்தாக சொல்லி, இனி போடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி இவர்கள் மறுநாளும் அதையே போட, நித்யானந்தாவின் சீடர்கள் அவரது சேனல் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் ஆர்பாட்டம் செய்ததையும் இவர்கள் படம் பிடித்து செய்திகளில் போட்டார்கள். போலீஸ் பாதுகாப்பெல்லாம் போட்டு நடந்த விஷயங்கள் இவை.
Dec 10, 2011
Panja
கொம்மரம் புலி அடித்த அடியில் தெலுங்கு படவுலகமே ஆடிப் போயிருந்தாலும், பவர்ஸ்டார் பவன் கல்யாண் படம் என்றால் மீண்டும் ரசிகர்கள் முறுக்கேறி பார்க்க தயாராகிவிடுகிறார்கள் என்பதற்கு தியேட்டரில் இன்று பார்த்த கூட்டமே சாட்சி, சத்யம, கேஸினோ, எஸ்கேப், உட்லான்ஸ், மோடம், ஈகா என்று சுற்றிச் சுற்றி தியேட்டர்கள் இருந்தும் எல்லாமே புல். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் என்ற கூட்டணி வேறு கேட்கவா வேண்டும். எக்ஸ்பட்டேஷன் சும்மா அதிரிந்தி.
Dec 9, 2011
ஒஸ்தி
குருவி, தெலுங்கு பங்காரத்துக்கு முன் வரை அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்த இயக்குனர் தரணி. விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு இவரை பிடிக்காதவர்களுக்கும் பிடித்துப் போன நடிகரான சிம்பு. ஏற்கனவே இந்தியாவெங்கும் சூப்பர் ஹிட்டான “தபாங்”கின் ரீமேக் என்பது போன்ற விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, படத்தின் டெபிஸிட் காரணமாய் நேற்று காலை வெளியாகாமல் மதியத்திற்கு மேல் ஒரு வழியாய் வெளியாகியது.
Dec 7, 2011
தமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011
சென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். ரா.ஒன் நூறு கோடி பேண்ட்வேகனில் ஏறினாலும், தயாரிப்பு செலவை கணக்கில் கொண்டால் ஒரு தோல்விப் படம் என்று தான் சொல்ல வேண்டும்.
Dec 4, 2011
கொத்து பரோட்டா – 05/12/11
கடந்த சில வருடங்களாய் எந்த சேனலைத் திறந்தாலும் ஏதாவது ஒரு டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சி பெரும்பாலும், பாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர், டான்ஸர், போன்ற நிகழ்ச்சிகள் எடுபட்ட அளவிற்கு மற்ற டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சிகள் எடுபடவில்லையென்றே சொல்ல வேண்டும். சங்கரா சேனல் ஒரு வித்யாசமான டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறது. நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் வரவேற்கப்படும் பாட்டு சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் அதில் ஆன்மீக சுவாரஸ்யமாய் பஜன்களை வைத்து நடத்தி வருகிறார்கள். பஜன் சாம்ராட் என்கிற இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வை பார்த்தேன். நன்றாகவேயிருந்தது. பஜனை பாடல்கள் என்பது பக்த்தியை வெளிப்படுத்த உதவும் ஆன்மீக வழி. அதிலும் சில பல சூட்சமங்களும்,சுவாரஸ்யங்களும், இசையறிவும், நெளிவு சுளிவுகளும் இருக்கத்தான் செய்கிறது. செளம்யா, குசுமா ஆகியோர் நடுவர்களாய் இருக்க, வெற்றி பெரும் குழுவினருக்கு ”பஜன் சாம்ராட்” பட்டமும், பத்து லட்சம் ரூபாய் பரிசும் அளிக்கிறார். பஜன் பாடல்களுக்காக இவ்வளவு பெரிய கேம்பெயின், கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது.
Dec 3, 2011
Dec 2, 2011
போராளி
சமுத்திரகனி, சசிகுமார், சுவாதி, சுந்தர்சி.பாபு, எஸ்.ஆர்.கதிர் என்று ஒரு சக்ஸஸ்புல் டீம். பெயர் வேறு தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட்படி தமிழுணர்வோடு வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் தமிழர்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும் படம். கனி-சசியின் கூட்டணி நம்மை திருப்திபடுத்தியிருக்கிறதா? என்று பார்ப்போம்
Dec 1, 2011
சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லையா?
கடந்த ரெண்டு நாட்களாய் இணையத்தில் தியேட்டர் கிடைக்காததால்
சிறு படங்களை
வெளியிட முடியவில்லை என்றும், சமீபத்தில் வெளியான சிறு முதலீட்டு படம்
ஒன்றை, பெரிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் திரையிட
மறுப்பதாகவும், சிலர்
வேண்டுமென்றே தடையேற்படுத்த
நினைப்பதாகவும் ஆளாளுக்கு படத்தைப் பற்றியோ, இந்த தொழிலைப் பற்றியோ தெரியாமல் புலம்பிக்
கொண்டிருக்க, படத்தின்
இயக்குனர் குழுவினர், யூடூயூப்
விடியோவில் அழுதெல்லாம் படத்திற்கு கும்பல் சேர்க்க முயற்சித்தார்கள்.
பட் நோ யூஸ்.
Nov 30, 2011
பாலை
கடந்த ரெண்டு மூன்று நாட்களாய் இணையத்தில் மட்டும் சில ஆட்கள், ஏதோ தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கழுத்தை நெரித்து கொல்ல முயல்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்களே.. அப்படி என்ன படம் என்று பார்க்க போனேன். அதுவும் இது தமிழனின் வரலாறு என்றும் இதை பார்க்காவிட்டால் தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று என்று பயப்படும் அளவிற்கு இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்ததினால் தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்து போனேன்.
Nov 27, 2011
கொத்து பரோட்டா-28/11/11
தமிழ்நாடே வெள்ளக் காடாய் மாறிப் போயிருக்கிறது. அதுவும் தலைநகரான சென்னை பெரும் பள்ளத்தில் தான் இருக்கிறது. போன மழைக்கும் இந்த மழைக்கும் சுமார் பத்து நாள் கேப்பிருந்தும் புதிய ரோடுகளை போட வேண்டாம் அட்லீஸ்ட் சாலைகளில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை மண் போட்டாவது நிரப்பியிருந்தால்,இந்த மழைக்கு இன்னும் மோசமாகியிருக்காது. நேற்று மதியம் போரூரிலிருந்து வடபழனி வர சுமார் 2.30 மணி நேரம் ஆனது. காரணம் ரோடு பூராவும் இருந்த பள்ளங்கள். பள்ள மேடுகளால் ஏற்படும் வாகன நெரிசல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்த பள்ளங்களில் மாட்டிக் கொண்டு கீழே விழும் வயதான வண்டியோட்டுனர்கள். நேற்று ஒரு வயதான தம்பதி பேலன்ஸ் தவறி ரோட்டில் வீழ்ந்து அவர்களை தூக்கி நிறுத்தக் கூட முடியாமல் ட்ராபிக் நெரிசல். ரோட்டில் தேங்கி நின்ற தண்ணீரில் வீழ்ந்து முழுவதும் நினைந்து, கை கால்களில் அடிபட்டு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாங்களாவே உதவி செய்து கொண்டு நின்றதை பார்க்கையில் பாவமாய் இருந்தது. நான் இருந்த தூரத்திலிருந்து இறங்கிப் போகக் கூட முடியாத வாகன நெரிசல். கவர்மெண்ட் என்ன பண்ணுது? என்று ஒருவர் பக்கத்து வண்டியில் உட்கார்ந்து கொண்டு கேட்க, அது என்ன பண்ணும்? மொத்தமா வழிச்சி ஜெயிக்க வச்சீங்க இல்லை. முதன்மை மாநிலமா ஆக்குறதுக்கு முதலடி எடுத்துட்டு இருக்காங்க என்றேன். முறைத்தார்.
#################################
#################################
Nov 26, 2011
மயக்கம் என்ன
செல்வராகவன், தனுஷ் கூட்டணி, ஏற்கனவே மூன்று ஹிட் பாடல்கள், சின்னச் சின்னதாய் நம்மை கொக்கி போட்டு இழுக்கும் டீசர்கள் , என்று ஏகத்திற்கும் நம் எதிர்பார்ப்பை எழுப்பியிருந்த படம். சத்யமில் அடாது மழையிலும் விடாது நிரம்பியிருந்த இளைஞர்கள், குறிப்பாய் இளளைஞிகளே சாட்சி. இவர்கள் ஏற்படுத்திய ஹைஃபை கொடுத்து நம்மை அசத்தினார்களா? என்பதை பார்ப்போம்.
Nov 24, 2011
Happy Feet 2
எனக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். சாதாரண படங்களில் கிடைக்காத சந்தோஷம் எனக்கு இம்மாதிரியான படங்களில் கிடைக்கும். லயன் கிங் படத்தை உட்லான்ஸ் சிம்பொனியில் ஆறு மணி காட்சி பார்த்துவிட்டு, மீண்டும் அடுத்த காட்சி பார்த்தவன். இம்மாதிரியான கதைகளில் பெரும்பாலும் உறுத்தாமல் நீதி சொல்வார்கள். பல சமயம் மனதை நெகிழவும் செய்துவிடுவார்கள். சமீப கால அனிமேஷன் வளர்ச்சி மேலும் என்னைப் போன்ற அனிமேஷன் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
Nov 23, 2011
நான் – ஷர்மி - வைரம்-11
11.நான்
கார் ஈ.சி.ஆர் ரோட்டில் மாயாஜால் எல்லாம் தாண்டி, தொடர் இருட்டுக்கு பின் தெரிந்த ஒரு வெளிச்ச தீற்றலை நோக்கி திரும்பி, பெருத்த கதவுக்கு முன் போய் நின்றது. எலக்ட்ரானிக் கதவுகளை அஞ்சனா தன் காரிலிருந்தபடியே ஒரு கீயை எடுத்து பொத்தானை அமுக்க, திறந்த கதவினூடே, மெல்ல ஊர்ந்து உள் நுழைய, கதவு தானாய் மூடிக் கொண்டது. உள்ளே நுழைந்த்தும் தான் உள்ளே எவ்வளவு பெரிய மாளிகை என்று தெரிந்தது. அவ்வளவு அமைதியில் காரின் சத்தம் பெரிதாய் கேட்டது.
கார் ஈ.சி.ஆர் ரோட்டில் மாயாஜால் எல்லாம் தாண்டி, தொடர் இருட்டுக்கு பின் தெரிந்த ஒரு வெளிச்ச தீற்றலை நோக்கி திரும்பி, பெருத்த கதவுக்கு முன் போய் நின்றது. எலக்ட்ரானிக் கதவுகளை அஞ்சனா தன் காரிலிருந்தபடியே ஒரு கீயை எடுத்து பொத்தானை அமுக்க, திறந்த கதவினூடே, மெல்ல ஊர்ந்து உள் நுழைய, கதவு தானாய் மூடிக் கொண்டது. உள்ளே நுழைந்த்தும் தான் உள்ளே எவ்வளவு பெரிய மாளிகை என்று தெரிந்தது. அவ்வளவு அமைதியில் காரின் சத்தம் பெரிதாய் கேட்டது.
Nov 21, 2011
புத்தக விமர்சனங்கள்.
அன்பு நண்பருக்கு வணக்கம்,
தங்களின் ‘கொத்து பரோட்டா’ “சினிமா வியாபாரம்” “மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய முக்கனியை சுவைத்தேன். தெவிட்டாத இன்பம் கண்டேன். சங்கீத விமர்சகர் சுப்புடு போல தங்களின் தைரியமிக்க விமர்சனமும், வீரியமும், என்னை கவர்ந்தது. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, தங்களின் சாட்டையும், சேட்டையும் தூள். காமெடிக்கு பஞ்சம் என சில சினிமாக்களில் தெரியும். அவர்கள் உங்கள் கொத்து பரோட்டாவை சுவைத்தால், ரோட்டுக்கடை சால்னாவோடு சாப்பிடும் சுவை அறிவர். மனம் தெளிவர்.
தங்களின் ‘கொத்து பரோட்டா’ “சினிமா வியாபாரம்” “மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய முக்கனியை சுவைத்தேன். தெவிட்டாத இன்பம் கண்டேன். சங்கீத விமர்சகர் சுப்புடு போல தங்களின் தைரியமிக்க விமர்சனமும், வீரியமும், என்னை கவர்ந்தது. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, தங்களின் சாட்டையும், சேட்டையும் தூள். காமெடிக்கு பஞ்சம் என சில சினிமாக்களில் தெரியும். அவர்கள் உங்கள் கொத்து பரோட்டாவை சுவைத்தால், ரோட்டுக்கடை சால்னாவோடு சாப்பிடும் சுவை அறிவர். மனம் தெளிவர்.
Nov 20, 2011
கொத்து பரோட்டா - 21/11/11
நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
தமிழக மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். தப்பு பண்ணிட்டமோ.. என்று. ஒரேடியாய் பால் விலை, பஸ் டிக்கெட் , விரைவில் மின்சாரக் கட்டணம் என்று ஏகத்துக்கு ஏற்றி விட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு இதை தவிர வேறு வழியில்லை என்ற சால்ஜாப்பு வேறு. வழக்கம் போல இதற்கு காரணம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசுதான் என்ற குற்றச்சாட்டு. ஆளாளுக்கு அறிக்கைவிட்டால், உடனே கேட்டு குறைக்க என்ன திமுக ஆட்சியா நடக்கிறது?. என்று கேட்கும் உ.பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். போன கொ.பரோட்டாவில் கூட எழுதியிருந்தேன். சென்னையின் சாலைகளைப் பற்றி. இந்த வாரம் வரை அதற்கான விமோசனம் ஏதுமில்லை. நம்மிடம் வாங்கும் ரோட் டாக்ஸ் பணம் எங்கு போயிற்று. அதான் கார்பரேஷன் அவர்களிடம் வந்துவிட்டதே? செலவு செய்த பணத்தை எடுக்க வேண்டாமா? அட்லீஸ்ட் அதற்காவது மீண்டும் ஒரு அறை குறை ரோட்டை போட்டு தொலைக்கலாம் அல்லவா?
########################################
தமிழக மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். தப்பு பண்ணிட்டமோ.. என்று. ஒரேடியாய் பால் விலை, பஸ் டிக்கெட் , விரைவில் மின்சாரக் கட்டணம் என்று ஏகத்துக்கு ஏற்றி விட்டார்கள். பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு இதை தவிர வேறு வழியில்லை என்ற சால்ஜாப்பு வேறு. வழக்கம் போல இதற்கு காரணம் முந்தைய மைனாரிட்டி திமுக அரசுதான் என்ற குற்றச்சாட்டு. ஆளாளுக்கு அறிக்கைவிட்டால், உடனே கேட்டு குறைக்க என்ன திமுக ஆட்சியா நடக்கிறது?. என்று கேட்கும் உ.பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். போன கொ.பரோட்டாவில் கூட எழுதியிருந்தேன். சென்னையின் சாலைகளைப் பற்றி. இந்த வாரம் வரை அதற்கான விமோசனம் ஏதுமில்லை. நம்மிடம் வாங்கும் ரோட் டாக்ஸ் பணம் எங்கு போயிற்று. அதான் கார்பரேஷன் அவர்களிடம் வந்துவிட்டதே? செலவு செய்த பணத்தை எடுக்க வேண்டாமா? அட்லீஸ்ட் அதற்காவது மீண்டும் ஒரு அறை குறை ரோட்டை போட்டு தொலைக்கலாம் அல்லவா?
########################################
Nov 19, 2011
Sri Ramarajyam
இளையராஜாவின் இசையில் பாடல்கள் வெளிவந்தவுடன் ஹாட்கேக் போல விற்று தீர்த்து ஆந்திர பட உலகத்தினரையே ஆச்சர்யப்பட வைத்த படம். நம் தமிழ் பட உலகம் போல் இல்லாமல் காமெடிப்படம், ஆக்ஷன் படம், காதல் கதை, என்று வகை தொகையில்லாமல் எல்லா படங்களுமே ஓடும் மார்கெட் உண்டு. அதிலும் பிரபல ஹீரோக்கள் புராண படங்களில் நடிப்பதும், அது மாபெரும் ஹிட்டாவதும் வழக்கமான ஒன்று. சில சமயம் பெரிய ஹீரோக்களின் மார்கெட்டையே மீண்டும் நிலை நிறுத்திய படங்கள் எல்லாம் இம்மாதிரியான புராண படங்கள் தாம் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வரிசையில் அடித்து துவைத்து காயப்போடப்பட்டிருக்கும் பாலகிருஷ்ணாவின் மார்கெட்டை இந்த புராணப் படம் நிலை நிறுத்துமா? பிரபல பழம் பெரும் இயக்குனர் பாப்பு இயக்கி வெளிவந்துள்ள இப்படம் ரசிகரக்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
Nov 18, 2011
வித்தகன்
நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
பார்த்திபன் வெகு காலத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம். இவர் நடித்து வெளிவரும் ஐம்பதாவது படம். ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படம். வழக்கமாய் ஏதாவது சீரியசாய் படமெடுத்துவிட்டு அது ஓடாமல், வெறுத்துப் போய் மசாலாவாக கலாய்த்து உள்ளே வெளியே ஆடியவர். இப்போதும் அதைப் போலவே யோசித்து எடுத்திருக்கும் படம். செவந்த் சேனல் மாணிக்கம் தயாரித்தும், பார்த்திபனின் இயக்கத்தில் என்று இருந்தும் பெரிய எதிர்பார்ப்பையெல்லாம் எற்படுத்தாத படம்.
Rock Star
நாற்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் நன்றிகள் பல. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
ரண்பீர்கபூர், நர்கிஸ் ஃபக்ரி, ஏ.ஆர்.ரஹ்மான், இம்தியாஸ் அலி, என்று வரிசைக் கட்டி நிற்கும் ஹிட் லிஸ்ட். பாடல்கள் வெளியாகி ஒரு விதமான ட்ரான்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களில் நானும் ஒருவன். படத்தின் ப்ரொமோ வீடியோக்களினால் அட்ரிலின் ஏறி நரம்பு புடைக்க பாட வேண்டும் என்று தோன்ற வைத்த சாகஸமான் விளம்பரம் எல்லாம் சேர்ந்து கொடுத்த ஹைப்பை திருப்தி படுத்தினார்களா? என்று கேட்டால் ஓரள்வுக்கு பண்ணியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ரண்பீர்கபூர், நர்கிஸ் ஃபக்ரி, ஏ.ஆர்.ரஹ்மான், இம்தியாஸ் அலி, என்று வரிசைக் கட்டி நிற்கும் ஹிட் லிஸ்ட். பாடல்கள் வெளியாகி ஒரு விதமான ட்ரான்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களில் நானும் ஒருவன். படத்தின் ப்ரொமோ வீடியோக்களினால் அட்ரிலின் ஏறி நரம்பு புடைக்க பாட வேண்டும் என்று தோன்ற வைத்த சாகஸமான் விளம்பரம் எல்லாம் சேர்ந்து கொடுத்த ஹைப்பை திருப்தி படுத்தினார்களா? என்று கேட்டால் ஓரள்வுக்கு பண்ணியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
Nov 17, 2011
Oh.. My Friend
ஏற்கனவே சித்தார்த்துக்கும், ஸ்ருதிக்கும் என்னமோ.. ஏதோ என்று தெலுங்கு பட உலகமே கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் வேலையில் வந்திருக்கும் படம். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் அதிரடியான இசையையும், நட்பையும் காதலையும் அடிப்படையாய் கொண்ட படம். இந்த காம்பினேஷனே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல ஓப்பனிங்கை கொடுத்திருக்கும் படம். எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்று பார்ப்போம்.
Nov 15, 2011
புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி?
கடந்த ஒரு வாரமாய் டிவி நியூஸ் சேனல் பார்க்கும் எல்லாரிடமும் இந்த கேள்வி ஓடிக் கொண்டுதானிருந்தது. அதெப்படி ஆரம்பித்த சில மாதங்களுக்குள் இந்த நிலைக்கு வர முடியும்? என்ன தான் நிகழ்ச்சிகள் நன்றாய் இருந்தாலும் கூட இன்று வரை சன் க்ரூப் சேனல்களை தவிர மற்ற சேனல்கள் நம்பர்.1 பொஷிஷனுக்கு வந்ததேயில்லை. தூரதர்ஷன் காலத்திற்கு பின் ஆரம்பித்த சன்னின் ராஜ்ஜியம் இன்று இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது எதனால்? நிஜமாகவே புதிய தலைமுறை செய்திகள் நடுநிலையோடு, சிறந்த முறையில் கொடுக்கிறார்களா? இல்லை வேறு ஏதாவது பின்னணி உள்ளதா? இந்த கருத்து கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
Nov 14, 2011
The Adventures of Tintin : The Secret Of The Unicorn
டின்டின் காமிக்ஸ் படித்தவர்கள் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெகு நாட்களுக்கு பிறகு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்திலும், பீட்டர் ஜாக்ஸனின் தயாரிப்பில் வெளிவருகிறது என்பதால் மேலும் எதிர்பார்ப்பு எகிற, ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, ஒரு வழியாய் வெளியாகிவிட்டது டிண்டின்.காமிக்ஸை படித்தவர்களுக்கு கதை ஒன்று புதியதாய் இருக்காது என்றாலும் புத்தகமாய் பார்த்த காமிக்ஸ் கேரக்டர்களை திரையில் பார்க்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். காமிக்ஸே படிக்காதவர்களுக்கும் ஆர்வமிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை.
Nov 13, 2011
கொத்து பரோட்டா – 14/11/11
kingfisher ஏர்லைன்ஸுக்கு கடன் கொடுக்க முடியாது என்று எண்ணைய் நிறுவனங்கள் சொல்லிவிட்டதால். அவர்கள் கடையை தற்காலிகமாய் முடி வைத்திருக்கிறார்கள். பேப்பரை திறந்தால் ஆளாளுக்கு ஏதோ தங்கள் கம்பெனிக்கு ப்ரச்சனை போல பக்கம் பக்கமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏர் இந்தியாகாரர்கள் புதுசாய் இப்போது தான் தெரிந்தார் போல மன்மோகன் அரசு கார்பரேட்டுகளுக்காகத்தான் உழைக்கிறது. இதே போன்ற ஒரு சிட்ஷுவேசன் எங்களுக்கு வந்த போது உதவவில்லை என்று புலம்புகிறது. பாவம் மல்லையா தன்னுடய ப்ரைமரி ப்ராண்ட் ப்ரூவரியை அடமானம் வைத்து தொழில் செய்கிறாராம். பேங்க கடன் வேறு ஏழாயிரம் கோடியை நெருக்குகிறதாம். என்ன செய்வார் அவர். அவருக்கு உதவ வேண்டியது அரசின் கடமையல்லவா? இங்கே அவனவன் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டவனெல்லாம் அரை லிட்டர் போட்டுட்டு ஓட்டிட்டு இருக்கான் அவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க மாட்டேங்கிறாய்ங்க.. அத கேக்குறதுக்கு ஒரு நாதியில்லை.இதுல பத்திரிக்கைகள் மட்டுமில்லை, மக்களும் தொடர்ந்து தெருவில் இறங்கி போராட வேண்டாமா? ஆவர்களும் கம்முனு இருக்காங்க.. இங்க இருக்கிற மாநில அரசும் சும்மாருக்கு.. என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க? பூமாதேவி பொங்கப் போற ஒரு நா நீங்க உசுரோட உள்ளார போவப் போறீங்க.
###################################
###################################
Nov 12, 2011
குறைந்த செலவில் கலாஅனந்தரூபா கொடுக்கும் மீடியா பயிற்சி
மீடியாவில் பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வம் பல பேருக்கு உண்டு. அதிலும் முக்கியமாய் டெக்னிக்கல் துறையில் நுழைய பல பேருக்கு ஆர்வமுண்டு. ஆனால் அதற்கான ஊக்குவிப்பை யாரும் தருவதில்லை. அப்படியே அவர்களுக்கென்று ஒரு தேடலோடு தேடி கண்டுபிடித்து போகலாம் என்றால் அதற்கான சரியான பயிற்சி மையங்கள் ஸ்பெஷலாய் இல்லாமல் இருக்கிறது. ஒருவர் எடிட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் யாராவது ஒரு எடிட்டரிடம் போய் உதவியாளராய் சேர்ந்து அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவருடன் பணியாற்றி தொழிலை கற்றுக் கொள்கிறார்கள். திரைப்படக் கல்லூரிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அங்கேயும் ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் போலத்தான் சொல்லிக் கொடுக்கிறார்களே தவிர அவர்களுக்கான வேலைப் வாய்ப்பு கிடைக்குமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதற்கான வேலை வாய்ப்புகள் கிடைக்க அதற்கான நெட்வொர்க்கை பிடிக்க வேண்டும். அதிலும் முழுவதுமாய் நமக்கான பயிற்சிகளை கொடுப்பார்கள் என்ற உறுதியும் கிடையாது.
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
நண்பர் இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கி வெளிவந்திருக்கும் இரண்டாவது படம். இன்றைய கரண்ட் அட்ராக்ஷனான அஞ்சலி நடித்திருக்கும் படம். நம் பா.ராகவன் வசனமெழுதியுள்ள படம். கரண் மிகவும் நம்பியிருந்த படம். தமிழக கேரள எல்லையோரத்தில் நடந்த உண்மைக் கதை என்று சொன்னது, அதையெல்லாம் விட முக்கியமாய் வெறும் ஏழாவது அறிவையும், வேலாயுதத்தையும் பார்த்து நொந்து போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வந்திருக்கும் புதுப் படம். இப்படி ஏகப்பட்ட ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் படம்.
Nov 11, 2011
நான் – ஷர்மி - வைரம்-10
ரேஷ்மாவின் பிறந்தநாள் அதிர்ச்சிக்கு பிறகு என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அன்றைக்கு அர்ஜுனை ஆளாளுக்கு அடித்தார்கள். ரேஷ்மாவின் அம்மா “சின்னப் பையன்னு இல்ல நினைச்சேன்.” என்று சொல்லிச் சொல்லி அடித்தாள். ரேஷ்மாவின் அப்பாதான் அவனை பிரித்து அழைத்துச் சென்றார். அன்றைக்கு முழுவதும் என் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்த்து. வீட்டிற்கு வந்து படுத்தவள் தான் காலையில் கண் விழிக்கவில்லை. கடும் ஜுரம். நடந்ததை யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று என் நண்பர்கள் நிறைய பேர் வந்து பார்த்துப் போனதாய் சொன்னாள் அம்மா. அதில் அர்ஜுனும் ஒருவன். எனக்கு அவன் அடிவாங்கியதை நினைத்து கொஞ்சம் பாவமாய் இருந்தாலும் அவன் அன்று செய்த்தை நினைத்தால் உடலெங்கும் இன்னமும் நடுக்கம் ஓடத்தான் செய்தது. கனவுகளின் துரத்தல்களில் என் உடலெங்கும் கைகளாய் பரவி, என் குறியை, முலையை அழுத்தியது. அம்மா மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தாள். “பார்டியில் என்ன ஆச்சு? என்ன ஆச்சென்று. நான் ஏதுவும் சொல்லவில்லை. ரேஷ்மாவின் அம்மா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். அவர்கள் வீட்டில் இம்மாதிரி ஒர் சம்பவம் நடந்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கும் அதே போலத்தான் தோன்றியது.
Nov 9, 2011
தமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011
செப்டம்பர் மாதம் வெளியான படங்களில் பெரும் வெற்றிப் பெற்ற படமாய் அமைந்தது ஏ.ஆர்.முருகதாஸின் “எங்கேயும் எப்போதும்” திரைப்படம் மட்டுமே. விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருமித்த பாராட்டை சமீபத்தில் பெற்ற படமென்றால் இது ஒன்று தான். வசூல் ரீதியாய் ஆரம்பித்த ரெண்டொரு நாள் தடுமாறினாலும் மக்களின் மவுத் பப்ளிசிட்டியினாலும், மீடியா ப்ரோமஷனக்ளினாலும் பெரிய அளவிற்கு ரீச்சானது என்றே சொல்ல வேண்டும். சிட்டி மட்டுமில்லாது தமிழகமெங்கும் பெரும் வெற்றியை பெற்றது இப்படம். திரையிட்ட சில நாட்களிலேயே ஒரு தியேட்டரில் வெளியாகியிருந்த படத்தை இன்னொரு தியேட்டரிலும் போடப்பட்ட அரிதான படங்களில் இதுவும் ஒன்று. வசூல் ரீதியாக சுமார் பதினெட்டிலிருந்து, இருபது கோடியை தொடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஐம்பது நாளை கடந்திருக்கும் இம்மாதிரியான ஆவரேஜ் பட்ஜெட் படங்களின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு கிடைக்கும் புத்துணர்ச்சியான சுவாசம் என்றே சொல்ல வேண்டும்.
Nov 8, 2011
Mogudu
கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில், டாப்ஸி, கோபிசந்த, ராஜேந்திரப்ரசாத், நரேஷ், ரோஜா என்று ஏகப்பட்ட நட்சத்திரக்கூட்டம் குழுமியிருக்கும் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது இப்படத்தைப் பற்றி. அதிலும் போஸ்டர் டிசைனில் டாப்ஸியின் 16 எம்.எம். பரந்த முதுகை பார்த்ததும், பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தை இளைஞரகளுக்கு ஏற்படுத்தியிருந்ததால் பார்த்தாகிவிட்டது.
Nov 7, 2011
கொத்து பரோட்டா – 07/11/11
ஐரோம் ஷர்மிளா இவரை பற்றி தெரியாதவர்கள் நம்மில் அதிகம் பேர். பன்னிரெண்டு வருடங்களாய் உண்ணாவிரதம் இருந்து வருபவர். அன்னா ஹசாரே போல பப்ளிசிட்டியோடு உண்ணாவிரதம் இருப்பவர் அல்ல. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இவர் அங்கு இருக்கும் போராட்டக்குழுவை தடுக்க அமைத்த ராணுவம் அங்கிருக்கும் பெண்களை கற்பழித்து கொன்றதை பார்த்து, அதிர்ந்து போய் அதற்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர். இவரது போராட்டத்தை குலைக்க, இவரை தற்கொலை முயற்சி செய்தார் என்று ஜெயிலில் அடைத்தார்கள். தற்கொலை முயற்சிக்கு அதிகபட்சம் ஒரு வருடம் தான் ஜெயிலில் அடைக்க முடியும் என்பதால் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படிகடந்த பதினோரு ஆண்டுகளாய் இவருக்கு இக் கொடுமை நடந்து வருகிறது. தன் இளமையை இழந்து, உடல் உள் உறுப்புகள் சிதைந்து போய், மாதவிடாய் சைக்கிள் எல்லாம் கெட்டுப் போய் வெறும் திரவ உணவு மட்டுமே உட்கொண்டு இன்றும் தன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரேவுக்கு கிடைத்த மக்கள் ஆதரவோ, மீடியோ ஆதரவோ இவருக்கு கிடைக்காதது பெரும் குறையே.
###########################################
Nov 5, 2011
Revolution 2020
ஏதோ ஆங்கில படத்தின் விமர்சனம் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. டைட்டிலைப் பார்த்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றியது. ஆனால் எழுதியது சேத்தன் பகத் என்றதும் ஓகே.. இன்னொரு ஹிந்தி ஃபீல் குட் கதை ரெடி என்று தோன்றியது. சேத்தன் பகத்தை பற்றி ஆளாளுக்கு 3 இடியட்ஸ் படம் வந்த போது பேசினார்கள். அவரின் கதையைத்தான் இவர்கள் எடுத்தார்கள் என்று. ஆனால் அவருக்கு க்ரெடிட் கொடுக்கவில்லை என்றெல்லாம் கூட சொன்னார்கள். படத்தின் ஆரம்பத்தில் நன்றி போட்டததோடு சரி. ஆனால் முழுக்க, முழுக்க அவரின் நாவலை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டது என்றும் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கு உடனே அவரின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த படத்தின் மூலமான Five Points to Someone ஐ படிக்க பெரிதாய் ஆர்வமில்லை. அப்போதுதான் 3 idiots படத்தை பார்த்ததினால் வேறு ஏதாவது புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம் என்று One night @ call centre ஐ வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் தான் புரிந்தது இவர் ஏன் இவ்வளவு பிரபலமான எழுத்தாளராக இருக்கிறார் என்று.
மிகச் சுலபமான ஆங்கிலத்தில் நம் இந்திய கேரக்டர்களுடனான கதையை சுவாரஸ்யம் குன்றாமல் எழுதுவதில் இவர் மன்னன் என்று படிக்க, படிக்க புரிந்தது. அகராதியை வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய கட்டாயமில்லாத ஆங்கிலம். சட்டென கதைக்குள் நம்மை கொண்டு போகும் லாவகம். ஒரு சின்ன ப்ரச்சனை, கொஞ்சம் செக்ஸ், எமோஷன், செண்டிமெண்ட் எல்லாவற்றையும் சரியான விகிதத்தில் கலப்பதில் இவர் மன்னன். கால்செண்டர் கதை எனக்கு மிகவும் பிடித்தது. க்ளைமாக்ஸை தவிர, கொஞ்சம் சினிமாட்டிக்கான க்ளைமாக்ஸ் ஆனால் படு சுவாரஸ்யம். இந்த நாவலையும் ஹிந்தியில் திரைப்படமாய் எடுத்திருப்பதாய் கேள்வி நான் பார்க்கவில்லை.
Nov 4, 2011
Ra.One
இந்த தீபாவளிக்கு இந்தியில் வெளியான ஒரே பெரிய படம். கடந்த நாலு வருடங்களாய் தயாரிப்பில் இருந்த படம். ஷாருக்கின் மனதிற்கு மிக நெருக்கமான படம். இன்றைய அளவில் இந்தியாவின் காஸ்ட்லியான படம் என்றெல்லாம் பப்ளிசிட்டி செய்யப்பட்ட படம். தமிழ் நாட்டில் இப்படத்தின் மைலேஜை இன்னும் அதிகப்படுத்த ரஜினியை ஒரே ஒரு காட்சியில் தோன்ற வைக்கப்பட்ட படம் என்ற ஒரு விஷயம் வேறு சேர.. ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். நம் எல்லோருடைய எக்ஸ்பட்டேஷனையும் திருப்திப் படுத்தியதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
Nov 3, 2011
Nov 1, 2011
ரெண்டு இட்லி.. ஒரு வடை..
இந்த சொல்வடை பொது மக்களிடையே ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலம். இது யாரைக் குறிக்கும் என்றால் ஜூனியர் ஆர்டிஸ்ட் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொதுமக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம். படு கற்பனையான விஷயம். காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்விடுபவர்கள் என்று கிண்டலாய் சொல்கிறார்கள்.
Oct 31, 2011
கொத்து பரோட்டா -31/10/11
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனை விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று மம்மி சொல்லியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமேயில்லை. என்னை அவர்களை நம்பி.. ஆஹா ஓஹோவென காலில் விழாத குறையாய் துதி பாடியவர்களை பார்த்துத்தான் பாவ்மாய் இருக்கிறது. சட்டசபையில் தீர்மானமெலலாம் இயற்றினார்களே? என்று கேட்பவர்களுக்கு என்னா பாஸ் விளையாட்டுப் புள்ளைகளா இருக்கீங்களே? உள்ளாட்சி தேர்தலும் முடிஞ்சுருச்சு. இனி பாராளுமன்ற தேர்தலின் போதுதானே வந்து நிக்கணும். அப்ப பாத்துக்கலாம். அம்மா தன் இன்ப்ளூயன்ஸ் முழுக்க யூஸ் பண்ணி அவங்களை ரிலீஸ் பண்ணனும்னு சொல்லியிருக்காரு... தானைத் தலைவர். அம்மாவோட பதில் திருப்தி தரலையாம் டாக்டருக்கு. கேப்டன் ஒன்னியும் சொன்னாமேரி தெரியலை.
#############################
Oct 29, 2011
சாப்பாட்டுக்கடை - ID@ Sathyam
நல்ல தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் சென்னைவாசிகளின் முதல் ஆப்ஷன் சத்யமாய்த் தான் இருக்கும். சென்னையின் முக்கிய டெஸ்டினேஷன்களில் ஒன்றாக விளங்கும் இந்த மல்ட்டிப்ளெக்ஸில் முதல் மாடியில் ஒரு வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கிறது. பெயர் ஐடி. நிர்வாகத்தினர் பெயருக்கான பாண்ட் டிசைனிலேயே நம்மை கவர்ந்து விடுவார்கள். உள்ளே சென்றதும் அருமையான ஆம்பியன்ஸ். நடுவே சமையல் இடம். அதை சுற்றி பாரில் உள்ளது போல ஒரு சீட்டிங் அரேஞ்ச்மெண்ட். அவசர அடியாய் தனியாய் என்னைப் போன்றவர்களுக்காக அமைத்திருப்பார்கள் போலும். தோசைக்கல்லுக்கு முன்னாடியே உட்கார்ந்து சுடசுட சாப்பிடலாம்.
Oct 27, 2011
வேலாயுதம்
தொடர்ந்து ஆறரை தோல்விகள். அதை மீறி ஏதாவது மேஜிக் செய்வார் என்ற எதிர்பார்பை ரசிகர்களிடையே இன்னமும் வைத்திருக்கும் விஜய். தசாவதாரத்தை தயாரித்த புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன். ரீமேக் புகழ் ராஜா. ஹிட்டான பாடல்கள் என்று ஏழாம் அறிவுக்கான எதிர்பார்ப்பையும் மீறி தனக்கென ஒரு ஓப்பனிங்கை வைத்திருக்கும் விஜய்யின் படம். விஜய் லோ ப்ரொபைலில் இருக்கும் காலத்தில் வந்த படம் தான் திருமலை. அதற்கு முன்னால் ரிலீஸான படங்கள் எல்லாம் தோல்வியடைந்திருக்க, எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான திருமலை ஹிட்டடித்தது. அதே போன்ற மேஜிக்கை இந்த வேலாயுதம் செய்தானா? என்பதை பார்ப்போம்.
Oct 25, 2011
Trespass -2011
பல சமயங்களில் நம் உறவுகளின் பலம் பற்றித் தெரியாது. அதைப் பற்றி கவலை கூட பட்டிருக்க மாட்டோம். ஆனால் ஒரு ப்ரச்சனை என்று வரும் போது அந்த உறவுகள் பற்றிய அத்துனை விஷயங்களும் நமக்கு தெரியவரும். துன்பம் வரும் போதுதான் நிஜ நண்பர்கள், உறவுகள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வார்கள். அதை அடிப்படையாய் வைத்து வெளிவந்திருக்கும் படம் தான் இது. நிகலோஸ் கேஜ், நிக்கோல் கிட்மென், பிரபல இயக்குனர் ஜோல் ஷுமேக்கர் என்று எதிர்பார்பை ஏற்படுத்தும் ஸ்டார் காஸ்ட்.
Oct 24, 2011
கொத்து பரோட்டா -24/10/11
தமிழ் சினிமா என்கிற பொன் முட்டையிடும் வாத்தை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே நான் நிறைய முறை டிக்கெட் கட்டணங்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன். சென்ற ஆட்சியில் தான அவர்கள் குடும்பம் வியாபாரம் செய்தது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூறினார்கள். இந்த ஆட்சியில் வரிவிலக்கை ஆல்மோஸ்ட் ரத்து செய்து, வரியை டபுளாக்கியதை தவிர வேறேதும் இல்லை. ஆனால் அந்த வரி அரசுக்கு செல்லுமா? என்றால் அது இல்லை. ஒவ்வொரு தியேட்டரும் 120யிலிருந்து 300 ரூபாய் வரை மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பல தியேட்டர்களில் அந்த விலை வைக்க அரசாணையே கிடையாது. கேட்டால் வாய் மொழி உத்தரவு என்கிறார்கள். சில மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் டிக்கெட்டுடன் சாப்பாட்டை கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு ரசிகர்களை தள்ளுகிறார்கள். நிஜத்தில் கடைசியாய் நம் அரசாணைப் படி ஒவ்வொரு தியேட்டரும் வாங்க வேண்டிய டிக்கெட் விலை என்ன தெரியுமா? http://www.tn.gov.in/stationeryprinting/gazette/2009/22-III-1(a).pdf கீழே கொடுக்கப்பட்டுள்ள விலையில் தொழில் நடத்த முடியுமா? என்று கேட்பவர்களுக்கு ஆந்திராவில் இன்றைக்கும் ஒரு ஏசி, டி.டி.எஸ் தியேட்டரில் பால்கனி டிக்கெட் 50 ரூபாய்க்கு பார்க்க முடியும். ப்ரசாத போன்ற மல்ட்டிப்ளெக்ஸில் 70-80 ரூபாயில் படம் பார்க்க முடியும். சமீபத்தில் புத்தூரில் ஒரு தெலுங்கு படம் பார்க்க போனேன். அங்கு டிக்கெட் விலை வெறும் 35 ரூபாய்தான்.
Maximum rates as detailed below:—
Rates of Admission A/c Theatre Non A/c Theatre
Municipal Corporation:
Rates of Admission A/c Theatre Non A/c Theatre
Municipal Corporation:
Minimum Rs. 10/- Rs. 7/-
Maximum Rs. 50/- Rs. 30/-
Municipalities:
Minimum Rs. 5/- Rs. 4/-
Maximum Rs. 40/- Rs. 30/-
Town Panchayats:
Minimum Rs. 5/ - Rs. 4/-
Maximum Rs. 25/- Rs. 20/-
Village Panchayats:
Minimum Rs. 5/- Rs. 4/-
Maximum Rs. 15/- Rs. 10/-
Maximum Rs. 50/- Rs. 30/-
Municipalities:
Minimum Rs. 5/- Rs. 4/-
Maximum Rs. 40/- Rs. 30/-
Town Panchayats:
Minimum Rs. 5/ - Rs. 4/-
Maximum Rs. 25/- Rs. 20/-
Village Panchayats:
Minimum Rs. 5/- Rs. 4/-
Maximum Rs. 15/- Rs. 10/-
################################################
Oct 22, 2011
Oosaravelli
சமீபகாலமாய் தெலுங்கு பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மரண அடி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மகேஷ்பாபுவின் தூக்குடு வந்து கொஞ்சம் காப்பாற்றியது. எப்படி நம்ம மங்காத்தா தல அஜீத்துக்காக பார்த்தோமோ அதே நிலையில் தான் தூக்குடுவும். அந்த வரிசையில் இப்போது ஜூனியர் என்.டி.ஆர். சுரேந்திர ரெட்டி, தேவி ஸ்ரீ பிரசாத் என்று ஜாம்பவான்களின் அணிவகுப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
Oct 21, 2011
எண்டர் கவிதைகள் -20
பால்கனியின் ஜன்னலை
பூட்டுப் போட்டு வைத்திருக்கிறேன்
எதிர்வீட்டு இளைஞனோடு
அவள் ஓடாதிருக்க
பூட்டிற்கு வெளியே தெரு
விளக்கொன்று மினுக்கி
மினுக்கி எறிகின்றது
இருட்டினிலிருந்து பார்த்தாலும்
வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது
அவளுக்கு அவன் சிகரெட் முனையும்
அவனுக்கு அவள் மூக்குத்தி ஒளியும்
உடைகளை களைந்து பூட்டி வைத்தேன்
இருட்டில் நிர்வாணம் பொருட்டல்ல
மனமே பிரதானமென்று
பூட்டியும் பிரயோஜனமில்லை
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Oct 20, 2011
Oct 19, 2011
தமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.
சினிமா என்பதே கேளிக்கைதானே? தனியாக என்ன தமிழ்
சினிமா கேளிக்கைகள் என்று சிலர் கேட்கலாம். சினிமாவை பார்பவர்களாகிய நமக்கு
வேண்டுமானல் சினிமா கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் அதை தயாரிப்பவர்களுக்கு,
இயக்குபவர்களுக்கு, அதையே தன் வாழ்வாதாரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது
வெறும் கேளிக்கையல்ல வாழ்க்கை.
Oct 18, 2011
Sahib.. Biwi.. Aur Gangster
குருதத்தின் சாஹிப், பீவி, அவுர் குலாம் படத்தின் பெயரை உங்களுக்கு இது ஞாபகப்படுத்தலாம். ஆனால் இது வேறு. சமீபத்தில் வெளியான பல தமிழ், தெலுங்கு பட ரீமெக் ஹிந்தி படங்களை பார்க்கவே இஷ்டமில்லாமல் இருந்தேன். சரி பெயரளவில் ஏதோ நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று பார்த்த படம். ஆனால் படம் பார்த்து மூன்று நாட்களாகியும் மனதினுள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
Oct 17, 2011
கொத்து பரோட்டா - 17/10/11
தேர்தல் காலத்தில் மக்கள் நல பணிகள் எதையும் ஆளும் அரசு செய்யக்கூடாது என்று தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு. சென்ற சட்டமன்ற தேர்தலில் கண்கொத்திப் பாம்பாய் இருந்த தேர்தல் கமிஷன் இம்முறை எதையும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. ஏன் மக்கள் நல பணிகளை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் என்றால்.. தேர்தல் சமயத்தில் ரோடு, குடிதண்ணீர் போன்ற வசதிகளை செய்து கொடுத்து அதன் மூலமாய் அரசு இயந்திரத்தின் மூலமாய் ஓட்டு வாங்கிவிடக் கூடாது என்பதற்காக்த்தான். ஆனால் சென்னையில் பல இடங்களில் புது ரோடுகள் போடப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் கமிஷன் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. பணம், பொருள் போன்றவைகளை விநியோகம் செய்வதில் இம்முறை ஆளும் கட்சி தான் முன்னிலையில் இருப்பதாய் தகவல். ஆனால் அதையும் கேட்பதாய் இல்லை.உள்ளாட்சி தேர்தலுக்காக ஜனநாயக கடமையாற்றிவிட்டு வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஏண்டா ஓட்டுப் போட்டோம் என்று வருந்தப்படும் அளவிற்கு நிச்சயம் வரும் காலத்தில் நடக்கத்தான் போகிறார்கள். நாமும் மறுக்கா அடுத்த தேர்தலில் ஓட்டுப் போட வெய்யிலில் இருக்கத்தான் போகிறோம். என்னா கொடுமை சார் இது..
##########################################
##########################################
Oct 14, 2011
உயிரின் எடை 21 அயிரி
தமிழில் பெயர் வைத்தால் தான் வரி விலக்கு என்றிருந்த காலத்தில் வேறு வழியேயில்லாமல் கட்டாயத்தினால் கிராம் என்பதற்கு அயிரி என்று தமிழில் தேடிக் கண்டுபிடித்து வைக்கப்பட்ட பெயர். சுமார் ஒரு வருடம் கழித்து வருகிறது. பிரபல மலையாள நடிகர் திலகன் நடித்த தமிழ் படம். வெகு காலத்திற்கு பிறகு பிலிம் இன்ஸ்டிடூயூட் மாணவர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
Oct 13, 2011
நான் – ஷர்மி – வைரம் -9
9.நான்
முதல் நாள் அனுபவத்திற்கு பிறகு நானும் செந்திலும் மிக நெருக்கமாகிவிட்டோம். கையில் இருந்த காசையெல்லாம் சினிமாவுக்கும், தண்ணிக்குமாகவே செலவாகிவிட, மீண்டும் காசுக்கு என்ன செய்வது? என்ற யோசனையே ஒரு விதத்தில் டார்ச்சரை கொடுத்தது. முதல் அனுபவம் இருவருக்குமே கற்பனையை மீறிய விஷயமாய் இருந்ததால் அடுத்த வாய்ப்புக்கான ஏக்கம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கிருந்து போன் வரவில்லை. கூப்பிடலாமா என்று தோன்றிய போதெல்லாம் அவனே கூப்பிடுகிறேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
முதல் நாள் அனுபவத்திற்கு பிறகு நானும் செந்திலும் மிக நெருக்கமாகிவிட்டோம். கையில் இருந்த காசையெல்லாம் சினிமாவுக்கும், தண்ணிக்குமாகவே செலவாகிவிட, மீண்டும் காசுக்கு என்ன செய்வது? என்ற யோசனையே ஒரு விதத்தில் டார்ச்சரை கொடுத்தது. முதல் அனுபவம் இருவருக்குமே கற்பனையை மீறிய விஷயமாய் இருந்ததால் அடுத்த வாய்ப்புக்கான ஏக்கம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கிருந்து போன் வரவில்லை. கூப்பிடலாமா என்று தோன்றிய போதெல்லாம் அவனே கூப்பிடுகிறேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
Oct 12, 2011
சாப்பாட்டுக்கடை- O. S.S CHATS
சாட் அயிட்டங்கள் எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா போன்ற அயிட்டங்கள் மேல், பல பேருக்கு தனியாத மோகம் இருக்கவே செய்கிறது. முக்கியமாய் பானிபூரி. அதனால் தான் தெரு முனையில் எல்லாம் ரோட்டில் பானி பூரி விற்பனையாகிறது. அப்படிப்பட்ட இடங்களில் சுகாதாரம், தரம் பற்றி யோசனையினால் நிறைய பேர் சாப்பிடாமல் போய்விடுவார்கள். அப்படி தரம், சுகாதாரம் பற்றி யோசித்தால் கங்கோத்ரி மாதிரியான இடங்களில்தான் கிடைக்கும். விலையும் அதை போலவே இருக்கும்.
Oct 11, 2011
நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.
இரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.
Oct 10, 2011
கொத்து பரோட்டா - 10/10/11
ஒரு நாளைக்கு பத்து பேராவது வருகிறார்கள். மேயர் வேட்பாளர், கவுன்சிலர் என்று. யார் எந்தக் கட்சி என்று புரியவேயில்லை. பெரும்பாலான தேர்தல்களில் இவர்களை ஏதாவது ஒரு கட்சியின் பின்னால் இருந்து பார்த்தாகிவிட்டதால் இவர்கள் நேரில் வரும் போது கொஞ்சம அப்ரசண்டித்தனம் தெரிகிறது. நம் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்த வேட்பாளரின் கட்சியை தெரிந்து கொண்டே மாற்றி மாற்றி கட்சி பெயர் கேட்டார். பின்னர் வழக்கமாய் இரண்டு பேருக்கு ஓட்டுப் போட்டு என்னத்த கண்டோம்? இந்த வாட்டி உங்களுக்கு போடறேன் என்று சொன்னதும் சந்தோஷமாய் கிளம்பிய வேட்பாளரின் கடைசி தொண்டன், “சார்.. இந்த வாட்டி நம்மளுக்கு போட்டுப் பாருங்க.அப்புறம் தெரியும்” என்றவுடன், நம் நண்பர் “ என்ன இப்ப நீங்க ஓட்டு கேட்டு எங்க வீட்டுக்கு வர்றீங்க.. அப்புறம் எங்களை உங்க ஆபீஸுக்கு அலைய விடுவீங்க அவ்வளவுதானே. இது எவன் வந்தாலும் மாறாது” என்றாராம். அந்த தொண்டர் எதுவும் பேசாமல் வெளியே போய் விட்டாராம். போனது பெரிதில்லை. ரோட்டிற்குப் போய் தனியாய் சிரித்துக் கொண்டிருந்தாராம்.நிஜம் சிரிக்கிறது.இம்மாதிரியான நேரங்களில் இவர்களை கலாய்ப்பது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.
#######################################
#######################################
Oct 7, 2011
Oct 6, 2011
வேலூர் மாவட்டம்
வழக்கமாய் மதுரை, திருநெல்வேலி, கோவை என்றிருந்த்ததை வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள் இப்படத்தின் மூலம். படம் முடிந்து ரொம்ப நாள் ஆகியும் வ்ளியிட சமயம் கிடைக்காமல் வெயிட் செய்து மேலும் வெளியிட லேட்டானால் வெளங்காது என்பதால் உடனடியாய் ஓடுகிற வரை ஓடட்டும் என்று பதட்டமாய் கிடைத்த தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)