Thottal Thodarum

Jan 31, 2011

கொத்து பரோட்டா 31/01/11

galgut இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை எதிர்த்து ட்வீட்டரில் ஒரு பெரிய அலையே எழுந்துள்ளது. இது சம்பந்தமான ஒரு டீவிட்டர்களின் கூட்டம் கூட நேற்று மெரினாவில் நடந்தது. அதே போல ஸ்ரீலங்காவில், கல்லேயில் நடக்கும்  லிட்டரரி பெஸ்டிவல் எனும் புத்தகக் கண்காட்சியை சவுத் ஆப்பிரிக்க எழுத்தாளர் டாமன் கால்குட் என்பவர், மீனவர்கள் மீதான தாக்குதல், மனித உரிமை மீறல் குற்றஞ்சாட்டி கலந்து கொள்ளாமல் பாய்காட் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக இன்னும் சில பிரபல எழுத்தாளர்களும் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் எழுத்தாளர் திஷானி தோஷி, சைனா எழுத்தாளர்களும் விழாவில் கலந்து கொள்கிறார்ளாம். விழாவுக்கு மனித உரிமை சார்பாக எதிர்ப்பு இருப்பது உண்மைதான் என்றும் சொல்கிறார் இவ்விழாவின் அமைப்பாளரும், ஸ்ரீலங்காவின் பிரபல நாவலாசிரியருமான ஷியாம் செல்வதுரை. 
#################################################

Jan 30, 2011

நண்பனின்….

அன்புள்ள நண்பர் சங்கருக்கு..
உங்களின் கதைகளைப் படித்தேன். “மீண்டும் ஒரு காதல் கதை”யைப் படித்து முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டியது. மறுபடியும் படித்தேன். ‘ஷ்ரத்தா” கேரக்டர் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. சுஜாதாவின்”பிரிவோம்..சந்திப்போம்’ நாயகி மதுமிதா எவ்வளவு தூரம் மனதை பாதித்தாளோ.. அதே அளவு ஷ்ரத்தாவும் என் மனதை பாதித்துவிட்டாள். இப்படிஒருத்தியை வாழ்வில் சந்திக்க மாட்டோமா? என்ற ஏக்கம் வயதையும் மறந்து வருகிறது. (அப்படியொன்றும் வயதாகிவிடவில்லையே.. “நாமெல்லாம் இளைஞர்கள் தானே..”).

Jan 29, 2011

பதினாறு

12_New-Pathinaru-Stills-02 மிர்ச்சி சிவா, இளமையான டிசைன்கள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, அம்சமான டைட்டில் என்றதும் ஏதோ இளமை துள்ளிக் குதிக்கும் கதையாக இருக்கும் என்றெண்ணி துள்ளிக் குதித்து படம் பார்க்கப் போகிறவர்களா நீங்கள்? அப்போது இந்த விமர்சனம் உங்களுக்குத்தான். பாவி மக்கா சாச்சுபுட்டாய்ங்கடா.. சாச்சுபுட்டாய்ங்க

Jan 27, 2011

127 Hours


127_hours_wallpaper_001 வாழ்க்கையை உற்சாகமாகவே கழிக்கும்  இளைஞன் ஒருவன். ப்ளூ கேன்யானில் ஒரு மலையிடுக்கின்  பாறையில் கை மாட்டிக் கொண்டு, ஐந்து நாட்கள் வாழ்வா சாவா போராட்டம் நடத்தி,  வாழும் வெறி மட்டுமே அவனை உயிரோடு கூட்டி வந்த அதிசயத்தை சொல்லும் படம். இதுதான் கதை என்றதும் இதை ஒரு அரை மணி நேர டாக்குமெண்டரியாக எடுத்தால் பரவாயில்லை ஒரு முழு படத்திற்கு தாங்குமா? என்ற கேள்வி எழுத்தான் செய்யும். ஆனால் படம் ஓடும் ஒன்னரை மணி நேரமும் நம்மை அவனோடு ஆழ பயணிக்க வைத்துவிடுகிறார்கள்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குனர் டேனிபாயலும் அவரது குழுவினரும்.

கவிஞரின் பார்வையில்....

rajasundararajan@gmail.com
அன்பின் சங்கர்,
போக்குவரத்தில் வண்டி ஓட்டிச் செல்கிற போது, நமக்கு முந்தி, பிந்தி, அடுத்து ஊர்கிற வண்டியோட்டிகளின் மன-ஓட்டம் இன்னதென்று அறியக் கிட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா?

‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த போது, அந்தக் கிழவிக் குணவார்ப்பின் மன-ஓட்டங்கள் அப்படி அப்பட்டமாகப் புரியவர - வியந்தேன் என்று சொல்லமாட்டேன் – திகைத்தேன்! ஏனென்றால், அதுவரை நான் பார்த்திருந்த (தமிழ், ஆங்கில, ஹிந்தி) மசாலாக்களில் ஆக்ஷன், பேச்சு, பின்னிசை அளவிலேயே கதை நகர்த்துதலைக் கண்டிருந்தேன்.
Final Layout1
மெய்ப்பாடுகள் வழியாகத்தான் குணவார்ப்புகள் விளக்கம் பெறுகின்றன. உண்மைதான், ஆனால் கதைக்கள விவரணைதான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆடுகளம்’ படத்தில், நடிகர்கள் ஓரொருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் கதைக்களம் எடுத்துத் தொடுக்கப்பட்ட வகையினாலேயே அக் குணவார்ப்புகள் தனித்தன்மை பெறுகின்றன. அப்படி, இயக்குநரே கர்த்தாவாகிறார்.
புத்தக வடிவுக்குட்பட்ட உங்கள் கதைகள் அத்தனையையும் வாசித்துவிட்டேன். உண்மையில், வாங்கி இரண்டு நாட்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்துவிட்டேன். உடனே அவைபற்றி எழுதியிருக்க வேண்டும். ஆனால் அது ஒன்றே அலுவலாக வாழ முடிகிறதா என்ன? இடைப்படுகிற பல கடமைகளையும் கடந்தேறி மீள்கையில், என் நினைவுப்புலம் மங்கியிருக்கக் கண்டேன். வயதாகிவிட்டது அல்லவா? ஆனால் எல்லாக் கதைகளும் அப்படி மங்கிவிடவில்லை. ஒன்றிரண்டு நெருடலாக நினைவில் நின்றுகொண்டுதான் இருந்தன. அதாவது, அவற்றை உணர்ந்து உள்வாங்கியிருக்கிறேன் என்று பொருள். அதற்கு அந்தக் கதைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் காரணமாகலாம் அல்லது அவற்றில் வரும் நிகழ்ச்சி/ நேர்ச்சிகள் காரணமாகலாம்.

வாசித்துக் கிட்டிய வழி, உங்கள் எழுத்துநடை ஈர்ப்புள்ளது என்றுதான் சொல்லப்பட வேண்டும். எங்கேயுமே சலிப்புத் தட்டவில்லை. உங்கள் மொழிநடையும் என்னை மிகவும் கவர்ந்தது என்று ஒத்துக்கொள்கிறேன்.

//அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட - ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைக்கப்பட்ட - ஒரு திரைக்கதைதான் இந்த தரிசனம்...// - (‘தரிசனம்’)

//சே, எதற்கு இந்தப் போதை என்று படுக்கும்போது நினைத்து, காலையில் எழுந்தால், அவளின் ‘ஹாங் ஓவர்’. அவளால் ஏற்பட்ட ஹாங் ஓவரைச் சரிசெய்ய அவளே வேண்டும்.// - (‘என்னைப் பிடிக்கலையா?’)

//ஒரு இலக்கில்லாத மாலை நேரத்தில் கால் போன போக்கில் இந்தத் தெரு வழியாய் வந்த போதுதான் அவளைப் பார்த்தேன். அவளைப் பார்த்த மாத்திரத்தில் எனக்குள் சிலிர்த்தது. எனக்கானவள் என்ற ஒரு உணர்வு உடலெங்கும் பதறிப் பதறி ஓடியது.// - (காதல்)

//ட்ராஃபிக்கில் மாட்ட, இன்னும் எரிச்சல் ஆனது. சிக்னலில் தேவையில்லாமல் வண்டியை முறுக்கிக்கொண்டிருந்தேன்.// - (மீண்டும் ஒரு காதல் கதை)

lemon tree 28 without  image
வாசிக்கிறவர் உணர்ந்துகொள்ளும்படி உணர்வுபூர்வமாக உங்களால் சொல்ல முடிகிறது. சுஜாதாவைப் போல என்று சொல்லமாட்டேன், உங்கள் தனித்தன்மை தெரிகிறது, ஆனால் சுஜாதா வகைப் பளிச்சிடல்களும் மிளிர்கின்றன. அன்னார் அருள் வாழ்க!

வாசித்து நாளான பிறகும் ஒன்றிரண்டு நினைவில் நிற்குமானால், அந்தக் கதைகளில், வாசித்தவர் அனுபவத்தைத் தொட்ட ஏதோ ஒன்று இருக்கிறதுதானே? அது கதையின் கருத்தாக இருந்தால், கதையாசிரியர் ஒரு இலக்கிய கர்த்தா மட்டுமே; நிகழ்ச்சி/ நேர்ச்சியாக இருந்தால், திரைக்கதை ஆசிரியராகும் தகுதியும் பெறுகிறார்.

நீங்கள் ஓர் இலக்கியக் கர்த்தாவாகத் தேறிவிட்டீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஓர் இலக்கியக் கர்த்தா என்பதினும் ஒரு திரைக்கதைக் கர்த்தா ஆவதில்தான் உங்கள் அக்கறை என்பதினால், எனக்குத் தெரிந்த அளவுக்கு அந்தக் கோணத்திலும் இந்தக் கதைகளைப் பார்க்க முயன்றேன்.

“ஹை, தபார்டா, ரிலேசன்னா அப்ப எதுக்கு நைனா.. முக்கா அவரா.. நூல் உட்டுகிணு இருந்தே?” - (‘முத்தம்’)

“பக்தில என்ன ஹிந்து, கிறிஸ்டியன். நம்பிக்கைதான் வாழ்க்கைன்றது என் பக்தி. நீ அதையே வேறு ஒரு சாமிக்குக் கிரெடிட் பண்றே, அவ்வளவுதான். இவ்வளவு பெரிய கூட்டத்துல பதினேழு கிலோமீட்டர் நடந்துதான் பக்தியை வெளிப்படுத்தணுமா?” - (‘உன் கூடவே வரும்..’)

“நாளையிலிருந்து செர்ரி ரெட்டில் லிப்ஸ்டிக் போடாதே, கன்ட்ரோல் செய்ய முடியலை.”, “இன்னைக்கு எத்தனாவது சிகரெட்?”, “ஒரு சிகரெட்டுக்கு ஒரு முத்தம் கொடு, விட்டுவிடுகிறேன்.” - (‘முற்றுப்புள்ளி’)

“நீ என்னைப் போன்றவளிடம் படுத்ததில்லை என்றால், வேறு எவளிடம் படுத்திருக்கிறாய், கண்ணகியிடமா?” - (‘ராமி, சம்பத், துப்பாக்கி’)

இவை நீங்கள் ஒரு சிறந்த வசனகர்த்தா என்பதைச் சுட்ட, நான் அங்கங்கு இருந்து எடுத்தவை. ‘துரோகம்’ கதை முழுவதையும் இங்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், ஒரு திரைக்கதையாளர் சிறந்த வசனகர்த்தாவாக இருந்தாகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கூலிக்கு ஆள் வைத்து வசனம் எழுதுகிற (மணிரத்னம், சங்கர் இன்ன) திரைக்கதையாளர்களும் இருக்கிறார்கள். என்றால் திரைக்கதைக்கு வேண்டிய சரக்கு எது? நம் பண்டை இலக்கண நூலார் அதை ‘நாடக வழக்கு’ என்றார்கள்.

“உன்னைப் போல அதிர்ஷ்டக்காரி இருக்க முடியாது, ஜெனி. உன் அண்ணனுக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடிவந்து, ஜீவாவைக் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாவதற்குள், உன் அண்ணன் உன் வீடு தேடிவந்து உன் கணவனைத் தாக்க, இருவருக்கும் கைகலப்பாகி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதில், உன் கணவனுக்கு ஞாபகங்கள் எல்லாம் போய்விட, உன் அண்ணன் கோமாவில் படுத்தவன் எப்போது எழுந்திருப்பான் என்றே தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாய் நீ பட்ட கஷ்டம்தான் கொஞ்சம் கொஞ்சமாய் உன் கணவனுக்கு ஞாபங்கள் வர, என் மருத்துவமும் நீ கொடுத்த ஆதரவால்தான் இவ்வளவு முன்னேற்றம். கவலைப்படாதே, ஜெனி, இன்னும் ஒரே மாதம், என் மருத்துவம் செய்யாத ஜீனி வேலையை இனி உன் காதல் செய்துவிடும் பார்.” - (‘ஒரு காதற்கதை இரண்டு க்ளைமாக்ஸ்’)

இது கதையைக் கொண்டுகூட்டப் போதுமானதுதான், ஆனால் ஒரு திரைக்கதையாளனுக்கு ஆகாத ஒன்று. வசனமாய் வருவதைத் தவிர்த்துக் காட்சியாய்ப் புலர்த்திக்காட்ட என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கலாம். வலைப்பதிவுக்காய் எழுத நேர்ந்ததால் வந்த கோளாறு இது என்றே எண்ணுகிறேன். ஒரே இடுகையில் பதிவேற்றித் தீரவேண்டும் என்று கட்டாயமா என்ன? இடைவேளை விட்டுத்தானே சினிமாக் காட்டுகிறீர்கள்?

நான் சொல்ல வருவதும் இதுதான். ஒரு சினிமா எழுத்தாளனாக உள்வேட்கை கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் எல்லாக் கதைகளையுமே இரண்டு இடுகைகளாகப் பதிவேற்றுகிற வகையில் எழுதினால் என்ன? வலைத்தளத்தை உங்கள் நோக்கங்களுக்கான பயிற்சிக் களமாக மாற்றலாமே? முதல் இடுகையில், ஒரு திரைக்கதைக்கான முதல் மூன்று plot point-களும் இரண்டாவது இடுகையில், மேலும் இரண்டு plot point-களும் அமைகிறாற்போல எழுதிப் பாருங்களேன்.
‘மீண்டும் ஒரு காதல் கதை’, நீங்கள் உங்களை ஓர் youth என்று உணர்வதற்கு இணங்க, youthful-ஆக இருக்கிறது. இங்கே, என் வாசிப்பு நோக்கத்தின் காரணம், இந்தக் கதையைப் பகுத்துப் பார்த்தேன்:

மொத்தம் 34 பக்கம். இதில் 3 % to 9 % என்பது 1-இல் இருந்து 3-ஆவது பக்கம் வரை; 25% = 9-ஆம் பக்கம்; 50% = 17-ஆம் பக்கம்; 75% = 26-ஆம் பக்கம்; 96% = 33-ஆம் பக்கம். இவை கதையின் திருப்புமுனைகள் வந்தாகவேண்டிய பக்கங்கள்.
புத்தகத்தின் 6-ஆவது பக்கத்தில் கதை தொடங்குவதால், 6 ~ 8 ஆவது பக்கத்துக்குள் முதல் திருப்புமுனை வந்தாகவேண்டும். அதாவது முதல் அத்தியாயத்திலேயே. ஆம், வருகிறது. மூன்று முதன்மைக் குணவார்ப்புகளும் அறிமுகப்படுத்தப் பட்டதோடு, “ஹவ் டேர் யூ டச் மை ஹேர்?” என்னும் கோபக் கத்தலில் முதல் திருப்புமுனை வந்துவிடுகிறது.

அடுத்து, 14 (9 + 5)-ஆம் பக்கத்தில், ஷ்ரத்தாவின் காது வளையத்தால் நேரும் விபத்து காரணம் உருவாகும் அடுக்கமும், அவளிடமிருந்து சங்கருக்கு வரும் போன் காலிலும் இரண்டாவது திருப்புமுனை வந்திருக்கிறது.

22-ஆம் பக்கத்தில், அவள் அவனை நெருங்கவிட்டு உதைத்துத் தள்ளி வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வதில் மிகச் சரியாகவே மூன்றாவது (அதாவது இடைவேளைத்) திருப்புமுனை வந்திருக்கிறது. ஆனால் அந்த அத்தியாயம் அங்கே முடிந்திருக்க வேண்டும். நீட்டிக்கொண்டுபோய் முத்தத்தில் முடித்திருப்பது கதை முடிவைக் கணக்கில் வைத்து எழுதப்பட்டிருக்கலாம். தேவை இல்லை என்பதே என் கருத்து.

31-ஆம் பக்கத்தில், அவள் அவனை அவன் முயற்சியைக் கடைகட்டிவிட்டு அமெரிக்காவுக்கு வரச்சொல்லும் சிக்கல் (crisis) திருப்புமுனை சரியாகவே வந்திருக்கிறது, ஆனால் இங்கும் அத்தியாயம் சரியான புள்ளியில் பிரிக்கப்படாத இலக்கியத்தனம் நிகழ்ந்திருக்கிறது.

36-ஆம் பக்கத்தில்... (இது இங்குதான் அமைய வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை - எ.டு: ஹிட்ச்காக்கின் ‘Frenzy’ படத்தில், climax-உம் resolution-உம் ஒரே புள்ளியில் அமைந்திருக்கக் காணலாம்.)... இக் கதையிலும் இது அப்படி அமைந்திருக்கக் காண்கிறேன்.

உங்களுடை கதைகள் எல்லாமே வாசகத் தன்மையுள்ள மொழிநடையில் உள்ளதோடு, மிக்கவாறும் முடிச்சுகள்/ அவிழ்ப்புகளோடு கூடியதொரு நாடகவழக்கு எழுத்துநடையிலும் ஆகிவந்திருப்பதால் நீங்கள் திரைக்கதை ஆசிரியத் தகுதிக்கு உரியவர்தான் என்பது மிகத் தெளிவாகவே வெளிப்பட்டிருக்கிறது. நான் தொடக்கத்தில் கூறிய போக்குவரத்துச் சூழ்நிலை, இப்படி முடிச்சுகள்/ அவிழ்ப்புகள் நிறைந்த ஒன்றுதான் என்று நினைவுகூர வேண்டுகிறேன். (‘பதேர் பாஞ்சாலி’யும் செம்மையானதொரு திரைக்கதை வடிவம் கொண்டதாகப் போற்றப் படுகிறது).

என்னைப் பாதித்து, நாட்பட்டும் என் நினைவில் நின்றவை: ‘தரிசனம்’, ‘ஒரு காதற்கதை இரண்டு க்ளைமாக்ஸ்’, ‘போஸ்டர்’, ‘கமான்.. கமான்..’, ‘பைத்தியம்’, ‘தேவர் மாப்பிள்ளை’, ‘தனுக்கு கொண்டாலம்மா’ ஆகியவை. இவற்றில், ‘தனுக்குக் கொண்டாலம்மா’க் கதையின் கருத்து (உடற்புனித மனவக்கிரம், இருந்தும் அறம்பிதற்றல்) காட்டும் இந்தியப் போலிமை தோலுரிக்கப்பட்டது அருமை. நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர் சிறப்பித்துச் சொன்ன, ‘குண்டம்மா பாட்டி’ மிகச் சாதாரணமானதொரு கதையாகவே எனக்குப் படுகிறது. (அளியரோ அளியர் நம் பாரதப் பெண்கள்!).
அன்போடு
ராஜசுந்தரராஜன்

நன்றிகள் பல கவிஞர் அவர்களே..
கேபிள் சங்கர்

Jan 25, 2011

சாப்பாட்டுக்கடை

Photo0122
இந்தக் கடையை அடிக்கடி திருவெல்லிக்கேணியில் சுற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைவிட ரொம்ப காலமாய் தேவியில் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்.  ஏனென்றால் தேவியில் படம் பார்க்க முன் பக்கமாய் அனுமதிப்பவர்கள்,படம் விட்டவுடன் பின்பக்கம் உள்ள அவுட் கேட் வழியாகத்தான் அனுப்புவார்கள்.. அப்போது வெளியே வரும் பெரும்பாலானவர்கள் இங்கே சாப்பிடாமல் போயிருக்க மாட்டார்கள். இப்போது சில சமயம் முன் பக்கம் வழியாகவும் விடுவதால் இன்றைய புது ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது ஸ்பெஷாலிட்டி சமோசா, கச்சோடி, ரசமலாய், ரசகுல்லா அல்லது ஜாமூன், ஜிலேபி, மற்றும் பால்கோவா,  மற்றும் லஸ்ஸி.

எப்பவும் அடுப்பிலிருந்து சூடான சமோசாவும், கச்சோரியும் எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பார்கள் அது காலியாகிக் கொண்டேயிருக்கும். சமோசாவென்றால் ஏதோ வெங்காயத்தையும் உருளையையும் சேர்த்து ஃபில் செய்தது கிடையாது. முழுக்க, முழுக்க உருளை மசாலாவை மட்டுமே வைத்து செய்யப்படும் சமோசா.. மவுண்ட் ரோடில் ஒரு ரூபாய்க்கு சமோசா விற்ற காலத்திலேயே இரண்டரை ரூபாய்க்கு விற்றவர்கள். இப்போது இவர்களது விலை ஒரு சமோசா 5 ரூபாய்.  இவர்களுடய இன்னொரு ப்ளஸ் பாயிண்ட், சர்வீஸ். சட்சட்டென மந்தார இலையில் சூடான சமோசாவை வைத்து அதை அப்படியே கட்டைவிரலால் ஒரு அழுத்து அழுத்தி, நடுவே கார சட்னியும், புளிசட்னியும் ஒவ்வொரு கரண்டி ஊற்றி அப்படியே கையில் கொடுப்பார்கள்.  சூடான சமோசாவுக்கும்,  சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட மசாலும், சட்னியும் டிவைனாக இருக்கும். அதே போல் கச்சோரியில் நடுவில் ஓட்டைப் போட்டு அதில் சட்னிகளை ஊற்றி கொஞ்சமே கொஞ்சம் மிக்ஸரை போட்டு கொடுப்பார்கள்.

ஸ்வீட் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு இருக்கவேயிருக்கு சூடான ஜிலேபி, ஒரு 50 கிராம் ஜிலேபியோ, ரசமலாயோ,அல்லது பால்கோவாவோ சாப்பிட்டுவிட்டு, நல்ல காரம் மணம் கொண்ட சமோசாவையும் லபக்கிவிட்டு, மசாலா மற்றும் ஜல்ஜீரா கலந்த  லஸ்ஸியோ, ஸ்வீட் லஸ்ஸியோ, சால்ட் லஸ்ஸியோ ஒன்று அடித்துவிட்டு கிளம்பினால் மதிய சாப்பாடு ஓவர். புளிக்காத, எல்லா லஸ்ஸியிலும் அரை கரண்டி மலாய் இல்லாமல் இருக்காது. இத்தனைக்கு இது ஒரு கையேந்திபவன் கடை.
கேபிள் சங்கர்

Jan 24, 2011

கொத்து பரோட்டா 24/01/11

சென்ற வாரம் யுத்தம் செய் படத்தின் ப்ரோமஷனுக்காகவும், உலக சினிமா பற்றி பேசவும், வழக்கம் போல் விஜய் டிவியில் கூப்பிட்டிருந்தார்கள். வழக்கம் போல் போயிருந்தோம். அவர்களும் வழக்கம் போல் இரண்டு மணிக்கு வரச் சொல்லிவிட்டு ஆறரை மணிக்கு ஆரம்பித்தார்கள். மீண்டும் வழக்கம் போல் போய்விட்டு வந்து புலம்புகிறேன். ஆனால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாய் இருந்தது. வருகிற குடியரசு தினத்தன்று ஒளிபரப்பாகிறது. வாட்ச் இட்.
###########################################
மிஷ்கினிடம் சாருவை பற்றிக் கேட்ட போது சாரு என் நண்பர், நண்பர், இன்னமும் என் நண்பர் என்றார். ஒரு வேளை சேர்ந்திட்டு இவரு நண்பனின் துரோகம்னு புக் போடுறதுக்கும், அவர் நந்தலாலாவுக்குமா ஆட்டம் ஆடுறாய்ங்களோ. அதே போல உலகப் படம் பத்தி கேட்ட போது அவர் சொன்னது தமிழ் நாடும் உலகத்தில தானே இருக்கு என்பதுதான். இதைத்தான் அவருடய நந்தலாலா நிகழ்ச்சியில் சொன்னேன். சேம் பிஞ்ச்
###########################################
பதிவுகளில், பத்திரிக்கைகளில், மாத இதழ்களில்  எழுதுவதை தவிர சில புதிய இணைய இதழ்களிலும் எழுதக் கேட்கிறார்கள். அப்படி புதிதாய் ஆரம்பித்திருக்கும் இணைய தமிழ் இதழான அதீதம் எனும் தளத்திலும் எழுத கேட்டிருந்தார்கள். அதில் பொங்கல் படங்களை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நான் எழுதியிருந்தேன். அது மட்டுமில்லாமல் நல்ல சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சினிமா என்று எல்லா தளத்திலேயும் முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய இரட்டை வேட டெக்னிக் பற்றிய இந்த பதிவு செம இண்ட்ரஸ்டிங்.. உங்களின் படைப்புகள் அதீதம் இதழில் வர அவர்களது மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். முக்கியமாய் இணையத்தில் எங்கும் வெளிவராத படைப்புகளாய் இருப்பது நன்று.atheetham@gmail.com
###########################################
இந்த வார தத்துவம்நல்ல செழுமையான பாசிட்டிவ் எண்ணங்கள் பாசிட்டிவான விளைவுகளை கொடுக்கும்.

நேரம் தான் உலகத்தின் மிக முக்கியமான ஆட்ட நாயகன். ஏனென்றால் அது தான் நாம் காத்திருக்கும் போது அதிக நேரம் போலவும், கொண்டாட்ட களியாட்டகளின் போது விரைவாக ஓடும்.
############################################
அப்பா வீடு ஒண்ணு சீக்கிரம் கட்டுப்பா… என்றான் சின்னவன். இருக்கிற வீட்டிற்கு சரியாக வாடகை கொடுத்தாலே பெரிய விஷயம் என்று மனதுள் நினைத்தபடி சரி என்றேன், மொத்தம மூணு பெட்ரூம், எங்களுக்கு ஒண்ணு, உங்களுக்கு, பாட்டிக்கு, அப்புறம் ஒரு பெரிய கிச்சன், கோயில் மாதிரி கட்டின சாமி ரூம், பெரிய ஹால். அதில பிஸ்2,3, எக்ஸ்பாக்ஸ், ஹோம் தியேட்டர், பெரிய ப்ரொஜெக்டர், பெரியஎல்.ஈ.டி டிவி, அப்புறம் ஒரு ரொமான்ஸ் ரூம். என்றான் அதை கேட்டதும் அதிர்ந்து போய் அதென்னடா அது ரொமான்ஸ் ரூம் என்றதும், “என்னப்பா இது கூட தெரியல.. இந்த ஸ்டார் ஓட்டல்ல கொஞ்சமா லைட் போட்டு நடுவுல சேர் போட்டு ஒருபாய் கேர்ள் பேசிக்குவங்களே அதான்” என்றான். சினிமா
############################################# 
இந்த வார ப்ளாஷ்பேக்
Fools Gardernனின் லெமன் ட்ரீ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அற்புதமான பாடல் வரிகள். எப்போதெல்லாம் கொஞ்சம் டல்லாகிறேனோ அப்போதெல்லாம் இப்பாடலை கேட்டாலோ, பார்த்தாலோ சட்டென புத்துணர்ச்சி வந்த மாதிரி இருக்கும். அவ்வளவு அருமையான பாடல்.
#################################################
இந்த வார குறும்படம்
வீடு
என்கிற இந்த குறும்படம் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படமாய் தெரிகிறது. ஆனால் சுவாரஸ்யமாய் கதை சொல்ல முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
########################################################
இந்த வார விளம்பரம்
####################################################
இந்த வாரக் கொடுமை
22012011092  22012011095
மேலே உள்ள படங்கள் ஏதோ சினிமாவுக்காக எடுக்கப்பட்டவை அல்ல.. கருணாசுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் வேஷம் போட்டு பெரிதாய் ஒட்டப்பட்ட முக்குலத்தோர் புலி என்று கோவையில் நடைபெறவிருக்கும் நிகழ்வின்  போஸ்டர்.. என்ன கொடுமைங்க இது.
###############################################
இந்த வார புத்தகம்
ஓரிரவு ஒர்ரயிலில் என்று சுஜாதா எழுதிய குறுகுறுநாவல் 25 ரூபாய்க்கு கிழக்கில் சல்லீசாய்  போட்டிருந்தார்கள். எப்படி என்னிடம் இல்லாது போனது என்று தெரியவில்லை. குட்டியூண்டு புத்தகம். ஆரம்பம் முதல் படு ஸ்பீடு. க்ளைமாக்ஸை முன்னமே யூகிக்க முடிந்தது, சுஜாதாவின் அத்துனை கதைகளையும் படித்ததன் விளைவாக இருக்கலாம். 

பா.ராகவனின் உணவின் வரலாறு படித்துக் கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமாய் இருக்கிறது. முக்கியமாய் என்னைப் போன்றே உணவுக் காதலரான பா.ரா. அதை எழுதும் பொழுது, சில இடங்களில் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
################################################
இந்த வாரம் படித்தது
ஏதாவது தவறு செய்துவிட்டு
என்னை சமாதானப்படுத்தும்
அழகிற்காகவது
அடிக்கடி தவறு செய் 

கொடுக்காத முத்தத்திற்காக நீயும்
பெறாத முத்தத்திற்காக நானும்
தயக்க மூலாம் பூசியபடியே
பேசிக் கொண்டிருக்கிறோமே
எப்போது இந்த தயக்கக்கூட்டை
நீ தகர்ப்பாய்?

எழுதியவர் மணிகண்டவேல் எனும் நம் பதிவர்.
#############################################
அடல்ட் கார்னர்
Good girls loosen a few buttons when it's hot. Bad girls make it hot by loosening a few buttons.
Good girls only own one credit card and rarely use it. Bad girls only own one bra and rarely use it.
Good girls wax their floors. Bad girls wax their bikini lines.
Good girls blush during love scenes in a movie. Bad girls know they could do it better.
Good girls think they're not fully dressed without a strand of pearls. Bad girls think they're fully dressed with just a strand of pearls.
Good girls wear high heels to work. Bad girls wear high heels to bed.
Good girls say, "Don't... Stop..." Bad girls say, "Don't Stop..."
#######################################
கேபிள் சங்கர்


Jan 22, 2011

சொல்லித்தரவா

sollitharava-15 பொங்கல் ரேஸில் வெளிவந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்திய அரசின் சலுகைகளில் படித்துவிட்டு வெளிநாட்டில் போய் செட்டிலாகும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்.
sollitharava-5 எஸ்.சிவராமன் என்கிற இயக்குனரின் இரண்டாவது படம். இவர் ஏற்கனவே மறந்தேன் மெய் மறந்தேன் என்கிற படத்தை 2006 எடுத்து வெளியிட்டிருக்கிறார். முதல் படத்தில் ஏதும் கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறது. என்ன தான் சொல்ல வந்த விஷயம் ப்ரெயின் ட்ரையின் என்பது போன்ற சீரியஸான விஷயமாய் இருந்தாலும் படம் பூராவும் ஆளாளுக்கு இங்கிலீஷிலேயே பேசிக் கொண்டிருப்பது.. ஒரே காமெடியாய் இருக்கிறது. பின்ன பாருங்க.. கவுண்டர் சீரியஸா அமெரிக்க ஆக்ஸண்டுடன் இங்கிலீஷ் பேசினால் எப்படி இருக்கும்? இதில் இயக்குனர் வேறு காமெடி செய்கிறேன் என்று பட்லர் இங்கிலீஷ் காமெடி செய்கிறார்.
sollitharava-8 மிக அமெச்சூர் தனமான கதை சொல்ல, மேக்கிங், என்று எந்த விதத்திலும் எங்கேயும் பாராட்டி விடக்கூடாது என்பதை கொள்கையாய் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் சீட்டில் உட்கார முடியாமல் தவிக்க வைக்கிறார். சார்.. படமெடுக்கணும்னு ஆசைப்பட்டா.. சொல்லுங்க.. நாங்கல்லாம் இருக்கோம்.. காசை கரியாக்காதீங்க..படத்தில் ஒரே ஆறுதல் பாபியின்  இசையில் வரும் “அழகிய சேலை இழுக்குது ஆளை” என்கிற ஒரு அருமையான மெலடி மட்டும்தான்.
sollitharava-6 நடுவில் வெள்ளைச்சட்டை போட்டிருப்பவர்தான் இயக்குனர். இவரை ஒரு விதத்தில் பாராட்டத்தான் வேண்டும். வெறும் கொண்டாட்டத்திற்கான படங்களாய் எடுக்க நினைக்கும் காலத்தில் பிரையின் ட்ரையின், கரப்ஷன், இளைஞர்கள் அரசியலில் நுழைவது என்பது போன்ற சீரியஸ் விசயங்களை எடுத்துக் கொண்டு, நாலைந்து பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று இம்சிக்காமல் இருந்ததற்காகத்தான். படம் இரண்டு மணி நேரத்தில் முடிந்தது. நன்றி
சொல்லித்தரவா – எதை?
மீண்டும் குறுகிய காலத்தில் 20 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..கேபிள் சங்கர்

வாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்.

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து.

அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம்.

எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது.

ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண். போச்சுடா வம்பு வந்த்து. நம்ம் குரு ஷங்கரநாராயணன் நினைப்பு வந்த்து. அவர் இந்த புக்கெல்லாம் படிக்காதே கீதா மாப்பசான் படின்னு சொல்ற மாதிரியும் இருந்தது.  நாம தினம் மாதா, பிதா, குரு தெய்வம்ன்னு இவங்களை கும்பிடலாம். பேச்சை மீறி அடி வாங்கிட்டு வந்து அப்புறம் கால்ல விழறது  தான் சகஜம். ஷங்கர் சாரை நோக்கி திரும்பி மன்னிசிக்குங்க சார். ஏப்ரல், மேயில பசுமையே இல்லை சார்ன்னு பாடிட்டு புத்தகத்தை வாங்கி வந்தாச்சு. அட்டையில் இருந்த போஸ் வேற கவருது.

“நாந்தாண்டா இங்க பெரிய்யய எழுத்தாளன்”னு மிரட்டற மாதிரி லுக் இருந்த்து. மாம்பழ வாசனை நல்ல வேளை இல்லை. பின்னட்டையில் ஆசிரியர் குறிப்ப திரும்ப திரும்ப படிச்சேன். நமக்கு திருச்சில ஏர்போர்ட் பக்கத்தில செம்பட்டுனு சொல்வாங்க். இங்கே தாதாக்கள் புகழ் அதிகம். கேபிள் சங்கர் பெயரை வச்சிட்டாலும் நல்ல தாதா போலருக்குன்னு நினைச்சிட்டு படிக்கவும், ரசிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.   இதையெல்லாம் ஏன் நான் இவ்வளவுதூரம் சொல்றேன்னா நான் இப்படித்தான் சார் என் தேடல் எங்க ஆரம்பிக்குது, அது எங்க முடியுதுன்னு எனக்கே தெரியாது. சரி கதைகளுக்கு வருவோம்.

சங்கர் தனது சிறுகதைகளில் ஜெயிக்கும் விதம், கதையை எடுத்தவுடனே நம்பிக்கையோட ஆரம்பிச்சுடறார். அதுலே எனக்கு பிடிச்சது முன்னுரையில வேற இந்த மாதிரி, இந்த மாதிரின்னு எழுதினவர் ஒரு மாதிரி சாக்லெட் தந்துட்டார். ஸோ.., படிக்க ச்சும்மா ரன்வேயில விமானம் மெதுவா வேகமெடுத்து கிளம்புற மாதிரி, அழகா கதையில் ஒரு முன்னேற்றம் (அப்பாடா.. ஏர்போர்டுல வசிக்கிறது நல்லதா போச்சு) வந்துருது.

அப்புறம் எந்த சம்பவத்தையும் எழுத்தில் சொன்னாலும் நம்பறா மாதிரியே எழுதறாரே, அது எப்படின்னு இன்னமும் பிரம்மிப்போட இருக்கேன் நிஜமாலுமே. ஆனாலும் எனக்கென்ன பயம்னா நிச்சயம் முட்டாள்களோட பழகிடலாம், இந்த கேபிள் சங்கரோட பழ்கலாமான்னு பயம் வந்துட்டே இருந்தது நிஜம். இதுதான் நான் மொத்தமா தொகுப்பின் கதைகளுக்கு நான் தர்ற விமர்சனம். ரசிக்க தகுந்த இண்டலிஜெண்ட் பெர்சன். இவை எல்லாமே தமிழ்க் கதைகள் தான், நடப்பதும் நம்ம தமிழ் சூழலில் தான் ஆனா வெளிநாட்டில் ந்டக்கிற மாதிரி ஜாலியா எழுதியிருக்காரு.. இந்த மாதிரி பெண்கள் யாரும் கவிதை எழுதிட்டா விட்டுருவாங்களா..?ங்கிற கேள்வி மனதுள் எழத்தான் செய்த்து.

பெரும்பாலான கதைகளில் சர்வ சாதாரணமாக பெண்கல் குறுக்கே வருகிறார்கள், படுத்துக் கொள்கிறார்கள், கொல்கிறார்கள், காதலன், கணவன், சாமியார் என்று ஏமாறுகிறார்கள். கதாநாயகன் மட்டும் அதிபுத்திசாலியாய் இருக்கிறான் அல்லது சமயத்தில் குழந்தையாக ஏமாற்றிச் செல்கிறான். என்ன கொடுமை சங்கர் இது? கதைகளை பற்றி விமர்சனம் என்று ஜல்லியடித்து, எப்படி எழுதினாலும், திட்டினாலும், நிஜமாகவே சங்கரின் கதைகள் வசீகரிக்கின்றன. நிஜமாய் நம்மோடு  நம்மோடு பேசுகின்றன என்பது நிஜம். பால் பேதம் மறந்து, வயது மறந்து உரையாட தயாராய் எப்போது இருக்கிறோம்.  எனக்குப்பட்டது இதுதான்.

இந்த தொகுப்பு பட்டினப்பாலையான சென்னையில் இருக்கையில் என் மேல் விழுந்த முதல் மழைத்துளியாய் என்னை நினைத்து குளிர்வித்தது எனப்தை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும், வெட்கமும் இல்லை.  நிறைய எழுதுங்கள் சங்கர். என்னைப் போன்றவர்களுக்காகவும், பலருக்காகவும் தமிழில் வாசிக்க நினைத்தால் ஏனோ சட்டதிட்டங்கள், போட்டு குரலால் மிரட்டி, உருட்டி, குருகுல வாசம், அசுர சாதகம் செய்யணும் என்றெல்லாம் பேனர் வைக்காமல் எழுதுங்கள். இப்படி வந்தமா, பாத்தமா படிச்சமா, ரசிச்சமா, விசிலடிச்சமான்னு எழுதினாத்தானே நலலா இருக்கும். திரைத்துறையில் பல அனுபவங்கள் உள்ளதால் களம் பிடிக்க எளிதாக இருக்கிறது. எழுதும் மொழியும் அப்படியே சரளமாய் வருகிறது. சோம்பல் அற்ற பதிவுகள் நிறைய மின்னட்டும் அதிகமாக திரையுலகிலும்.
ப்ரியங்களுடன்
கவிஞர். கீதாஞ்சலி ப்ரியதர்சினி
(திருச்சி) 

Jan 21, 2011

வாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்

subiah ravisarvagar@gmail.com
Dear sir,
I am M.Subbiah, working as an Associate Director.
I read your recent  book "Cinema viyabaram".
so nice and remarkable one.
very useful for me.
i want to talk to u sir.
can i get your mobile number, please.
My hearty wishes to all your further future products, sir.
Thank you,
regards,
subbiah.m.
என்னடா இவனும் ஆரம்பிச்சிட்டானா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தன் வாழ்கையில், உணவு, உடை, இருப்பிடத்திற்கு பிறகு அங்கீகாரத்துக்காகத்தான் அலைகிறான். காதல், குடும்பம், உள்பட என்பது என் கருத்து.

ஏதோ விளையாட்டுப் போல ஒரு வருடத்தில் மூன்று புத்தகங்கள் எழுதியாகிவிட்டது. பதிவர்கள் நண்பர்கள் எல்லாம் பழகின தோஷத்திற்காகவோ..  அல்லது நிஜமாகவே பிடித்தோ… வாங்கி படித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம். ஆனால் பொது வெளி எனும் போது அங்கு என் புத்தகத்தை வாங்குபவர். புதியவர் அவர்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனங்கள் வருவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அதை என் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிகளையும்  உங்களின வெற்றியாக  கொண்டாடும் அன்பு நெஞ்சங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியே.

பதிவர் பிச்சைக்காரனின் விமர்சனம்
ஆங்கிலத்தில் சில வியாபார, மேனேஜ்மெண்ட் , மார்கெட்டிங் சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும் போது இது போல தமிழில் இல்லையே என்ற ஏக்கம் உண்டாகும்...

ஒரு கார் நிறுவன மேலாண்மை இயக்குனர் தன் கஷ்ட நஷ்டங்களை சொல்லும்போது , கார் துறையில் இல்லாதவர்களுக்கும் கூட அது பயன்படும்... அடிப்படை தொழில் நுணுக்கங்கள், செயல்பாடுகள், முடிவெடுக்கும் கலை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்..


அதே போல தமிழில் , ஒரு துறை பற்றிய அனுபவம் , ஞானம் கொண்ட ஒருவர் , வியாபார பார்வையில் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியதுண்டு...

ஆனால், பம்ப், கார் போன்ற துறையில் இருப்பவர்கள் அப்படி எழுதினால், அனைவராலும் அதை புரிந்து கொள்வது சிரமம்..

ஆனால் அனைவருக்கும் தெரிந்த சினிமா என்ற விஷ்யத்தை , வியாபார பார்வையில் கேபிள் எழுதி இருக்கிறார் என்பது மகிழ்வூட்டியது..

ஆனால் எப்படி எழுதி இருப்பாரோ என்ற சந்தேகமும் இருந்தது...

புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று..

ஒரு புத்தகம் வாங்கியவுடன், லேசாக புரட்டி பார்த்து விட்டு, எப்போது அதை படிக்க வேண்டும் என வரிசை படுத்தி வைப்பது என் வழக்கம்...


அந்த வகையில் புரட்டி பார்க்க ஆரம்பித்தேன்..

ஆனால் வரிசை படுத்தி வைக்க வேண்டிய அவசியம் வரவில்லை...
காரணம், படிக்க ஆரம்பித்தவுடன் அடுத்தடுத்து வரும் விஷ்யங்கள் என்னை இழுத்து சென்று விட்டதால், படித்து முடித்த பின்னே கீழே வைக்க முடிந்தது...

ஏரியா பிரித்தல், வினியோகம் , விளம்பரம், ஒளிபரப்பு உரிமைகள் , மார்கெட்டிங் யுக்திகள், ஹாலிவுட் பார்வை என ஒவ்வொரு பக்கமும் இன்ஃபர்மேட்டிவாக இருக்கிறது...

ஆனால், ஒரு பாட புத்தகம் போல இல்லாமல் , ஒரு சுவையான கதை போல இருப்பதே இதன் தனி சிறப்பு..

அதற்கு காரணம் அனுபவத்தில் இருந்து கொடுக்கும் உதாரணங்கள்...

  இந்த வியாபாரத்தில் சந்த்தித்த லாப நஷ்டங்களை அனுபவித்தில் இருந்து பகிர்ந்து கொள்வதே இந்த நூலின் தனி சிறப்பு.. அதனால்தான் சொல்ல வரும் விஷ்யங்கள் நன்றாக மனதில் நிற்கின்றன..

அனுபவ குறைவால் செய்த தவறுகளையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் கேபிள்...

ஆனால் இந்த ஃபிளோ , ஹாலிவுட் பார்வை வரும்போது லேசாக தடுமாறுகிறது...

அதுவும் இன்ஃபார்மாட்டிவாக இருந்தாலும், கதை போல செல்லும் நூலின் பாணியில் இருந்து விலகுவதாக தோன்றுகிறது...

ரிஸ்க் எடுத்தல், டிசிசஷன் மேக்கிங், மார்கெட்டிங் என்று பட்டையை கிளப்பும் இந்த புத்தகம் அனைவருக்கும் பயன்படும்..

அனைவருமே படிக்க் வேண்டும்..
சினிமா துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலாக பயன்படும்...

பய்னை எதிர்பார்க்காமல், சும்மா சுவாரஸ்யத்துக்காகவும் வாசிக்கலாம்..

அவ்வப்போது செய்திகளில் அடிபடும், எம் ஜி வினியோகம்,. ஏரியாக்கள், போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்து கொள்ளவும் படிக்கலாம்...


********************************************

சினிமா வியாபாரம்..

ப்ளஸ் -  1 சுவையான நடை

                  2. அனுபவம் சார்ந்த விளக்கம்

                  3 . இன்ஃபர்மேட்டிவாக இருத்தல்

மைனஸ்  

                    1. ஒரே எழுத்து மயமாக இருத்தல்.. ஓவியங்களோ , புகைப்படங்களோ சேர்த்து இருக்கலாம்..

                  2. ஹாலிவுட் பார்வை வரும்போது, அது தனி பிரிவாக தோன்றுதல்

                
வெர்டிக்ட்   

சினிமா வியாபாரம் - சிறப்பான விருந்து 


சினிமா வியாபாரம்


கேபிள் சங்கர்


கிழக்கு பதிப்பகம் 
மீண்டும் குறுகிய காலத்தில் 20 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..கேபிள் சங்கர்

Jan 20, 2011

சினிமா வியாபாரம்-2-7

பகுதி 7
புதிய திரைப்படங்கள் வரும் போதுதான் இம்மாதிரியான கட்சிகள், கட்சி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியும். பெரிய கட்சிக்காரர்கள் எல்லாம் முடிந்தவரை டிக்கெட் வாங்கிவிடுவார்கள். ஆனால் அவர்களின் அல்லக்கைகள் தான் பிரச்சனை. லெட்டர் பேட் கட்சிக்காரர்கள் காசு கொடுக்காமல் படம் பார்க்க விரும்புவார்கள். முதலிலேயே அவர்களை எதிர்கொள்ள  பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால். தியேட்டர் அதோகதிதான். தினமும் இருபது பேராவது ஓசியில் படம் பார்க்க வருவார்கள். அவர்களை தடுத்து நிறுத்தியதால் சில பல லோக்கல் பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

உதாரணமாய் டிக்கெட் கொடுக்க நேரமாகிறதென்று அங்கிருக்கும் கதவுகளை அடிப்பது, எதாவது கலாட்டா செய்வது, தியேட்டரில் வந்து சேரின் மீது ஏறி குதிப்பது, குடித்துவிட்டு வந்து வாந்தியெடுப்பது என்று பல இம்சைகள் வரும். அப்போது நம் நடவடிக்கைகளையும் கொஞ்சம் கடுமையாய் காட்ட வேண்டியிருக்கும். நம்மிடம் உள்ள விசுவாசிகளை அதற்கு பயன் படுத்த வேண்டும். அவர்களை விட்டு பிரச்சனை செய்பவர்களை கையாள சொல்லிவிடுவோம். பின்பு அது லோக்கல் ஸ்டேஷன் வரைக் கூட போகும் அப்போது அங்கு வைத்து பஞ்சாயத்து செய்ய, வந்தவன் லெட்டர் பேட் கட்சிக்காரனாக இருந்தால் அவன் வரவே மாட்டான். லோக்கல் ஸ்டேஷனில் நம் பங்களிப்பு இருக்கும் போது எப்படி அவனுக்கு சப்போர்ட் செய்வான்?. பெரிய கட்சிக்காரர்கள் எப்போதும் பிரச்சனைக்கு வர மாட்டார்கள். அப்படி வந்தால் கொஞ்சம் சீரியஸாய்த்தான் இருக்கும். இம்மாதிரி பிரச்சனைகள் எலலா ஏரியா தியேட்டரிலும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். சைதாப்பேட்டையில் ஒரு திரையரங்கில் அப்படித்தான். புதிதாக்கப்பட்டு, டி.டி.எஸ். ஏசி எல்லாம் செய்தார்கள். அவர்களின் சுற்றுப்பட்டு ஏரியா ஸ்லம் நிறைந்த பகுதி. அங்கு அவர்கள் முதலில் ஒரு ஒழுக்கத்தை கொண்டு வர முயற்சி செய்தார்கள். அதாவது திரையரங்குக்குள் பான், சிகரட் போன்ற வஸ்துக்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, போலீஸ் கெட்டப்பில் உள்ள நான்கு ஊழியர்களை வேலைக்கு வைத்து ஒவ்வொருவரையும் செக் செய்து பாக்கெட்டுகளை எடுத்து வெளியில் வைத்துவிட்டு வரவேண்டும் இல்லையேல் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு முதலில் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது அந்த ஏரியாவில் லோக்கல் தாதாக்கள் பிரச்சனையும் இருந்தது. இதையெல்லாம் எதிர்த்து போலீஸ் துணையுடன் ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வந்திருந்தாலும். இவர்களின் கோபத்தை வேறு விதத்தில் காட்டிவிட்டுத்தான் வருவார்கள். சீட்டுகளை கிழிப்பது, சேர் கைகளை உடைப்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு வருவார்கள். தியேட்டரில் சீட்டுகள் சரி செய்வது பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது.. அவர்கள் புலம்பியது இது. வருடத்திற்கு ஒரு முறை சீட்டுக்க்கு செலவு செய்தால் அது ஞாயம். இரண்டு மாசத்துக்கு ஒரு முறை என்றால் அது கட்டுப்படியாவாது என்றார் மேலாளர்.

நாங்கள் தியேட்டர் எடுப்பதற்கு முன் அரங்கின் முன் பக்கமெல்லாம் புல் வளர்ந்து கிடந்தது. பக்கத்து டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு நெம்பர் ஒன் போவது பலரது வாடிக்கை.. நாங்கள் தியேட்டர் எடுத்து முன் பக்க ஏரியா எல்லாவற்றையும் சீர் செய்து, ஒரு காவலாளியையும் போட்டு இந்த பழக்கத்தை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தோம். ஒரு நாள் காவலாளி வரவில்லை. அப்போது சரக்கடித்து வந்த ஒருவன் மிகவும் சுவாதீனமாய் தியேட்டரின் வாசல் கதவுக்கு அருகில் உட்கார்ந்து நெ.1 போக நாங்கள் தூரத்திலிருந்து “டேய்.. எழுந்திருடா..என்று கத்திக் கொண்டிருந்தோம். அவன் எதை பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்திருக்க, என் நண்பர் ஒரு சிறு கல்லை தூக்கி அவன் பால் எறிந்தார்... ஆனால் அவன் மீது படவில்லை. திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் தன் கடமையை தொடர்ந்தான். நாங்கள் கோபத்தில் அவன் அருகில் போவதற்குள் அவன் எழுந்து வந்து, “யோவ்.. உனக்கு அறிவிருக்கா..? கல்லெடுத்து அடிக்கிற?என்றான். என் நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. வாயில் பல லோக்கல் வசவுகளுடன் திட்டி “உனக்கு அறிவில்ல?என்று கேட்க.. அவன் சாவதானமாக “ இனிமே போவலை.. அதுக்காக பாதியில நிறுத்தச் சொன்னா என்ன செய்றது?” என்று சொல்லிவிட்டு போனான். எங்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை. அவன் சொல்வதும் சரிதானே..? ஆத்திரத்தை அடக்கலாம்.. மூ..ச் சரி விடுங்கள்.

இப்படியாக பல பிரச்சனைகளுக்கு நடுவே தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. மனுநீதி படமும் போட்டாகிவிட்டது அடுத்த படத்துக்கு அலைய ஆரம்பிக்க வேண்டும் என்று முதல் வாரத்திலேயே மனுநீதியின் ரிசல்ட் சொல்லிவிட்டது. மீண்டும் வாத்தியாருடன் படம் போட மீரான் சாகிப் தெருவுக்கு போக விழைந்தோம்.

இம்மாதிரி நேரத்தில்தான் விநியோகஸ்தர்கள், அதிலும் வெற்றிப்பட விநியோகஸ்தர்களின் தயவு தியேட்டர்காரர்களுக்கு தேவை. ஒரு தியேட்டரை நிலை நிறுத்த வெற்றிப் படங்களாய் வெளியிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டரை விநியோகஸ்தர்களிடம் நிலை நிறுத்த நல்ல கலக்‌ஷன் கொடுக்கும் செண்டர் என்று நிருபிக்க வேண்டும். பெரிய பெரிய வெற்றிப்படமெல்லாம் கூட ஒரு சில தியேட்டர்களில் மற்ற தியேட்டர்களை விட குறைந்த அளவு வசூல் செய்வதும் உண்டு. அதற்கு தியேட்டரில் வைக்கும் விலை, ஒளி ஒலி அமைப்பு, பராமரிப்பு என்று பல விஷயங்கள் இருந்தாலும், பக்கத்து தியேட்டரில் இதை விட புதுப்படமோ, பெரிய படமோ போட்டுவிட்டால் காம்படீஷனில் நம் தியேட்டர் அடிபட்டு விடும்.

அப்படி நம் செண்டரை விழாமல் வைகக் பெரிய விநியோகஸ்தர்களை போய் பார்ப்போம் என்று மீண்டும் படையெடுத்தோம்.

Jan 19, 2011

இளைஞன்

ilai1 படம் வெளியான பொங்கல் நாளன்று காலையிலேயே சூப்பர் ஹிட் என்று கலைஞர் டிவியில் போட்டார்கள். கலைஞர் நியூஸில் படம் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. கலைஞர் படம் பார்த்துட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடம் “என்னய்யா.. தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா.. இங்கிலீஷ் படம் எடுத்திருக்கே” அப்படின்னு கேட்டாராம். இப்படி ஆளாளுக்கு விஜய் படத்தை பத்தி.. சாரி.. பா. விஜய் படத்தை பத்தித்தான் தமிழ்நாடே பேசுது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் எது என்று கேட்டால் எந்திரனை விட இளைஞனுக்குத்தான் என்று தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெரும் போலிருக்கிறது. அவ்வளவு எதிர்பார்பாம்.
ilaignan பாவம் மார்ட்டின் கஷ்டப்பட்டு லாட்டரி வித்து சம்பாதிச்ச காசு.. இப்ப கரியா போகணும்னு விதியிருந்தா யார் மாத்த முடியும். நடிக்கவே தெரியாத ஹீரோ. 1940களில் கூட எடுபடாத கதை திரைக்கதை வசனம், இந்த 50வது  படத்தோட தன் திரைப்பணியை முடித்துக் கொள்ள தைரியம் கொண்ட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு நிச்சயம் தெரியும் இந்தப்படம் என்னவாகுமென..?
ilaignan-desktop-wallpapers043 தலைவர் கலைஞருக்கு மன்னிக்கணும் உங்களுக்கு தெரியாததில்லை..நீங்கள் திரைக்கதை வசனமெழுதிய முந்தின படங்கள் எல்லாம் எப்படி ஓட்டப்பட்டன என்று? கட்சிக்காரர்களில் பல பேர் மிசா காலத்திலகூட அப்படி ஓடினதில்லையாம் அப்படி பின்னங்கால் பிடறி பட போஸ்டரைப் பார்த்தே ஓடிய காட்சிகளை பற்றிய தகவல் உங்கள் உடன்பிறப்புகள் மூலமா வந்திருக்கும். அப்படியிருக்க எப்படி வந்தது உங்களுக்கு மீண்டும் இந்த தைரியம்?. இல்லை இவங்கல்லாம் ரொம்ப நல்லவங்க.. எவ்வளவு வேணுமின்னாலும் தாங்குவான்னு நினைச்சிட்டீங்களா? தயவு செஞ்சு அப்படி மட்டும் நினைச்சிறாதீங்கய்யா.. உங்கள் மேல இருக்கிற மரியாதையில சில விஷயங்களை நாங்க உள்ளுக்குள்ள முழுங்கிக்கிறுவோம். அப்படி ஒன்றும் இன்றைய சினிமாவின் ட்ரெண்டை தெரியாதவரா நீங்கள்?. ரிலீசாகும் எல்லா படங்களையும் நீங்கள் ஃபோர் ப்ரேம்ஸில் பார்த்துவிடுகிறீர்கள் அப்படியிருக்க, எப்படி உங்களுக்கு இப்படி ஒரு படத்தை எடுக்க, எழுத, மனசு வந்தது.  ஒரு ரெட் ஜெயண்டோ, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனோ, க்ளவுட் நைன் தயாநிதி அழகிரியோ.. ஏன் வம்சம் தயாரிப்பாளரோ.. இப்படத்தை எடுக்க துணிவார்களா? அல்லது நீங்கள் தான் சொல்லியிருப்பீர்களா? எனக்கென்னவோ.. இப்படி நீங்கள் தொடர்ந்து படமெடுத்தால் நிச்சயம் வருகிற தேர்தலில் திமுகவின் எதிர்காலத்தை ஸ்பெக்டர்ம் போன்ற அரசியல் விஷயங்களினால்  கேள்விக்குறியாக்குகிறதோ இல்லையோ.. உங்கள்  திரைத்தொண்டின் காரணமாய்  ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. போதும் தலைவரே..உங்கள் தமிழ் திரைப்பணி. ஒரு காட்சியில் உங்களை பாராட்டியே ஆக வேண்டும் நமிதாவை டெல்லி கணேஷ் அம்மா, அம்மா என்றழைத்ததற்காக எதோ நல்லது செய்யப் போகிறார் என்று நினைக்கும் போது இன்னும் கடுமையாய் நடந்து கொள்ளுமாறு காட்சியை வைத்து உங்கள் அரசியல் சாணக்கியத்தை காட்டியிருக்கிறீர்கள்.   ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு சொல்லிட்டேன். தப்பாயிருந்தா மன்னிச்சுக்கங்க..
ilaignan-desktop-wallpapers046 பா.விஜய்ண்ணே உங்களுக்காகவாது வேற வேலை தெரியும். பாட்டு எழுத போய்டுவீங்க.. பாவம் டைரக்டர், இதுக்கப்புறம் எங்க போவாரு..? தியாகு, குஷ்பு போன்ற நிரந்தர ஆதரவாளர்கள் ஆங்காங்கே மின்னுகிறார்கள். தமிழ் சினிமாவில் உள்ள அத்துனை குணச்சித்திர நடிகர்களும் ஏதாவது ஒரு ஓரத்தில் ப்ரேமில் வந்துவிட்டு போகிறார்கள். பணத்தை தண்ணியாய் செலவழித்திருக்கிறார். தயாரிப்பாளர் பி.எல்.சஞ்செய்யின் ஒளிப்பதிவு, வித்யாசாகரின் “இறைதூதரே” பாடல், ஆர்ட் டைரக்‌ஷன், நடித்த நடிகர்கள் இவர்கள் எல்லாருக்குமே தெரியும் இப்படத்தின் ரிசல்ட் என்னவென்று. முதல் நாள் பல ஊர்களில் இரவுக்காட்சிக்கு ஆட்கள் இல்லாததால் ஷோ கேன்சல் செய்திருக்கிறார்களாம். இன்னொரு தியேட்டரில் வெறும் ஐந்தே பேர்.
கலைஞரின் “இளைஞன்” – அட்டகாசம், சூப்பர் டூப்பர் ஹிட்.. பார்த்தே தீர வேண்டிய படம்.
கேபிள் சங்கர்

Jan 18, 2011

காவலன்

kavalan அன்புள்ள இளைய தளபதி விஜய்க்கு,  
வழக்கமாக உங்களது படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப்படமும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஓப்பனிங் இருக்கும் முக்கிய நடிகர்களில் நீங்களும் ஒருவர். கடந்த சில படங்களாய் உங்களது கேரியர் கிராபில் நிறைய டவுன்ஃபால் என்பதை புரிந்துக் கொண்டு எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று குழம்பிப் போய் எதை எதையோ முயற்சி செய்துவருகிறீர்கள். அப்படி எடுத்த படம் வெளிவருவதற்கு கஷ்டப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பிரச்சனை. தியேட்டர் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சி சதி, அந்த இடத்தில் ப்ரஷர், இந்த இடத்திலிருந்து பிரஷர் என்றெல்லாம் நீங்கள் சொல்லாமல் சொன்னாதாய் நிறைய கதைகள் உலா வருவதும், இப்படம் உங்களுக்கு ஒரு பிரஸ்டீஜ் என ஃபீல் செய்ததால் எப்பாடு பட்டாவது ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலையில் உங்கள் சொந்த காசை போட்டு ரிலீஸ் செய்ததாக சொல்லப்படுவதும் இண்ட்ரஸ்டிங்கான கதை. நிஜத்தில் உங்கள் முந்திய படங்களின் பாதிப்பினால் படத்தை முக்கிய ஆட்கள் வாங்காமல் போக, சக்தி சிதம்பரம் 28 கோடிகளுக்கு வாங்க ஆசைப்பட்டதும், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி வாங்கி ஒரு லாபம் பார்க்கலாம் என்று நினைத்ததில், விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அவரது எண்ணத்தில் மண்ணைக் கொட்டினார்கள். ஏற்கனவே அவருக்கு இருந்த ட்ராக் ரெக்கார்டினால் மேலும் பல ப்ரச்சனைகள் வர, உடனடியாய் ஆளுங்கட்சி மீது தன்னை அழிப்பதற்காக செய்யும் சதி என்று அறிக்கை விட, படத்தின் திரைக்கதையை விட சுவாரஸ்யமாய் யோசித்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்கரும், மதுரை அன்பும் என்ன செய்தார்கள், எவ்வளவு முனைப்பெடுத்து விநியோகம் செய்தார்கள் என்று விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியும். இவ்வளவு பிரச்சனையே இல்லாமல் இப்படத்தை வெளியிட்டிருக்க முடியும். விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு பேசியிருந்தாலே முடிந்திருக்கும். எல்லாவற்றிலும் ரஜினியை பாலோ செய்யும் நீங்கள் ஏன் இதில் மட்டும்?. செய்யும் தொழிலிலேயே அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாதவரான நீங்கள் எங்கு அரசியல் கட்சி ஆரம்பித்து பொட்டியை திறப்பது?. வியாபாரம் என்று வந்துவிட்டால் அதில் லாபமோ, நஷ்டமோ இருக்கத்தான் செய்யும் என்ற போது இவர்கள் கேட்பது ஞாயம் இல்லைதான் என்பது உ.கை.நெ. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து சுமூகமான தொழில் முறையில் இருக்க இம்மாதிரியான காம்ப்ரமைஸுக்கு வரத்தான் வேண்டும். ஹேராமிற்கு கமல், இருவருக்கு மணிரத்னம், பாபாவுக்கு ரஜினி என்று நீடிக்கும் லிஸ்ட் வந்து கொண்டேயிருக்கும். சரி விடுங்கள் படத்திற்கு வருவோம்.
kaval-vijay-asin-140 மீண்டும் ஒரு க்யூட்டான, இளமை துள்ளும் விஜய்யை காண வாய்ப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி. அதிலும் காது கிழியும் “டாய்..டாய்” என்பது போன்ற காட்டுக் கத்தல்கள் இல்லாமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

உலகம் உருண்டை, வாழ்க்கை ஒரு வட்டம் போன்ற நிதர்சன உண்மைகளை உங்களின் பல படங்களின் பஞ்ச் வசனங்கள் மூலம் சொல்லித் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது உங்கள் படம் மூலமாகவே மீண்டும் தெரியும் போது என்ன மாதிரி உணர்வை எனக்கு கொடுத்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. ஏற்கனவே குச் குச் ஹோதா ஹே என்ற படத்தின் கதையை.. கொஞ்சம் அங்கு இங்கு மாற்றி, மலையாளத்தில் பாடிகார்டாகி, மீண்டும் அதை நமக்கு தமிழில் பார்க்கும் போது, பேசாம ஒழுங்கா இந்தி ரீமேக்காகவே இருந்திருக்கலாமோன்னு தோணுதுங்கண்ணா.. உங்களுக்கு ஒரு பெரிய ப்ரேக் கிடைத்திருக்கும்.

ஆரம்பக்காட்சியில் சம்மந்தமேயில்லாமல்  பாங்காக்கில் அறிமுகமாகும் சண்டைக்காட்சி உங்களது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கும். ராஜ் கிரண் பெயர் வைத்த பிள்ளை என்பதற்கு ஒரு கிளைக்கதை வேறு சொல்கிறார்கள். அவருக்கு பாடிகார்டாய் போவதற்கு போலீஸ் ப்ரொடெக்‌ஷன் தேவைப்படும் அளவுக்கு என்ன செய்கிறார் என்ற விளக்கமேயில்லை. கோயில் திருவிழாவில் ஹைஸ்பீடில் நடந்துவருவதை தவிர வேறேதும் முக்கியமாய் செய்ததாய் நினைவில்லை. அவ்வளவு பெரிய ஆள் யார் என்ன என்பதை கூட கேட்காமல் ஒருவனை வேலைக்கு வைப்பதா? என்று கேள்விகளும் எழத்தான் செய்கிறது.

kaval-vijay-asin-188
படத்தின் முக்கிய ஆதாரமே காதல்தான். அப்படியிருக்க, அசினுக்கு உங்கள் மேல் காதல் வருவதுகூட ஒருவிதத்தில் ஓகேதான். வழக்கமாய் உங்கள் சுறாவில் தமன்னாவுக்கு உங்கள் மேல் காதல் வரும் காட்சியை விட இது எவ்வளவோ லாஜிக்கல். சரி அதை விடுங்கள். ஆனால் உங்களுக்கு அசினின் மேல் மரியாதை கலந்த அன்பு மட்டுமே இருக்கிறது. காதல் எங்கேயும் இல்லை. நீங்கள் காதலிப்பதோ அம்முக்குட்டி என்கிற போன் பெண்ணை, க்ளைமாக்ஸில் சொல்லும் போது கூட எனக்கு அசின் மீது அம்மாதிரியான எண்ணமே வந்ததில்லை என்று டயலாக் வேறு பேசுகிறீர்கள். அப்படியிருக்க.. படம் பார்க்கும் ரசிகனுக்கு எப்படி நீங்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஆசைப்படுவான். ஆவலுடன் காத்திருப்பான்?. குச் குச் ஹோதாஹேவில் ஒரு அழகான கதை ஒன்றிருக்கும் இந்த கேரக்டர்களிடையே..

சாதரணமாக மசாலா படங்களிலேயே நடித்து பழக்கமாகி போயிருந்ததால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் ரசிகர்கள் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் தவறான கணிப்புங்கண்ணா.. மசாலா படங்களுக்கு ஓகே.. ரொமாண்டிக்கான காதல் படங்களுக்கு லாஜிக் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் மேஜிக்காவது இருக்கணும். இதில் ரெண்டும் மிஸ்சிங். காதலர்களுடய எமோஷன் ஏறாமல் யார் நடித்தாலும் ரசிகன் பார்க்க மாட்டான். உங்கள் காதலை அவன் காதலாக உள்ளுக்குள் ஏறினால் மட்டுமே உங்கள் காதல் ஜெயிக்க, அவனும் கதைக்குள் அலைவான். அந்த வகையில் பெரிய லெட் டவுன் தான்.

ரொமாண்டிக்கான படங்களுக்கு இன்னொரு  முக்கியமான விஷயம். இசை. அது இந்த படத்தில் மிஸ்ஸிங். ஒரே ஒரு பாடலான யாரது யாரது க்யூட் மெலடி. மற்ற பாடல்கள் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை. வழக்கமாய் உங்கள் படங்களில் குத்து பாடல் போன்ற நடனப்பாடலான ஸ்டெப்..ஸ்டெப் பாடல் உங்களின் நடனத்துக்காக பார்க்கலாமே தவிர.. வேறொன்றும் ஸ்பெஷலாக இல்லை.

kaval-vijay-asin-220
படத்தில் நான் மிகவும் ரசித்தது உங்களது நடிப்பை. முக்கியமாய் காதல் வயப்பட்டு, அல்லாடும் போது கண்களில் ஒரு பளபளவோடு காட்டும் ரியாக்‌ஷன்களிலும், பாடி லேங்குவேஜில் இருக்கும் லேசான துள்ளலும் அட.. எங்கே போயிருந்தீஙக்ண்ணா என்று கேட்கத் தூண்டுகிறது. நிச்சயம். ஒரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். இம்மாதிரியான கதை சொல்லும் படங்களில் நடிக்க ஆரம்பித்தீர்களே அதுக்காக. காதலை சொல்ல அசினிடம் பதட்டத்துடன் சொல்லி பார்க்கும் காட்சி ஏற்கனவே உங்கள் படத்தில் பார்த்திருந்தாலும். இன்னமும் புதிசாய் இருக்கிறது உங்களின் நடிப்பு. வடிவேலுடனான உங்கள் காமெடி பெரிதாய் எடுபடாதது வருத்தமே. அதற்கு வடிவேலின் ரொட்டீன் டெம்ப்ளேட் காமெடியும் காரணமாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கதை விஷயத்திலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல ரொமாண்டிக்கான படம் கிடைத்திருக்கும். அதிலும் க்ளைமாக்ஸில் நீங்கள் விக் வைத்து கெட்டப் சேஞ்ச் செய்து வரும் போதெல்லாம் உள்ளுக்குள் நடுக்கம் ஓடுதுங்கண்ணா..
kaval-vijay-asin-312 அசினின் தோழிக்கு எப்போது விஜய் மேல் ஒரு தலையான காதல் வந்தது? அசினுக்கு வேண்டுமானால் விஜய் மீது காதல் வந்திருக்கலாம் ஆனால் விஜய்க்கு அசின் மேல் எப்போது காதல் வந்தது? ஒரு வேளை போன் பேசும் அம்முக்குட்டியின் மேல் உள்ள் காதல் அசின் மேல் ட்ராவல் ஆகும் என்று நினைத்தீர்களா இயக்குனரே? மொத்தத்தில் கொஞ்சமே கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருதால் நிச்சயம் ஒர் சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் அளித்திருக்க முடியும். இப்படத்தின் வெற்றி  தோல்வியை வைத்து, உங்களின் அடுத்த பட முடிவு இருக்குமாயின் நாங்கள் எல்லாம் மறுபடியும் சுறா பார்க்க ஆசையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கென்னவோ. தெலுங்கு ஹிட்டுகளை விட, விஜய்க்கு ஷாருக்கான் நடித்த, பர்தேஸ், தில் தோ பாகல் ஹே போன்ற படங்கள்  ரிமேக்கினால் நிச்சய ஹிட் உண்டு என்று  கடலங்குடி நாடி ஜோசியர் சொல்கிறார். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்களால் ஷாருக் போல ஒரு ரொமாண்டிக் கதைகளை கொடுக்க முடியும். என்பது என் நம்பிக்கை.
காவலன் - ஆவரேஜ் ( விஜய் ரசிகர்கள் திருப்திக்காக,,)

Jan 17, 2011

கொத்து பரோட்டா 17/01/11

புத்தக கண்காட்சி-3
ஹரன் பிரசன்னா வைத்த கண்ணில்:) நடுவில் நான்கு நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. த்ரோட் இன்பெக்‌ஷன், ஜலதோஷம் என்று எல்லா தோஷங்களோடு போராடி, சனிக்கிழமை போயிருந்தேன். நிறைய போன் கால்கள் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்டு, ஆறு மணிக்கு டைம் சொல்லி அங்கே போனேன் பல நண்பர்களை சந்தித்தேன். புத்தகம் வாங்கினார்கள், திருப்பூரிலிருந்து நண்பர் ராஜ மாணிக்கம் வந்திருந்தார். வழக்கம் போல இலக்கியவாதி மா.ரா. சங்கர் ஆகியோரும் ஆஜர். பின்பு ராஜமாணிக்கத்தோடு டிபன் சாப்பிடலாம் என்று கேண்டீனுக்கு போன போது வழியில் யுவகிருஷ்ணாவை சந்தித்தோம். மூவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டே, அளவளாவ ஆரம்பித்து கண்காட்சியையே மூடிவிட்டார்கள்.  திரைத்துறையில் பணியாற்றும் இரண்டு நண்பர்களை சந்தித்தேன். ஒருவர் ராஜேஷ் திரு திரு துறு துறு உதவி இயக்குனர். விரைவில் அவர் பணியாற்றும் படத்திற்கு வசனமெழுதி தரக் கேட்டிருக்கிறார். இன்னொரு பதிப்பக நண்பர் நாவல் கேட்டிருக்கிறார். புத்தாண்டு பல புதிய ஆஃபர்களை முன் வைக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ரெண்டு நாட்களில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.  கோபி கிருஷ்ணனின் “உள்ளேயிருந்து சில குரல்கள்”. தி.ஜாவின் “மரப்பசு” . கி.ராவின் “வயது வந்தவர்களுக்கு மட்டும்”. ஜெயமோகனின் “ரப்பர்” இதுவல்லாமல் சந்திரமெளலி மஹாதேவனின் எளிய தமிழில் அல்ஜீப்ரா..
########################################################
பொங்கலன்று ஜெமினி டிவியில் தெலுங்கு எந்திரன் போட்டிருந்தார்கள். என்னடா இது பே சேனலான ஜெமினியை இவர்களுடய டி.ஆர்.பியை தக்க வைப்பதற்காக தமிழகத்தில் முக்கியமாய் சென்னையில் ஃபிரியாக கொடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் இவர்கள் தயாரித்த படத்தை அங்கே போட்டே ஆக வேண்டிய கட்டாயம். ஏனென்றால் அவர்களுக்கு அங்கு போட்டியாய் பல சேனல்கள் பல புதிய படங்கள் என்றிருக்க, இவர்களிடம் உள்ள ஒரே நிஜ ஹிட் ரோபோ. ஆனால் அதே படத்தை இங்கே போட்டால் அதனால் தனியாக ஏதும் வருமானம் வரப்போவதில்லை. அதனால் சரியாய் மதியம் 12 மணிக்கு கட் செய்தவர்கள் மாலை 4 மணிக்கு படம் முடிந்தவுடன் தான் திரும்பவும் ஆன் செய்தார்கள் தமிழகம் முழுவதும். இது இவர்கள் கண்ட்ரோலில் இருக்கும் நெட்வொர்க்குகள் இல்லாது, இவர்களின் டிஜிட்டல் டிகோடர்களை கொண்டு ஒளிபரப்பும் மற்ற ஊர் ஆப்பரேட்டர்களின் டிகோடர்களையும் ஆப் செய்துவிட்டார்கள். பின்னே தமிழ் எந்திரனை வைத்து காசு பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டால்?. இவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று பொறாமைப்பட்டு பிரயோஜனமில்லை. எவ்வளவு நுணுக்கமாகவும், பிசுனாரித்தனமாகவும்  வியாபாரம் செய்கிறார்கள் என்று பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
########################################################
இந்த வார சந்தோஷம்
மீண்டும் கல்கியில் என்னுடய சிறுகதை வெளியாகியிருக்கிறது. புத்தக கண்காட்சியில், நம் பதிவுலக நண்பர்களில்லாது ஒரு புது வாசகர் முதல் முறையாய் என் கதைகளை வாங்கிப் போய் படித்துவிட்டு நேரில் வந்து பாராட்டினார். நன்றி நண்பரே.
######################################################
ரொம்ப நாள் கழித்து அபிராமி மெஹா மால் போனேன். அபிராமி செவன் ஸ்டாரில் படம் பார்க்க, தியேட்டரை நன்றாக புதுப்பித்திருக்கிறார்கள். மால் கலாச்சாரம் சென்னையில் ஆரம்பித்த முதல் ஆள் அபிராமி ராமநாதன் என்று நினைக்கிறேன். பழைய தியேட்டர்களை கொஞ்சம் கூட நிறுத்தாமல் புதிய கட்டிடத்தை எழுப்பியவர். சென்னையில் இருக்கும் மால்களில் இவ்வளவு கீக்கிடமாய் இருப்பது இது ஒன்றாய்த்தான் இருக்கும். ரங்கநாதன் தெருவுக்குள் போய் வந்த உணர்வு. ஒரே கசகசப்பு. முக்கியமாய் வட சென்னை மக்கள் , கொஞ்சம் லோயர் இன்கம் க்ரூப் ஆட்கள் வந்து போகுமிடமாகையால் அதற்கேற்ற இக்கிலி பிக்கிலிகள் நிறைய. மாலின் வாசலில் இருக்கும் சின்ன இடத்தைக் கூட விடாமல் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஒரு நாள் வாடகை சுமார் ஆயிரத்தைத்தாண்டும் என்கிறார்கள். வாரநாட்களின் வியாபாரத்தைவிட, வார இறுதி நாட்களின் வியாபாரத்தில் கல்லா கட்டி விடுவதாய் சொன்னார்கள். தண்ணீர் பாட்டில் எட்டு ரூபாய்க்கு கிடைக்கிறது. தியேட்டர் காண்டீனில் இட்லி, தோசையெல்லாம் கூட தருகிறார்கள். முடிந்த வரை இருக்கிற ஒரு இண்டு இடுக்கைக்கூட விடாமல் உபயோகப்படுத்தி காசு பார்க்கிறார்கள்.  இந்த மாலில் விபத்துகளுக்கான நேரங்களில் படு பயங்கர உயிர் இழப்புகள் ஸ்டாம்பீடுகளால் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அவசர வெளியேறும் வழிகள் மிகக் குறைவு.  மக்கள் நடமாட இருக்கும் இடங்கள் மிகவும் குறுகியதாக இருக்கிறது. எப்படி இம்மாதிரியான மால்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று புரியவில்லை. மிகவும் அகலம் குறைந்த படிக்கட்டுகள், இருக்கும் இடமெல்லாம் ஏதாவது ஒரு கடை என்று விரித்திருக்கிறார்கள். இதைத்தவிர, ஸ்னோ பால், கிஸ்ஸிங் கார்ட் என்று குழந்தைகளுக்கான கிட்ஸ் செண்டர் வேறு இருக்கிறது. அடுத்த முறை என் குழந்தைகளை நிச்சயம் அங்கு அனுப்ப போவதில்லை.
######################################################
புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி ஹரன் பிரசன்னா.:). ரெண்டு பிரபல எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட ஒரே சைஸில் புத்தகக் கண்காட்சியில் வெளியிட வேண்டுமென்று நாவல் எழுதியிருக்கிறார்கள். ஒன்றில் புத்தகம் அமைப்பாக வர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகூட கதையில் இல்லை. படு மொக்கை. யார் யாரை கொல்கிறார்கள்? எதற்காக கொல்கிறார்கள்? ஏன் நண்பனின் மனைவியை ஆள்கிறான் என்றெல்லாம் ஒரே கேள்விகளின் உச்சம். சமீபத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்துவிட்டு எழுதியது போலிருக்கிறது. பத்து பேஜுக்கு நடுவில் ஒரு சேஸிங், செக்ஸ் காட்சி, வதை என்று போகிறது. சினிமாக்காரகளின் சகவாசம் நிறையவே தெரிகிறது. ஒரு வேளை இலக்கியவாதியானால்தான் புரியுமோ..?

இன்னொருவர் வழக்கமாகவே கதை சொல்ல மாட்டார். கதை மாதிரி ஒன்றை நடு நடுவே சொல்வார். கேட்டால் இது தான் புனைவிலக்கியத்தின் உச்சமென சொல்வார். இந்த புத்தகத்தில் ஏற்கனவே அவர் எழுதிய பத்தகங்களின் பக்கங்களில் உள்ள பெயர்களை மட்டும் மாற்றிவிட்டு புதிதாய் எழுதியது போல் இருக்கிறது. இதைப் போய் ”அந்த” மாதிரி புத்தகம் என்றெல்லாம் சொன்னது அபாண்டம்.மொத்தத்தில் ஆரம்பித்த முதல் ரெண்டு புத்தகங்களிலேயே நொந்து போயிருந்த நேரத்தில் வந்த ஒரே ஆபத்பாந்தவன் நம் தலைவனின் புத்தகம் தான். வாழ்க தலைவர்.
####################################################
இந்த வாரம் படித்தது
ழார் பத்தாய்
என்கிற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய The story of the eye எனும் நாவலை யுரேக்கா என்பவர் தமிழாக்கம் செய்ய அதை நாகார்ஜுன் தன்னுடய வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார். கதையினை ஆரம்பிக்கும் முன் ஏகப்பட்ட முன்னறிவிப்போடுதான் ஆரம்பித்திருந்தார். நான் தயாராகிக் கொண்டு படித்தேன். உள்ளிழுத்துச் சென்றுவிட்டது. அது தரும் உணர்வுகள் பல விதமாய் இருந்தது.  அப்பதிவின் லிங்க் இதோ.. அக்கதையின் ஆரம்பத்தில் நாகார்ஜுன் கொடுத்திருக்கும் முன்னறிவிப்பை (அ) முன்னெச்சிரிக்கையை  என் சார்பாகவும் படித்துவிட்டு படிக்க முடிவெடுக்கவும்.
#######################################################
இந்த வார தத்துவம்
நான் தோற்கவில்லை. என் வெற்றியை கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறேன். யார் வேணுமின்னாலும் சொல்லலாம்
##################################################################
இந்த வார ப்ளாஷ்பேக்
மாதுரியின் அட்டகாசமான நடனம், தாளமிட வைக்கும் பாடல், ஒரு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணியான பாடல்
####################################################
இந்த வார குறும்படம்
அனிமேஷன் என்றாலே அது நகைச்சுவை தானென்றில்லாமல் ஒரு சீரியஸான விஷயத்தை தொட்டிருக்கிறார்கள். அருமையான படம்
##################################################
இந்த வார விளம்பரம்
###################################################
அடல்ட் கார்னர்
ஒரு நாள் கணவன் மிகவும் சோகமாய் வந்தான். என்ன என்று கேட்ட மனைவியிடம் தன்னை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள் என்றான் வருத்தத்துடன். வழக்கமாய் சிறந்த எம்பிளாயி என்று பட்டம் பெறும் உன்னை ஏன் அப்படி செய்தார்கள்? என்று கேட்க அதற்கு அவன் என்னுடய நெடு நாள் ஆசையை, கனவை பூர்த்தி செய்வதற்காக செய்த முயற்சி செய்ததினால்தான் அப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்ல.. அவள் அப்படி என்ன ஆசை? என்று கேட்டாள். ஒன்றுமில்லை நான் வேலை செய்யும் ஊறுகாய் கம்பெனியில் உள்ள மாங்காய் கட்டரில் என் “லுல்லாவை” வைக்க ஆசைப்பட்டேன். அதை கேட்டு அதிர்ந்த மனைவி அய்யயோ உனக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்று அலற.. அவன் எனக்கு ஒன்றும் ஆகவில்லை அந்த மாங்காய் கட்டர் பெண்ணையும் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் என்றான்.

Jan 16, 2011

சிறுத்தை

siruthai movie13எஸ்.எஸ்.ராஜமெளலியின்  தெலுங்கு விக்ரமார்குடுவின் தமிழ் ரீமேக். தெலுங்கிலிருக்கும் அதே மணம், குணத்தோடு அப்படியே கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான ரவிதேஜாவின் படங்களுக்கென்றே ஒரு பார்முலா இருக்கிறது. ஒரு மிடில் க்ளாஸ் கேரக்டர், முதல் பாதி முழுவதும் காமெடி, இண்டர்வெல்லுக்கு முன்னால் ஒரு திடீர் பிரச்சனை, க்ளைமாக்ஸில் சுபம். அதற்கு முன்னால் கலர் கலராய் செட்டு போட்டு ஒரு குத்துப் பாட்டு என்பது தான் அது. ஆனால் படிப்பதற்கு மிகவும் சுலபமாய் இருக்கும் இவ்விஷயத்தை திரையில் அதே பரபரப்போடு காட்ட, ரவிதேஜாவின் நடிப்பு எவ்வளவு முக்கியம், திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது அதை ரீமேக்கும் போது தெரியும். அதில் கொஞ்சமும் சளைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார்கள்.
siruthai கார்தியும், சந்தானமும் திருடர்கள். ஒரு பாழடைந்த தியேட்டரில் தாங்கள் ஆட்டையை போட்ட பொருட்களை வைத்துக் கொண்டு சந்தோஷமாய் வாழ்பவர்கள். நடு நடுவே கார்த்தியை பார்க்கும் சில பேர் அவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல முயல்வதும், இவரை பார்த்து சில பேர் பயந்து நடுங்கி போன் செய்வதுமாய் அலைவதும், இன்னொரு கும்பல் இவரை கொல்ல நினைத்து தொடர்வ்துமாய் பரப்ரவென போகும் போது, நடுவே தமன்னாவுடனான காதல் வேறு. இதற்கிடையில் ஒரு குழந்தை வேறு கார்த்தியை அப்பா என்று அழைத்துக் கொண்டு அவருடன் வந்து செட்டிலாகிறது. இவர் திருடனாயிருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதை மறைத்துவிட்டார் என்று காதலி தமன்னா வேறு பிரிந்துவிடுகிறார் (என்னா ஒரு லாஜிக்பா..) பல குழப்பத்திலிருக்கும் கார்த்தியையும், குழந்தையையும் கொல்ல ஆட்கள் வரும் போது திடீரென இன்னொரு கார்த்தி வருகிறார், துவம்சம் செய்கிறார் இண்டர்வெல் விடுகிறார்கள். பிறகு நடந்தது என்ன? என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல அதகளமான ஆந்திரா மசாலாவை, காரத்தை ருசிக்க, ஜீரணிக்க தைரியமிருப்பவர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம். அதிலும் முதல் பாதியில் கார்த்தியும், சந்தானமும் அடிக்கும் லூட்டி இருக்கிறதே கண்களில் நீர் வரவழைக்கும் காமெடி. பின்பாதியில் வில்லன்கள் செய்யும் சில விஷயங்கள் படத்திற்கு சீரியஸாய் இருந்தாலும் நமக்கு காமெடியாய் தோன்றி, ரசிக்க முடிகிற இடங்கள்தான். படு சீரியஸாய் போக வேண்டிய இரண்டாவது பாதியை முதல் பாதி கார்த்தியை வைத்து படு நகைச்சுவையாய் கொண்டு போயிருப்பது ப்ளஸ்.
 siruthai movie25 கார்த்தி வர வர மெருகேறிக் கொண்டேயிருக்கிறார். ராக்கெட் ராஜா கேரக்டருக்கும் ரத்னவேல் பாண்டியன் கேரக்டருக்குமான டிரான்ஸிஷன் அபாரம். காமெடி அநாயாசமாய் வருகிறது இவருக்கு. சந்தானத்துடன் இவர் அடிக்கும் லூட்டியும், தமன்னாவுடய இடுப்பைக் கிள்ள கைபரபரக்கும் குஜாலும், மனுஷன் அனுபவிச்சு செய்திருக்கிறார். நான் முன்பே சொன்னது போல மசாலா படங்களில் மிளிர தன்னை முன்னெடுத்துக் கொண்டு  பிரசண்ட் செய்யும் நடிப்பு வேண்டும். அது கார்த்திக்கு வசமாகிவருகிறது.

சந்தானம் இம்முறையும் ஒரு வெற்றிப் படத்திற்கான முக்கிய ப்ராப்பர்டியாகிவிட்டார். அதே போல மயில் சாமி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் குலுங்க, குலுங்க சிரிக்க வைக்கிறார். (படம் முழுவதும் காமெடி என்பதால் ப்ளோவில் மறந்துவிட்டேன். நன்றி மதுரமல்லி) தமன்னா சினிமா வழக்கப்படி லூசுப் பெண்ணாய் வருகிறார். சடுதியில் காதல் வயப்படுகிறார். இரண்டு மூன்று பாடல்களை பாடுகிறார். க்ளைமாக்ஸில் அறுந்துவிழுகிற அரத பழசான பாலத்தில் தொங்கி ஊசாலாடுகிறார். அவ்வப்போது தன் தக்குணூண்டு இடுப்பை காட்டி கிள்ளச் சொல்கிறார். இந்த இடுப்பை பார்த்து கிரங்குகிறவர்கள் எல்லா தெலுங்கு அனுஷ்கா காட்டும் இடுப்பை பார்த்தால் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை.

கொஞ்சமும் சூடு குறையாத டெம்ப்ளேட், விறுவிறு திரைக்கதையோடு சரியாக ப்ரெசெண்ட் செய்திருக்கிறார் இயக்குனர் சிவா. வேல்ராஜின் ஒளிப்பதிவுவும், எடிட்டிங்கும் நன்றாக இருக்கிறது.
சிறுத்தை – டைம்பாஸ் மசாலா எண்டர்டெயினர் விரும்பிகளுக்கு..

ஒரிஜினல் அனுஷ்கா இடுப்பை பார்க்க விரும்புகிறவகளுக்கு

Jan 14, 2011

No One Killed Jessica – எ.வ.த.இ.மா.படம்.

Jessica01_330x234 பல வருடங்களாய் பேப்பரில் படித்த ஒரு பிரபலமான கேஸ் தான் படத்தின் கதை. அதை இவ்வளவு சுவாரஸ்யமாக, மனம் நெகிழும்படி கொடுக்க முடியுமா? என்று கேட்டால், நல்ல திரைக்கதை, நடிகர் நடிகைகள் என்று முழு இன்வால்வ்மெண்டோடு கொடுத்தால் முடியும் என்றிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் குப்தா.

டெல்லியின் ஸ்டார் ஓட்டல்  பாரில் ஒரு அமைச்சரின் பையன், பார் டைம் முடிந்து சரக்கு தராததால் கோபத்தில் ஜெஸ்சிகா எனும் பார் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிஜக்கதை தான் படத்தின் கதையும். இம்மாதிரியான கதைகளில் என்ன பெரிய திருப்பத்தை எதிர்பார்த்துவிட முடியும்?. அரசியல் வாதியின் பையன் என்றாகிவிட்டால் சட்டம் எப்படி தன் கடமையை செய்யும் என்று எல்லோருக்குமே தெரியுமல்லவா? அதே தான் நடக்கிறது. பின்பு எப்படி ஜெஸ்ஸிகாவின் கேஸ் பெரிய அளவில் பேசப்பட்டு மீண்டும் சர்ச்சையானது என்பது மிக அழகாய், இழைத்து, இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
 
no-one-killed-jessica-wallpaper-05-8x6 ஜெஸ்சிகாவாக நடித்த பெண்ணின் துடிப்பு மிக்க நடிப்பு அவரின் மீதான ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்துகிறது. அது படத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்க காரணமாயிருக்கிறது. அவரது சகோதரி சபரீணாவாக வருகிறார் வித்யா பாலன். ஒரு எக்ஸ்ட்ராவர்டான சகோதரிக்கு இன்னொரு பக்கமான இண்ட்ரோவர்ட்.. மிக அழகாய் சித்தரிக்கப்பட்ட கேரக்டர். உணர்ந்து நடித்திருக்கிறார். தன் சகோதரியை ஆம்புலன்ஸில் தூக்கிக் கொண்டுப் போகும் போது ”அவ இறந்திட்டா.. அவ உடம்பிலேர்ந்து ரத்தம் ஊறுவது நின்றுவிட்டது. அவ இறந்திட்டா” என்று இறந்த ஜெஸ்சிகாவின் உடலை பார்த்து புலம்புவதிலிருந்து, தன் சகோதரியின் கொலைக்கு சாட்சிகளிடம் கோர்ட்டுக்கு வந்து உண்மையை சொல்ல வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டு அலையும் போதும், அதே கேஸ் யாரும் ஜெஸ்சிகாவை கொல்லவில்லை என்று தீர்பாகி, தன் தாயை இழந்து, தந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலுக்கும், வீட்டிற்குமாய் அலையும் நொந்து போனவளாய் இருக்கும் போதும், ராணி முகர்ஜி தனக்கு அவளுடய சப்போர்ட் தேவையென்று கேட்கும் போது அந்த மெல்லிய உதடுகள் துடிக்க அவர் காட்டும் விரக்தியாகட்டும் வித்யாபாலன் கலக்குகிறார்.

no-one-killed-jessica-wallpaper-06-8x6 முதல் பாதியில் பெரிதாய் இல்லாவிட்டாலும் பெரிய பில்டபோடு ஆரம்பிக்கிறது ராணி முகர்ஜியின் கேரக்டர். பின்பாதியில் தூள் பரத்துகிறார். இந்த டாமினெண்ட், அரகண்ட், சோஷியல் கான்ஷியஸுள்ள, டிவி தொகுப்பாளினி. ராணி முகர்ஜி தன் கேரக்டரை மிகவும் உணர்ந்து செய்திருக்கிறார். ஆரம்பக் காட்சியில் வரும் கார்கில் போர் ரிப்போர்ட்டிங்கில் ஆரம்பித்து, ப்ளைட்டில் தன்னுடன் பயணிக்கும் சக பயணி, கார்க்கில் போர் ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம் போல என்று சிலாகித்து சொல்லும் போது கொடுக்கும் பதிலடியில் ஆகட்டும், தன் காதலனுடன் உடலுறவுக்கு தயாராகும் போது போன் ஒலிக்க, ஒரு ப்ளைட் ஹைஜாக் விஷயத்துக்காக உடனடியாய் கிளம்ப வேண்டும் என்று கிளம்ப, காதலன் இப்போது நான் என்ன செய்ய? என்று கேட்க, லைட்டைப் போட்டு அவன் உடையேதும் இல்லாதிருப்பதை பார்த்து, “Go.. and Fly on your own”  என்று சொல்லிவிட்டு லைட் ஆப் செய்வதாகட்டும், மிகவும் யோசனையுடன் மொட்டைமாடியில் புகைப்பிடிப்பதாகட்டும், ஜெஸ்சிகாவின் கேஸை இன்வெஸ்டிகேஷன் செய்ய கார் டிக்கியின் மீது உட்கார்ந்து போராடும் காட்சியாகட்டும் க்ளைமாக்ஸ் வரை அதகளப் படுத்துகிறார் ராணி.

Jessica-330x234
நிஜ வாழ்க்கையில் கேரக்டர்கள் எப்படியோ.. இயக்குனர் ஒவ்வொரு கேரக்டருக்கும் கொடுத்திருக்கும் டீடெயிலிங்க்குகாகவே பாராட்டபட வேண்டும். பாரில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மேல் தட்டு மக்கள் இருந்திருக்க, ஒருவர் கூட சாட்சி சொல்ல வராத கொடுமையும், அதற்கு அவர்கள் நடிக்கும் நடிப்பும், போலி அழுகையும், கண் துடைத்து உடன் உதடு கரைபடியாமல் ப்ளாக் க்ரண்ட் கேக் சாப்பிடும் லாவகமும் மிக அருமையான தருணங்கள். ஒரு மனசாட்சியுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இம்மாதிரி கேஸ்களினால் வரும் மன உளைச்சலை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் அந்த இன்ஸ்பெக்டர்  கேரக்டர் மூலம். கேஸின் முக்கிய சாட்சியான விக்ரம், அவனுடன் இருந்த வேலையாள், அந்த வயதான லாயர், ஜெஸ்சிகாவின் லாயர், அரசியல்வாதியின் மனைவி, என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு குட்டி கேரிகேட்சரை கொடுத்திருப்பதினால் இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். இவரது முதல் படமான ஆமீர் இன்றளவில் இந்தி சினிமாவில் குறிபிடத்தகுந்த படமாய் இருக்கிறது.

இப்படத்தில் குறையென்று சொன்னால் ஒரு சில ரிப்பீட்டீஷனான காட்சிகளும், ஆங்காங்கே தெரியும் மெலோட்ராமாக்களை மட்டுமே சொல்லலாம். அமித்த்ரிவேதியின் பாடல்கள் ஆங்காங்கே படத்தினூடே கலந்து வருகிறது. அந்த இந்தியா கேட் பாடல் நிச்சயம் நெகிழ்விக்கும் பாடல். அதே போல ஒளிப்பதிவையும் குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த ஒளிப்பதிவு.

No One Killed Jessica – A Must See Film
டிஸ்கி: நேற்று எஸ்கேப்பில் ஹவுஸ்புல்.. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் தியேட்டரில் என்பது சதவிகிதம் பெண்களே இருந்தார்கள். நல்ல படங்களுக்கு இன்றும் பெண்கள் தங்கள் ஆதரவினை தெரிவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பது சந்தோஷ சமாச்சாரமே.
கேபிள் சங்கர்

Jan 13, 2011

சினிமா வியாபாரம்-2-6

பகுதி-6
இந்த போஸ்டருக்கு பின்னால் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் இரண்டு மூன்று தியேட்டர்களுக்கு ஒரே அள் போஸ்டர் ஒட்டுபவராக இருப்பார். அது தவிர அவரிடம் மற்ற அறிவிப்பு போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் என திடீர் திடீரென வரும ஆர்டர்களும் உண்டு. இந்த ஆட்களுக்கு இன்றளவிலும் நல்ல டிமாண்ட் இருக்கிறது.

மற்ற போஸ்டர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு மார்க்கெட் சினிமா போஸ்டர்களுக்கு மட்டுமே உண்டு. அது என்னவென்றால் ரீ சேல் வேல்யூ. ஆம் ரீசேல் வேல்யூதான். ஒரு சிங்கிள் ஷீட், டூ ஷீட், ஃபோர்ஷீட், சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் முறையே 20,40,60,100 என்று வைத்துக் கொள்வோம். புதுப்படங்கள் ரிலீஸாகும் போது விநியோகஸ்தர்களே இத்தனை போஸ்டருடன் படப்பெட்டியை தருவார்கள். அப்படி விளம்பரத்துக்காக வரும் போஸ்டர்களை ஒட்டாமல் ஒட்டியதாய் கணக்கு காட்டிவிட்டு ஒரு போஸ்டருக்கு இவ்வளவு என்று கணக்கு செய்து பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒவ்வொரு டிசைனிலும் குறைந்தது ஐந்து போஸ்டரையாவது எடுத்து வைத்துக் கொள்வார்கள். அதை கொண்டு போய் தமிழ் சினிமாவின் விநியோகஸ்தர்களின் மையமாக இருக்கும் மீரான் சாகிப் தெருவில் உள்ள ஆளிடம் முப்பது ரூபாய் போஸ்டரை பத்து ரூபாய்க்கு விற்று காசு பார்த்து விடுவார்கள். இந்த போஸ்டர் ஒட்டுபவர்கள்.

ஒரு படம் ரிலீஸாகும் போது படத்தின் பப்ளிசிட்டிக்காக பெரிய அளவில் ப்ரிண்ட் செய்யப்படும் போஸ்டர்கள், அதே படம் ஓடி முடிந்த பிறகு ஷிப்டிங்கில் போடப்படும் தியேட்டர்களுக்காக இரண்டு லட்சம், மூன்று லட்சம் செலவு செய்து போஸ்டர் அடிக்க யோசிப்பார்கள். வெகு சில படங்களுக்கே மீண்டும் சிங்கிள் ஷீட், டூ ஷீட் போஸ்டர்கள் அடிப்பார்கள். அதுவும் பெரிய ஹிட் படங்களாய் இருந்தால் மட்டும். அப்போது அம்மாதிரி படங்களை ஷிப்டிங்கில் போடவரும் திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகஸ்தர் போஸ்டர் தர வேண்டும். ஆனால் அவ்ரிடம் இருக்காது. நம்ம தியேட்டருக்கு நல்ல பப்ளிசிட்டி வேண்டுமென்றால் நாம தான் கொஞ்சம் மெனக்கெடணும் என்பதால் வேறு வழியில்லாம மார்கெட்டில் ஏற்கனவே தியேட்டர்களில் ஒட்டாமல் விற்ற போஸ்டரை மீண்டும் நாமே விலைக்கு வாங்குவோம். பல விநியோகஸ்தர்களுக்கு தெரியும் அது நாம் அடித்து கொடுத்த போஸ்டர்தானென்று. இப்படி போஸ்டருக்கென்று ஒரு தனி மார்கெட் இருக்கிறது.

ஒட்டின போஸ்டரை கிழிப்பது என்பது தியேட்டர்காரர்களுக்கு பெற்ற தாயை அவமானப்படுத்தியதற்கு சமமாய் பல சமயம் சீறி எழுவார்கள். ஓரத்தில் கிழிக்க முற்பட்ட விஷயத்துக்காக எல்லாம் ரணகள சண்டை போடுவார்கள் அந்த அந்த ஏரியா ஆட்களும், தியேட்டரில் முக்கிய அல்லக்கையாக இருப்பவரும். அவர் பாவம் ஏற்றிவிட்ட தியேட்டர் ஓனருக்காக தன் விசுவாசத்தை காட்ட எகிறிக் கொண்டிருக்க, தியேட்டர் ஓனர் நடுவில் வந்து அவர்களின் பேக்கப்பை பார்த்து, கமுக்கமாய் தன் ஆளை திட்டி அனுப்பும் போது அவரின் முகத்தை பார்க்க வேண்டுமே.. அய்யோ.. பாவமாய் இருக்கும்.

போஸ்டர் ஒட்டுவது ஒரு பக்கமிருக்கட்டும், போஸ்டர் ஒட்டுவதற்கான இடத்தை கண்டுபிடிப்பது மிகப் பெரிய விஷயம். முதலில் நல்ல பார்வையான இடத்தில் முக்கிய ஜங்ஷனில் இருக்க வேண்டும், அடுத்து நல்ல இரண்டு டூ ஷீட் போஸ்டரையாவது ஒட்டுமளவுக்கு இடம் இருக்க வேண்டும். அந்த இடத்து சொந்தக்காரன் பிரச்சனை பண்ணாமல் இருகக் வேண்டும், அப்படியே மீறி ஒட்டினால் பசித்த மாடோ, கொஞ்சம் கிளாமராய் படம் போட்ட போஸ்டரைப் போட்டிருந்தால் அதை பார்த்த எழும்பிய பசியில் உள்ள மனிதனோ கிழிக்காமல் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் தேடித்தேடி கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கணக்கில் இடம் பிடிக்கப்பட்டு ஒட்டப்படும் போஸ்டர்கள் கிழிபடுவது என்பது மிகவும் வலி மிகுந்த விஷயம். அதற்கு காரணம் போட்டி தியேட்டர்காரர்கள். சில சமயம் அவர்களுக்கு போஸ்டர் ஒட்டுபவனும், நமக்கு ஒட்டுபவனும் ஒரே ஆளாய் கூட இருப்பான். நாம் அவன் போஸ்டர் ஒட்டாமல் திருடுவதற்கு தடையாக தொடர்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை எண்ணி அவனை நோகடித்தால் அவன் தன் வேலையை இம்மாதிரி மற்ற போஸ்டர்களை ஒட்டி தன் எதிர்ப்பை காட்டுவான். அமமாதிரியான நேரத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து திரையரங்கை நடத்தும் உரிமையாளர் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

அடுத்து அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள். இவர்களுக்கு யார் என்ன போஸ்டர் ஒட்டினார்கள் புது படமா? பழைய படமா? என்பதெல்லாம் கிடையாது அண்ணனுக்கு பாராட்டுவிழா, மணிவிழா, பொதுக்கூட்டம் என்று முடிவெடுத்து விட்டால் உடனடியாய் கண் அவிந்துவிடும் அளவுக்கு குட்டிக் குட்டியாய் பெயர் அடித்த போஸ்டர்களை லெட்டர் பிரஸில் அடித்து அப்போதுதான் ஈரம் கூட காயாமல் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரின் மீது இவர்களது போஸ்டரை ஒட்டி விடுவார்கள். சரி ஒட்டிவிட்டுத்தான் போனார்களே என்று அடுத்த நாள் மீண்டும் நம் போஸ்டரை ஒட்ட அதை கிழித்து புதுப் போஸ்டரை ஒட்டினால் எப்படா கிழிப்பான் என்று காத்திருந்து ஆள் வைத்து பார்த்துக் கொண்டிருப்பான் ஒரு லோக்கல் தலைவன். உடனடியாய் தன் தோழர்களையோ, அல்லக்கைகளையோ விட்டு நம் போஸ்டர் இருக்கிற எல்லா இடத்தில் உள்ள போஸ்டரை கிழித்துவிட்டுக் கொண்டேயிருப்பான். இதை சமாளிக்க வேறு வழியில்லாமல் அவனையே கூப்பிட்டு பேசி “சரி” செய்ய வேண்டும். டபுள் செலவு. பிற்காலத்தில் புதுப்படம் ரிலீஸாகும் போது முதலமைச்சர் ரேஞ்சுக்கு சுண்டு சுள்ளான் எல்லாம் அய்யா வராரு.. ஃபேன் பக்கமா பத்து சீட் போட்டுருங்க..என்று அவன் குடும்பத்துக்கு சேர்த்து சொல்லிவிட்டு போவான். இது போல ஆளாளுக்கு லெட்டர் பேட் கட்சிக்காரர்கள் வருவார்கள். சில சமயம் நாட்டில் இவ்வளவு கட்சியிருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருக்கும். ஆணியே புடுங்க வேண்டாமென்பது போல போஸ்டர் கிழிந்தாலும் பரவாயில்லை என்று ரெண்டு நாள் சுமமா இருப்பதே சாலச் சிறந்த காரியம். சில சமயம் இந்த துண்டு துக்கடா ஆட்களினால் வரும் பிரச்சனை பெரிதாகிப் போவதும் உண்டு.
கேபிள் சங்கர்

Jan 12, 2011

Faster

fastercandid-10அண்ணனை கொன்ற கும்பலை பழி வாங்கும்  தம்பியின் கதை. பரபரப்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. ட்வைன் ஜான்சன் ஜெயிலிலிருந்து வெளியேறுகிறார். ஹைஸ்பீடில் நடக்கிறார். லோ ஆங்கிள் ஷாட்களில் நடக்கிறார். டாப் ஆங்கிள் ஷாட்டில் கார் கவரை எடுக்கிறார். அமெரிக்க கார்கள் அவர்களின் சினிமாவின் நிலைக்கேற்ப ஹீரோவுக்கென்றால் பத்து வருஷமானாலும் புதிதாய், தொட்டவுடன் கிளர்ச்சியடையும் பெண் போல கருக்காய் கிளம்புகிறது. சைலன்ஸரிலிருந்து சொட்டாய் விழும் எக்ஸாஸ்ட் துளி அட்டகாசம்.
fastercandid-15 திடீரென ராக் என்கிற ஒரு கேரக்டரே செத்துவிட்டதாய் காட்டுக்கிறார்கள். பின் மண்டையில்  சுட்டு செத்தவர் முன் பக்க தாடை வழியாய் வெளியேறி பிழைத்துவிட்டதாய் சொல்கிறார்கள். ஜெயிலை விட்டுக் கிளம்பியவன் நேராக ஒரு ஆபீஸில் போய் ஒருவனை நெற்றி சுட்டுவிட்டு கேமராவை பார்த்துவிட்டு வருகிறான். அப்புறம் போகிற வழியெல்லாம் ஒவ்வொருத்தனாய் போய் கொல்கிறான். போட்டோவும் வீடியோவுமாய் இருப்பவனை பிடிக்க ஒரே ஒரு போலீஸை அதுவும் ஹீரோ கொல்லும் லிஸ்டில் இருக்கிறவன். அவன் மட்டும் போகிறான். என்னா போலீஸ்பா.. க்ளைமாக்சில் மீண்டும் ஒரு முறை பின்மண்டையில் சுடப்பட்டு செத்துப் போய் கண் விழித்து வில்லனை கொல்கிறான் ஹீரோ. இப்பத்தான் புரியுது விஜயகாந்த் எவ்வளவு நல்லவர்னு.. விருதகிரி வாழ்க.. இதற்கு நடுவில் ஒரு டுவிஸ்டுடன் கூடிய காதல் ஜோடி அவர்களுக்கும் ஹீரோவுக்குமான ஒரு லிங்க் வேறு.
fastermtvfallpreview படத்தில் ரசிக்கக்கூடிய ஒரு விஷயம் ராக் கொல்ல நினைக்கும் ஆட்களில் ஒருவன் மனம் திருந்தி கிருஸ்துவ போதகராய் இருக்க, அவனை கொல்ல போதனை செய்யும் டெண்ட் கூடத்திற்கு போய் நிற்கும் போது அவன் கண்களில் தெரியும் மிரட்சி, போதனை முடிந்தபின் தன்னை கொல்லச் சொல்லி, பிராத்தனை செய்யுமிடம் நெகிழ்ச்சியானது. அதே போல படு ராவான ஒளிப்பதிவு. படத்தின் மிகப் பெரிய சிறப்பம்சம் நடிக்கவே வராத ராக்கின் நடிப்பு. அருமை. அட்டகாசம்.
Faster – படத்தை விட்டு எவ்வளவு ஸ்பீட்டா வரணுமோ.. அவ்வளவு ஸ்பீடா வந்திருங்க..
கேபிள் சங்கர்

Jan 11, 2011

பு.க-2

இன்றைக்கு பதிவர் நண்பர் நேசமித்ரனின் ”கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” கவிதை தொகுப்பும், நண்பர் எழுத்தாளர், நடிகர், அஜயன் பாலாவின் புத்தகமும், மாலை ஆறு மணிக்கு உயிர்மையிலும், ஆழியிலும் முறையே வெளியானது. சரியாய் ஆறு மணிக்கு போக வேண்டிய நான் ஏழு மணிக்குத்தான் போனேன். அநியாய ட்ராபிக். “ழ”பதிப்பக கே.ஆர்.பி.செந்திலுக்கு போன் செய்தால் பெரும் இலக்கியவாதிகளோடு காண்டீனில் இருப்பதாக சொன்னார். நேற்றிருந்த கூட்டத்தில் கால் பங்குக்கூட இல்லை. காலார நடந்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி புத்தகம் வாங்க சரியான தருணம். காண்டீனுக்கு சென்றால் கே.ஆர்.பி. ஷோபாசக்தி, சாரு, நம் சக இலக்கியவாதி உண்மைத்தமிழன், விந்தைமனிதனுடன் உட்கார்ந்திருந்தார்.

வழியில் லக்கி, அதிஷா, காமிக்ஸ் உலகம் விஷ்வா ஆகியோர் பணியாரத்துக்காக க்யூவில் நின்றிருக்க, நானும் கூட சேர்ந்து ஆட்டையை போட்டேன்.  ஷோபா சக்தியிடம் உ.த.. என்னைப் பற்றி சொன்னவுடன் கொத்துபரோட்டா எழுதுவாரே அவரா? என்று கேட்டார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இலக்கியவாதிகளுக்கும் பரோட்டா பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கியது. நன்றி உ.த. பின்பு லக்கியும், அவரும் தமிழர் துரோகம், தன்மானம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் இரண்டு பேர் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நடுவில் போர், ரத்தம், வலி எல்லாம் வேண்டும் என்று சொன்ன இலக்கியவாதிகள், கீழ்பாக்கம் ரோடில் கொசு மருந்து புகைக்கு முகம் மூடி அலப்பறை செய்ததை பற்றி சொன்னது காண்ட்ராஸ்டான ஒரு சுவாரஸ்யம். நன்றி ஷோபா சக்தி, வரும் வழியில் நம்ம முகப்புத்தக முத்தப் புகழ் செல்வகுமாரை சந்தித்தோம். உ.த.. மிகவும் பாராட்டி வெட்கிப் போனார்.

 வழக்கப்படி என் புத்தகம் விற்கும் 176ல்லில் நுழைந்து, புத்தகங்களில் இமாலய சாதனைகளை விசாரித்துவிட்டு, வந்து உயிர்மையில் போய் நேசமித்ரனை வாழ்த்திவிட்டு, அவரது கையொப்பத்துடன் புத்தகம் வாங்கி வந்தேன். நடுவில் கிழக்கில் சாருவுடன் ஒரு சிறிய அரட்டை. சாருவின் டிசைனர் சர்ட்டுகள் எங்கிருந்து தருவிக்கப்படுகின்றன என்று மிக ஆர்வமாய் அதிஷா கேட்டுக் கொண்டிருந்தார்.

இன்றைய கணக்குக்கு தலைவன் சுஜாதாவின் உள்ளம் துறந்தவன், ஓரிரவில் ஒர் ரயிலில், பா.ராவின் உணவின் வரலாறு, சாருவின் தேகம், நேசமித்ரனின் கவிதைத் தொகுப்பு என்று பர்சேஸ் முடிந்த்து.  கிழக்கின் ஹரன் பிரசன்னா.. ஒரேரடியாய் வாங்காமல் தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் வாங்குவதை பற்றி பதிவிடப்போவதாய் தெரிவித்தார். பா.ரா நான் அவர் சொல் பேச்சு கேளாததை சொல்லி என்னை உரிமையுடன் திட்டினார். வழியில் அண்ணன் வேறு பர்சேஸ் முடித்துவர, மீண்டும் ஒரு இனிமையான கச்சேரி, எழுத்தாளர் மாமல்லனை உ.த அறிமுகப்படுத்தினார். எனக்கு அவரை தெரியும். ஆனால் அவருக்குத்தான் என்னை  தெரியாது. பார்பதற்கு ஹிந்தி ந்டிகர் திலீப் தாஹில் போல இருந்தார். நிச்சயம் ஒரு பணக்கார அப்பா, hifi வில்லன் கேரக்டர்களில் அவர் நடிப்பதாய் இருந்தால் கிடைக்க வாய்ப்புண்டு. மிகவும் சுவாரஸ்யமான மனிதர் என்று பா.ராவால் சிலாகிக்கபட்டவர். இன்னும் அவருடன் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. முந்தாநாள் அவருடய கதையை சுஜாதா ஒரு போட்டியில் தெரிவு செய்ய அவர் நடத்திய அறப்போராட்டைத்தைப் பற்றி பேசியது படு இண்ட்ரஸ்டிங்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வ்ந்திருக்கும் நண்பர் நந்தா ஆண்டாள் மகன் நம்முடன் இன்று ஒரு சுற்று சுற்றினார்.  வழக்கமாய் காணப்படும், மதார், தினேஷ், சங்கர்நாராயணன், மயில்ராவணன் ஆகியோர் இன்று லீவு விட்டிருந்தார்கள். இன்றைய பொழுது இனிதே முடிந்தது. ஹாப்பி புக் ஃபேர்..
கேபிள் சங்கர்