![127_hours_wallpaper_001 127_hours_wallpaper_001](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCxRmX_t95Qc_06nDElW4aOE1HROjb9reEW5YhALa8E5lqBuFsWiQzERcz8lZPimNWgsyyxxnK9y-M3lPjc2MR6JMxeA5NRrfPT87jQk6s9rqRFDQyM7fcZpskcWGqaQukHPSw/?imgmax=800)
வாழ்க்கையை உற்சாகமாகவே கழிக்கும் இளைஞன் ஒருவன். ப்ளூ கேன்யானில் ஒரு மலையிடுக்கின் பாறையில் கை மாட்டிக் கொண்டு, ஐந்து நாட்கள் வாழ்வா சாவா போராட்டம் நடத்தி, வாழும் வெறி மட்டுமே அவனை உயிரோடு கூட்டி வந்த அதிசயத்தை சொல்லும் படம். இதுதான் கதை என்றதும் இதை ஒரு அரை மணி நேர டாக்குமெண்டரியாக எடுத்தால் பரவாயில்லை ஒரு முழு படத்திற்கு தாங்குமா? என்ற கேள்வி எழுத்தான் செய்யும். ஆனால் படம் ஓடும் ஒன்னரை மணி நேரமும் நம்மை அவனோடு ஆழ பயணிக்க வைத்துவிடுகிறார்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குனர் டேனிபாயலும் அவரது குழுவினரும்.
![2010_127_hours_005 2010_127_hours_005](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQEJfOkCG7aClv0GqFNMMKKvJ-c7xFrdfjTQC-TgXemRJQnzDJBHxEigSaS-qdG-di5OMMe4LQMUwDULk4xQ7UflIg-5BH-g3AiHC6peNycRa12S5JvltawWqkXbCtEgPwnu19/?imgmax=800)
ஆரோன் ரெய்ஸ்டன் எனும் இளைஞனின் நிஜ வாழ்வில் நடந்த விஷயத்தை அவர் புத்தகமாய் எழுத, அதை திரைப்படமாக்கியிருக்கிறார் டேனி. ஸ்கீரினில் மூன்று பாகமாய் மாறி, மாறி ஓடும் காட்சிகளில் தெரியும் உற்சாகமும், கூட்டமும், அதற்காக அருமையான பெப்பியான ரஹ்மானின் பாடலோடு ஆரம்பிக்கிறது படம். மலையேறப் போகும் உற்சாகத்தையும், அதற்கான பரபரப்பையும் ஆரோனின் பல ஷாட்களிலும், அதை எடிட் செய்து கொடுத்திருக்கும் முறையில் ஒரு பெப்பை கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் காரிலிருந்து சைக்கிளில் அந்த செம்மண் சாலையில் படு ஸ்பீடாய் சைக்கிளோட்டி ஓடும் டாப் ஆங்கிள் காட்சிகள் கண் கொள்ளாக்காட்சி. வழி தவறி வரும் இரண்டு இளம் பெண்களுடன் ஒரு குறுகிய மலையிடுக்கிலிருந்து ஒர் நீர்நிலையில் விழுந்து சந்தோஷக் கொட்டமடிக்கும் காட்சிகள் விஷுவல் பியூட்டி.
![2010_127_hours_013 2010_127_hours_013](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZxR64ISnIS5Yllr_dapZZk867w_kRsLEkISR-eazEFjSRFusziviEjjpjWQjI9t1hXwrMXOJRMxbAuBssbHh21XarG_yQN8gDOesR-fRlDV8l4VhANlndw7ELUy5viEfh1rSC/?imgmax=800)
கை மாட்டிக் கொண்டு அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று சின்ன சின்ன முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போய் அடுத்த கட்டமாய் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதும், சைனா கத்தியை பற்றிய கிண்டலும், தன்னையே ஒரு பிரபலமாக்கி டிவி ஷோவில் வருவது போல இரண்டு கேரக்டர்களாய் மாறி பேசிக் கொள்ளும் காட்சியிலும், தன்னுடய ரெக்கார்டரில் தன்னுடய தினசரி நடவடிக்கைகளை பதிவு செய்து கொள்ளும் காட்சிகளில் வரும் நகைச்சுவையான வசனங்கள் வாழ்வின் நிதர்சனம்.
![127_hours_wallpaper_002 127_hours_wallpaper_002](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4jXeCI6R5kCuOExVYkRqy77znU5sZ7GAx06hWVQ-JV-dmnn84Ld5yRpHM-82sLHBuZdY18dhy8oSm9D6fGpEbtn17Ng-SpZKd-Ei1zuaI3HV5qgPvSsxHmNRHg9B5010tgb1D/?imgmax=800)
ஆரோன் ரெய்ஸ்டனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் பிரான்கோவின் நடிப்பு அருமை. தண்ணீருக்காக அதை சேமிக்க யோசிப்பதும், சிறுநீரை குடித்து உயிர்வாழ்வதும், தான் கிளம்பும் போது அம்மாவின் போனிற்கு பதிலளிக்காததை நினைத்து வருத்தப்படுவதும், நண்பனிடமோ, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் போனதை பற்றி கவலைப்படும் இடம், வீடியோவை ரீவைண் செய்து வழியில் சந்தித்த இளம் பெண்கள் ரொமாண்டிககாக சொல்லியிருப்பதை பார்த்து, அவர்களின் ஒருத்தியின் படத்தை ஃபீரிஸ் செய்து சுயமைதுனம் செய்ய முயன்று, வேண்டாம் வேண்டாம் என்று முடிவெடுக்கும் காட்சி, பிறகு வரும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாவற்றிலும் ஒற்றையாளாய் சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார்.
![2010_127_hours_009 2010_127_hours_009](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0ENyLXnD0Ih2wq8NQXI5kMOd_bgKR0SfBf0lvDBcsjh8sKe0gzXOQPj3J2neqNXcLGrjgNGefbTRlN5Lf7JiTDrh44bF-59jrGnqDsOvMJFyllVjnwqOg-lxc01fYdzzUtG8z/?imgmax=800)
இசைக்காக இரண்டு நாமினேஷன் ஆஸ்கரில் கிடைத்திருப்பது சரியான தேர்வாகத்தான் தெரிகிறது. அருமையான பின்னணியிசை. வாழ்த்துக்கள் ரஹ்மான். மீண்டும் டிஜிட்டல் கேமராவை கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர். அவ்வளவு கீக்கிடமான இடத்தில் எல்லாம் கேமரா வைத்து அதை மிகவும் லைவாக கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள். முக்கியமாய் ஆரோன் உதவிக்காக கத்தும் போது அவரின் குரலோடு வெளியே வரும் கேமரா அப்படியே ஒரு பெரிய டாப் ஆங்கிள் ஷாட்டாக மாறி அவரது குரல் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்வது அருமை.
127 Hours – வாழ்வின் போராட்டம்.
Post a Comment
22 comments:
படம்னா இப்படி எடுக்கணும் சும்மா எந்திரன் மாதிரி ஒரு கிராபிக்ஸ் குப்பய எடுத்துட்டு அது உலக படம்னு, ஹாலிவுட் படம்னு சொல்ல கூடாது... அதுக்கு உங்க ஜிங் ஜா வேற...
Very nice movie, very nice review.
Thanks
இந்த படத்திற்கு இசை முக்கியமானது என உங்கள் பதிவில் தெரிகிறது
ரகுமானுக்கு மீண்டும் ஆஸ்கார் கிடைத்தால் மகிழ்ச்சி
படத்தை விட உங்க விமர்சனம் அருமையா இருக்கு.....
Dedication deserves anything...
Raghuman is proving again and again...
A good example for youngsters...
Rtn.VBM
@ mani - உண்மை தான் :-).. சயன்ஸ் பிக்ஷனை மசாலாவாக எடுத்த பெருமை தமிழுக்கு, என்ன கொடுமை!! :( ...
127 hours நிச்சயம் பார்க்க வேண்டும் ..
இந்த படத்தை ரசிக்கும் நீங்கள் ம ம அம்புவையும் எப்படி ரசிக்கிறீர்கள் ?
ரஹ்மானுக்கு வாழ்த்துகள்..விமர்சனம் அருமை.
You said "ஸ்கீரினில் மூன்று பாகமாய் மாறி, மாறி ஓடும் காட்சிகளில் தெரியும் உற்சாகமும், கூட்டமும், அதற்காக அருமையான பெப்பியான ரஹ்மானின் பாடலோடு ஆரம்பிக்கிறது படம்."
That song was not composed by ARR. It is by Free Blood.
@பார்வையாளன்
உங்களுக்கான பதில் முதல் பின்னூட்டத்திலிருக்கிறது..:))
appadiya...கார்த்திக் மிக்க நன்றி..
>>> இன்று மதியம் ஸ்டுடியோ -5 வில் பார்த்தேன். இங்கே படம் ஓடுவது கடினம் என்று தெரிகிறது. ரஹ்மானுக்கு ஆஸ்கர் வாய்ப்பு மிகவும் குறைவு என்று என் என் மனம் சொல்கிறது. இன்சப்சன் மற்றும் சோசியல் நெட்வொர்க் படங்களின் இசை இதை விட அபாரம்!!
நல்ல படம், விமர்சனம்..
நான்கைந்து முறை பார்த்துவிட்டேன். சலிக்காத திரைக்கதை!!
///அருமையான பெப்பியான ரஹ்மானின் பாடலோடு ஆரம்பிக்கிறது படம்.///
அது ரஹ்மானுடையதல்ல..
இந்த பட்த்திற்கு If I Rise பாடலுக்கு வேண்டுமானால் ஆஸ்கர் வாய்ப்பு இருக்கிறது. பேக்ரவுண்ட் ஸ்கோருக்கு வாய்ப்பு ரொம்பவும் குறைவு!!!
நீங்கதானே mani....
டிஸ்கிய இப்போ அனானி பின்னூட்டமா போடுறீங்களா? நாட் குட்....
//அவ்வளவு கீக்கிடமான இடத்தில் எல்லாம் கேமரா வைத்து அதை மிகவும் லைவாக கொடுத்திருக்கிறார்கள்//
ஒரு விஷயம் சொல்ல வேண்டும் நண்பரே...இந்த படம் வெறும் ஒரு வாரம் மட்டுமே அவுட்டோரில் எடுக்கப்பட்டது...மற்றபடி எல்லாமே(குறிப்பாக கை மாட்டிய பிறகு வரும் சீன்ஸ் அத்தனையும்) ஸ்டுடியோவில் செட் அமைத்து எடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு செட் என்றே தெரியாத அளவிற்கு செட் அமைத்த ஆர்ட் டைரக்டர், அதை படம்பிடித்த கேமராமேன் மற்றும் ஒளிப்பதிவாளரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
indraiya thinagaran papper vaangip padikkavum;
namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;
vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
mobile :+919043194811
கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களின் பட்டியில் இது. நமக்கு எங்க திரையில்???
நல்ல டி.வி.டி வரும்வரை காத்திருப்புத்தான்.
உங்கள் புத்தகம் கிடைத்தது நன்றிகள்.
விருதகிரி படமே சும்மா போய் பார்கிரம் இதையும் பார்த்திட மாட்டமா ?
நல்ல அறிமுகம். பார்த்துவிடவேண்டியதுதான்.
லேட்டுதான் but i think ஒரு எடத்துல நான் ராவணன் music கேட்டேன்... நான் இப்பதான் பார்த்தேன்... உசுரே போகுதே beat...
// சைனா கத்தியை பற்றிய கிண்டலும் //
இந்த இடத்துல தியேட்டர்ல பலத்த கைதட்டல் :-))
நல்ல விமர்சனம் தல
Post a Comment