Thottal Thodarum

Jan 17, 2011

கொத்து பரோட்டா 17/01/11

புத்தக கண்காட்சி-3
ஹரன் பிரசன்னா வைத்த கண்ணில்:) நடுவில் நான்கு நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. த்ரோட் இன்பெக்‌ஷன், ஜலதோஷம் என்று எல்லா தோஷங்களோடு போராடி, சனிக்கிழமை போயிருந்தேன். நிறைய போன் கால்கள் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்டு, ஆறு மணிக்கு டைம் சொல்லி அங்கே போனேன் பல நண்பர்களை சந்தித்தேன். புத்தகம் வாங்கினார்கள், திருப்பூரிலிருந்து நண்பர் ராஜ மாணிக்கம் வந்திருந்தார். வழக்கம் போல இலக்கியவாதி மா.ரா. சங்கர் ஆகியோரும் ஆஜர். பின்பு ராஜமாணிக்கத்தோடு டிபன் சாப்பிடலாம் என்று கேண்டீனுக்கு போன போது வழியில் யுவகிருஷ்ணாவை சந்தித்தோம். மூவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டே, அளவளாவ ஆரம்பித்து கண்காட்சியையே மூடிவிட்டார்கள்.  திரைத்துறையில் பணியாற்றும் இரண்டு நண்பர்களை சந்தித்தேன். ஒருவர் ராஜேஷ் திரு திரு துறு துறு உதவி இயக்குனர். விரைவில் அவர் பணியாற்றும் படத்திற்கு வசனமெழுதி தரக் கேட்டிருக்கிறார். இன்னொரு பதிப்பக நண்பர் நாவல் கேட்டிருக்கிறார். புத்தாண்டு பல புதிய ஆஃபர்களை முன் வைக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ரெண்டு நாட்களில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.  கோபி கிருஷ்ணனின் “உள்ளேயிருந்து சில குரல்கள்”. தி.ஜாவின் “மரப்பசு” . கி.ராவின் “வயது வந்தவர்களுக்கு மட்டும்”. ஜெயமோகனின் “ரப்பர்” இதுவல்லாமல் சந்திரமெளலி மஹாதேவனின் எளிய தமிழில் அல்ஜீப்ரா..
########################################################
பொங்கலன்று ஜெமினி டிவியில் தெலுங்கு எந்திரன் போட்டிருந்தார்கள். என்னடா இது பே சேனலான ஜெமினியை இவர்களுடய டி.ஆர்.பியை தக்க வைப்பதற்காக தமிழகத்தில் முக்கியமாய் சென்னையில் ஃபிரியாக கொடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் இவர்கள் தயாரித்த படத்தை அங்கே போட்டே ஆக வேண்டிய கட்டாயம். ஏனென்றால் அவர்களுக்கு அங்கு போட்டியாய் பல சேனல்கள் பல புதிய படங்கள் என்றிருக்க, இவர்களிடம் உள்ள ஒரே நிஜ ஹிட் ரோபோ. ஆனால் அதே படத்தை இங்கே போட்டால் அதனால் தனியாக ஏதும் வருமானம் வரப்போவதில்லை. அதனால் சரியாய் மதியம் 12 மணிக்கு கட் செய்தவர்கள் மாலை 4 மணிக்கு படம் முடிந்தவுடன் தான் திரும்பவும் ஆன் செய்தார்கள் தமிழகம் முழுவதும். இது இவர்கள் கண்ட்ரோலில் இருக்கும் நெட்வொர்க்குகள் இல்லாது, இவர்களின் டிஜிட்டல் டிகோடர்களை கொண்டு ஒளிபரப்பும் மற்ற ஊர் ஆப்பரேட்டர்களின் டிகோடர்களையும் ஆப் செய்துவிட்டார்கள். பின்னே தமிழ் எந்திரனை வைத்து காசு பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டால்?. இவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று பொறாமைப்பட்டு பிரயோஜனமில்லை. எவ்வளவு நுணுக்கமாகவும், பிசுனாரித்தனமாகவும்  வியாபாரம் செய்கிறார்கள் என்று பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
########################################################
இந்த வார சந்தோஷம்
மீண்டும் கல்கியில் என்னுடய சிறுகதை வெளியாகியிருக்கிறது. புத்தக கண்காட்சியில், நம் பதிவுலக நண்பர்களில்லாது ஒரு புது வாசகர் முதல் முறையாய் என் கதைகளை வாங்கிப் போய் படித்துவிட்டு நேரில் வந்து பாராட்டினார். நன்றி நண்பரே.
######################################################
ரொம்ப நாள் கழித்து அபிராமி மெஹா மால் போனேன். அபிராமி செவன் ஸ்டாரில் படம் பார்க்க, தியேட்டரை நன்றாக புதுப்பித்திருக்கிறார்கள். மால் கலாச்சாரம் சென்னையில் ஆரம்பித்த முதல் ஆள் அபிராமி ராமநாதன் என்று நினைக்கிறேன். பழைய தியேட்டர்களை கொஞ்சம் கூட நிறுத்தாமல் புதிய கட்டிடத்தை எழுப்பியவர். சென்னையில் இருக்கும் மால்களில் இவ்வளவு கீக்கிடமாய் இருப்பது இது ஒன்றாய்த்தான் இருக்கும். ரங்கநாதன் தெருவுக்குள் போய் வந்த உணர்வு. ஒரே கசகசப்பு. முக்கியமாய் வட சென்னை மக்கள் , கொஞ்சம் லோயர் இன்கம் க்ரூப் ஆட்கள் வந்து போகுமிடமாகையால் அதற்கேற்ற இக்கிலி பிக்கிலிகள் நிறைய. மாலின் வாசலில் இருக்கும் சின்ன இடத்தைக் கூட விடாமல் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஒரு நாள் வாடகை சுமார் ஆயிரத்தைத்தாண்டும் என்கிறார்கள். வாரநாட்களின் வியாபாரத்தைவிட, வார இறுதி நாட்களின் வியாபாரத்தில் கல்லா கட்டி விடுவதாய் சொன்னார்கள். தண்ணீர் பாட்டில் எட்டு ரூபாய்க்கு கிடைக்கிறது. தியேட்டர் காண்டீனில் இட்லி, தோசையெல்லாம் கூட தருகிறார்கள். முடிந்த வரை இருக்கிற ஒரு இண்டு இடுக்கைக்கூட விடாமல் உபயோகப்படுத்தி காசு பார்க்கிறார்கள்.  இந்த மாலில் விபத்துகளுக்கான நேரங்களில் படு பயங்கர உயிர் இழப்புகள் ஸ்டாம்பீடுகளால் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அவசர வெளியேறும் வழிகள் மிகக் குறைவு.  மக்கள் நடமாட இருக்கும் இடங்கள் மிகவும் குறுகியதாக இருக்கிறது. எப்படி இம்மாதிரியான மால்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்று புரியவில்லை. மிகவும் அகலம் குறைந்த படிக்கட்டுகள், இருக்கும் இடமெல்லாம் ஏதாவது ஒரு கடை என்று விரித்திருக்கிறார்கள். இதைத்தவிர, ஸ்னோ பால், கிஸ்ஸிங் கார்ட் என்று குழந்தைகளுக்கான கிட்ஸ் செண்டர் வேறு இருக்கிறது. அடுத்த முறை என் குழந்தைகளை நிச்சயம் அங்கு அனுப்ப போவதில்லை.
######################################################
புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி ஹரன் பிரசன்னா.:). ரெண்டு பிரபல எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட ஒரே சைஸில் புத்தகக் கண்காட்சியில் வெளியிட வேண்டுமென்று நாவல் எழுதியிருக்கிறார்கள். ஒன்றில் புத்தகம் அமைப்பாக வர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகூட கதையில் இல்லை. படு மொக்கை. யார் யாரை கொல்கிறார்கள்? எதற்காக கொல்கிறார்கள்? ஏன் நண்பனின் மனைவியை ஆள்கிறான் என்றெல்லாம் ஒரே கேள்விகளின் உச்சம். சமீபத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்துவிட்டு எழுதியது போலிருக்கிறது. பத்து பேஜுக்கு நடுவில் ஒரு சேஸிங், செக்ஸ் காட்சி, வதை என்று போகிறது. சினிமாக்காரகளின் சகவாசம் நிறையவே தெரிகிறது. ஒரு வேளை இலக்கியவாதியானால்தான் புரியுமோ..?

இன்னொருவர் வழக்கமாகவே கதை சொல்ல மாட்டார். கதை மாதிரி ஒன்றை நடு நடுவே சொல்வார். கேட்டால் இது தான் புனைவிலக்கியத்தின் உச்சமென சொல்வார். இந்த புத்தகத்தில் ஏற்கனவே அவர் எழுதிய பத்தகங்களின் பக்கங்களில் உள்ள பெயர்களை மட்டும் மாற்றிவிட்டு புதிதாய் எழுதியது போல் இருக்கிறது. இதைப் போய் ”அந்த” மாதிரி புத்தகம் என்றெல்லாம் சொன்னது அபாண்டம்.மொத்தத்தில் ஆரம்பித்த முதல் ரெண்டு புத்தகங்களிலேயே நொந்து போயிருந்த நேரத்தில் வந்த ஒரே ஆபத்பாந்தவன் நம் தலைவனின் புத்தகம் தான். வாழ்க தலைவர்.
####################################################
இந்த வாரம் படித்தது
ழார் பத்தாய்
என்கிற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய The story of the eye எனும் நாவலை யுரேக்கா என்பவர் தமிழாக்கம் செய்ய அதை நாகார்ஜுன் தன்னுடய வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார். கதையினை ஆரம்பிக்கும் முன் ஏகப்பட்ட முன்னறிவிப்போடுதான் ஆரம்பித்திருந்தார். நான் தயாராகிக் கொண்டு படித்தேன். உள்ளிழுத்துச் சென்றுவிட்டது. அது தரும் உணர்வுகள் பல விதமாய் இருந்தது.  அப்பதிவின் லிங்க் இதோ.. அக்கதையின் ஆரம்பத்தில் நாகார்ஜுன் கொடுத்திருக்கும் முன்னறிவிப்பை (அ) முன்னெச்சிரிக்கையை  என் சார்பாகவும் படித்துவிட்டு படிக்க முடிவெடுக்கவும்.
#######################################################
இந்த வார தத்துவம்
நான் தோற்கவில்லை. என் வெற்றியை கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறேன். யார் வேணுமின்னாலும் சொல்லலாம்
##################################################################
இந்த வார ப்ளாஷ்பேக்
மாதுரியின் அட்டகாசமான நடனம், தாளமிட வைக்கும் பாடல், ஒரு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணியான பாடல்
####################################################
இந்த வார குறும்படம்
அனிமேஷன் என்றாலே அது நகைச்சுவை தானென்றில்லாமல் ஒரு சீரியஸான விஷயத்தை தொட்டிருக்கிறார்கள். அருமையான படம்
##################################################
இந்த வார விளம்பரம்
###################################################
அடல்ட் கார்னர்
ஒரு நாள் கணவன் மிகவும் சோகமாய் வந்தான். என்ன என்று கேட்ட மனைவியிடம் தன்னை வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள் என்றான் வருத்தத்துடன். வழக்கமாய் சிறந்த எம்பிளாயி என்று பட்டம் பெறும் உன்னை ஏன் அப்படி செய்தார்கள்? என்று கேட்க அதற்கு அவன் என்னுடய நெடு நாள் ஆசையை, கனவை பூர்த்தி செய்வதற்காக செய்த முயற்சி செய்ததினால்தான் அப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்ல.. அவள் அப்படி என்ன ஆசை? என்று கேட்டாள். ஒன்றுமில்லை நான் வேலை செய்யும் ஊறுகாய் கம்பெனியில் உள்ள மாங்காய் கட்டரில் என் “லுல்லாவை” வைக்க ஆசைப்பட்டேன். அதை கேட்டு அதிர்ந்த மனைவி அய்யயோ உனக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்று அலற.. அவன் எனக்கு ஒன்றும் ஆகவில்லை அந்த மாங்காய் கட்டர் பெண்ணையும் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் என்றான்.

Post a Comment

35 comments:

க ரா said...

கொத்து சூப்பர்னா...

kanagu said...

அடடா... நேத்து வந்திருந்தா உங்களை பார்த்து இருக்கலாம் போல இருக்கேண்ணா.. நான் இன்னைக்கு தான் போனேன். அதே 6 மணிக்கு..

அபிராமி மால் எப்போதுமே இடநெருக்கடியான ஒரு இடமே... :( தியேட்டரின் தரமும் அவர்கள் வைக்கும் விலைக்கு ஏற்றவாறு இருக்காது..

நாவல் பெயர்கள சொன்னீங்கன்னா நாங்க தப்பிப்போமே... :) :)

சுஜாதா அவர்களோட நாவல் என்னது???

சக்தி கல்வி மையம் said...

தத்துவம் ரொம்ப அருமை..

Unknown said...

இவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று பொறாமைப்பட்டு பிரயோஜனமில்லை. எவ்வளவு நுணுக்கமாகவும், பிசுனாரித்தனமாகவும் வியாபாரம் செய்கிறார்கள் என்று பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.

Unknown said...

//இவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று பொறாமைப்பட்டு பிரயோஜனமில்லை. எவ்வளவு நுணுக்கமாகவும், பிசுனாரித்தனமாகவும் வியாபாரம் செய்கிறார்கள் என்று பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.//

Correct . . .

எல் கே said...

சனிக்கிழமை மதியம் வந்தேன். செந்திலும் பிசினு சொன்னார்.

pichaikaaran said...

தேகம் நாவலை இன்னொரு முறை படித்து பார்க்கவும் . மற்றபடி எழுத்தாளர் என்றால் சுஜாதா , நடிகர் என்றால் கமல் , இயக்குனர் என்றால் மணிரத்னம் , அறிவாளி என்றால் சோ ராமசாமி , என்பது தெரிந்த விஷயம்தான்

R. Gopi said...

கல்கியில் சிறுகதை வெளியானதற்கு வாழ்த்துகள்!

Cable சங்கர் said...

@ramasamy
நன்னிங்கோ..

@கனகு
அட நேத்தும் நான் அங்கதானே இருந்தேன் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை.

@சக்தி ஸ்டடி செண்டர்
நன்றி

@பாபு
நன்றிங்கோ

@எல்.கே
ஆமா.. எனக்கு உடம் பு சரியில்லை

@ கோபி ராமமூர்த்தி
நன்றி தலைவரே..

vinthaimanithan said...

ழார் பத்தாயைப் படித்த மூன்றாவது ஆள் நீங்கதான் தலைவரே!

CS. Mohan Kumar said...

உடம்பு சரியில்லை என்றாலும் ரெண்டு புது படம் பார்த்த தங்கள் கடமை உணர்ச்சி வாழ்க ...!!

Cable சங்கர் said...

@விந்தை மனிதன்
அப்ப அந்த முத ரெண்டு பேரு ஆருங்க..?:))

2மோகன் குமார்
மூணு படம்.. ஹி..ஹி..

'பரிவை' சே.குமார் said...

கொத்து சூப்பர்னா...
கல்கியில் சிறுகதை வெளியானதற்கு வாழ்த்துகள்.

Anand said...

Cable Ji,

I feel very happy to see all the films are good. I watched Kavalan, Siruthai and Adukalam. In general, only one movie will be in the good to see and others will be waste. But for this pongal all the films are very very Good.

Anonymous said...

உங்கள் பக்கம் ஓபன் ஆக நீண்ட நேரம் ஆகிறது.கவனியுங்கள் ஜி.

Unknown said...

//ழார் பத்தாயைப் படித்த மூன்றாவது ஆள் நீங்கதான் தலைவரே//

4....

vinthaimanithan said...

//அப்ப அந்த முத ரெண்டு பேரு ஆருங்க..?:))//
இந்தக்கதை உங்களுக்குத் தெரியாதா தலைவரே! நம்ம டகால்டி சாருவும் மிசுகினும்தான் :))))

இதை மொழிபெயர்த்த யுரேக்காவோ, வெளியிட்ட நாகார்ஜுனனோ, அவரோட தளத்துல இந்தக்கதைய படிச்சிட்டு பின்னூட்டம்போட்ட வாசகர்களோ யாருமே இதைப் படிக்கவே இல்லையாம் :)))

vinthaimanithan said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

கொத்து குத்து....

IKrishs said...

த்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி ஹரன் பிரசன்னா.:). ரெண்டு பிரபல எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட ஒரே சைஸில் புத்தகக் கண்காட்சியில் வெளியிட வேண்டுமென்று நாவல் எழுதியிருக்கிறார்கள். ஒன்றில் புத்தகம் அமைப்பாக வர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகூட கதையில் இல்லை. படு மொக்கை. யார் யாரை கொல்கிறார்கள்? எதற்காக கொல்கிறார்கள்? ஏன் நண்பனின் மனைவியை ஆள்கிறான் என்றெல்லாம் ஒரே கேள்விகளின் உச்சம். சமீபத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்துவிட்டு எழுதியது போலிருக்கிறது. பத்து பேஜுக்கு நடுவில் ஒரு சேஸிங், செக்ஸ் காட்சி, வதை என்று போகிறது. சினிமாக்காரகளின் சகவாசம் நிறையவே தெரிகிறது. ஒரு வேளை இலக்கியவாதியானால்தான் புரியுமோ..?///


நானும் குறிப்பிட்டஅந்த பதிப்பகத்தின் மற்ற வெளியீடுகளை நம்பி ஏமாந்தேன் ...

San said...

Dear Cable,
I had the same feeling when i visited Abirami mall.Is it b'cas the owner is very influential!!!
Even after the Delhi Upahar Cinema tragedy our government wont give a damn for safety?
I watched Boss engira baskaran in annai abirami.Never ever go to this theatre,most filthiest.This was the last time i had been to this mall with my kids and i request all not to visit this mall with kids as it is not safe for kids and also for adults.

பிரபல பதிவர் said...

//மற்றபடி எழுத்தாளர் என்றால் சுஜாதா , நடிகர் என்றால் கமல் , இயக்குனர் என்றால் மணிரத்னம் , அறிவாளி என்றால் சோ ராமசாமி , என்பது தெரிந்த விஷயம்தான்
//

அப்புறம் ஆட்சியாளர்னா அம்மா....

தல.... அபிராமி பத்தி இவ்ளோ ஓப்பனா எழுதாதீங்க .... ஆட்டோ வந்திட போகுது....
சத்யம் தியேட்டர்லயும் அவசர வழிகளில் ஏகப்பட்ட குளறுபடி உள்ளது....

சபரிமலை பாதையிலும் குளறுபடி உள்ளது....

இதெல்லாம் பாத்தா ஒண்ணுமே பண்ண முடியாது....

கோநா said...

koththukal anaiththum kaaram, manam, suvai. kalkiyil sirukathai veliyaanathukku vaalththukkal cable sankar.

Jana said...

ஏக்..த்தோ..த்தீ..மறக்கமுடியுமா என்ன?

மரா said...

u writer, u blogger, u busy :))))

Anonymous said...

//அபிராமி மெஹா மால்கொஞ்சம் லோயர் இன்கம் க்ரூப் ஆட்கள் வந்து போகுமிடமாகையால் அதற்கேற்ற இக்கிலி பிக்கிலிகள் நிறைய//
>>> பொறந்தது முதல் மெட்ராஸ்ல குப்பை கொட்டிட்டு இருக்கேன். எத்தனையோ கலீஜ் வார்த்தை கேட்டிருக்கேன். அது என்னங்க “இக்கிலி பிக்கிலி” ..

//இருக்கும் இடமெல்லாம் ஏதாவது ஒரு கடை என்று விரித்திருக்கிறார்கள்//
>>> அஞ்சு நிமிஷம் நின்னா நம்ம தோளுல பான் பராக், ஷாம்பு பாக்கெட்டு போட்டு வியாபாரத்தை ஆரம்பிச்சிடுவானுங்க போல. நமக்கு என்னைக்குமே சத்யம்தான். எப்பயாச்சும் தேவி. (தியேட்டரை சொன்னேன்..வேற ஏதாச்சும் நெனச்சிக்க வேணாம்)

Philosophy Prabhakaran said...

@ பார்வையாளன்
// தேகம் நாவலை இன்னொரு முறை படித்து பார்க்கவும் . மற்றபடி எழுத்தாளர் என்றால் சுஜாதா , நடிகர் என்றால் கமல் , இயக்குனர் என்றால் மணிரத்னம் , அறிவாளி என்றால் சோ ராமசாமி , என்பது தெரிந்த விஷயம்தான்... //

ஆஹா... நீங்க இங்கதான் இருக்கீங்களா...

நடிகர் என்றால் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தானே தலைவரே... மாத்தி சொல்றீங்க...

Philosophy Prabhakaran said...

சாருவையும் ஜெயமோகனையும் தாக்கி எழுதியிருக்குறதா சொன்னீங்களே... அது இதுதானா...?

(அப்பாடா... பத்த வச்சாச்சு...)

Cable சங்கர் said...

@பிலாசபி பிரபாகரன்
நான் எங்க எழுதினேன்..? அவ்வ்வ்

நடிகர் என்றால் கமல் என்று வாய்தவ்றி உண்மை சொல்லிவிட்டார் பிலாசபி..:))

Cable சங்கர் said...

@சிவகுமார்
என்னது இக்கிலி பிக்கிலி தெரியாதா? அது வந்து அதான் இந்த காமா சோமான்னு பொருட்கள் இருக்குமில்லையா..? அதுதான்..

Cable சங்கர் said...

2மா.ரா
யா..

@ஜனா
அதானே..

@கோநா
நன்றி

@மாப்பிள்ளை
சத்யமாவது பரவாயில்லை. ஸ்பேஸ் இருக்கிறது.. எல்லா தியேட்டரிலும் இன்னொரு மாற்று வழி இருக்க்கிறது..

@சான்
நன்றி

@கிருஷ்குமார்
வாங்க நாம் ரெண்டு பேரும் சேர்ந்து அழுவோம்.

Cable சங்கர் said...

@விந்தைமனிதன்
அய்யோ.. தெரியாம அவஙக்ளை பகைச்சிட்டேன்.. அய்யஓஓஒ

@கே.ஆர்.பி.செந்தில்
5

@பிரகாஷ்
நன்றி தமிழ் மணம் ப்ராப்ளம்

2ஆனந்த்
ம்..

@சே.குமார்
நன்றி

Unknown said...

//இவர்கள் ஜெயிக்கிறார்கள் என்று பொறாமைப்பட்டு பிரயோஜனமில்லை. எவ்வளவு நுணுக்கமாகவும், பிசுனாரித்தனமாகவும் வியாபாரம் செய்கிறார்கள் என்று பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.//

150 கோடி போட்டு சும்மாவா காட்டுவாங்கா. உங்க படத்தோட 5 வால் போஸ்டரை லவட்டினதுக்கே அழுது அளப்பாரை பன்னீங்களே சினிமா வியபரத்துல அது என்னவாம்

Thamira said...

விஷயமெல்லாம் ஓகேதான். ஆனால் எனக்கென்னமோ கேப்பு விடாம சளசளன்னு எழுதியிருக்கிறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.! :-)

Cable சங்கர் said...

@prabakar
அதைத்தான் பாராட்டுறேன் வெ.