பகுதி-6
இந்த போஸ்டருக்கு பின்னால் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் இரண்டு மூன்று தியேட்டர்களுக்கு ஒரே அள் போஸ்டர் ஒட்டுபவராக இருப்பார். அது தவிர அவரிடம் மற்ற அறிவிப்பு போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் என திடீர் திடீரென வரும ஆர்டர்களும் உண்டு. இந்த ஆட்களுக்கு இன்றளவிலும் நல்ல டிமாண்ட் இருக்கிறது.
இந்த போஸ்டருக்கு பின்னால் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் இரண்டு மூன்று தியேட்டர்களுக்கு ஒரே அள் போஸ்டர் ஒட்டுபவராக இருப்பார். அது தவிர அவரிடம் மற்ற அறிவிப்பு போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் என திடீர் திடீரென வரும ஆர்டர்களும் உண்டு. இந்த ஆட்களுக்கு இன்றளவிலும் நல்ல டிமாண்ட் இருக்கிறது.
மற்ற போஸ்டர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு மார்க்கெட் சினிமா போஸ்டர்களுக்கு மட்டுமே உண்டு. அது என்னவென்றால் ரீ சேல் வேல்யூ. ஆம் ரீசேல் வேல்யூதான். ஒரு சிங்கிள் ஷீட், டூ ஷீட், ஃபோர்ஷீட், சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் முறையே 20,40,60,100 என்று வைத்துக் கொள்வோம். புதுப்படங்கள் ரிலீஸாகும் போது விநியோகஸ்தர்களே இத்தனை போஸ்டருடன் படப்பெட்டியை தருவார்கள். அப்படி விளம்பரத்துக்காக வரும் போஸ்டர்களை ஒட்டாமல் ஒட்டியதாய் கணக்கு காட்டிவிட்டு ஒரு போஸ்டருக்கு இவ்வளவு என்று கணக்கு செய்து பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒவ்வொரு டிசைனிலும் குறைந்தது ஐந்து போஸ்டரையாவது எடுத்து வைத்துக் கொள்வார்கள். அதை கொண்டு போய் தமிழ் சினிமாவின் விநியோகஸ்தர்களின் மையமாக இருக்கும் மீரான் சாகிப் தெருவில் உள்ள ஆளிடம் முப்பது ரூபாய் போஸ்டரை பத்து ரூபாய்க்கு விற்று காசு பார்த்து விடுவார்கள். இந்த போஸ்டர் ஒட்டுபவர்கள்.
ஒரு படம் ரிலீஸாகும் போது படத்தின் பப்ளிசிட்டிக்காக பெரிய அளவில் ப்ரிண்ட் செய்யப்படும் போஸ்டர்கள், அதே படம் ஓடி முடிந்த பிறகு ஷிப்டிங்கில் போடப்படும் தியேட்டர்களுக்காக இரண்டு லட்சம், மூன்று லட்சம் செலவு செய்து போஸ்டர் அடிக்க யோசிப்பார்கள். வெகு சில படங்களுக்கே மீண்டும் சிங்கிள் ஷீட், டூ ஷீட் போஸ்டர்கள் அடிப்பார்கள். அதுவும் பெரிய ஹிட் படங்களாய் இருந்தால் மட்டும். அப்போது அம்மாதிரி படங்களை ஷிப்டிங்கில் போடவரும் திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகஸ்தர் போஸ்டர் தர வேண்டும். ஆனால் அவ்ரிடம் இருக்காது. நம்ம தியேட்டருக்கு நல்ல பப்ளிசிட்டி வேண்டுமென்றால் நாம தான் கொஞ்சம் மெனக்கெடணும் என்பதால் வேறு வழியில்லாம மார்கெட்டில் ஏற்கனவே தியேட்டர்களில் ஒட்டாமல் விற்ற போஸ்டரை மீண்டும் நாமே விலைக்கு வாங்குவோம். பல விநியோகஸ்தர்களுக்கு தெரியும் அது நாம் அடித்து கொடுத்த போஸ்டர்தானென்று. இப்படி போஸ்டருக்கென்று ஒரு தனி மார்கெட் இருக்கிறது.
ஒட்டின போஸ்டரை கிழிப்பது என்பது தியேட்டர்காரர்களுக்கு பெற்ற தாயை அவமானப்படுத்தியதற்கு சமமாய் பல சமயம் சீறி எழுவார்கள். ஓரத்தில் கிழிக்க முற்பட்ட விஷயத்துக்காக எல்லாம் ரணகள சண்டை போடுவார்கள் அந்த அந்த ஏரியா ஆட்களும், தியேட்டரில் முக்கிய அல்லக்கையாக இருப்பவரும். அவர் பாவம் ஏற்றிவிட்ட தியேட்டர் ஓனருக்காக தன் விசுவாசத்தை காட்ட எகிறிக் கொண்டிருக்க, தியேட்டர் ஓனர் நடுவில் வந்து அவர்களின் பேக்கப்பை பார்த்து, கமுக்கமாய் தன் ஆளை திட்டி அனுப்பும் போது அவரின் முகத்தை பார்க்க வேண்டுமே.. அய்யோ.. பாவமாய் இருக்கும்.
போஸ்டர் ஒட்டுவது ஒரு பக்கமிருக்கட்டும், போஸ்டர் ஒட்டுவதற்கான இடத்தை கண்டுபிடிப்பது மிகப் பெரிய விஷயம். முதலில் நல்ல பார்வையான இடத்தில் முக்கிய ஜங்ஷனில் இருக்க வேண்டும், அடுத்து நல்ல இரண்டு டூ ஷீட் போஸ்டரையாவது ஒட்டுமளவுக்கு இடம் இருக்க வேண்டும். அந்த இடத்து சொந்தக்காரன் பிரச்சனை பண்ணாமல் இருகக் வேண்டும், அப்படியே மீறி ஒட்டினால் பசித்த மாடோ, கொஞ்சம் கிளாமராய் படம் போட்ட போஸ்டரைப் போட்டிருந்தால் அதை பார்த்த எழும்பிய பசியில் உள்ள மனிதனோ கிழிக்காமல் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் தேடித்தேடி கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கணக்கில் இடம் பிடிக்கப்பட்டு ஒட்டப்படும் போஸ்டர்கள் கிழிபடுவது என்பது மிகவும் வலி மிகுந்த விஷயம். அதற்கு காரணம் போட்டி தியேட்டர்காரர்கள். சில சமயம் அவர்களுக்கு போஸ்டர் ஒட்டுபவனும், நமக்கு ஒட்டுபவனும் ஒரே ஆளாய் கூட இருப்பான். நாம் அவன் போஸ்டர் ஒட்டாமல் திருடுவதற்கு தடையாக தொடர்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை எண்ணி அவனை நோகடித்தால் அவன் தன் வேலையை இம்மாதிரி மற்ற போஸ்டர்களை ஒட்டி தன் எதிர்ப்பை காட்டுவான். அமமாதிரியான நேரத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து திரையரங்கை நடத்தும் உரிமையாளர் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
அடுத்து அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள். இவர்களுக்கு யார் என்ன போஸ்டர் ஒட்டினார்கள் புது படமா? பழைய படமா? என்பதெல்லாம் கிடையாது அண்ணனுக்கு பாராட்டுவிழா, மணிவிழா, பொதுக்கூட்டம் என்று முடிவெடுத்து விட்டால் உடனடியாய் கண் அவிந்துவிடும் அளவுக்கு குட்டிக் குட்டியாய் பெயர் அடித்த போஸ்டர்களை லெட்டர் பிரஸில் அடித்து அப்போதுதான் ஈரம் கூட காயாமல் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரின் மீது இவர்களது போஸ்டரை ஒட்டி விடுவார்கள். சரி ஒட்டிவிட்டுத்தான் போனார்களே என்று அடுத்த நாள் மீண்டும் நம் போஸ்டரை ஒட்ட அதை கிழித்து புதுப் போஸ்டரை ஒட்டினால் எப்படா கிழிப்பான் என்று காத்திருந்து ஆள் வைத்து பார்த்துக் கொண்டிருப்பான் ஒரு லோக்கல் தலைவன். உடனடியாய் தன் தோழர்களையோ, அல்லக்கைகளையோ விட்டு நம் போஸ்டர் இருக்கிற எல்லா இடத்தில் உள்ள போஸ்டரை கிழித்துவிட்டுக் கொண்டேயிருப்பான். இதை சமாளிக்க வேறு வழியில்லாமல் அவனையே கூப்பிட்டு பேசி “சரி” செய்ய வேண்டும். டபுள் செலவு. பிற்காலத்தில் புதுப்படம் ரிலீஸாகும் போது முதலமைச்சர் ரேஞ்சுக்கு சுண்டு சுள்ளான் எல்லாம் அய்யா வராரு.. ஃபேன் பக்கமா பத்து சீட் போட்டுருங்க..என்று அவன் குடும்பத்துக்கு சேர்த்து சொல்லிவிட்டு போவான். இது போல ஆளாளுக்கு லெட்டர் பேட் கட்சிக்காரர்கள் வருவார்கள். சில சமயம் நாட்டில் இவ்வளவு கட்சியிருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருக்கும். ஆணியே புடுங்க வேண்டாமென்பது போல போஸ்டர் கிழிந்தாலும் பரவாயில்லை என்று ரெண்டு நாள் சுமமா இருப்பதே சாலச் சிறந்த காரியம். சில சமயம் இந்த துண்டு துக்கடா ஆட்களினால் வரும் பிரச்சனை பெரிதாகிப் போவதும் உண்டு.
Post a Comment
23 comments:
Me thaaaaaaaa First !
/* ஆணியே புடுங்க வேண்டாமென்பது போல போஸ்டர் கிழிந்தாலும் பரவாயில்லை என்று ரெண்டு நாள் சுமமா இருப்பதே சாலச் சிறந்த காரியம் */
POSTER PASTE PANNA IPUTU RAGALAYA.
இந்த போஸ்ட்ர் ஒட்டியே இவங்க லட்சாதிபதி ஆகிடுவாங்க போலிருக்கே..!!!!!!!!!!!!!!
http://sakthistudycentre.blogspot.com/
/// அமமாதிரியான நேரத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து திரையரங்கை நடத்தும் உரிமையாளர் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். ///
கஷ்டம் தான்.
உங்க புத்தகங்களை என் பிளாகில் விம ர்சனம் பன்னலாமா... லெமன் புக் அருமை..
பேசாம போஸ்ட்டர் ஒட்டுவதையே தடை செய்தால் இந்த பிரச்சணை இருக்காதுல்ல
சக்தி தாராளமாய் விமர்சனம் செய்யுங்கள் வரவேற்கிறேன்.
போஸ்டர் ஒட்டுவது ஒரு பக்கமிருக்கட்டும், போஸ்டர் ஒட்டுவதற்கான இடத்தை கண்டுபிடிப்பது மிகப் பெரிய விஷயம்.
உண்மை தான் தலைவா மதுரையில எல்லாம் சினிமா போஸ்டர் ஓட்டறது மிக சிரமம். எங்க பார்த்தாலும்
அரசியல் சுவர் விளம்பரத்தின் ஆக்கிரமிப்பு தான்.
தலைவா சூப்பரு...
நானும் கூட எங்கூர்ப் பக்கம் ரெண்டு தியேட்டருக்கு போஸ்டர் ஒட்டுற வேல பாத்திருக்கேன்...
நீங்க எழுதுன எல்லாத்தையும் அப்பப்ப நேர்லயும் பாத்துருக்கேன்...
:-)
ஒரு காலத்துல இந்த போஸ்டர் ஒட்டுற வேலை பார்த்துருக்கேன்!
கிராமம் கிராமமாப் போய் ஒட்டுனது ஞாபகத்துக்கு வருது.
போஸ்டர் ஒட்டுறதும் பசை காய்ச்சுறதும் ஒரு கலை.
எனது நண்பனின் தியேட்டர் இருந்ததால் நானும் நீங்கள் சொல்லும் சில விஷயங்களை அறிந்திருக்கிறேன்.
அண்ணே,
போஸ்டர் ஒட்டறதுல இவ்வளவு பிரச்சனையா?????
யப்பா!!!!!!!!!
ஒரு போஸ்டர்ல இத்தனை விசயங்களா ?
கண்டிப்பா சுவத்தோட சொந்தக்காரங்க சந்தோஷமா அத குடுக்கமாட்டாங்க. சுவத்துல போஸ்டர் ஒட்டி, அந்த இடத்தயே பாழாக்குறது நல்லாவா இருக்கு. நீங்க பாத்து பாத்து கட்டின வீடு/கடையோட சுவத்துல போஸ்டர் அடிக்க சம்மதிப்பீங்களா?
cinema viyaparam book i purchased in the book show.
its very helpful
thank you very much
அடசாமீ .. போஸ்டர்ல இத்தன நச்சு வேலை இருக்கா? நெனச்சே பாக்காத உண்மைகள் ..உரைத்தமைக்கு நன்றி. பாவம் தியேட்டர்காரங்க.
தல... புக் கிடைச்சிடுச்சி.... அருமை... அருமை.... அருமை....
தல... புக் கிடைச்சிடுச்சி.... அருமை... அருமை.... அருமை....
அப்புறம் போஸ்டல் செலவு இலவசமா எப்புடி மேனேஜ் செய்றீங்க... 1.7ல ஏதாவது பங்கு கிடைச்சுதா... விவரம் ப்ளீஸ்...
இவ்ளோ கஷ்டப்பட்டு ஒட்ன போஸ்டர பாத்துட்டு வர அப்பாவி பொதுஜனத்தோட நிலமய கம்பேர் பண்ணும் போது தியேட்டர் ஓனரோட நிலம பரவால்ல தல...
2சிவகுமார்
பின்ன போஸ்டர்னா சாதாரணமா?
@சக்தி ஸ்டடி செண்டர்
ம்
@பன் பட்டர் ஜாம்
பின்ன..
@ஆனந்த
ஆணியே புடுங்க வேணாம்ங்கிறீங்க?
@ஜி.ராஜ்மோகன்
அது சரி ஒட்டுனுவங்களுக்குத்தானே கஷ்டம் தெரியும்..:)
@அகல்விளக்கு
ம் அனுபவம் ..
@ராஜு
ஆமா..அது நிச்சயமாவே ஒரு கலைதான்.. ஒரு சிலபேர் ஒட்டின போஸ்டரை பத்து நிமிஷத்துக்குள்ள கிழிக்கலைன்னா.. போஸ்டரை அக்கு அக்காத்தான் கிழிக்க முடியும்..
@சே.குமார்
நன்றி
@தராசு
ஆமாம்ணே
2கனாக்காதலன்
ஆமாம்
@சுதாகர்
அது தனிக்கதை
@நிலா
பார்த்துடலாம்
@நிலா
உங்களிடமிருந்து ஒரு நலல் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
2ப்ரதீபா
ஆமாங்க
@சிவகாசி மாப்பிள்ளை
நன்றி.. விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்
சும்மா ஒரு ஆரம்ப பில்டப்தான்..ஹி..ஹி..
@சிவகாசி மாப்பிள்ளை
அது தனி கவலை..
Computer Training Institute போஸ்டரை பத்தி ஏதும் சொல்லவில்லை
/@சுதாகர்
அது தனிக்கதை
/
அது என்ன தனிக்கதை?
Post a Comment