பகுதி 7
புதிய திரைப்படங்கள் வரும் போதுதான் இம்மாதிரியான கட்சிகள், கட்சி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியும். பெரிய கட்சிக்காரர்கள் எல்லாம் முடிந்தவரை டிக்கெட் வாங்கிவிடுவார்கள். ஆனால் அவர்களின் அல்லக்கைகள் தான் பிரச்சனை. லெட்டர் பேட் கட்சிக்காரர்கள் காசு கொடுக்காமல் படம் பார்க்க விரும்புவார்கள். முதலிலேயே அவர்களை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால். தியேட்டர் அதோகதிதான். தினமும் இருபது பேராவது ஓசியில் படம் பார்க்க வருவார்கள். அவர்களை தடுத்து நிறுத்தியதால் சில பல லோக்கல் பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
உதாரணமாய் டிக்கெட் கொடுக்க நேரமாகிறதென்று அங்கிருக்கும் கதவுகளை அடிப்பது, எதாவது கலாட்டா செய்வது, தியேட்டரில் வந்து சேரின் மீது ஏறி குதிப்பது, குடித்துவிட்டு வந்து வாந்தியெடுப்பது என்று பல இம்சைகள் வரும். அப்போது நம் நடவடிக்கைகளையும் கொஞ்சம் கடுமையாய் காட்ட வேண்டியிருக்கும். நம்மிடம் உள்ள விசுவாசிகளை அதற்கு பயன் படுத்த வேண்டும். அவர்களை விட்டு பிரச்சனை செய்பவர்களை கையாள சொல்லிவிடுவோம். பின்பு அது லோக்கல் ஸ்டேஷன் வரைக் கூட போகும் அப்போது அங்கு வைத்து பஞ்சாயத்து செய்ய, வந்தவன் லெட்டர் பேட் கட்சிக்காரனாக இருந்தால் அவன் வரவே மாட்டான். லோக்கல் ஸ்டேஷனில் நம் பங்களிப்பு இருக்கும் போது எப்படி அவனுக்கு சப்போர்ட் செய்வான்?. பெரிய கட்சிக்காரர்கள் எப்போதும் பிரச்சனைக்கு வர மாட்டார்கள். அப்படி வந்தால் கொஞ்சம் சீரியஸாய்த்தான் இருக்கும். இம்மாதிரி பிரச்சனைகள் எலலா ஏரியா தியேட்டரிலும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். சைதாப்பேட்டையில் ஒரு திரையரங்கில் அப்படித்தான். புதிதாக்கப்பட்டு, டி.டி.எஸ். ஏசி எல்லாம் செய்தார்கள். அவர்களின் சுற்றுப்பட்டு ஏரியா ஸ்லம் நிறைந்த பகுதி. அங்கு அவர்கள் முதலில் ஒரு ஒழுக்கத்தை கொண்டு வர முயற்சி செய்தார்கள். அதாவது திரையரங்குக்குள் பான், சிகரட் போன்ற வஸ்துக்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, போலீஸ் கெட்டப்பில் உள்ள நான்கு ஊழியர்களை வேலைக்கு வைத்து ஒவ்வொருவரையும் செக் செய்து பாக்கெட்டுகளை எடுத்து வெளியில் வைத்துவிட்டு வரவேண்டும் இல்லையேல் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு முதலில் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது அந்த ஏரியாவில் லோக்கல் தாதாக்கள் பிரச்சனையும் இருந்தது. இதையெல்லாம் எதிர்த்து போலீஸ் துணையுடன் ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வந்திருந்தாலும். இவர்களின் கோபத்தை வேறு விதத்தில் காட்டிவிட்டுத்தான் வருவார்கள். சீட்டுகளை கிழிப்பது, சேர் கைகளை உடைப்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு வருவார்கள். தியேட்டரில் சீட்டுகள் சரி செய்வது பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது.. அவர்கள் புலம்பியது இது. வருடத்திற்கு ஒரு முறை சீட்டுக்க்கு செலவு செய்தால் அது ஞாயம். இரண்டு மாசத்துக்கு ஒரு முறை என்றால் அது கட்டுப்படியாவாது என்றார் மேலாளர்.
நாங்கள் தியேட்டர் எடுப்பதற்கு முன் அரங்கின் முன் பக்கமெல்லாம் புல் வளர்ந்து கிடந்தது. பக்கத்து டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு நெம்பர் ஒன் போவது பலரது வாடிக்கை.. நாங்கள் தியேட்டர் எடுத்து முன் பக்க ஏரியா எல்லாவற்றையும் சீர் செய்து, ஒரு காவலாளியையும் போட்டு இந்த பழக்கத்தை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தோம். ஒரு நாள் காவலாளி வரவில்லை. அப்போது சரக்கடித்து வந்த ஒருவன் மிகவும் சுவாதீனமாய் தியேட்டரின் வாசல் கதவுக்கு அருகில் உட்கார்ந்து நெ.1 போக நாங்கள் தூரத்திலிருந்து “டேய்.. எழுந்திருடா..” என்று கத்திக் கொண்டிருந்தோம். அவன் எதை பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்திருக்க, என் நண்பர் ஒரு சிறு கல்லை தூக்கி அவன் பால் எறிந்தார்... ஆனால் அவன் மீது படவில்லை. திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் தன் கடமையை தொடர்ந்தான். நாங்கள் கோபத்தில் அவன் அருகில் போவதற்குள் அவன் எழுந்து வந்து, “யோவ்.. உனக்கு அறிவிருக்கா..? கல்லெடுத்து அடிக்கிற?” என்றான். என் நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. வாயில் பல லோக்கல் வசவுகளுடன் திட்டி “உனக்கு அறிவில்ல?” என்று கேட்க.. அவன் சாவதானமாக “ இனிமே போவலை.. அதுக்காக பாதியில நிறுத்தச் சொன்னா என்ன செய்றது?” என்று சொல்லிவிட்டு போனான். எங்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை. அவன் சொல்வதும் சரிதானே..? ஆத்திரத்தை அடக்கலாம்.. மூ..ச் சரி விடுங்கள்.
இப்படியாக பல பிரச்சனைகளுக்கு நடுவே தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. மனுநீதி படமும் போட்டாகிவிட்டது அடுத்த படத்துக்கு அலைய ஆரம்பிக்க வேண்டும் என்று முதல் வாரத்திலேயே மனுநீதியின் ரிசல்ட் சொல்லிவிட்டது. மீண்டும் வாத்தியாருடன் படம் போட மீரான் சாகிப் தெருவுக்கு போக விழைந்தோம்.
இம்மாதிரி நேரத்தில்தான் விநியோகஸ்தர்கள், அதிலும் வெற்றிப்பட விநியோகஸ்தர்களின் தயவு தியேட்டர்காரர்களுக்கு தேவை. ஒரு தியேட்டரை நிலை நிறுத்த வெற்றிப் படங்களாய் வெளியிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டரை விநியோகஸ்தர்களிடம் நிலை நிறுத்த நல்ல கலக்ஷன் கொடுக்கும் செண்டர் என்று நிருபிக்க வேண்டும். பெரிய பெரிய வெற்றிப்படமெல்லாம் கூட ஒரு சில தியேட்டர்களில் மற்ற தியேட்டர்களை விட குறைந்த அளவு வசூல் செய்வதும் உண்டு. அதற்கு தியேட்டரில் வைக்கும் விலை, ஒளி ஒலி அமைப்பு, பராமரிப்பு என்று பல விஷயங்கள் இருந்தாலும், பக்கத்து தியேட்டரில் இதை விட புதுப்படமோ, பெரிய படமோ போட்டுவிட்டால் காம்படீஷனில் நம் தியேட்டர் அடிபட்டு விடும்.
அப்படி நம் செண்டரை விழாமல் வைகக் பெரிய விநியோகஸ்தர்களை போய் பார்ப்போம் என்று மீண்டும் படையெடுத்தோம்.
Post a Comment
11 comments:
Interesting.
Ananth,
Chicago.
சைதையில் நீங்கள் சொல்லும் தியேட்டர் எது என்பதை யூகிக்க முடிகிறது. பஞ்சு வைத்த சொகுசு சேர் வைப்பதற்கு முன் உரிமையாளர்கள் ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக மாஸ் ஹீரோ படங்கள் என்றால் சீட்டுக்கு நோ கியாரண்டி. அது எவ்வளவு பெரிய தியேட்டர் ஆனாலும்.
பர பரன்னு போகுது
நம்ம கேசினோ தியேட்டரில் ஒழுங்கான டாய்லெட் இருந்தும்கூட செவத்துலதான் உச்சா போறானுங்க..
அப்புறம் SSR பங்கஜம் தியேட்டர்ல பாத்ரூம் பக்கம் போனா, ச்சேய்... தாங்கல ..
விறுவிறுப்பு, சுவாரகசியம், தகவல்கள்..அடுக்குங்க தலை..
அசத்துங்க அசத்துங்க.....
சினிமா பற்றி ஒன்னம் தெரியாத எனக்கு நிரைய விஷயங்கள் கற்றுகொடுக்கிறது இத்தொடர் கட்டுரை..நன்றி...
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html
எதாச்சும் சொல்லுங்க!!!!
super ji
எத்தனை பிரச்சனைகள் சார்.. ம்ம்ம்.. மலைக்க வைக்கிறது.
அதுக்குள்ள 7 பாகம் எழுதிட்டீரா.? ஊஹூம்.. புக்கா வந்தப்புறம் படிச்சுக்கவேண்டியதுதான். ர்ர்ரை ரைட்டு.!
@anandh
thank you
@சிவகுமார்
ஆமாம்
@பார்வையாளன்
நன்றி
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
ம்
@கே.ஆர்.பி. செந்தில்
தப்பு நம்ம பக்கமுமிருக்கு
@ஜனா
நன்றி
மனோ
நன்றி
2சக்தி ஸ்டடி செண்டர்
நன்றி
2ஜெயராம்பிரகாஷ்
நன்றி
@ஆதிமூலகிருஷ்ணன்
சரிங்க..
Post a Comment