பு.க-2
இன்றைக்கு பதிவர் நண்பர் நேசமித்ரனின் ”கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” கவிதை தொகுப்பும், நண்பர் எழுத்தாளர், நடிகர், அஜயன் பாலாவின் புத்தகமும், மாலை ஆறு மணிக்கு உயிர்மையிலும், ஆழியிலும் முறையே வெளியானது. சரியாய் ஆறு மணிக்கு போக வேண்டிய நான் ஏழு மணிக்குத்தான் போனேன். அநியாய ட்ராபிக். “ழ”பதிப்பக கே.ஆர்.பி.செந்திலுக்கு போன் செய்தால் பெரும் இலக்கியவாதிகளோடு காண்டீனில் இருப்பதாக சொன்னார். நேற்றிருந்த கூட்டத்தில் கால் பங்குக்கூட இல்லை. காலார நடந்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி புத்தகம் வாங்க சரியான தருணம். காண்டீனுக்கு சென்றால் கே.ஆர்.பி. ஷோபாசக்தி, சாரு, நம் சக இலக்கியவாதி உண்மைத்தமிழன், விந்தைமனிதனுடன் உட்கார்ந்திருந்தார்.
வழியில் லக்கி, அதிஷா, காமிக்ஸ் உலகம் விஷ்வா ஆகியோர் பணியாரத்துக்காக க்யூவில் நின்றிருக்க, நானும் கூட சேர்ந்து ஆட்டையை போட்டேன். ஷோபா சக்தியிடம் உ.த.. என்னைப் பற்றி சொன்னவுடன் கொத்துபரோட்டா எழுதுவாரே அவரா? என்று கேட்டார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இலக்கியவாதிகளுக்கும் பரோட்டா பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கியது. நன்றி உ.த. பின்பு லக்கியும், அவரும் தமிழர் துரோகம், தன்மானம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் இரண்டு பேர் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நடுவில் போர், ரத்தம், வலி எல்லாம் வேண்டும் என்று சொன்ன இலக்கியவாதிகள், கீழ்பாக்கம் ரோடில் கொசு மருந்து புகைக்கு முகம் மூடி அலப்பறை செய்ததை பற்றி சொன்னது காண்ட்ராஸ்டான ஒரு சுவாரஸ்யம். நன்றி ஷோபா சக்தி, வரும் வழியில் நம்ம முகப்புத்தக முத்தப் புகழ் செல்வகுமாரை சந்தித்தோம். உ.த.. மிகவும் பாராட்டி வெட்கிப் போனார்.
வழக்கப்படி என் புத்தகம் விற்கும் 176ல்லில் நுழைந்து, புத்தகங்களில் இமாலய சாதனைகளை விசாரித்துவிட்டு, வந்து உயிர்மையில் போய் நேசமித்ரனை வாழ்த்திவிட்டு, அவரது கையொப்பத்துடன் புத்தகம் வாங்கி வந்தேன். நடுவில் கிழக்கில் சாருவுடன் ஒரு சிறிய அரட்டை. சாருவின் டிசைனர் சர்ட்டுகள் எங்கிருந்து தருவிக்கப்படுகின்றன என்று மிக ஆர்வமாய் அதிஷா கேட்டுக் கொண்டிருந்தார்.
இன்றைய கணக்குக்கு தலைவன் சுஜாதாவின் உள்ளம் துறந்தவன், ஓரிரவில் ஒர் ரயிலில், பா.ராவின் உணவின் வரலாறு, சாருவின் தேகம், நேசமித்ரனின் கவிதைத் தொகுப்பு என்று பர்சேஸ் முடிந்த்து. கிழக்கின் ஹரன் பிரசன்னா.. ஒரேரடியாய் வாங்காமல் தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் வாங்குவதை பற்றி பதிவிடப்போவதாய் தெரிவித்தார். பா.ரா நான் அவர் சொல் பேச்சு கேளாததை சொல்லி என்னை உரிமையுடன் திட்டினார். வழியில் அண்ணன் வேறு பர்சேஸ் முடித்துவர, மீண்டும் ஒரு இனிமையான கச்சேரி, எழுத்தாளர் மாமல்லனை உ.த அறிமுகப்படுத்தினார். எனக்கு அவரை தெரியும். ஆனால் அவருக்குத்தான் என்னை தெரியாது. பார்பதற்கு ஹிந்தி ந்டிகர் திலீப் தாஹில் போல இருந்தார். நிச்சயம் ஒரு பணக்கார அப்பா, hifi வில்லன் கேரக்டர்களில் அவர் நடிப்பதாய் இருந்தால் கிடைக்க வாய்ப்புண்டு. மிகவும் சுவாரஸ்யமான மனிதர் என்று பா.ராவால் சிலாகிக்கபட்டவர். இன்னும் அவருடன் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. முந்தாநாள் அவருடய கதையை சுஜாதா ஒரு போட்டியில் தெரிவு செய்ய அவர் நடத்திய அறப்போராட்டைத்தைப் பற்றி பேசியது படு இண்ட்ரஸ்டிங்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வ்ந்திருக்கும் நண்பர் நந்தா ஆண்டாள் மகன் நம்முடன் இன்று ஒரு சுற்று சுற்றினார். வழக்கமாய் காணப்படும், மதார், தினேஷ், சங்கர்நாராயணன், மயில்ராவணன் ஆகியோர் இன்று லீவு விட்டிருந்தார்கள். இன்றைய பொழுது இனிதே முடிந்தது. ஹாப்பி புக் ஃபேர்..
Comments
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html
மிஸ் பண்றேன் ! ஆனால் உங்கள் பதிவை பார்க்கும் போது அந்த குறை நீங்கி விட்டது! கலக்கல் பதிவு!
I am a silent reader of your blog.
Just wanted to share this piece a nice write up on Sujata's contribution to cinema.
http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=7226