Thottal Thodarum

Jan 31, 2011

கொத்து பரோட்டா 31/01/11

galgut இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை எதிர்த்து ட்வீட்டரில் ஒரு பெரிய அலையே எழுந்துள்ளது. இது சம்பந்தமான ஒரு டீவிட்டர்களின் கூட்டம் கூட நேற்று மெரினாவில் நடந்தது. அதே போல ஸ்ரீலங்காவில், கல்லேயில் நடக்கும்  லிட்டரரி பெஸ்டிவல் எனும் புத்தகக் கண்காட்சியை சவுத் ஆப்பிரிக்க எழுத்தாளர் டாமன் கால்குட் என்பவர், மீனவர்கள் மீதான தாக்குதல், மனித உரிமை மீறல் குற்றஞ்சாட்டி கலந்து கொள்ளாமல் பாய்காட் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக இன்னும் சில பிரபல எழுத்தாளர்களும் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் எழுத்தாளர் திஷானி தோஷி, சைனா எழுத்தாளர்களும் விழாவில் கலந்து கொள்கிறார்ளாம். விழாவுக்கு மனித உரிமை சார்பாக எதிர்ப்பு இருப்பது உண்மைதான் என்றும் சொல்கிறார் இவ்விழாவின் அமைப்பாளரும், ஸ்ரீலங்காவின் பிரபல நாவலாசிரியருமான ஷியாம் செல்வதுரை. 
#################################################

தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ் நாட்டு மீனவர்களை காக்கவும், அரசிடம் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒரு கையெழுத்து மடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் தங்களது கையெழுத்தை இட இங்கே க்ளிக்கவும்
########################################
invitation ”ழ” பதிப்பக உரிமையாளர் தஞ்சாவூரான் என்றழைக்கப்படும் திரு.ஒ.ஆர்.பி.ராஜா அவர்களின் புதிய மென்பொருள் அலுவலக திறப்பு விழா வருகிற 2 ஆம் தேதி நடைபெறுகிறது. Axiom Semantics Technology Services - Data Warehouse and Business Intelligence Training, Staffing and Consulting) எண்.14, L.B. சாலை, அடையாறு, சென்னை – 20. ராஜா பதிப்பகம் ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு பழக்கம். மிக இனிமையாய் பழகக்கூடியவர்.நண்பர். மிகக் குறுகிய காலத்தில்  மென்பொருள் துறையில் வளர்ந்து வருபவர்.  அவரது அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தந்து வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறோம்
###############################################
திருப்பூர் புத்தக கண்காட்சியில் என்னுடய புத்தகங்களான, லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா வியாபாரம்  ஆகிய புத்தகங்கள் ஆண்டாள் திரிசக்தி புக் ஸ்டால் நெ.74,75 ல் கிடைக்கும்
#####################################################
எந்திரன் பற்றிய இன்னொரு செய்தி. முன்னூறு கோடி நானூறு கோடி வசூல் செய்ததாய் சொல்லப்பட்டாலும், எதுவும் அபீஷியலாய் இதுவரை இல்லாது   ஸ்பெகுலேஷனிலேயே இருந்தது. சன் பிக்சர்ஸின் காலாண்டு ரிப்போர்ட்டில், எந்திரனது வருமானத்தை பற்றிய கணக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.எந்திரன் திரைப்படத்தை தயாரிக்க 132 கோடியில் தயாரிக்கப்பட்டு, 179 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக வெளியிட்டிருக்கிறதாம். இதில் சாட்டிலைட் உரிமத்தின் மூலமாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற 15 கோடியையும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது இந்த காலாண்டில் கணக்கில் இல்லை என்கிறார்கள்.  இதை நான் சொல்லவில்லை. சன் டிவியின் காலாண்டு ரிப்போர்ட் சொல்கிறது. அது மட்டுமில்லாமல் இணையதளங்களுக்கு செய்திகளை வெளியிட்டிருக்கிறது.. அதற்கான லிங்க் இதோ..
.http://www.southdreamz.com/2011/01/endhiran-box-office-collection-till-date.html
################################################
இந்த வார ப்ளாஷ்பேக்
இந்த பாடலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் தேசிய கீதமாய் இருந்த பாடல். எஸ்.டி.பர்மனின் இசையில், கிஷோரின் தாபக் குரலில் கேட்பவர்களின் மனதையும், உடலையும் சூடேற்றிவிடும் பாடல். அருமையான காம்போஸிஷன். இப்பாடலில் ஒரு முக்கியமான விஷயம்  என்னவென்றால் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பாடல் என்பதுதான்.
############################################
இந்த வார குறும்படம்
”தோட்டா என்ன விலை” என்கவுண்டருக்கு எதிராக பேசும் குறும்படம். என்னளவில் என்கவுண்டரை ஆதரிப்பவன் என்றாலும், இவர்கள் குறும்படமாய் எடுத்த விதம் அருமையாய் இருக்கும். முக்கியமாய் அந்த சைக்கோபாத் கொலைகாரனாய் நடித்த நடிகரின் நடிப்பு. நளனின் சிறந்த குறும்படங்களில் இதுவும் ஒன்று.
################################################
இந்த வார தத்துவம்
மன்னிப்புக்கான விளக்கம்: இதயத்தை கைவிட்டு பிடுங்கிவிட்டு எறிந்துவிட்டு, வலியை பற்றி கவலைப்படாதே என்பதுதான்.

பெண்களின் கண் அசைவுக்கு பல அர்த்தங்கள் உண்டு. ஆனால் நண்பனின் கண் அசைவுக்கு ஒரே அர்த்தம் தான் “மச்சான்.. சூப்பர் பிகரு.. டக்குனு திரும்பாதே”
###################################################
இந்த வார புத்தகம்
ஜி.நாகராஜனின் மொத்த தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். நாளை மற்றுமொரு நாளே.. ஸ்பெல்பவுண்டிங்..
#############################################
கிட்ஸ் கார்னர்
1
. ஒரு சில மாதங்களில் 30 நாட்களும், இன்னும் சில மாதங்களில் 28 நாளும் இருக்கும் ஆனால் எத்தனை மாதங்களில் 28 நாட்கள் வருகிறது?
2. டாக்டர் மூன்று மாத்திரைகளை கொடுத்துவிட்டு, அரை மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை வீதம் சாப்பிடச் சொல்கிறார்?  எவ்வளவு நேரமாகும் அந்த மாத்திரைகளை சாப்பிட?
#############################################
ஜோக்
சேல்ஸ் டீமுக்கான டயலாக்குகளை வடிவேலுவுன் பஞ்சுடன்
Closing Day – சொல்லவேயில்ல..?
Training – முடியல..
Daily Work – ரிஸ்கெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்புடறா மாதிரி
Review Meeting – ஸ்ஸ்ப்பா… இப்பவே கண்ணக்கட்டுதே…
Target Meeting – எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்பா..
Commitment- ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு. பினிஷிங் சரியில்லையேப்பா..
Manager – பாவம் யாரு பெத்த புள்ளையோ.. இப்படி தனியா புலம்பிட்டு இருக்கு.
Incentive – வரும் ஆனா வராது
Job – பில்டிங் ஸ்ட்ராங் பட் பேஸ்மெண்ட் வீக்
நன்றி : பானு பவானி
#################################################
Nagesh-Kukunoor கெமிக்கல் இன்ஜினியர். சினிமாவுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாதவர். திடீரென ஒரு இன்ஸ்பரேஷன் மூலமாய் சினிமா ஆசை ஏற்பட்டு, வீர் அனுமான் என்கிற படத்தில் அஸிஸ்டெண்டாய் நுரை தள்ளிப் போக, இது நமக்கு சரிப்பட்டு வராதென்று தானே தனியாய் உட்கார்ந்து ஏழு நாட்களில் ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதினார். பட்ஜெட் ஒன்றை போட்டார். நேரே யூ.எஸ்ஸில் கிடைத்த வேலையில் சேர்ந்து தன் படத்து பட்ஜெட்டான 40,000 டாலரை பத்து மாதங்களில் சேமித்தார். சேமித்த பணத்தோடு திரும்பி வந்து தன் ஆதர்ச படத்தை எடுத்தார். அப்படத்தை ஸ்டார் டிவியில் 50,000ரூபாய்க்கு கூட வாங்க மறுத்தது. அதே படத்தை ரிலீசுக்கு, அத்ன் சூப்பர்ஹிட்டினால் 50 லட்சம் ரூபாய்க்கு நான்கு மாதங்களுக்கு பின் அதே ஸ்டார் டிவி வாங்கியது. அந்த படம் ”Hyderabad blues”  இயக்குனர் நாகேஷ் கூக்கனூர். அதன் பிறகு இவருக்கு நோ லுங்கிங் பேக். பாலிவுட் காலிங், இக்பால், டோர், ஆஷியான் போன்ற பட்ஜெட் பட ஹிட்டுகள் இவர் வசம் நிறைய..
##########################################
அடல்ட் கார்னர்
கூட்டமான பஸ்சில் ஒரு பெண் தன் பின்னால் இருந்தவனை பார்த்து, “இதோ பார்.. இத்தோட நிறுத்திக்க.. உன் ‘லுல்லா” வச்சி அழுத்திறத.. இல்லாட்டி போலீஸுக்கு போயிருவேன் என்றாள் கோபத்துடன். “அய்யோ.. நீங்க எதைப் பத்தி பேசுறீங்கன்னு எனக்கு புரியலை.. என் பேண்ட் பாக்கெட்டுல என்னோட சம்பள செக் மட்டும்தான் இருக்கு” என்றான் அவன். “அட.. அப்படியா.. அப்படின்னா அதை பிடிச்சி கொடுத்திர வேண்டியதுதான். ஏன்னா.. அரை மணி நேரத்தில அஞ்சு வாட்டி சம்பளம் ரைஸ் ஆகியிருக்கு என்றாள் அவள்.
##########################
கேபிள் சங்கர்

Post a Comment

36 comments:

Vijay Anand said...

me the 1st :)

செங்கோவி said...

ரூப் தேரா..சூப்பர் பாடல்..இதன் ரீமிக்ஸும் நன்றாக இருக்கும்...

vinu said...

kids corner rombap palasu;


28 days comes in all the months;

it will take one hour to finish all three tablets

shortfilmindia.com said...

நான் தான் சொன்னேனே வினு.. கிட்ஸுக்குன்னு..:))

maxo said...

I guess 179 crores is revenue - not the collection

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/rajini-adds-30-to-maran-cos-revenue/articleshow/7394423.cms

maxo said...

“It was Rajini’s formidable brand image that did the trick this quarter,” says Ajay Vidyasagar, Chief Operating Officer of Sun TV.


“While there is no official source for box office collections, Robot must have raked in at least 375 crore for us and the trade combined and this is a conservative estimate,” he says. The company had spent 132 crore to make the film.

Joseph said...

கிட்ஸ் கார்னர்
1. ஒரு சில மாதங்களில் 30 நாட்களும், இன்னும் சில மாதங்களில் 28 நாளும் இருக்கும் ஆனால் எத்தனை மாதங்களில் 28 நாட்கள் வருகிறது?

Jan,Feb, Mar, Apr, May, Jun, Jul, Aug, Sep, Oct
Nov and Dec.
2. டாக்டர் மூன்று மாத்திரைகளை கொடுத்துவிட்டு, அரை மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை வீதம் சாப்பிடச் சொல்கிறார்? எவ்வளவு நேரமாகும் அந்த மாத்திரைகளை சாப்பிட?

1 hour.

Joseph said...

Nan Manasalavula our kuzhanthai thaan annae, athaan kids corner question kku answer pannen.

'பரிவை' சே.குமார் said...

அருமை.
மீனவர்களுக்காக ஒன்றுபடுவோம்... வெற்றி பெறுவோம்.

ஜி.ராஜ்மோகன் said...

ஜி. நாகராஜன் ஓர் தேர்ந்த படைப்பாளி . "குறத்தி முடுக்கு " மற்றும் " நாளை மற்றுமோர் நாளே " அவருடைய மாஸ்டர்
பீஸ் . வழக்கம் போல் கொத்து பரோட்டோ சூப்பர் .

ganeshan said...

மீன் கடை

குவித்து வைக்கப் பட்டு இருகின்றன
மீன்கள் - மனிதர்களை போல

நாற்றம் பார்பவன்க்குதான் ...
விற்பவனுக்கு அல்ல - மனிதம் போல

வகை வகையால் பிரித்து வைத்து
விலை சொல்வர் - இனங்கள் போல

மீன்கள் எப்பொழுதும் ஒருபடி மேல்

எந்த மீனும்
இன்னொரு மீனை விற்பதில்லை - தமிழர்களை அல்லாதார் போல்


http://www.pencilkodugal.blogspot.com/

Thamira said...

ரைட்டு..

Ba La said...
This comment has been removed by the author.
Ba La said...
This comment has been removed by the author.
Ba La said...

குறும்படம் நன்று, எனக்கு இது “Perfume“ ஐ ஞாபகப்படுத்துது.

http://www.imdb.com/title/tt0396171/

Perfume அதன் style of making ற்காக பார்க்கவேண்டிய படம், உங்கள் விமா்சனத்தை எதிர்பார்க்கின்றேன்

Jana said...

மீனவர் பிரச்சினை ஒருமித்த குரல் அவசியம்.
பிளாஸ்பாக் அடுத்த கொத்துபரோட்டாவில் குர்பானி "ஆப் ஜய்ஸா கோய்மே" தானே????

Unknown said...

நன்றி..#tnfisherman ப்பற்றி எழுதியதற்க்கு...

Unknown said...

// அரை மணி நேரத்தில அஞ்சு வாட்டி சம்பளம் ரைஸ் ஆகியிருக்கு என்றாள் அவள்//

frequency கம்மியா இருக்கே ;-)

Vijay Vasu said...

Dear Cable Sankar,

It is unfortunate that a cine industry insider such as yourself is trying to portray the collections of Endhiran in a wrong manner.

I request you to please publish this comment and also a clarification in your blog post.

Please note that 179 Crores is the revenue for just Sun Pictures. Please note we need to add distributors share and the theatre owners share for the complete collection.

Please refer to today's Economic Times report.

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/rajini-adds-30-to-maran-cos-revenue/articleshow/7394423.cms

Please see the comment from COO of Sun Pictures.

“It was Rajini’s formidable brand image that did the trick this quarter,” says Ajay Vidyasagar, Chief Operating Officer of Sun TV.


“While there is no official source for box office collections, Robot must have raked in at least 375 crore for us and the trade combined and this is a conservative estimate,” he says. The company had spent 132 crore to make the film.

Kindly also note this report from Times of India has stated sources to say that Enthiran has collected upwards of Rs. 400 Crores.

Unlike false collection reports for movie like Dasavatharam, where in Wikipedia few miscreants in the name of fans have stated its collection without source as Rs. 285 Crores, this amount has come from the COO of Sun Pictures.

If you are neutral, you will definitely issue a apology and a correction in your blog stating the correct business of Enthiran.

Being an author of a book on Cine Industry business, for the authenticity of the information on your book, I kindly request you to be unbiased and report correct information in its true sense in a way that the common man understands.

I.e.:
1. The cost of making Enthiran is Rs. 132 Crores.
2. Revenue for Sun Pictures alone is Rs. 179 crores.
3. Total collection of the movie at the box office is Upwards of Rs. 375 Crores.
4. The distributor share for foreign rights of the movie is Rs. 61 Crores.
5. This makes Enthiran - The Robot, the highest grossing Indian film of all time.


Please accept these facts and please post them in a separate enthiran business post. All the proofs have been given to you.

Kindly show the world that you are not biased.

Thank you.
Vijay
about.me/vijay.vasu.nair

வந்தியத்தேவன் said...

ரஜனி ரசிகர்கள் உங்களைக் கும்மப்போகின்றார்கள். ஏற்கனவே பிலிம் நியூஸ் ஆனந்தனிடம் ரஜனி வசூல் உண்மையான நிலவரத்தை கேட்டார் என்ற செய்தி ஜூவியில் வந்தது. விளம்பரச் செலவே படத் தயாரிப்பின் செலவை விட அதிகமாக வந்திருக்கும்.

mani sundaram said...

டுபாகூர் இதையும் பாரு....

http://www.southdreamz.com/2011/01/kavalan-aadukalam-in-close-race.html

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரா கலக்கிருக்கீங்கய்யா........

Cable சங்கர் said...

@vijay anand
nandri

@செங்கோவி
நன்றி

@மாக்ஸோ
யெஸ்.. அதைத்தான் சொன்னேன். அவர்களது வருமானத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் சொன்னது போலவே வெளியே வந்திருக்கும் வருமானம் ஸ்பெகுலேஷந்தான் என்றும் சொல்லியிருக்கேன். என்ன தப்பாயிருச்சு..?

Cable சங்கர் said...

@joseph
குழந்தை மனசு ஜோசப்புக்கு ஒருலாலிபாப்

@சே.குமார்
ஆமா..

@ஜி.ராஜமோகன்
மிரள வைக்கிறார்.

@கணேசன்.
:????

@ஆதிமூலக்கிருஷ்ணன்
நன்றி

@கிரேட் பி
பர்ப்யூம் விமர்சனம். ஏற்கனவே எழுதியாச்சு..
http://cablesankar.blogspot.com/2009/03/perfume2006.html

Cable சங்கர் said...

@ஜனா
ஞாபகப்படுத்திட்டா போச்சு

@நந்தா ஆண்டாள் மகன்
எதுக்கு நன்றியெல்லாம். கடமை

2கேவிஆர்
அவரவர் ..

@விஜே

எனக்கு ஒன்று மட்டும் புரிய மாட்டேன் என்கிறது எவ்வள்வுதான் புத்திசாலியாக இருந்தாலும்.. ரஜினி ரசிகர்கள் அவரை பற்றிய விஷயத்தை முழுசாய் படிக்கவே மாடேன் என்கிறார்கள். விஜே.. நான் சன் டிவி வருமானத்தை சொல்லியிருக்கிறேன். ஆனால் இன்றளவில் ஸ்பெகுலேஷனாகத்தான் இருக்கிறது. அதை சன்னும் ஒத்துக் கொண்டிருக்கிறது.. ஸோ.. நான் சினிமா துறையில் இருந்து கொண்டே.. தவறாக ஏதும் சொல்லவில்லை.. போன வருட ஹிட் லிஸ்டில் எவ்வள்வு வசூல் என்று அப்ரக்ஸிமேட்டாய் போட்டிருக்கிறேன்..

Cable சங்கர் said...

@வந்தியத்தேவன்
:))

@மணி
எத்தனை முறை உன்னை பற்றி சொல்லியிருக்கேன்.. காசு கொடுத்தா நியூஸ் போடுறதுக்கு நிறைய சைட்டு இருக்கு.. கம்முநாட்டி..:))

@மனோ
நன்றி

mani sundaram said...

நீங்களும் அந்த சைட் லிங்க் தான் போட்டுருக்கீங்க.... அப்ப நீங்களும் நீங்க சொன்ன :))------- தான்.... :))

Cable சங்கர் said...

ada mani.. நீ இதைச் சொல்லுவேன்னு எனக்கு தெரியாதா?.. தெரிஞ்சுதானே போட்டேன். நான் அந்த லிங்க் கொடுத்ததே.. கம்முநாட்டி உன்னை ஃபாலோ பண்ணத்தான்.. கம்முநாட்டி..

Unknown said...

ஆக்சியம் செமான்டிக்ஸ் திறப்பு விழா பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி, கேபிள்!!

Raj Chandra said...

>>1. ஒரு சில மாதங்களில் 30 நாட்களும், இன்னும் சில மாதங்களில் 28 நாளும் இருக்கும் ஆனால் எத்தனை மாதங்களில் 28 நாட்கள் வருகிறது?
-- 12 months

2. டாக்டர் மூன்று மாத்திரைகளை கொடுத்துவிட்டு, அரை மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை வீதம் சாப்பிடச் சொல்கிறார்? எவ்வளவு நேரமாகும் அந்த மாத்திரைகளை சாப்பிட?
-- Time taken to put it in the mouth and swallow it (5-10 seconds) :).

செ.சரவணக்குமார் said...

கொத்து அருமை. நிறைய செய்திகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள் தலைவரே. மீனவர் பிரச்சனையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

R.Gopi said...

//எந்திரன் திரைப்படத்தை தயாரிக்க 132 கோடியில் தயாரிக்கப்பட்டு, 179 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக வெளியிட்டிருக்கிறதாம்.//

***********

சங்கர் ஜி...

சன் டி.வி. படத்தை தயாரித்த வகையில் செலவு 132 கோடிகள் எனவும், படத்தை விற்ற வகையில் வந்த தொகை 179 கோடிகள் எனவும் சொல்லி இருக்கிறார்கள்...

ரூ.47 கோடிகள் அளவிற்கு அவர்களுக்கு லாபம் வந்ததாக தான் சொல்லி இருக்கிறார்கள்...

நீங்கள் குறிப்பிட்டு இருப்பதை போல் மொத்த வசூல் 179 கோடிகள் என்று அவர்கள் சொல்லவே இல்லை...

புரிதலுக்கு நன்றி....

ramachandran.blogspot.com said...

எந்திரன் நானூறு கோடிக்கும் குறைவில்லாமல் வசூல் செய்திருக்கும்
என்பது குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும் விஷயம். சன் டிவி வருமான வரிக்காக
இப்படிதான் கூறுவார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியாவிலேயே
இது வரை வெளியான படங்களில் முதல் இடத்தை பிடித்திருப்பது எந்திரன் என்று
வடஇந்திய பத்திரிகைகளில் வந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நா. ராமச்சந்திரன்

R.Gopi said...

//எந்திரன் திரைப்படத்தை தயாரிக்க 132 கோடியில் தயாரிக்கப்பட்டு, 179 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக வெளியிட்டிருக்கிறதாம்.//

********

சங்கர் ஜி...

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சன் டி.வி. அவர்களின் ரிப்போர்ட்.. இதில் நீங்கள் குறிப்பிட்டது போல் அவர்கள் சொல்லவே இல்லை..

எந்திரன் திரைப்படத்தை தயாரித்ததில் சன் டி.வி. செலவு செய்த தொகை ரூ.132 கோடிகள் எனவும், படத்தை விற்ற வகையில் வந்த வருமானம் ரூ.179 கோடிகள் எனவும், எந்திரன் ரிலீஸ் ஆன அந்த 3 மாதங்களில் (அக்டோபர்-டிசம்பர், 2010 4வது க்வார்ட்டர்) அவர்களின் ரெவன்யூ 51% அதிகரித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளனர்..

http://www.bseindia.com/xml-data/corpfiling/AttachHis/Sun_TV_Network_Ltd1_280111.pdf

karthik said...

அண்ணா இதையும் கொஞ்சம் பாருங்க

http://ibnlive.in.com/videos/142049/rajinikanth-starrer-robot-grosses-rs-375-crore.html

ராஜ நடராஜன் said...

ஒரு பதிவு ஒரு செய்தியை விரிவாகச் சொல்லவேண்டுமென்று நினைப்பவன் நான்.பதிவுலகில் உங்கள் பெயர் அனைவரும் அறிந்திருந்தாலும் புரோட்டா பெயர்க் காரணத்தால் பெரும்பாலும் உங்களைக் கடந்து போவதே வழக்கம்.

குறும்படம் சில நிமிடங்களில் அதிர்வை உண்டாக்கும் படம்.மனநிலை பிறழ்ச்சிக்கும் அப்பால் இன்னும் உண்மைக்கு அருகில் போயிருக்கலாம்.

பகிர்வுக்கு நன்றி.