பதட்டமான சந்தோஷ விழா

 DSC00020வழக்கம் போல உங்கள் எல்லாருடய அன்பும், ஆசியுடன் சிறப்பாக நடந்தேறியது புத்தக வெளியீட்டு விழா.  வாரநாட்களாதலால் நண்பர்கள், பதிவகர்கள் எல்லோரும் அலுவலகம் முடித்து வருவதற்கு சிரமம் மேற்க்கொண்டுதான் வந்தார்கள். விழா என்னவோ சிறப்பாகத்தான் நடந்தாலும் பதட்டமாய்த்தான் ஆரம்பித்தது. ஆம் பதட்டம் தான். என் எல்லா விழாக்களிலுமே நடக்கும் பதட்டமான சம்பவங்களோடு விழா இனிதே ஆரம்பித்தது.
 04012011660 04012011661
நடிகர் மோகன் பாலு முதல் ஆளாக வந்தார். மிக இனிமையான மனிதர். நிறைய வாழ்வனுபவம். வாசிப்பனுபவமும் உடையவர். எதை செய்தாலும் பெரும் ஈடுபாட்டோடு முழுதாய் தன்னை அர்பணிப்பவர். அது அவர் முதலாய் நடித்து வெளிவர இருக்கும் “அரும்பு மீசை.. குறும்பு பார்வை” படம் பார்த்தால் தெரியும். 
04012011663 04012011662
அடுத்து வந்தவர் நண்பர் இயக்குனர் திரு. சீனு இராமசாமி. இவருடன் எனக்கு பெரிதாய் பழக்கம் கிடையாது. அவரது தென்மேற்கு பருவக்காற்று திரைப்பட காட்சியில் தான் சந்தித்தேன். அதன் பிறகு அவரிடம் தொலைபேசியில் என்னுடய புத்தகவிழாவுக்கு வரமுடியுமா? என்று கேட்டவுடன், என்னைக்கு? என்று கேட்டுவிட்டு உடனடியாய் தேதி கொடுத்தவர். நிகழ்ச்சி ஆரம்பிக்க கொஞ்சம் தாமதமானாலும் பொறுமையாய் காத்திருந்தார். அவரது அன்புக்கு என் வந்தனங்கள்.
04012011668 04012011670
புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியை. திருமதி. பர்வீன்சுல்தானா அவர்களை அப்துல்லா அழைத்துவந்தார். அவரை சந்திக்க நாங்கள் ரெண்டு பேரும் அவரது வீட்டிற்கு போன போது, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  பட்டிமன்ற அரங்கத்திலும், தமிழ் விளையாடும் மேடைகளிலும் அனல் பரக்க முழங்குபவர். காட்டாறு வெள்ளமாய் பாயக்கூடியவர்… அவ்வளவு இயல்பாய், சகஜமாய் வரவேற்று உபசரித்த பாங்கு நெகிழ்ச்சியை தந்தது. மேன்மக்கள் மேன்மக்களே..
04012011672 04012011674
பதிவுலக நண்பர்களில் பேச அழைத்திருந்த அப்துல்லா, லக்கிகிருஷ்ணா, தாமிரா, ஆகியோரும் ஆஜராகிவிட்டார்கள். மற்ற பதிவுலக நண்பர்கள், சினிமா நண்பர்கள், மற்ற  நண்பர்கள் எல்லோரும் வர நல்ல கூட்டம். பதிவர் நண்பர் சுரேகாவின் தொகுத்தளிப்பில், ”ழ” பதிப்பக உரிமையாளர் ஓ.ஆர்.பி. ராஜாவின் வரவேற்பரையுடன் இனிதே ஆரம்பித்தது.
04012011673 04012011676
மோகன்பாலு சாருக்கு ஒரு ஐந்து கதைகளை தெரிவு செய்து கொடுத்திருந்தேன். மனிதர் கதைகளை படித்துவிட்டு ஆழ்ந்து போய் மிகவும் சிலாகித்து, பாராட்டி, திட்டி என்று கலந்து கட்டி ஒரு உணர்ச்சிமயமான பேச்சை கொடுத்துவிட்டு உட்கார்ந்தார்.

அடுத்து பேசிய லக்கி தனக்கே உரித்தான நகைச்சுவையான பேச்சுடன் ஆரம்பித்தார். அவருக்கு நான் கொடுத்திருந்த கதைகளில் பெண்களே இல்லை என்று வருந்தினார். சாரி லக்கி :). ஒரு கதையை ஒரு பக்க கதையாய் எழுதியிருக்கலாம் என்றார். மற்றொரு கதையான நம்பிக்கையை மிகவும் பாராட்டி இதை குறும்படமாய் கூட எடுக்கலாம் என்றார். நன்றி லக்கி.
04012011677 04012011682
அடுத்து பேசிய இயக்குனர் சீனு இராமசாமி அவர்கள் புத்தகத்தை தனக்கு மட்டும் படிக்கக் கொடுக்காமல்  விட்டதில் ஏதோ உள்குத்திருப்பதாய் நினைத்து வருந்தி, மிக அருமையாய் தனக்கு எப்படி படிக்கும் ஆர்வம் வந்ததென்றும், அது இலக்கிய தாகமாய் மாறியது என்றும் அவரின் படம் போலவே லைவ்வாக சொன்னார். முழு புத்தகத்தை படித்துவிட்டு நிச்சயம் ஒரு கடிதமெழுதுவதாக கூறியிருக்கிறார். காத்திருக்கிறேன் தலைவரே.
04012011683 04012011684
அப்துல்லா… எனக்கும் அப்துல்லாவுக்குமான நெருக்கம் எப்படி வந்தது என்று ஆரம்பித்து.. மெல்ல எங்களது நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை சொன்னார். என் கதைகளில் காணப்படும் பெண்களின் வர்ணனை பற்றி ஒரு அழகான பார்வையை கொடுத்தார். வெரிகுட் பர்செப்ஷன். அவருக்கு என் நன்றி..
04012011687 04012011689
நண்பர், பதிவர், பதிப்பாளர், திரு அகநாழிகை வாசுதேவன் தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாததால் தன்னுடய பேச்சை இமெயிலில் அனுப்பியிருந்தார். அது சுரேகாவால் படிக்கப்பட்டது. ந்னறி தலைவரே.. திருமதி. விதூஷ் வித்யாவாலும் அலுவலக நிமித்தம் காரணமாய் வர முடியாமல் போனதற்கு வருத்தம் தெரித்தார். நன்றி தோழி.

நண்பர் ஆதியை பற்றி நான் சொல்லியாக வேண்டும். பழகுவதற்கு மிக இனிமையான மனிதர். சென்சிடிவ்வான மனிதரும்கூட.. ரசனைக்காரர். நிறைய பேச நினைத்திருந்தார். மற்றவர்கள் எல்லோரும் பேசிவிட்டதினால். ரத்தினச்சுருக்கமாய்  பேசிவிட்டு அமர்ந்தார். சிறுகதைகளில் இரண்டு கதைகள் இந்த தொகுப்புக்குள் இருந்திருக்க வேண்டியதில்லை. மற்றதெல்லாம் நிச்சயம் நல்ல வாசிப்பனுபவம் உள்ள அருமையான கதைகள் என்று பாராட்டினார். நன்றி ஆதி.
04012011693 04012011695
கடைசியாய் பேசிய பேராசிரியை தன்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு மிக அழகாக, வந்திருக்கும் கூட்டம் எப்படிப்பட்டது? எவ்வாறு அவர்களை கவருமாறு பேச வேண்டும் என்று கணித்து கட்டிப் போட்டார். குறுநாவலைப் பற்றி சினிமா போல சினிமா கதை என்றார். பாப்கார்ன் ஸ்டோரி என்றார். நிஜம்தான். ஆனால் க்யுட் கேரக்டர் என்றார் ஷ்ரத்தாவை. அதுவே எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷம்.  நான் அவரை நேரில் சந்தித்த போது சொன்ன விஷயத்தை இங்கு நினைவூட்டினார். அது என்னவென்றால் “மேடம்… இது நீங்க படிக்கிற சீரியஸ் இலக்கிய புத்தகமெல்லாம் கிடையாது.. நிச்சயம் சுவாரஸ்யமான ஒரு புத்தகமாயிருக்கும். அதை மீறி இதில் எங்காவது இலக்கியம் தென்பட்டால் கொஞ்சம் சொல்லுங்க. நானும் இலக்கியவாதியாகுறேன்” என்று சொல்லியிருந்தேன். அதை நினைவு கூர்ந்து.. இலக்கியம் என்பது என்ன ஒரு விஷயத்தை படித்ததும் ஒரு அதிர்வு, ஒரு சின்ன ஷாக், உள்ளுக்குள் ஏற்படும் நெருடல் அது தான் இலக்கியம் என்று சொல்லி, இருபத்தியிரண்டு சிறுகதைகளில் ஒன்பதை மட்டுமே படித்தேன் என்று கதைகளை விமர்சித்தார். அதில் குண்டம்மா பாட்டி அவர் மனதை நெருடியதாக சொன்னார். நன்றி மேடம்.. அப்ப நானும் இலக்கியவாதியாயிட்டேன்..ஹே..ஹே.. கமான்..கமான் கதையை  பாராட்டினார். காதல் கதையை பற்றி பேசியது பாராட்டா? என்று தெரியவில்லை. நீங்க மட்டும் இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்? கதையை ரசித்தாக சொன்னார். உங்களுக்கு படிக்க அவகாசமே கொடுகாமல் செய்த கொடுமைக்கு மன்னிச்சூ..
DSC00042 DSC00023
பின்பு நான் நன்றியுரை ஆற்றினேன். வழக்கம் போல.. அது நன்றாக இருந்ததா? இல்லையா? என்று பார்த்தவர்கள், கேட்டவர்கள் தான் சொல்ல வேண்டும். என் புத்தக விமர்சனத்துக்காக காத்திருப்பது போல இதற்கான விமர்சனத்திற்கும் காத்திருக்கிறேன். என் ஒவ்வொரு விழாக்களிலும் நடக்கும் ஒரு விஷயம் பற்றி சொல்கிறேன் என்று சொன்னேனல்லவா. அது வேறொன்றுமில்லை. என் வாழ்வின் எல்லா முக்கிய நிகழ்வுகளுக்கும் முன்னால் ஒரு சின்ன டென்ஷனான நிகழ்வு நிகழும். அப்படி ஒருநிகழ்வு ஏற்பட்டால் அது நிச்சயம் வெற்றிதான். என் முதல் புத்தக வெளியீட்டின் போது நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் மின்சாரம் போனது. அப்புத்தகம் இன்றளவில் சுமார் நானூறு புத்தகங்களுக்கு மேல் விற்று நல்ல லாபகரமான ஒரு புத்தகமாய் அந்த பதிப்பாளருக்கு அமைந்திருக்கிறதென்று அவரே சொன்னார். அடுத்து சினிமா வியாபாரம். புத்தகம் வருவதற்கே கொஞ்ச நாள் எடுத்துக் கொண்டது. புத்தக வெளியிடுவதற்கு முன்னேயே முதல் ப்ரிண்ட் விற்றுத் தீர்ந்த்து. புத்தக வெளியீட்டு விழாவன்று என்றுமில்லாத திருநாளாய் மழை மதியத்திலிருந்து. ஆனால் அந்த புத்தகமும் ஒரு வெற்றிப் புத்தகமாய் அமைந்தது. அதே போல் நேற்று இரண்டு முறை  மின்சாரத்தடை, விழா நடக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு டென்ஷனை ஏற்படுத்தியது. கொஞ்சம் தாமதமாகவே ஆரம்பித்தாலும் அருமையாய் நடந்த்து. இது வரை 156 புத்தகங்கள் விற்பனையாகியிருக்கிறது என்பதே மீண்டும் ஒர் வெற்றியை எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பேசிய பல சிறப்பு அழைப்பாளர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை பாதிக்கத்தான் செய்திருக்கிறது.  எனவே ஒரு சுவரஸ்யமான ஒரு புத்தகத்துக்கான அத்துனை விஷயங்கள் இருப்பதாய்தான் தெரிகிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
.
கேபிள் சங்கர்
நன்றி:  காவேரிகணேஷ் , எறும்பு ராஜகோபால் சிறப்பான புகைப்படங்களுக்காக..
நன்றி: மனோஜ்கிருஷ்ணாவுக்கு என் விழாவுக்கு வந்து என்னை பெருமைபடுத்தி, மிகப் பொறுமையாய் இந்த அருமையான வீடியோவை எடுத்துக் கொடுத்தவர்.
நன்றி: என் புத்தகத்தின் லேஅவுட்டை மிக அட்டகாசமாக வடிவமைத்துக் கொடுத்த, சுகுமார் சுவாமிநாதனுக்கு.

Comments

க ரா said…
sikiram padathayum release panungana....
இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்ஜி. கலக்குங்க.. :-)
வினோ said…
அண்ணா வாழ்த்துக்கள்.. மன்னிக்கணும்..உங்க அலைபேசி எண் இல்லை... ஒரு மெயில் போடுங்களேன்... vinod.nila@gmail.com
Vidhoosh said…
extremely sorry that i couldn't make it. :(

shall post a review and update you # PARIKAARAM :)

thanks that you didn't mistake.
வரமுடியாமல் போன பலருக்கும் வீடியோ நிச்சயமாய் ஆறுதல் தரும்.நூலைப் பற்றி நல்ல உரைகள் கேட்டோம். தொடரைப் போல் மீதி வீடியோவும் "வெய்ட்டீஸ்" :)
காத்திருக்கிறோம்.
பாராட்டுகள் கேபிள்
வாழ்த்துக்கள் நண்பரே.
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.......
Vallthukal sir.
வாழ்த்துகள் தலைவரே!!!
வாழ்த்துக்கள் அண்ணா.
சாப்பாடு கொடுக்காம ஏமாத்திட்டேங்களே
வாழ்த்துக்கள் அண்ணா




இதையும் படிச்சி பாருங்க


இந்திய மூளை வெங்காயமா?
a said…
வாழ்த்துக்கள் தல.......
jayaramprakash said…
பாராட்டுக்கள் ஜி.வரமுடியாமைக்கு வருத்தங்கள்.விரைவில் சந்திப்போம்.
CS. Mohan Kumar said…
நான் எழுத மறந்த விஷயங்கள் நீங்க சரியா எழுதிட்டீங்க. ரைட்டு
Unknown said…
வாழ்த்துக்கள் அண்ணா

Shashi, Blore
Ganesan said…
அனுப்பிய புகைப்படங்களை , எழுதியதற்கு ஏற்றாற்போல் நன்றாய் தொகுத்துள்ளீர்கள்.

உங்கள் புத்தக வெளியீடு ஒரு நல்ல இலக்கிய கூட்டமாக அமைந்தது.

பேச்சாளர்கள் ரொம்பவே அழகாய் பேசினார்கள்.

மீண்டும் ஒரு காதல் கதை , அடுத்த அச்சுக்கு வர வாழ்த்துக்கள்.
Unknown said…
விழாவை நேரில் கண்ட உணர்வு. மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள், ழ பதிப்பகம் பொருளாதார ரீதியாகவும் சாதிக்க வாழ்த்துக்கள்.
Chitra said…
WOW!! BEST WISHES!!!

HAPPY NEW YEAR!
வாழ்துக்கள் கேபில் அண்ணா... விரைவில் 1000 க்கும் அதிகமான புத்தகங்கள் விற்று தீர வாழ்துகிறேன்..

"ழ" கே.ஆர்.பி. அண்ணனுக்கும் வாழ்துக்கள்...

நட்புடன்
ஆர்.கே.நண்பன்..
Unknown said…
அனைவருக்கும் என நெகிழ்வான நன்றிகள் ...
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Anonymous said…
அண்ணா இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..... வரும் சனிக்கிழமை புத்தக கண்காட்சிக்கு வரேன்......அங்கே மீண்டும் சந்திப்போம்....... இன்றைக்கு இரவு டிஸ்கவரி-க்கு போய் உங்க புத்தகத்த வாங்க போறேன்...... வாங்கிட்டு சொல்றேன்.................
வாழ்த்துகள் கேபிள்ஜி.
Unknown said…
வாழ்துக்கள் சார்
sinmajan said…
வாழ்த்துக்கள்.
test said…
வாழ்த்துக்கள் boss!
மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் தலைவரே...
kalil said…
தல,
surprise ah நானும் வரலாம்னு நினைச்சேன் . but ,வீட்டுல இருந்து பொண்ணு பாக்க அவசரமா வர சொன்னதால உங்க நிகழ்ச்சிக்கு வர முடியல தல. வாழ்த்துக்கள் . மென்மேலும் வளர

கலீல்
Unknown said…
வாழ்த்துக்கள் சங்கர்
sriram said…
கேபிள் அங்கிள்..
வாழ்த்துக்கள், உங்க தொப்பியில் இன்னுமொரு சிறகு. எழுத்தாளராக (நல்லா கவனிக்க கவிஞராக அல்ல) மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள் சார்.. இணையத்தில் வந்ததும் தெரியப் படுத்துங்கள் .
வாழ்த்துக்கள்....
அதிகம் நெகடிவ் இம்பிரஷன் இல்லாத உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக உங்கள் எழுத்துக்கள் அனைவரையும் கவர்ந்து வெற்றிகளை கொண்டு வரும் என நம்புகிறேன்
மேலும், மேலும் பல வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள்.
பாலா said…
வாழ்த்துகள் சங்கர்....... :)
சங்கர் சார் ஒரு டிக்கெட் வாங்கி அனுப்பி இருந்தீங்கனா நான் வந்திருபேன்ல. சந்தோஷம் ஒரு வலைப்பதிவாளார் புத்தகம் வெளிடிடுவதில் அதிலும் சாரு நிவேதா போல இலவச சமமோசா , டீ கொடிக்காமல் சக்ஸஸ் ஆனதற்கு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்
படங்களைப் பார்க்கவே பரவாசமாயிருக்கிறது வாழ்த்துக்கள்.. அண்ணா..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
வாழ்த்துகள்

வெளியீடு சிறப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி தலைவரே!
Krishna said…
பிரமாதம் அற்புதம்
படிக்கும் பொது சந்தோஷமா இருந்துது சங்கர் அய்யா
வாழ்க
krishna
Krishna said…
பிரமாதம் அற்புதம்
படிக்கும் பொது சந்தோஷமா இருந்துது சங்கர் அய்யா
வாழ்க
krishna
ISR Selvakumar said…
லேட்டா வந்து சும்மா வந்து உட்கார்ந்தாலே போட்டோ போடுவீங்களா? என் போட்டோவைத் தான் சொல்கிறேன்.

நன்றியுரை வழக்கமாக அறுவையாக இருக்கும். பாதி பேருக்கு மேல் எழுந்துவிடுவார்கள். டீ கடையில் அரசியல், சினிமா விமர்சிப்பது போல உங்களை நீங்களே விமர்சித்துக் கொண்டு பேசிய உங்களின் பேச்சு சுவாரசியம்தான்.

நான் இன்னும் புத்தகம் வாங்கவில்லை என்பது சிறப்பு மற்றும் கடுப்புச் செய்தி.

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.