சிறுத்தை

siruthai movie13எஸ்.எஸ்.ராஜமெளலியின்  தெலுங்கு விக்ரமார்குடுவின் தமிழ் ரீமேக். தெலுங்கிலிருக்கும் அதே மணம், குணத்தோடு அப்படியே கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான ரவிதேஜாவின் படங்களுக்கென்றே ஒரு பார்முலா இருக்கிறது. ஒரு மிடில் க்ளாஸ் கேரக்டர், முதல் பாதி முழுவதும் காமெடி, இண்டர்வெல்லுக்கு முன்னால் ஒரு திடீர் பிரச்சனை, க்ளைமாக்ஸில் சுபம். அதற்கு முன்னால் கலர் கலராய் செட்டு போட்டு ஒரு குத்துப் பாட்டு என்பது தான் அது. ஆனால் படிப்பதற்கு மிகவும் சுலபமாய் இருக்கும் இவ்விஷயத்தை திரையில் அதே பரபரப்போடு காட்ட, ரவிதேஜாவின் நடிப்பு எவ்வளவு முக்கியம், திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது அதை ரீமேக்கும் போது தெரியும். அதில் கொஞ்சமும் சளைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார்கள்.
siruthai கார்தியும், சந்தானமும் திருடர்கள். ஒரு பாழடைந்த தியேட்டரில் தாங்கள் ஆட்டையை போட்ட பொருட்களை வைத்துக் கொண்டு சந்தோஷமாய் வாழ்பவர்கள். நடு நடுவே கார்த்தியை பார்க்கும் சில பேர் அவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல முயல்வதும், இவரை பார்த்து சில பேர் பயந்து நடுங்கி போன் செய்வதுமாய் அலைவதும், இன்னொரு கும்பல் இவரை கொல்ல நினைத்து தொடர்வ்துமாய் பரப்ரவென போகும் போது, நடுவே தமன்னாவுடனான காதல் வேறு. இதற்கிடையில் ஒரு குழந்தை வேறு கார்த்தியை அப்பா என்று அழைத்துக் கொண்டு அவருடன் வந்து செட்டிலாகிறது. இவர் திருடனாயிருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதை மறைத்துவிட்டார் என்று காதலி தமன்னா வேறு பிரிந்துவிடுகிறார் (என்னா ஒரு லாஜிக்பா..) பல குழப்பத்திலிருக்கும் கார்த்தியையும், குழந்தையையும் கொல்ல ஆட்கள் வரும் போது திடீரென இன்னொரு கார்த்தி வருகிறார், துவம்சம் செய்கிறார் இண்டர்வெல் விடுகிறார்கள். பிறகு நடந்தது என்ன? என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல அதகளமான ஆந்திரா மசாலாவை, காரத்தை ருசிக்க, ஜீரணிக்க தைரியமிருப்பவர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம். அதிலும் முதல் பாதியில் கார்த்தியும், சந்தானமும் அடிக்கும் லூட்டி இருக்கிறதே கண்களில் நீர் வரவழைக்கும் காமெடி. பின்பாதியில் வில்லன்கள் செய்யும் சில விஷயங்கள் படத்திற்கு சீரியஸாய் இருந்தாலும் நமக்கு காமெடியாய் தோன்றி, ரசிக்க முடிகிற இடங்கள்தான். படு சீரியஸாய் போக வேண்டிய இரண்டாவது பாதியை முதல் பாதி கார்த்தியை வைத்து படு நகைச்சுவையாய் கொண்டு போயிருப்பது ப்ளஸ்.
 siruthai movie25 கார்த்தி வர வர மெருகேறிக் கொண்டேயிருக்கிறார். ராக்கெட் ராஜா கேரக்டருக்கும் ரத்னவேல் பாண்டியன் கேரக்டருக்குமான டிரான்ஸிஷன் அபாரம். காமெடி அநாயாசமாய் வருகிறது இவருக்கு. சந்தானத்துடன் இவர் அடிக்கும் லூட்டியும், தமன்னாவுடய இடுப்பைக் கிள்ள கைபரபரக்கும் குஜாலும், மனுஷன் அனுபவிச்சு செய்திருக்கிறார். நான் முன்பே சொன்னது போல மசாலா படங்களில் மிளிர தன்னை முன்னெடுத்துக் கொண்டு  பிரசண்ட் செய்யும் நடிப்பு வேண்டும். அது கார்த்திக்கு வசமாகிவருகிறது.

சந்தானம் இம்முறையும் ஒரு வெற்றிப் படத்திற்கான முக்கிய ப்ராப்பர்டியாகிவிட்டார். அதே போல மயில் சாமி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் குலுங்க, குலுங்க சிரிக்க வைக்கிறார். (படம் முழுவதும் காமெடி என்பதால் ப்ளோவில் மறந்துவிட்டேன். நன்றி மதுரமல்லி) தமன்னா சினிமா வழக்கப்படி லூசுப் பெண்ணாய் வருகிறார். சடுதியில் காதல் வயப்படுகிறார். இரண்டு மூன்று பாடல்களை பாடுகிறார். க்ளைமாக்ஸில் அறுந்துவிழுகிற அரத பழசான பாலத்தில் தொங்கி ஊசாலாடுகிறார். அவ்வப்போது தன் தக்குணூண்டு இடுப்பை காட்டி கிள்ளச் சொல்கிறார். இந்த இடுப்பை பார்த்து கிரங்குகிறவர்கள் எல்லா தெலுங்கு அனுஷ்கா காட்டும் இடுப்பை பார்த்தால் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை.

கொஞ்சமும் சூடு குறையாத டெம்ப்ளேட், விறுவிறு திரைக்கதையோடு சரியாக ப்ரெசெண்ட் செய்திருக்கிறார் இயக்குனர் சிவா. வேல்ராஜின் ஒளிப்பதிவுவும், எடிட்டிங்கும் நன்றாக இருக்கிறது.
சிறுத்தை – டைம்பாஸ் மசாலா எண்டர்டெயினர் விரும்பிகளுக்கு..

ஒரிஜினல் அனுஷ்கா இடுப்பை பார்க்க விரும்புகிறவகளுக்கு

Comments

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
This comment has been removed by the author.
சரி கேபிள் ஜீ நாம இன்னும் படம் பார்க்கல பார்த்திட்ட சொல்லுறேனே...
Dr. A. said…
//அதிலும் முதல் பாதியில் கார்த்தியும், சந்தானமும் அடிக்கும் லூட்டி இருக்கிறதே கண்களில் தண்ணீர் வரவழைக்கும் காமெடி.//

This happened to me in the theatre..! The comedy with Mayilsamy was the highlight of all...!
CrazyBugger said…
Mayilsamy pathi sollavae illayae thala?
Unknown said…
//இந்த இடுப்பை பார்த்து கிரங்குகிறவர்கள்//

சின்னப்பசங்க :-))

அனுஷ்காவுக்காக விக்ரமார்குடு பார்க்கப் போறேன் :-)
Ganesan said…
இந்த இடுப்பை பார்த்து கிரங்குகிறவர்கள் எல்லா தெலுங்கு அனுஷ்கா காட்டும் இடுப்பை பார்த்தால் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை.

ATTN: JACKIE SEKAR
Harish Kumar said…
kalakkal cable ji.. athu eppadi unga busy scheduleyum ella pudhu padangalyum parthu pathivu eludreenga?? unmayaliyae neenga great!! Appadiyae pongalakku vandha matha rendu padangaloda vimarsanam podunga !!!
Nat Sriram said…
சிறுத்தையை விடுவோம்...இவர் தானா ரவி தேஜா? ஆள் லுக்கும், முழியும், ரியாக்ஷனும் "வாலிபமே வா வா" மஞ்சுநாத்துக்கு வாரிசாக அல்லவா இருக்கிறார்..அக்மார்க் கொல்ட் வீடியோ அது..
Anonymous said…
குமுதம் கேள்வி பதில் பகுதியில் தமன்னா இடுப்பு ஹைக்கூ கவிதை, ஆனால் அனுஷ்கா இடுப்பு மழை அருவி என்று சொன்னது சரிதான்.
என்ன கேபிள் சார் விமர்சனத்தை சிம்பிளா முடீச்சிட்டீங்க? நான் உங்க டீடெய்ல் எதிர்பார்த்தேன்.
ஜி.. எப்பவாச்சும் நம்ம கடை பக்கம் வந்திருக்கிங்களா?
Anonymous said…
விஜய் மிஸ் பண்ணியதை 'கார்த்தி' கமெர்சியல் ஹீரோவாய் கலக்கி இருக்கிறார் என்றால் அவசியம் பார்த்துட வேண்டியது தான். விக்ரமாற்குடுவையும் சேர்த்து.
இந்த இடுப்பை பார்த்து கிரங்குகிறவர்கள் எல்லா தெலுங்கு அனுஷ்கா காட்டும் இடுப்பை பார்த்தா

////

இதையும் பாருங்க .....

http://www.youtube.com/watch?v=qD9ArbLgkUQ
San said…
Eagerly awaiting Ilaignan review
நன்றி உலவு. காம்..
@mathi.sudha
இன்னுமா பாக்கலை மதி?

@டாக்டர்.ஏ
ஆமாம்

@மதுர மல்லி
சேத்திட்டேன்

@கே.வி.ஆர்
அதைச்செய்யுங்க முதல்ல


2காவேரி கணேஷ்
நல்லா போடராய்ங்கய்யா முடிச்ச..

2ஹரீஷ் குமார்
போட்டுரலாம்

@நடராஜ்
ஹா..ஹா..

@சிவகுமார்
என்ன சரி..:))

@சக்தி ஸ்டடி செண்டர்
ஒரு வாட்டி வந்திருக்கேன்னு நினைக்கிறேன்..

@பன்பட்டர்ஜாம்
ஆமா பாருங்க..

@சான்
போட்டுட்டா போச்சு

2

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.