subiah ravisarvagar@gmail.com
Dear sir,
I am M.Subbiah, working as an Associate Director.
I read your recent book "Cinema viyabaram".
so nice and remarkable one.
very useful for me.
i want to talk to u sir.
can i get your mobile number, please.
My hearty wishes to all your further future products, sir.
Thank you,
regards,
subbiah.m.
என்னடா இவனும் ஆரம்பிச்சிட்டானா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தன் வாழ்கையில், உணவு, உடை, இருப்பிடத்திற்கு பிறகு அங்கீகாரத்துக்காகத்தான் அலைகிறான். காதல், குடும்பம், உள்பட என்பது என் கருத்து.
ஏதோ விளையாட்டுப் போல ஒரு வருடத்தில் மூன்று புத்தகங்கள் எழுதியாகிவிட்டது. பதிவர்கள் நண்பர்கள் எல்லாம் பழகின தோஷத்திற்காகவோ.. அல்லது நிஜமாகவே பிடித்தோ… வாங்கி படித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம். ஆனால் பொது வெளி எனும் போது அங்கு என் புத்தகத்தை வாங்குபவர். புதியவர் அவர்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனங்கள் வருவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அதை என் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிகளையும் உங்களின வெற்றியாக கொண்டாடும் அன்பு நெஞ்சங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியே.
பதிவர் பிச்சைக்காரனின் விமர்சனம்
ஆங்கிலத்தில் சில வியாபார, மேனேஜ்மெண்ட் , மார்கெட்டிங் சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும் போது இது போல தமிழில் இல்லையே என்ற ஏக்கம் உண்டாகும்...
ஒரு கார் நிறுவன மேலாண்மை இயக்குனர் தன் கஷ்ட நஷ்டங்களை சொல்லும்போது , கார் துறையில் இல்லாதவர்களுக்கும் கூட அது பயன்படும்... அடிப்படை தொழில் நுணுக்கங்கள், செயல்பாடுகள், முடிவெடுக்கும் கலை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்..
அதே போல தமிழில் , ஒரு துறை பற்றிய அனுபவம் , ஞானம் கொண்ட ஒருவர் , வியாபார பார்வையில் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியதுண்டு...
ஆனால், பம்ப், கார் போன்ற துறையில் இருப்பவர்கள் அப்படி எழுதினால், அனைவராலும் அதை புரிந்து கொள்வது சிரமம்..
ஆனால் அனைவருக்கும் தெரிந்த சினிமா என்ற விஷ்யத்தை , வியாபார பார்வையில் கேபிள் எழுதி இருக்கிறார் என்பது மகிழ்வூட்டியது..
ஆனால் எப்படி எழுதி இருப்பாரோ என்ற சந்தேகமும் இருந்தது...
புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று..
ஒரு புத்தகம் வாங்கியவுடன், லேசாக புரட்டி பார்த்து விட்டு, எப்போது அதை படிக்க வேண்டும் என வரிசை படுத்தி வைப்பது என் வழக்கம்...
அந்த வகையில் புரட்டி பார்க்க ஆரம்பித்தேன்..
ஆனால் வரிசை படுத்தி வைக்க வேண்டிய அவசியம் வரவில்லை...
காரணம், படிக்க ஆரம்பித்தவுடன் அடுத்தடுத்து வரும் விஷ்யங்கள் என்னை இழுத்து சென்று விட்டதால், படித்து முடித்த பின்னே கீழே வைக்க முடிந்தது...
ஏரியா பிரித்தல், வினியோகம் , விளம்பரம், ஒளிபரப்பு உரிமைகள் , மார்கெட்டிங் யுக்திகள், ஹாலிவுட் பார்வை என ஒவ்வொரு பக்கமும் இன்ஃபர்மேட்டிவாக இருக்கிறது...
ஆனால், ஒரு பாட புத்தகம் போல இல்லாமல் , ஒரு சுவையான கதை போல இருப்பதே இதன் தனி சிறப்பு..
அதற்கு காரணம் அனுபவத்தில் இருந்து கொடுக்கும் உதாரணங்கள்...
இந்த வியாபாரத்தில் சந்த்தித்த லாப நஷ்டங்களை அனுபவித்தில் இருந்து பகிர்ந்து கொள்வதே இந்த நூலின் தனி சிறப்பு.. அதனால்தான் சொல்ல வரும் விஷ்யங்கள் நன்றாக மனதில் நிற்கின்றன..
அனுபவ குறைவால் செய்த தவறுகளையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் கேபிள்...
ஆனால் இந்த ஃபிளோ , ஹாலிவுட் பார்வை வரும்போது லேசாக தடுமாறுகிறது...
அதுவும் இன்ஃபார்மாட்டிவாக இருந்தாலும், கதை போல செல்லும் நூலின் பாணியில் இருந்து விலகுவதாக தோன்றுகிறது...
ரிஸ்க் எடுத்தல், டிசிசஷன் மேக்கிங், மார்கெட்டிங் என்று பட்டையை கிளப்பும் இந்த புத்தகம் அனைவருக்கும் பயன்படும்..
அனைவருமே படிக்க் வேண்டும்..
சினிமா துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலாக பயன்படும்...
பய்னை எதிர்பார்க்காமல், சும்மா சுவாரஸ்யத்துக்காகவும் வாசிக்கலாம்..
அவ்வப்போது செய்திகளில் அடிபடும், எம் ஜி வினியோகம்,. ஏரியாக்கள், போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்து கொள்ளவும் படிக்கலாம்...
********************************************
சினிமா வியாபாரம்..
ப்ளஸ் - 1 சுவையான நடை
2. அனுபவம் சார்ந்த விளக்கம்
3 . இன்ஃபர்மேட்டிவாக இருத்தல்
மைனஸ்
1. ஒரே எழுத்து மயமாக இருத்தல்.. ஓவியங்களோ , புகைப்படங்களோ சேர்த்து இருக்கலாம்..
2. ஹாலிவுட் பார்வை வரும்போது, அது தனி பிரிவாக தோன்றுதல்
வெர்டிக்ட்
சினிமா வியாபாரம் - சிறப்பான விருந்து
சினிமா வியாபாரம்
கேபிள் சங்கர்
கிழக்கு பதிப்பகம்
மீண்டும் குறுகிய காலத்தில் 20 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..கேபிள் சங்கர்Dear sir,

Post a Comment
20 comments:
//ஒரு மனிதன் தன் வாழ்கையில், உணவு, உடை, இருப்பிடத்திற்கு பிறகு அங்கீகாரத்துக்காகத்தான் அலைகிறான். காதல், குடும்பம், உள்பட என்பது என் கருத்து.
/
miga sari
//பதிவர்கள் நண்பர்கள் எல்லாம் பழகின தோஷத்திற்காகவோ.. அல்லது நிஜமாகவே பிடித்தோ… வாங்கி படித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம்/
oru book kooda vaangalai
அதெல்லாஞ் சரி.
தலைப்பை வாசகர் விமர்சனம்னு போடாம வாசகர் அனுபவம்னு போடுங்க.
#தலிவர், எப்படியும் குற்றம் சொல்வோர் சங்கம்
Nice,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html#comments
என்னடா இவனும் ஆரம்பிச்சிட்டானா !
இதில என்ன தலைவா தப்பிருக்கு. இன்னக்கி பதிவெழுத ஆரம்பிச்ச நானே என் நண்பர்களிடம் நானும் ப்ளாக் ஆரம்பிசிருகேன்னு பீத்திக்கும் போதுநீங்கள் எல்லாம் எங்கேயோ இருக்கீங்க! விரைவில் சிகரம் தொடுவீர்கள்
சரியாச் சொன்னீங்க சங்கர்.
யூ டூ ....
ஹிஹி.. வாத்துகள் கேபிள்.!
சரி விடுங்க. அறியா பிள்ளை தெரியாம சொல்லிட்டாரு
அருமை....
சீக்கிரம் லெட்டர் போடுறேன்.
இந்த வார இறுதியில் தங்கள் புத்தகத்தை படிக்க உள்ளேன். பணி நெருக்கடி மற்றும் சில காரணங்கள் தாமதத்திற்கு காரணம். 20 லட்சம் ஹிட்ஸ் வாங்கியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரிடமும் வயது பேதமின்றி சக நண்பராக பழகும் தங்களுக்கு என்றும் வெற்றியே!!
இதையும் படித்து பாருங்கள் http://grajmohan.blogspot.com/2011/01/i-s.html
டுபாகூர் சங்கர் நல்லாருக்கீங்களா... நீங்க எழுதின காவலன் விமர்சனத்துலேந்தே தெரியுது நீங்க எப்பேர்பட்ட டுபாகூர்னு... வெயிட் பண்ணுங்க உங்க படம் வரத்தான போகுது... இப்பவே சொல்லலாம் அதுக்கு... வேண்டாம் வெயிட் பண்ணுங்க மிஸ்டர் டுபாகூர்
@lk
நன்றி
@எல்.கே
நண்பேண்டா..
@கோபி ராமமூர்த்தி
சரிங்கண்ணா..
@சக்திஸ்டடி செண்டர்
பார்த்துடறேன்.
#ji.ராஜ்மோகன்
நன்றி
@கொக்கரக்கோ
நன்றி
@கே.ஆர்.பி.செந்தில்
யெஸ்மீ..
@ஆதிமூலகிருஷ்ணன்
நன்னி
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அதானே..
@மனோ
நன்றி
2காவேரி கணேஷ்
எதிர்பார்க்கிறேன்
@சிவகுமார்
மெல்ல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க
@ஜி.ராஜ்மோகன்
ஏற்கனவே படிச்சிட்டேன்..:))
@மணி
மொதல்ல ப்ரொபைலோட வா.. அப்புறம் மத்தவங்களை டுபாக்கூர்னு கூப்பிடலாம் மணி.. உச்ச்..உச்ச்ச்..உச்ச்ச்
Dear friend,
'Cinema viyabaram' book is very informative. I accidentally noticed this book when I was in book store. I am glad I bought it.
Nicely written with personal experiences. I love to know more about this business in production side and story/screenplay writing. Please do not think I have money to produce a movie.
But, using this blog, and your reliable good known friends, both local and foreign, we can start a production company and invest a share. If minimum budget is 3 crores, 30 people each with 10 lakhs should be able to make a movie. I understand, it is not easy to get such reliable friends with trust and I hope there must be a way for it. what do you think?
Or do you want to start a new topic as "shall we produce a movie together?" and find how the response is.
Regards,
MB.
yes we can start. mb
mail me your contact details or please do call me..
Post a Comment