சாப்பாட்டுக்கடை
இந்தக் கடையை அடிக்கடி திருவெல்லிக்கேணியில் சுற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைவிட ரொம்ப காலமாய் தேவியில் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும். ஏனென்றால் தேவியில் படம் பார்க்க முன் பக்கமாய் அனுமதிப்பவர்கள்,படம் விட்டவுடன் பின்பக்கம் உள்ள அவுட் கேட் வழியாகத்தான் அனுப்புவார்கள்.. அப்போது வெளியே வரும் பெரும்பாலானவர்கள் இங்கே சாப்பிடாமல் போயிருக்க மாட்டார்கள். இப்போது சில சமயம் முன் பக்கம் வழியாகவும் விடுவதால் இன்றைய புது ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது ஸ்பெஷாலிட்டி சமோசா, கச்சோடி, ரசமலாய், ரசகுல்லா அல்லது ஜாமூன், ஜிலேபி, மற்றும் பால்கோவா, மற்றும் லஸ்ஸி.
எப்பவும் அடுப்பிலிருந்து சூடான சமோசாவும், கச்சோரியும் எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பார்கள் அது காலியாகிக் கொண்டேயிருக்கும். சமோசாவென்றால் ஏதோ வெங்காயத்தையும் உருளையையும் சேர்த்து ஃபில் செய்தது கிடையாது. முழுக்க, முழுக்க உருளை மசாலாவை மட்டுமே வைத்து செய்யப்படும் சமோசா.. மவுண்ட் ரோடில் ஒரு ரூபாய்க்கு சமோசா விற்ற காலத்திலேயே இரண்டரை ரூபாய்க்கு விற்றவர்கள். இப்போது இவர்களது விலை ஒரு சமோசா 5 ரூபாய். இவர்களுடய இன்னொரு ப்ளஸ் பாயிண்ட், சர்வீஸ். சட்சட்டென மந்தார இலையில் சூடான சமோசாவை வைத்து அதை அப்படியே கட்டைவிரலால் ஒரு அழுத்து அழுத்தி, நடுவே கார சட்னியும், புளிசட்னியும் ஒவ்வொரு கரண்டி ஊற்றி அப்படியே கையில் கொடுப்பார்கள். சூடான சமோசாவுக்கும், சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட மசாலும், சட்னியும் டிவைனாக இருக்கும். அதே போல் கச்சோரியில் நடுவில் ஓட்டைப் போட்டு அதில் சட்னிகளை ஊற்றி கொஞ்சமே கொஞ்சம் மிக்ஸரை போட்டு கொடுப்பார்கள்.
ஸ்வீட் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு இருக்கவேயிருக்கு சூடான ஜிலேபி, ஒரு 50 கிராம் ஜிலேபியோ, ரசமலாயோ,அல்லது பால்கோவாவோ சாப்பிட்டுவிட்டு, நல்ல காரம் மணம் கொண்ட சமோசாவையும் லபக்கிவிட்டு, மசாலா மற்றும் ஜல்ஜீரா கலந்த லஸ்ஸியோ, ஸ்வீட் லஸ்ஸியோ, சால்ட் லஸ்ஸியோ ஒன்று அடித்துவிட்டு கிளம்பினால் மதிய சாப்பாடு ஓவர். புளிக்காத, எல்லா லஸ்ஸியிலும் அரை கரண்டி மலாய் இல்லாமல் இருக்காது. இத்தனைக்கு இது ஒரு கையேந்திபவன் கடை.
கேபிள் சங்கர்
Comments
----செங்கோவி
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?
I missed a lot.
பிறந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் பா. ரா வுக்கு அடுத்தபடியாக நீங்கள் தான்
சாப்பாட்டை பற்றி மிக அருமையாக எழுதுகிறீர்கள் . நான் தற்போது திண்டுகல்லில் பணிபுரிந்து வருகிறேன். திண்டுக்கல் வேணு பிரியாணி பற்றி கேள்விப்பட்டு
இருக்கிறீர்களா? அதைப்பற்றி ஒரு பதிவு எழுத ஆசை. சீக்கிரம் எழுதுகிறேன்.
We have been patronising this shop for years . Also, Anna lassi at the subway.The process of making Lassi in front of your eyesw ans embellishing with rose water Sugar and malai. Their Samosa also used to be good. That shop is not there now.
aLSO, TRIPLICANE REMINDS ME OF THE FAMOUS RATNA CAFE.
Shankar
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html
Shankar
Romba naal munnadi poneenga pole (Samosa is 10 rupees now)
I am a regular visitor to this shop for many years
Samosa/Jelabi/Katori/Basundi
All are Wonderful Delicacies
You should not step out of the street without sipping the Lassi from them. It is Sin.
Best shop in South india for Katchori/Samosa and taste similar to original bengali Samosa/Katchori
Thanks a lot for writing about this Kadai
சாப்பாட்டுக்கடை அடிக்கடி வரட்டும் தலைவரே.
பேரை மும்பை லசி'ன்னு மாத்த சொல்லுங்க இல்லைன்னா கடுமையான போராட்டம் நடிகர் கார்த்திக் தலைமையில் நடத்தப்படும்.....ஹா ஹா ஹா...
முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
அப்படியே ஹாஸ்பிடல் போய் ஒரு ஹார்ட் சர்ஜரி பண்ணிக்கலாமா? :)
நன்றி
@அகில் பூங்குன்றன்
மலாய்னா என்னான்னு தெரியாதா? சரி வாங்க ஒரு நா கூட்டிட்டு போய் காட்டுறேன்
@பிலாசபி பிரபாகரன்
பேரு தான் வட இந்தியர். நம்மளை விட தமிழ் நல்லா பேசுவாங்க.
2வினோ
ம்
2மாத்தி யோசி
வாங்க நிச்சயம் போவோம்
@சிவகுமார்
ஆம்
2திருமலை கந்தசாமி
காசி விநாயகா.. ம்..
@ஜி.ராஜ்மோகன்
நன்றி
வேணு பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில்
@சே.குமார்
நன்றி
2ஷங்கர்
ஆமாம்
@ஜனா
ஆமா
@சக்தி ஸ்டடி செண்டர்
நிச்சயம்
2கிருஷ்ணா
அப்படியா கிருஷ்ணா எனக்கு விலை பெரிதாகவே படவில்லை
@செ.சரவணக்குமார்
நன்றி
@மனோ
ஆமாம்
@இசிஆர்
எல்லோருக்கும் ஒரு மலரும் நினைவுகள் இருக்கிற்து போலிருக்கிறது
@கவிதை காவலன்
வேணாம். எல்லாரும் நல்லாருக்கட்டும்
@நவன்
கொஞ்சமா சாப்டா ஏன் சர்ஜரி பண்ணிக்கணும்
@ரவிஷா
நீங்களும் மலரும் நினைவுகள் போயிட்டீங்களா?
உபரி தகவல்
காதல் படத்துல பரத்தும் சந்தியாவும் இங்கதான் சாப்டுவாங்க (உனக்கென சாங் சீக்வன்ஸ்)
இங்கு இகடையை பற்றி பதிவு செய்ததுற்கு மிக்க நன்றி...