இந்தக் கடையை அடிக்கடி திருவெல்லிக்கேணியில் சுற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைவிட ரொம்ப காலமாய் தேவியில் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும். ஏனென்றால் தேவியில் படம் பார்க்க முன் பக்கமாய் அனுமதிப்பவர்கள்,படம் விட்டவுடன் பின்பக்கம் உள்ள அவுட் கேட் வழியாகத்தான் அனுப்புவார்கள்.. அப்போது வெளியே வரும் பெரும்பாலானவர்கள் இங்கே சாப்பிடாமல் போயிருக்க மாட்டார்கள். இப்போது சில சமயம் முன் பக்கம் வழியாகவும் விடுவதால் இன்றைய புது ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது ஸ்பெஷாலிட்டி சமோசா, கச்சோடி, ரசமலாய், ரசகுல்லா அல்லது ஜாமூன், ஜிலேபி, மற்றும் பால்கோவா, மற்றும் லஸ்ஸி.
எப்பவும் அடுப்பிலிருந்து சூடான சமோசாவும், கச்சோரியும் எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பார்கள் அது காலியாகிக் கொண்டேயிருக்கும். சமோசாவென்றால் ஏதோ வெங்காயத்தையும் உருளையையும் சேர்த்து ஃபில் செய்தது கிடையாது. முழுக்க, முழுக்க உருளை மசாலாவை மட்டுமே வைத்து செய்யப்படும் சமோசா.. மவுண்ட் ரோடில் ஒரு ரூபாய்க்கு சமோசா விற்ற காலத்திலேயே இரண்டரை ரூபாய்க்கு விற்றவர்கள். இப்போது இவர்களது விலை ஒரு சமோசா 5 ரூபாய். இவர்களுடய இன்னொரு ப்ளஸ் பாயிண்ட், சர்வீஸ். சட்சட்டென மந்தார இலையில் சூடான சமோசாவை வைத்து அதை அப்படியே கட்டைவிரலால் ஒரு அழுத்து அழுத்தி, நடுவே கார சட்னியும், புளிசட்னியும் ஒவ்வொரு கரண்டி ஊற்றி அப்படியே கையில் கொடுப்பார்கள். சூடான சமோசாவுக்கும், சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட மசாலும், சட்னியும் டிவைனாக இருக்கும். அதே போல் கச்சோரியில் நடுவில் ஓட்டைப் போட்டு அதில் சட்னிகளை ஊற்றி கொஞ்சமே கொஞ்சம் மிக்ஸரை போட்டு கொடுப்பார்கள்.
ஸ்வீட் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு இருக்கவேயிருக்கு சூடான ஜிலேபி, ஒரு 50 கிராம் ஜிலேபியோ, ரசமலாயோ,அல்லது பால்கோவாவோ சாப்பிட்டுவிட்டு, நல்ல காரம் மணம் கொண்ட சமோசாவையும் லபக்கிவிட்டு, மசாலா மற்றும் ஜல்ஜீரா கலந்த லஸ்ஸியோ, ஸ்வீட் லஸ்ஸியோ, சால்ட் லஸ்ஸியோ ஒன்று அடித்துவிட்டு கிளம்பினால் மதிய சாப்பாடு ஓவர். புளிக்காத, எல்லா லஸ்ஸியிலும் அரை கரண்டி மலாய் இல்லாமல் இருக்காது. இத்தனைக்கு இது ஒரு கையேந்திபவன் கடை.
கேபிள் சங்கர்
Post a Comment
24 comments:
லஸ்ஸி மட்டுமல்ல வடையும் எனக்குத்தான்!
----செங்கோவி
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?
மலாய் அப்படீன்ன என்னங்க? முதல் முறையா கேள்விபடுகீறேன்.
இது வட இந்தியர்களோட கடை தானே... சமோசா விஷயத்தில் அவங்களோட கை பக்குவம் யாருக்கும் வராது...
அந்த கடையில் ஒரு தடவை சாப்பிட்டு இருக்கேன் அண்ணா....
வாவ்...! படிக்கும் போதே வாயூறுதே! தமிழ் நாட்டுக்கு வந்தால் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறேன் இன்று செவ்வாய்க்கிழமை நான் விரதம் பாஸ்! இப்படி சாப்பாட்டு மேட்டரைப் போட்டு பீல் பண்ண வச்சிட்டீங்களே!
>>> நாம் சிலமுறை சாப்பிட்டு இருக்கிறேன். தேவி பின் கேட் வழியாக செல்ல சில சமயம் செக்யூரிட்டி விடுவதில்லை. ஐந்து ரூபாய் செக்யூரிட்டி கையில் அழுத்தி நானும் என் நண்பரும் வெளியே சென்று இக்கடையில் சாப்பிட்டோம்.இந்த கடையில் மாலை நேரத்தில் தெய்வீக ஹிந்தி பாடல்கள் ஒலிக்கும்.
திருவெல்லிக்கேணி சாப்பாட்டு கடை என்றவுடன் என் நினைவில் வந்தது "காசி விநாயகா ".
I missed a lot.
சாப்பாட்டுக்கடை பகுதி அருமை ! சாப்பாட்டுக்கு பெயர் போன காரைக்குடியில்
பிறந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் பா. ரா வுக்கு அடுத்தபடியாக நீங்கள் தான்
சாப்பாட்டை பற்றி மிக அருமையாக எழுதுகிறீர்கள் . நான் தற்போது திண்டுகல்லில் பணிபுரிந்து வருகிறேன். திண்டுக்கல் வேணு பிரியாணி பற்றி கேள்விப்பட்டு
இருக்கிறீர்களா? அதைப்பற்றி ஒரு பதிவு எழுத ஆசை. சீக்கிரம் எழுதுகிறேன்.
சாப்பாட்டுக்கடை அருமை. ஒருமுறை நண்பருடன் தேவி தியேட்டர் சென்றபோது சாப்பிட்ட ஞாபகம்.
shankar sir Jollu vardhu.
We have been patronising this shop for years . Also, Anna lassi at the subway.The process of making Lassi in front of your eyesw ans embellishing with rose water Sugar and malai. Their Samosa also used to be good. That shop is not there now.
aLSO, TRIPLICANE REMINDS ME OF THE FAMOUS RATNA CAFE.
Shankar
ம்ம்ம்...நானும் மிஸ்பண்ணி விட்டேன்.
வாவ்...! படிக்கும் போதே வாயூறுதே!தோ.. போய்ட்டேயிருக்கேன்..
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html
Anbare
Shankar
Romba naal munnadi poneenga pole (Samosa is 10 rupees now)
I am a regular visitor to this shop for many years
Samosa/Jelabi/Katori/Basundi
All are Wonderful Delicacies
You should not step out of the street without sipping the Lassi from them. It is Sin.
Best shop in South india for Katchori/Samosa and taste similar to original bengali Samosa/Katchori
Thanks a lot for writing about this Kadai
நல்ல பதிவு தல. நான் அடிக்கடி போற இடம் அது. பக்கத்துலயே மொகைல் பிரியாணிக்கடை இருக்கு. முன்னாடி அங்க பிரியாணி பட்டையக் கெளப்பும். இப்ப அவ்வளவா சரியில்லை.
சாப்பாட்டுக்கடை அடிக்கடி வரட்டும் தலைவரே.
பம்பாய் லசி'க்கு விளம்பரமா....???
பேரை மும்பை லசி'ன்னு மாத்த சொல்லுங்க இல்லைன்னா கடுமையான போராட்டம் நடிகர் கார்த்திக் தலைமையில் நடத்தப்படும்.....ஹா ஹா ஹா...
நான் பல வருடங்களாக(சுமார் 20) இந்த கடையின் ரசிகன். என் மாமா என்னை தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோவுக்கு அழைத்து செல்லும்போது முதலில் யாத்கார் ஹோட்டலில் (இப்போது ரிலையன்ஸ் ஷோரூம் இருக்குமிடத்தில்)சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு இங்க்லீஷ் படம் பார்த்தோம்(பெயர் நினைவில்லை). இன்டர்வலிலேயே "தியேட்டர்ல சாப்பிட வேண்டாம்டா, வெயிட் பண்ணு!" என்றார். பாப்கார்னை தியாகம் பண்ணிவிட்டு படத்தை பார்த்து முடித்தோம். அப்படியே, பின் வழியாக போனவுடன் சுடச்சுட சமோசா சாப்பிட்டுவிட்டு, இனிப்பான லஸ்ஸியை கஷ்டப்பட்டு குடித்தவுடன் (சின்ன பையன் இல்லையா?), "மீசையை ஷேவ் பண்ணுடா!" எனறார். புரியாமல் விழித்த எனக்கு பக்கத்தில் இருந்த ஸ்கூட்டர் கண்ணாடியில் முகத்தை திருப்பி காண்பித்தார். லஸ்ஸியில் இருந்த 'மலாய்' என் மேல் உதட்டில் ஒட்டியிருந்தது. துடைத்த மீசை திரும்ப வந்தது போலிருந்தது, உங்கள் பதிவை படித்த போது! நன்றி...
தலைவா நீங்க இந்த மாதிரியே எழுதி எங்களை உசுப்பேத்திகிட்டே இருங்க.. கூடிய சீக்கிரம் எங்களுக்காக சாப்பாட்டுக்கடை மாதிரி மருந்துக்கடை பத்தியும் எழுத வேண்டி இருக்கும்.. ஹி..ஹி..ஈவ்னிங் ஒரு விசிட் அடிக்கலாம்ன்னு இருக்கேன்
முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
//சூடான ஜிலேபி, ஒரு 50 கிராம் ஜிலேபியோ, ரசமலாயோ,அல்லது பால்கோவாவோ சாப்பிட்டுவிட்டு, நல்ல காரம் மணம் கொண்ட சமோசாவையும் லபக்கிவிட்டு, மசாலா மற்றும் ஜல்ஜீரா கலந்த லஸ்ஸியோ, ஸ்வீட் லஸ்ஸியோ, சால்ட் லஸ்ஸியோ ஒன்று அடித்துவிட்டு கிளம்பினால்//
அப்படியே ஹாஸ்பிடல் போய் ஒரு ஹார்ட் சர்ஜரி பண்ணிக்கலாமா? :)
1985’இல் “இதயக் கோவில்” படம் பார்த்துவிட்டு நானும் என் சித்தப்பாவும் இந்தக் கடைக்குப் போய் சமோசா சாப்பிட்டோம்! இன்னும் இந்தக் கடை இருக்கிறது என்று நினைக்கும்போது நிச்சயமாக இது அவர்களின் குவாலிட்டியை காட்டுகிறது!
@sengovi
நன்றி
@அகில் பூங்குன்றன்
மலாய்னா என்னான்னு தெரியாதா? சரி வாங்க ஒரு நா கூட்டிட்டு போய் காட்டுறேன்
@பிலாசபி பிரபாகரன்
பேரு தான் வட இந்தியர். நம்மளை விட தமிழ் நல்லா பேசுவாங்க.
2வினோ
ம்
2மாத்தி யோசி
வாங்க நிச்சயம் போவோம்
@சிவகுமார்
ஆம்
2திருமலை கந்தசாமி
காசி விநாயகா.. ம்..
@ஜி.ராஜ்மோகன்
நன்றி
வேணு பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில்
@சே.குமார்
நன்றி
2ஷங்கர்
ஆமாம்
@ஜனா
ஆமா
@சக்தி ஸ்டடி செண்டர்
நிச்சயம்
2கிருஷ்ணா
அப்படியா கிருஷ்ணா எனக்கு விலை பெரிதாகவே படவில்லை
@செ.சரவணக்குமார்
நன்றி
@மனோ
ஆமாம்
@இசிஆர்
எல்லோருக்கும் ஒரு மலரும் நினைவுகள் இருக்கிற்து போலிருக்கிறது
@கவிதை காவலன்
வேணாம். எல்லாரும் நல்லாருக்கட்டும்
@நவன்
கொஞ்சமா சாப்டா ஏன் சர்ஜரி பண்ணிக்கணும்
@ரவிஷா
நீங்களும் மலரும் நினைவுகள் போயிட்டீங்களா?
கேபிள் ஜி நானும் அந்த கடையில சாப்பிட்டு இருக்கேன் செம டேஸ்டா இருக்கும்,
உபரி தகவல்
காதல் படத்துல பரத்தும் சந்தியாவும் இங்கதான் சாப்டுவாங்க (உனக்கென சாங் சீக்வன்ஸ்)
என்னால் மறக்க முடியாத கடை....ஸ்கூல் படிக்கும் போதில் இருந்து..இப்போ வரைக்கும் நிறைய நினைவுகள்...கிட்ட தட்ட பத்து வருட நினைவுகள்.
இங்கு இகடையை பற்றி பதிவு செய்ததுற்கு மிக்க நன்றி...
Dear friends when I purchased a samosa in this shop first time it was 50ps per Somoza. This during 1985 times. Till today the tast of the samosa is not changed. That is the buaty of this shop.
Post a Comment