மிர்ச்சி சிவா, இளமையான டிசைன்கள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, அம்சமான டைட்டில் என்றதும் ஏதோ இளமை துள்ளிக் குதிக்கும் கதையாக இருக்கும் என்றெண்ணி துள்ளிக் குதித்து படம் பார்க்கப் போகிறவர்களா நீங்கள்? அப்போது இந்த விமர்சனம் உங்களுக்குத்தான். பாவி மக்கா சாச்சுபுட்டாய்ங்கடா.. சாச்சுபுட்டாய்ங்க
…
ஏதோ படம் பழைய பாலு மகேந்திரா படமாட்டு, மலையாள சாமியார் குட்டிப் பையன் அப்படியே ரிவர்ஸு ஷாட்டுன்னு கலக்கப் போறாய்ங்கன்னு பாத்தா.. திருமவும் பருத்தி வீரெய்ன் படத்தை எடுத்திருக்காய்ங்க.. அதே போல குட்டிப்பய, பல்லு உடைஞ்ச பொண்ணு, ஒண்ணு மண்ணா திரியறது, பேக்ரவுண்டுல பாட்டுப் பாட வளர்றதுன்னு ஏற்கனவே நூறு தடவை பார்த்த படத்தைப் பார்த்த மாரி ஒரு ஃபீலிங் வந்திருச்சு. பொறவு என்ன.. அப்பனாத்தாள நீ என்னாங்குறா மாரி பேசிட்டு அந்த புள்ள திரியறதும், கெஞ்சினா மிஞ்சறதும், மிஞ்சினா கெஞ்சறதுமா போய்ட்டிருக்க.. ஏன் தாயி அப்பிடி பண்ணுறன்னு கேட்டா.. ரெண்டு வயசானப்போ அவனோட ஆத்தாக்காரி, இனிமே திண்டாலும் கொண்டாலும் உன் கையிலதான்னு பிடிச்சிக் கொடுத்திருச்சாம். அது தன் மேல வச்ச நம்பிக்கையைக் காப்பாத்த அந்த புள்ளை இந்த சவலைப் புள்ளையைதேன் கட்டிகிடுவேன்னு சொல்லுதாம்.. ஓ…..லக்க.. வருது வாயில..நல்லா..
இன்னும் எம்புட்டு நாளைக்கு இதே கதைய மறுக்கா, மறுக்கா எடுத்திட்டிருப்பாய்ங்க.. இதுக்கெல்லாம் காரணம் இந்த அமீரு பயதான். ஆரு எடுக்கச் சொன்னா.. பருத்திவீரன்டு அந்த ஒத்தப் படத்தை எடுத்துப்புட்டு ராசா நீ சொவமா இருக்க, ஆனால் அடுத்தடுத்து வர பச்ச புள்ளைய்ங்க காதல.. நம்மால தாங்க முடியலைங்க.. பல்லு மொளைக்குறதுக்கு முன்னாலேயே காதல் வந்திருச்சின்னு சொல்வாய்ங்க போலருக்கு.
இத்தையெல்லாம் விட ரொம்ப கஷ்டமான விசயம்.. ஆளாளுக்கு பலைய பதனாறு வயசு பாரதிராசா பட காந்திமதி கணக்கா.. ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு கிழவி பலமொளி சொல்லி பேசுது.. படத்தில வர்ற ஆத்தாக்காரி சாமி கிட்ட கேக்குறாமாரி நானும் கேக்குறேன்.. “ ஏ சீலக்காரி.. உனக்கு நாங்க படற கஷ்டம் தெரியலையா? எப்பலேர்ந்து எங்களை இந்த மருதை படத்துங்களேர்ந்து எங்க கண்லேர்ந்து காங்காம போகப் போறியோ.? மாரியாத்தா..”னு வேண்டிக்கிடணும் போலருக்கு.

இந்த சினிமாவுல மட்டும் ஒரே ஒருக்கா கட்டிபிடிச்சிட்டா எப்படித்தான் கற்பு கெட்டுப்போய் கருத்தருக்கிறாளுகளோன்னு தெரியலை.. சாமி.. இதுக்கு நீதான் ஒரு வழி செய்யணும். பயபுள்ள எதுவும் தெரியாம அவ முந்தானையை பிடிச்சிட்டு திரிஞ்சாலும், சரியா.. வேலை செஞ்சி சாதிச்சிப்புட்டான்.. ஆம்பள சிங்கமுல்ல.. இம்ம்பூட்டு கதையையும் ஃப்ளாஷு பேக்குல சொல்லிப்புட்டு, அந்த ஹீரோ பயபுள்ள நம்ம மிர்ச்சி சிவாவோட லவ்வர் அப்பந்தேன்னு சொல்றாய்ங்க.. அதுக்கப்புறம் ஒரு பொண்ணை காட்டுறாய்ங்க.. இம்பூட்டு நேரம் நாம் பார்த்திருந்த பொண்ணை ஒரு வத்திப் போன அயிட்டம் கணக்கா லோஹிப்புல பொடவ கட்டி கஸ்தூரிய காட்டுற போது அப்படியே நாண்டுகிட்டு சாகலாமான்னு தோணுது. அப்பனா நடிச்சிருக்கிற அபிசேக்கு பாவம் எதுவும் செய்ய முடியாம அப்பப்ப, கண்ணாடி கழட்டிபேசுறாரு. பத்தாப்பு மட்டுமே படிச்சி அமெரிக்ககாரவுக மாரி பேசுறதெல்லாம் ஓவரு.. அவரு பொண்டாட்டியா நம்ம வெளம்பரத்துல நடிக்கிற அம்மா நடிக்குது.. பாவம் அவிய்ங்க..
படத்தில நல்லாருக்கிற ஒரு நாலு விஷயம். அந்த ப்ளாஷ்பேக் குட்டி பொண்ணு நடிப்பும், இந்த மாரி ஸ்ட்ராங்கான நடிப்பை ஒரு புது மொவத்துகிட்ட பாத்து நாளாச்சு. நம்ம பால்பாண்டியோட நடிப்பு, அருளின் கேமராவும், எடிட்டிங்கும், யுவன் சங்கர் ராஜாவின் மீசிக், பின்னணியிசை மட்டும் இல்லேன்னா…அம்புட்டுதேன். ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது.. என்னாத்துக்கு இந்த படத்துக்கு பேப்பர் காரவுகளெல்லாம் எழுந்து நின்னு கைத்தட்டினாங்களாம்..? ஒரு வேளை ரெண்டு மணி நேரத்தில படத்த முடிச்சி அனுப்பினதினாலயா..?
பதினாறு – ஏய் சீலைக்காரி உம்புள்ளைய்ங்களை நீ தாண்டி காப்பாத்தணும்.
Post a Comment
28 comments:
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.... இந்த படம்லாம் போய் பாக்கணுமா எதோ எங்கள காப்பாத்துன புண்ணியம் உங்கள சேரட்டும்
//இந்த சினிமாவுல மட்டும் ஒரே ஒருக்கா கட்டிபிடிச்சிட்டா எப்படித்தான் கற்பு கெட்டுப்போய் கருத்தருக்கிறாளுகளோன்னு தெரியலை..// அண்ணே, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுன்ணே..நடு ராத்திரீல இப்படியா எழுதுறது..
கேபிள், கொல வெறியில இருக்கீங்க போலருக்கு.
// இந்த சினிமாவுல மட்டும் ஒரே ஒருக்கா கட்டிபிடிச்சிட்டா எப்படித்தான் கற்பு கெட்டுப்போய் கருத்தருக்கிறாளுகளோன்னு தெரியலை.. //
எனக்கும் ரொம்ப நாளா அதே டவுட்டு தாண்ணே...
/இரண்டு வயசானப்போ அவனோட ஆத்தாகாரி, இனிமே திண்டாலும் கொண்டாலும் உன் கையிலதான்னு பிடிச்சி கொடுத்திருச்சாம்//
>>> முடியல..
//ஒவ்வொரு இடத்திலேயும் ஒரு கிழவி பலமொளி சொல்லி பேசுது.//
>>>மண்ணெண்ன வேப்பெண்ண விளக்கெண்ண, பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன (லொள்ளு சபா)
சில படங்களை நாங்கள் பார்க்கும் முன் தான் பார்த்து விட்டு உஷார் செய்யும் கேபிள் அண்ணன் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வருமாறு...உங்கள் பொற்பாதங்களை தொட்டு...
வழக்கத்திற்கு மாறாக மாறுபட்ட பேச்சுவழக்கில் விமர்சனம் செஞ்சீருக்கீங்கண்ணே,அதுக்காக ஒரு பாராட்டு...
எப்படியோ டிக்கெட் காசு மிச்சம் பண்ணி கொடுத்ததுக்கு நன்றி...
வேற ஏதாவது ட்ரீட் வேணுமுன்னா இங்க சிங்கைக்கு வாங்க பார்த்துக்கலாம்... :-))
இளைய இசைஞானி இசை ஓகேதானே.... இது போதும்....
அண்ணே இந்த விமர்சனத்தை இன்னொருக்கா தமிழ்ல எழுதுவீங்களா? ஹிஹி
enna thala romba nonthu poi ezhuthirukkeenga....
polam nu ninaichen.... mudiva maathiten
ஒக்கா மக்கா.. இவியிங்க எப்ப பருத்திவீரனை விட்டு வெளிய வராய்ங்களோ அப்பத்தேன்.. மருத கதை படத்தை பாக்குறதுன்னு முடிவு செஞ்சிட்டேன்.. அடுத்த வாரம் தூங்கா நகரம் வருது.. ஒரே ரோசனையா இருக்கு..ஹும்.
எனக்கு என்னமோ இந்த விமர்சனத ஏதோ பொறாமைல எழுதுன மாதிரி தோணுது... ஆவ்வ்வ்வ்...
வட்டார வழக்குல எழுதுபது நல்ல இருக்கு
எஸ்.டி. சபா , சபா கைலாஷ் ,டி. சபாபதி எப்படி எப்படியோ பெயர மாத்தியும் ஒன்னும் எடுபவில்லை.
ஒரு வேளை நுமராலாஜி வொர்க் அவுட் ஆகலையோ !மிர்ச்சி சிவா ஒழுங்கா காமடி படங்களில்
நடிப்பதே நல்லது
ஓ இந்த படம் ரீலிஸ் ஆயிடுச்சா
//இம்பூட்டு நேரம் நாம் பார்த்திருந்த பொண்ணை ஒரு வத்திப் போன அயிட்டம் கணக்கா லோஹிப்புல பொடவ கட்டி கஸ்தூரிய காட்டுற போது அப்படியே நாண்டுகிட்டு சாகலாமான்னு தோணுது.///
படிக்கும் போதே பகீரென்கிறது. நல்ல வேளை காப்பத்தீட்டீங்க
//யுவன் சங்கர் ராஜாவின் மீசிக், பின்னணியிசை மட்டும் இல்லேன்னா…அம்புட்டுதேன்.//
யுவனின் விசிறியான எனக்கு இது போதும்...
hahahaha :))
thank you very much, IDI Thaangi!!! :))
ஏய் சீலைக்காரி உம்புள்ளைய்ங்களை நீ தாண்டி காப்பாத்தணும்..
ha..ha..haha
யப்பே...........இதுக்கும் ஒரு பதிவா.......!!!
நல்லா இருடே மக்கா.............
ஓவர்டோஸ் . . . . ஐயா . . .
விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம் . . .
(நானும்கூட பின்னூட்டத்தை . . .)
நன்றி
பிரபல பதிவர்கள் இதைகுறித்து உங்கள் பிளாகில் கண்டனங்களை தெரிவியுங்கள். உலகலவில் இப்பிரச்சனையின் தீவிரத்தை தெரியபடுத்துவோம்.
தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html
எங்கள காப்பாத்துன புண்ணியம் உங்கள சேரட்டும்,,,,,,
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு .....
நீங்க தெய்வம் ணா ....எப்படிங்கண்ணா இந்த மாதிரி படம்லாம் பார்த்து விமர்சனம் போடறிங்க ....
இதையும் நேரம் போக பார்க்கவேண்டியது தான்...
நீங்களும் படமெடுக்க தவிச்சிட்டுருக்கீங்க. உங்கள் படம் வந்தால் உங்கள் சுயநம்பிக்கையையும் மீறி படம் சுமாராக வந்தால் இந்த மாதிரி விமர்ஸனம் வரும். தாங்கமுடியுமா? உங்களுக்கு பிடிக்காத, உங்கள் ரசனையிலிருந்து மாறுபட்ட படங்களை விமரிசிப்பதை தவிற்கலாம் அல்லது அடக்கி வாசிக்கலாம் - ப்ளாகில். ஒன்றை நிநைத்துப் பாருங்கள் - இந்தப் படம் எடுத்தவருக்கு தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், பத்திரிகைகள் ஆதரவு இருக்கிறது. நீங்கள் போக வேண்டிய தூரம் அதிகம். நீங்கள் உங்கள் முயற்சியை அதிகப்படுத்தி வெற்றி காண வாழ்த்துக்கள். - ஜெ.
அடப்பாவிகளா.. ப்ளூ டோனில் விளம்பரம் பார்த்துவிட்டு ரசனையான டீம் சேர்ந்து ஏதோ பண்ணியிருக்கானுங்கன்னு தப்பா நினைச்சுட்டேனே.. நல்லவேளை.!
ஆதி.. நானும் அப்படி நினைச்சுத்தேன்.. ஏமாந்து புட்டேன்..
Post a Comment