Thottal Thodarum

Jan 4, 2011

Outrage 2010

original
தகேஷி கிட்டேனோ என்கிற பெயரை எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் வாய் சுளுக்கிக்கொள்ளாமல் சொல்ல பழகியதற்கு காரணம் கிகிஜிரோவும் நந்தலாலாவும் தான் புண்ணியம் கட்டி போனது. அவரின் சமீபத்திய படம் இது.

Outrage for twitch
தாதா படங்கள் எடுப்பதற்கு எல்லா இயக்குனர்களுக்கு ஒரு காதல் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது போலும். அது கிட்டோனோவையும் விடவில்லை. ஆனால் ஒவ்வொரு இயக்குனர்குள்ளேயும் உள்ள ஒரு விஷன் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. மார்லன் ப்ராண்டோவின் “காட்பாதர்” பல தாதா படங்களுக்கு தாதா என்பது உலகறிந்த உண்மை. சரி கதைக்கு வருவோம். ஒரு ஊரில் ஒரு பெரிய தாதா இருக்கிறார். அவரின் கீழ் அவ்வூரின் அத்தனை தாதாக்களும் அடக்கம். ஒரு கார்பரேட் கம்பெனியின் அல்லக்கைகளை போல பெரிய தாதாவுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியிருக்கும் சமயத்தில் கார்பரேட்டின் கீழ் இருக்கும் இரண்டு க்ரூப்புக்குள் ப்ரச்சனை வந்து ஒருத்தரை ஒருத்தரை போட்டுத்தாக்கி கொள்ள, விஷயம்  பெரியதாதாவின் காதுக்கு வருகிறது. ரொம்ப நாளாகவே குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் இரண்டு க்ரூப்பையும் தனித்தனியாய் அவரவர் எதிரிகளை வைத்து காய் நகர்த்தி, ஆட்டத்தை விட்டே விலக்குகிறார். அதற்கு உறுதுணயாய் அவர்களின் அல்லக்கைகளையே உபயோகப்படுத்தி, கடைசியில் ஆளையே கலைக்கிறார். இந்த சூழ்ச்சியில் கிட்டோனோவும் விதிவிலக்கல்ல. களைமாக்ஸில் இரண்டு கும்பலில் உள்ள் எதிர் குருப் ஆட்களாலேயே அழிக்கப்பட, கிட்டோனொவின் நிலைமை என்னவானது. தலைமை தாதாவின் நிலை என்ன என்பது க்ளைமாக்ஸ்

Outrage
படத்தின் முதல் காட்சியில் வரிசையாய் நிற்கும் கருப்பு கார்கள். அதன் முன் கோட்டு சூட் போட்டுக் கொண்டு நிற்கும் ஆட்கள், டிரைவர்கள், அமைதியாய் நடக்கும் ஆலோசனை, சாப்பாட்டுக்கூடம், அவர்கள் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்து உள்ள ஆட்கள் என்பதை உணர்த்த பதட்டத்துடன் சர்வ் செய்யும் பணியாளர்கள். வெளியே வெய்யிலில் யாருடன் பேசாமல் காத்திருப்பவர்கள், ஒரு கப் டீயிஅ எடுத்து  குடித்து முடித்தபின் ஓகே பேசியாகிவிட்டது என்ற ஒரு வார்த்தையில் மொத்த காட்சியை முடிக்கும் போது நமக்குள் ஒரு சின்ன சிலிர்ப்பு ஓடத்தான் செய்கிறது. இப்படி பல காட்சிகளில் மிகக் குறைந்த வசனமே பேசி விஷுவலாய் நிறைய விஷயங்களை நம்முள் கடத்துகிறார் தகேஷி.

ஒரு பரபரப்பான கேங்ஸ்டர் கதையை விஷுவலில் பரபரப்பில்லாமல் நடக்கும் சம்பங்களினாலும், வெளிப்படும் வன்முறையினாலும்,சிறந்த நடிப்பினாலும் நம்மை படத்தினுள் மூழ்கடிக்கிறார். தாதாக்களுக்குள் இருக்கும் ஈகோ, ஒருத்தரை ஒருத்தர் கவிழ்க்க நடக்கும் சதிகள், துரோகங்கள், நட்பு, செக்ஸ், வன்முறை, என்று போகும் கதையில் நாமும் கேங்ஸ்ட்ரின் ஒருவன் என்று உணரத்தோன்றுகிறது.

தகேஷியின் கேரக்டர் மூலம் பவரில் இருக்கும் போது காட்டும் பலமும், தைரியமும்,எல்லாம் இழந்து சாதாரணனாய் உணரும் போது கோழையாய் செயல்படுவது நிதர்சனம். ஒடுகிற ரயில் ஒரு காட்சி வருகிறது எதிர் கோஷ்டியிலிருந்து  ஒருவன் தப்பிக்கிறான். அவனை ரயில் மடக்கி உட்கார வைக்கிறான் ஒருவன். ஒரு டனலின் வழியே போகும் ஒர் நொடி இருட்டில் அவனை சுட்டுக் கொல்லும் காட்சி பார்பவர்களுக்கு தூக்கிவாரிப் போடும். இவர்களுக்குள் இருக்கும் ஒழுக்கமும், வதை செய்தே வாழ்பவர்களின் மன வக்கிரமும், மன்னிப்பைக் கூட தங்கள் சுண்டு விரலை தாங்களே வெட்டி கொண்டு காட்டும் குரூரமும், விஷயத்தை வாங்குவதற்கு கொஞ்சம் கவலைப்படாமல் விரலை வெட்டுவதும், சாப்பிடும் ஸ்டிக்கை ஒரே சொருகாய் காதினுள் சொருகுவதாகட்டும், ஸ்பைன் சில்லிங்.
Outrage-jp-Poster
அதே போல கொலை செய்யும் முறைகள். ஒவ்வொன்றும் ஒரு விதமான வதைதான். முக்கியமாய் தகேஷியின் முக்கிய ஆளை கொல்லும் விதம். அப்பப்பா..  கொடூரம். அவன் தான் சாகப் போகிறோம் என்றுணர்ந்து இறுகிப்போய் தன் காதலியுடன் வைத்துக் கொள்ளும் கடைசி செக்ஸ், மாட்டியவுடன் ஏதும் செய்யாமல் அமைதியாய் சாவை ஏற்க தயாராவது, என்று பல காட்சிகளில் உறைந்து போக வைக்கிறார் இயக்குனர். குறையாய் சொல்ல வேண்டுமென்றால் ஹைஸ்பீடில் நடப்பது போலவே எல்லாரும் ரியாக்ட் செய்வதும், கொஞ்சம் பேண்டஸியான தாதாக்களின் வாழ்க்கையும், . வழக்கமாய் பல படங்களில் பார்த்த காட்சிகளும் தான். ஆனால் கொஞ்சம் உன்னிப்பாக  கவனித்து பார்த்தால் நிறைய விஷயங்களை ஷண நேரத்தில் சொல்லும் படம். படத்தில் சிலாகித்து சொல்லக்கூடிய பல விஷயங்கள் இருந்தாலும் படம் பார்பவர்களுக்கு சுவாரஸ்யம் கெட்டு போக வாய்பிருப்பதால் டவுன்லோடிட்டாவது பார்த்து விடவும்.

Outrage – A Must See Film
புத்தக வெளியீடு நிகழ்வு 04/1/11 இன்று மறக்காம வந்திருங்க..

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

King Viswa said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சண்முககுமார் said...

நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...

க ரா said...

pathiralamna...

Philosophy Prabhakaran said...

பாத்துட வேண்டியது தான்... புத்தக வெளியீடு மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்...

Raj Chandra said...

Not sure whether you had seen...But this movie might have been inspired by "GoodFellas" which beats "The Godfather" in so many fronts.

"Good Fellas" is the one which brought the lives of the foot soldiers (true story) and the way Martin Scorcesse directed that is still making me watching again and again (of course Robert De Niro is another reason to watch that movie)

a said...

பாத்துடலாம்...

பெயரில்லா பெரிய பெருமாள் said...

படம் பார்த்தேன். அருகில் குழந்தை தூங்கியதால் சத்தம் இல்லாமல் தான் பார்த்தேன். ஆனால் காட்சிகள் மட்டுமே கதை சொல்லி விட்டன. திரைப்படம் என்பது காட்சி ஊடகம் தான். :)

இணையத்தில் பார்த்தேன். கிட்டனோ முதலில் பல விதமான கொலை செய்யும் முறையை எல்லாம் தயார் செய்து வைத்து கொண்டு, பிறகு கதையும் திரைக்கதையும் எழுதினாராம். :)

அதே போல், இத்திரைப்படம் அவர் முழுக்க முழுக்க வணிகத் திரைப்படமாகவே எடுக்க முடிவு செய்து எடுத்தாராம். :)

Anonymous said...

கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் தூண்டி விட்டீர்கள்

'பரிவை' சே.குமார் said...

பார்க்கத்தூண்டும் அருமையான விமர்சனம் அண்ணா.
புத்தக வெளியீடு சிறக்கவும் இன்னும் பல புத்தகங்கள் உங்களிடமிருந்து வரவும் வாழ்த்துக்கள்.

DR said...

அருமையான விமர்சனம். டவுண்லோட் போட்டாச்சு...

அப்பாவி தமிழன் said...

இந்த வீடியோவ பாருங்க மறுபடியும் டி.ஆர் கலக்கிட்டார்
http://www.youtube.com/watch?v=GZwplBsRWmU

Cable சங்கர் said...

@king viswa
நன்றி

@சண்முகக்குமார்
நன்றி.. கொஞ்சம் விளம்பரத்தைநிறுத்தலாமே..?:))

2இராமசாமி
நன்றி

2பிலாசபி பிரபாகரன்
நன்றி

@ராஜ் சந்திரா
ராபர்ட் டீ நீரோ.. அற்புதமான நடிகர்

@வழிப்போக்கன் யோகேஷ்
ம்

@விஜயவீரப்பன் சுவாமிநாதன்
கிட்டத்தட்ட வணிகத்திரைப்படமாய் இருக்கிறது.

Cable சங்கர் said...

@சே.குமார்.
நன்றி

@தினேஷ்
பாருங்க

@அப்பாவி தமிழன்.
நலலருக்கு.

Unknown said...

hello Cable Sankar, ungalukku movie comment solla theriyala, so vera vela ethavathu parunga. nalla irukum ok va....