Thottal Thodarum

Feb 28, 2011

கொத்து பரோட்டா-28/02/11

ரொம்ப நாள் கழித்து நடந்த பதிவர் சந்திப்பு இனிதே நிகழ்ந்தது. இயக்குனர் சீனு இராமசாமியும், சிங்கை பதிவர் ஜோசப்பு வந்திருந்து சிறப்பித்த சந்திப்பில் ஆயிரத்தில் ஒருவன் மணி, அஞ்சாநெஞ்சன், செந்தில்குமார் போன்று பல புதிய பதிவுலக நண்பர்களை பார்க்க முடிந்தது. தென்மேற்கு பருவக்காற்றின் வெற்றிக்கு பதிவர்களின் பங்கு மிக முக்கியம் என்று இயக்குனர் பாராட்டினார். நல்ல சிறு முதலீட்டு படங்களை ஆதரிக்க வேண்டுமென்றும், சிறு முதலீட்டு படங்களுக்கான ஆதாரவு அதனை சார்ந்து வாழும் இயக்குனருக்கான வாழ்வாதரம் என்றும், மேலும் தான் படம் எடுக்க வந்த காலத்திலிருந்து நடந்த சுவையான கதைகளை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். சிங்கைப் பதிவர் ஜோசப் பால்ராஜ் சிங்கைப் பதிவர்கள் குழுமத்தை பற்றியும், சிங்கைநாதனுக்கான மருத்துவ உதவிக்கான வெற்றிக்கு பொறுப்பு நான் மட்டுமல்ல.. நம் எல்லோருக்குமானது என்றும் தான் ஒரு ஒருங்கிணைப்பாளன் மட்டுமே என்று சொன்னார். சென்னை பதிவர்கள் குழுமத்திற்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார். எல்லாம் இனிதே முடிந்தது. நிகழ்ச்சிக்கான செலவுகளை  முன்னெடுத்து உதவிய ”ழ” பதிப்பகம் ஓ.ஆர்.பி.ராஜா, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றிகள் பல.
###########################

Feb 27, 2011

P.k.Pயின் ஊஞ்சலில் ”பதிந்ததில் பதிந்தவை”

பதிந்ததில் பதிந்தவை
நாம் எழுதியதை அச்சில் பார்க்க எவ்வளவு நாளாகும்?. ஒரு கதையையோ, கவிதையையோ, கட்டுரையோ எதையோ ஒன்றை எழுதி அதை நான்கு முறை சரி பார்த்து, பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவர்கள் பார்த்து பரிசீலித்து அது ரிஜக்ட்டோ  செலக்ட்டோ  ஆகி வருவதற்குள் மூன்று மாதமாவது ஆகிவிடும். நமக்கே நாம் எழுதினது மறந்து போயிருந்திருக்கும்.

Feb 26, 2011

சீடன்.

seedan340 தெய்வம் மனுஷ ரூபேனா..என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட படம். மலையாளத்தில் நந்தனம் என்கிற பெயரில் வெளிவந்து இன்றளவில் க்ளாசிக் வரிசையில்  ஹிட்டான படம். வழக்கமான காதல் கதையில் கொஞ்சம் பக்தி மூலாம் பூசப்பட்ட கதையை அங்கே படத்தின் பாடல்களின் ஹிட்டாலும் இயக்குனர் ரஞ்சித்தின் பிரபல்யத்தாலும் ஓடியது. அதை தமிழில் செய்யப் போகிறார்கள் என்று நினைக்கும் போதே.. எப்படி இருக்குமோ என்று யோசித்தேன். யோசித்தது சரிதான் என்று தெரிகிறது.

Feb 25, 2011

பஸ் தினம்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதங்களில் இந்த கோலாகலம் ஆரம்பித்துவிடும். முக்கியமாய் அரசு கல்லூரிகளில் இந்த கொண்டாட்டம் கட்டாயம். பெரும்பாலும் மார்ச்சில் ஆண்டுத் தேர்வு இருக்குமாதலால் இந்த கொண்டாட்டம் பிப்ரவரியில் ஆரம்பித்து கடைசியில் முடிந்துவிடும்.

பதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11

அன்பான பதிவர் பெருமக்களே.. நாமெல்லாம் ஆங்காங்கே புத்த்க கண்காட்சியிலும், புத்தக வெளியீட்டிலுமாய் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் சந்தித்துக் கொண்டாலும், எல்லோரும் ஒட்டு மொத்தமாய் சந்தித்து பல காலமாகிவிட்டது என்பதால் ஏன் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தக் கூடாது என்று பல புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். மேற்ச் சொன்ன காரணத்தினாலும், சிங்கையிலிருந்து பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் வந்திருப்பதாலும், இவ்வளவு காலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த நமது  சந்திப்பு வருகிற சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

Feb 24, 2011

சினிமா வியாபாரம்-10

பகுதி 10
ஆங்கிலப் படங்களை விலைக்கு வாங்கி.. அதுவும் கொஞ்சம் பழைய படங்களை வாங்கி, நிதமும் வேலூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து படங்களுக்கான வியாபாரம் பேசி, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் இருக்கும் தியேட்டர்களில் ஒவ்வொரு படத்துக்கு இடையே கிடைக்கும் கேப்பில் தன் படங்களைப் போட்டு மிகச் சிறிய விநியோகஸ்தராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்று சொல்வார்கள். அதன் பிறகு சூப்பர் குட் செளத்திரியின் படங்களை அவர் வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்ததும், நோ.. லுக்கிங் பேக் இருவருக்கும். தமிழ் நாட்டில் முக்கியமாய் என்.எஸ்.சி ஏரியாவின் கிங் என்றால் அது அவரைத்தான் குறிக்கும் அந்த அளவுக்கு இந்த ஏரியாக்களில் ஆளுமையுள்ள ஒரு விநியோகஸ்தராக இருக்கிறவர்.

Feb 23, 2011

7Khoon Maaf- சூசன்னாவின் ஏழு கணவர்கள்.

 01saatkhoonmaafpriyankastillsphotoswallpapers ஒவ்வொரு இயக்குனருக்கு ஒவ்வொரு விதமான படங்கள் அவர்கள் வசப்படும். ஆனால் இவருக்கு மட்டும் ஒவ்வொன்றும் ஒருவிதம். மக்கடேவிலிருந்து கமீனே வரை எல்லாமே தனிரகம். இசையமைப்பாளராய் தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று ஒரு சிறந்த இயக்குனராய் பரிமளிக்கும் விஷால் பரத்வாஜின் அடுத்த படம் எனும் போது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை தன் வித்யாசமான கதை சொல்லலினால் மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாப்பாட்டுக்கடை-விஸ்வநாதன் மெஸ்

கவிஞர் நா.முத்துகுமாரும் நானும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சாப்பாட்டின் சுவை பற்றி பேச்சு வந்தது. அசைவ உணவுகளை பற்றி பேச்சு வந்த போது, தலைவரே விஸ்வநாதன் மெஸ்ல சாப்ட்டிருக்கீங்களா? என்றார்.. இல்லை தலைவரே.. நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் இடம் தான் சரியாய் தெரிய மாட்டேன்குது என்றேன். வாங்க ஒரு நாள் நாம போவோம்.. என்று சொல்லிவிட்டு வழி சொன்னார்.

Feb 21, 2011

கொத்து பரோட்டா-21/02/11

சில பேருக்கு தமிழில் கொஞ்சம் காதல், காமம், வன்முறையோடு படமெடுத்தால் உடனே காச்மூச்சென கத்துவார்கள். ஏதோ எல்லா தமிழ் திரைப்படங்களும் சமுதாயத்தை மாற்றும் நோக்கோடுதான் படமெடுக்கப்படுவதாக நினைத்துக் கொண்டு.  அடுத்த காமெடி, ஆங்கில படத்தில் டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங் டயலாக்கெல்லாம் வந்தால் புரியாமலேயே அஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். அதுவே தமிழ் படத்தில் வந்தால் சீலீங்கிற்கும், தரைக்குமாய் குதிப்பார்கள். அதற்கடுத்த ஒன்று, ஆங்காங்கே வரும் வசனங்கள், நெளிய வைக்கிறது. குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது என்று எழுதுவது. என்னவோ ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றவுடன் மொத்த குடும்பத்தையும் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போய் படம் பார்க்கிறார் போல். ஏ சர்டிபிகேட் படத்திலென்ன யூ சர்டிபிக்கேட் மேட்டரையா காட்டுவார்கள்? இம்மாதிரியான உண்மைத்தமிழர்கள் இருக்கும் பட்சத்தில் ஆயிரம் ஏன் லட்சம் பேர் வந்தாலும் திருத்த முடியாதுஙக. (அண்ணே மறக்காம வந்து மைனஸ் ஓட்டு போடுங்கண்ணே.)
######################################

Feb 19, 2011

நடுநிசி நாய்கள்.

nadu-nisi-naigal-16 விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கதில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். உலகக் கோப்பைக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகியிருக்கிறது. படம் உலகக் கோப்பையை எதிர்கொள்ளுமா? மக்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்துமா? என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கும் படம்.

Feb 18, 2011

வாதை, காமம், வன்புணர்ச்சி, குரூரம், வன்மம், வன்முறை = I Saw The Devil (2010)- korea

isaw வெண் பனி விழும் இரவு. ஹைவேயுமில்லாமல்.. கிராமத்து ரோடாகவும் இல்லாத ஒரு அத்துவான, ரோட்டில் ஒரு வேன் வழுக்கிச் சென்று கொண்டிருக்க,  காரில் அழகிய பெண்ணொருத்தி போனில் பேசிக் கொண்டிருக்கிறாள். அவளின் வுட்பீயுடன். ரொமாண்டிக்காக பேசிக் கொண்டிருக்கிறாள்.முகத்தில் காதலும், சந்தோஷமும், வெட்கமும் கூத்தாடுகிறது. அந்த பக்கம் காதலன் பாத்ரூமில் போய் அவளுக்காக பாட்டெல்லாம் பாடுகிறான். அவளுடய வண்டி ரிப்பேரானதால், டோ வண்டிக்காக காத்திருக்கிற நேரத்தில், வேன் டிரைவர் அவளுக்கு உதவ முற்படுகிறான். அவள் வேண்டாம் என்று மறுத்ததும் அங்கிருந்து விலகுகிறான். திடீரென அந்தப் பெண்ணை சுத்தியலால் தாக்கி அவளை இழுத்து தன் வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்புகிறான். ஒரு பாழடைந்த வீட்டின் ஹாலில் அந்தப் பெண் நிர்வாணமாய் உடலின் மேல் ஒரு பாலீத்தீன் கவர் போட்டு மூடி வைக்கப்பட்டிருக்க, குற்றுயிரும், கொலையுருமாய் இருக்கும் அவள் நினைவு வந்து முழிக்கிறாள். அவளின் கையை ஒரு கயிற்றில் கட்டி ஒரு மரத்தூணில் கட்டுகிறான். அவள் உடல் அசைக்க முடியாமல் திக்கித் திணறி, தன்னை கொல்ல வேண்டாம், எனக்கு கருணை காட்டுங்கள் என்று முணுமுணுக்கிறாள். ஏன் என்று அவன் கேட்கிறான் அவளது வயிற்றில் கரு உண்டாயிருப்பதாய் சொல்ல, அவள் சொன்ன மறு விநாடி தன் கையிலிருக்கும் மாமிசக் வெட்டுக் கத்தியால் ஒரே போடாய் அவள் கழுத்தில் போட, அவனது பார்வை தலை வெட்டுண்டு ஓடும் தூரத்துடன் ஓடுகிறது.

Feb 17, 2011

பொறுப்பு

முன் பக்க பைக் டயர் அப்படியே பூமியில் அழுந்தியிருந்தது. பஞ்சர். நேத்து ராத்திரி வண்டியை வைக்கும் போது கூட நல்லாத்தானே இருந்திச்சு என்று யோசிக்கும் போது, நல்ல வேளை நடு வழியில நிக்காம காப்பாத்திச்சே என்றும் தோன்றியது. பொங்கல் தினமாதலால் சுத்துபட்டுப் மெக்கானிக்குகள் விடுமுறையிலிருக்க, மெயின் ரோடுக்குச் சென்றால் யாராவது இருப்பார்கள் என்று மெல்ல நடையை கட்டினேன். எதிர்பார்த்தபடியே மெயின் ரோட்டிலிருக்கும் ”பா”யின் பஞ்சர் கடை திறந்திருந்தது. என் கூடவே ஒரு சின்னப் பையனை அனுப்பி வைத்தார் பாய். மொத்தமே மூன்று அடியில் ஒரு அழுக்கு டி சர்ட்டையும், டைட்டான டவுசரையும் போட்டுக் கொண்டு, கையில் டூல்ஸுடன் சர சரவென வேகமாய் எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தான். அவ்வப்போது நான் பின்னால் வருகிறேனா? என்று திரும்பி, திரும்பி பார்த்து கொண்டான். மேலும் படிக்க..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Feb 16, 2011

சினிமா வியாபாரம்-2-9

ஆம் ஒரு பெரிய கூட்டமேதானிருந்தது. என்பதுகளில் நடுவிலிருந்து, தொண்ணூறுகள் வரை, கே.ஆர் என்றழைக்கப்படும், கோதண்டராமன், டி.ஆர்.பாலுவின் சில்வர் ஸ்கீரீன்ஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கோவை போன்ற ஏரியாக்களில் சக்தி பிலிம்ஸ் என்று ஒவ்வொரு ஏரியாக்களுக்கும் ஒரு பெரிய விநியோகஸ்தர்கள் இருந்தார்கள்

Feb 14, 2011

கொத்து பரோட்டா-14/02/11

காதல் ஒரு அருமையான உணர்வு, அதை அனுபவித்தவன் மட்டுமே உணரக்கூடிய இனிய வலி. காதல் எதில் முடிந்தாலும் அது தரும்  நினைவுகள் மட்டுமே சாஸ்வதம். நிறைய பேருடைய வாழ்க்கையை பல நேரங்களில் வயது வித்யாசமில்லாமல் காதல் தாக்கும், அடித்து வீழ்த்தும், என்ன தான் காதல் முடியுமிடம் காமம் என்று நிதர்சன தத்துவம் பேசினாலும், காதலுடனான காமத்தில் இருக்கும் சுவாரஸ்யமே வேறு. அதனால் தான் காதலுக்கு வயது ஒரு தடையாய் இருப்பதில்லை. பல நேரங்களில் செர்ரியின் தித்திப்பைப் போல் காதல் இருந்தாலும், கடைசியில் நெருடும் கொட்டையைப் துப்புவது போல் தான் தோல்விகளும். இன்று காதலர் தினமாம். காதலிப்பவர்கள் பிங்கும், தோற்றவர்கள் கருப்பும், ஒன் சைட் காதலர்கள் சிகப்பு நிறத்தில் உடையணிய வேண்டுமாம். நான் மீண்டும்  காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்
######################################

Feb 13, 2011

தற்கொலைகளும்.. பொதுபுத்தியும்.

சென்ற வாரம் இரண்டு தற்கொலைகள். ஒரு பெண் சக மாணவி வைத்திருந்த பணம் காணாமல் போனதால், சந்தேக லிஸ்டில் இருந்த நான்கு பேரில்  தன்னை மட்டும்  நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்பதற்காக தூக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர் பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்தற்காக ஆசிரியர் திட்டியதை தாங்க முடியாமல் தூக்கு போட்டுக் கொண்டார். இதற்காக முதல் சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களை கைது செய்து அப்போதைக்கு பிரச்சனையை முடித்திருக்கிறது போலீஸும், கல்லூரி நிர்வாகமும். கோர்ட்டில் அவர்களை அரெஸ்ட் செய்ததே தவறு என்று கூறி ஜாமீன் கொடுத்துள்ளது.

Feb 12, 2011

பயணம்

payanam4 மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி ஒரு வித்யாசமான தமிழ் சினிமா அனுபவத்தை கொடுக்க முனைந்திருக்கிறார்கள். ஆடம்பரம் ஏதுமில்லாமல் திடீரென ரிலீசான போதும் முக்கால் வாசி தேவி பாரடைஸ்  புல்லானதில் முதலில்  சொன்ன ரெண்டு பேரின் கூட்டணிக்கு கிடைத்த மரியாதை என்று தெரிகிறது.

Feb 10, 2011

சினிமா வியாபாரம்-2-8

பகுதி-8
ஒரு திரையரங்கு வெற்றிகரமாய் நடத்த தொடர்ந்து வெற்றிப்படங்களை, பெரிய நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும் போது அந்த தியேட்டருக்கென்று ஒரு தனி மரியாதை மக்களிடையே ஏற்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களை போட்டால்தான் தியேட்டருக்கும் லாபம்.

சாப்பாட்டுக்கடை- காசி விநாயகா மெஸ்

kasi1
யாராவது எங்காவது திருவல்லிக்கேணி மெஸ்களை பற்றிப் பேசினால் உடனே அந்த மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா? என்று லிஸ்ட் சொல்வார்கள். அதிலும் திருவல்லிக்கேணி பாச்சுலர்கள் நல்ல சாப்பாட்டிற்காக அலைந்து திரிந்து கடை கண்டுபிடித்து வைத்திருப்பவர்கள் அதிகம். ஆனால் அப்படி லிஸ்ட் போட்டு சொல்லப்படும் கடைகளில் ஒரு கடையின் பெயர் மட்டும் இல்லாமல் இருக்காது.. அது திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ் தான்.

Feb 9, 2011

Paranormal Activity 2

Paranormal_Activity_2_1284811474_2010 இரண்டு வருடங்களுக்கு முன் ஹாலிவுட்டையே கலக்கிய படம். வெறும் பதினைந்தாயிரம் டாலரில் படமாக்கப்பட்டு, பின்பு இரண்டு ஆண்டுகள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து, ஸ்பீல்பெர்க்கின் கண்ணில் பட்டு, மோட்சமடைந்து பாரமவுண்டினால் ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 100 மில்லியனுக்கு மேல் வசூல் செய்த படம். சுமாராய் பேசப்படும் படத்தையே எட்டு பார்ட் எடுக்கிறவர்கள் இவ்வளவு பெரிய ஹிட்டை எடுக்காமல் இருப்பார்களா? அதான் இரண்டாவது பார்ட்

Feb 8, 2011

ஜன்னல்

open_window_by_Linlithரெண்டு மூன்று நாட்களாகவே அந்த பக்கத்து மாடி வீட்டு ஜன்னலை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் குறுகுறுவென இருந்தது நவநீதகிருஷ்ணனுக்கு. அவன் ஒரு உதவி இயக்குனன். ஷூட்டிங்கில்லாக் காலங்களில் அவன் வசிக்கும் மேன்ஷனின் மொட்டை மாடியில் பேடு, பேப்பர், பென்சில், ஸ்கெட்ச் பென், அரைபாக்கெட் கோல்ட் ப்ளேக் பில்டருடன் தமிழ் சினிமாவை புரட்டிப் போட ஆயத்தமாவான். சமயங்களில் சிந்தனை தடைபடும் போது, ஒரு சிகரட்டை பற்ற வைத்து இலக்கில்லாத பார்வை பார்த்தபடி வாய் விட்டு தன் கதையை பேசிப் பார்த்துக் கொண்டிருப்பதை, பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு துணி உலர்த்த வரும் பெண்கள் பார்த்து மிரண்டு போய் ஓடுவார்கள். ஆனால் இதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்படி ஒரு சிந்தனை தடையேற்பட்ட நேரத்தில் தான் அந்த ஜன்னலை பார்த்தான்.

Feb 7, 2011

கொத்து பரோட்டா-07/02/11

குறுகிய காலத்தில் 21 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
ஆமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு காலில் ஒரு கருவியை கட்டி கண்காணிப்பது பற்றி வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார். எனக்கென்னவோ அவர்கள் செய்வது சரி என்றே தோன்றுகிறது. அவர்கள் எல்லோரும் சட்டவிரோதமாய் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் சேர்ந்து சரியான தஸ்தாவேஜுகள் இல்லாமல் இருந்தவர்கள். அவர்களை அங்கு வேறு காலேஜில் சேர நேரம் கொடுத்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் கண்காணிப்பு கருவியை கட்டி உலாவ விட்டிருப்பதே சரியான அணுகுமுறை என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு வேளை இம்மாதிரி சட்டவிரோதமாய் நுழைந்த ஆட்கள் அமெரிக்காவிற்கு ஏதாவது தீவிரவாத செயல்களை செய்ய வந்திருப்பதாய் நினைத்து ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்யாமல் இருந்தார்களே அதுவே பெரிதல்லவா.. ஆனால் ஒரு விஷயம் இதற்காக அறிக்கை விட்ட நமது வெளியுறவு அமைச்சர்.. அப்படியே எல்லையே தெரியாமல் கடலில் மீன் பிடித்து வாழும் அப்பாவி மீனவனை சுட்டுக் கொல்லும் சிங்கள அரசை ஏன் கண்டிக்க வில்லை என்று தமிழக மக்கள் கேள்வி கேட்பது சரிதானே?
*****************************************

Feb 6, 2011

தூங்கா நகரம்

Thoonga_Nagaram_5841 மதுரை பேஸ்டு படமென்றாலே அலறி அடித்து ஓடும் அளவுக்கு தமிழ் சினிமா ஆகிவிட்ட நிலையில் இன்னுமொரு மதுரை களப்படமா? என்ற பயத்தோடுதான் படம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஷேவ் செய்யப்படாத தாடியுடன், பட்டாப்பட்டி தெரிய லுங்கிக் கட்டிக் கொண்டு, எப்போதும் தண்ணியடித்துக் கொண்டும், எவளையாவது நொட்டிக் கொண்டும், அருவாளை எடுத்து அலைந்து கொண்டும் இருப்பதே மதுரை ஆட்களின் வேலையாக காட்டிக் கொண்டிருக்கும் “லைவ் ஃபீல்” படங்களாய் பார்த்து நொந்து போயிருக்கும் நேரத்தில் தூங்கா நகரம்.

Feb 5, 2011

யுத்தம் செய்

Yudham Sei Poster ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும்.  சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்?

Feb 4, 2011

நிதர்சன கதைகள்-25-கருணை

traffic மாதவனுக்கு கசகசப்பாய் இருந்தது. கர்சீப்பை எடுத்து கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டார். நிழலான இடமாய்ப் பார்த்து நின்றிருந்தாலும், நடு ரோட்டிற்கு ஓடி வண்டியை மடக்குவது என்பது ஒரு கொடுமையான வேலை. இப்படி ஓடிச் சென்று வழிமறித்து வண்டிகளைப் பிடிப்பது ஒன்றும் சுலபம் கிடையாது. சமயங்களில் வண்டிக்காரர்கள் கட் அடித்து இடித்துவிட்டுப் போய்விடுவதும் உண்டு. என்ன தான் நம்பர் நோட் செய்தாலும் ஒன்றும் வேலைக்காகாது. மாதவன் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள்.

Feb 3, 2011

ரெண்டு இட்லி.. ஒரு வடை..!

"ரெண்டு இட்லி, ஒரு வடை.!" -இந்த சொற்றொடர் பொது மக்களிடையே சினிமா சார்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இது யாரைக் குறிக்கும் என்றால், ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொது மக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், ஒரு பொருத்தமில்லாத விஷயமாக இருக்கிறது. காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்விடுபவர்கள் என்பதுதான் அது..

இது நான் அதீதம் இணைய இதழில் எழுதியிருக்கும் கட்டுரை.. இதை மேலும் படிக்க இங்கே க்ளிக்கவும்  

Feb 2, 2011

சாப்பாட்டுக்கடை- Renneth Kitchen

”ழ” பதிப்பக கே.ஆர்.பியும், விந்தைமனிதன் ராஜராமும் டிஸ்கவரி புக் பேலஸுக்கு வந்து அழைத்தார்கள். கடை மூடும் வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு, சாப்பிடக் கிளம்பலாமென்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு என்றவுடன் என்னை கேட்க, இந்த நேரத்தில் இங்கே பக்கத்தில் பாண்டியன் ஹோட்டல் தான் இருக்கும் என்று சொல்ல.. சரி என்று முடிவு செய்து அங்கே போன போது பக்கத்தில் புதிதாய் Renneth Kitchen  என்று ஒரு புதிய கடை ஆரம்பித்திருந்தார்கள்.

Dil To Baccha ha ji

dil-toh-baccha-hai-ji-wallpaper-26-10x7 மதுர் பண்டார்கர்.. பேஜ்3, கார்பரேட், டிராபிக்சிக்னல் போன்ற சீரியஸான டார்க் படங்களுக்கு சொந்தக்காரர். முதல் முறையாய் காமெடி ஜெனரை எடுத்தாண்டிருக்கிற படம். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதாய்தான் சொல்ல வேண்டும்.