Thottal Thodarum

Feb 7, 2011

கொத்து பரோட்டா-07/02/11

குறுகிய காலத்தில் 21 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
ஆமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு காலில் ஒரு கருவியை கட்டி கண்காணிப்பது பற்றி வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார். எனக்கென்னவோ அவர்கள் செய்வது சரி என்றே தோன்றுகிறது. அவர்கள் எல்லோரும் சட்டவிரோதமாய் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் சேர்ந்து சரியான தஸ்தாவேஜுகள் இல்லாமல் இருந்தவர்கள். அவர்களை அங்கு வேறு காலேஜில் சேர நேரம் கொடுத்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் கண்காணிப்பு கருவியை கட்டி உலாவ விட்டிருப்பதே சரியான அணுகுமுறை என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு வேளை இம்மாதிரி சட்டவிரோதமாய் நுழைந்த ஆட்கள் அமெரிக்காவிற்கு ஏதாவது தீவிரவாத செயல்களை செய்ய வந்திருப்பதாய் நினைத்து ஜெயிலில் போட்டு சித்திரவதை செய்யாமல் இருந்தார்களே அதுவே பெரிதல்லவா.. ஆனால் ஒரு விஷயம் இதற்காக அறிக்கை விட்ட நமது வெளியுறவு அமைச்சர்.. அப்படியே எல்லையே தெரியாமல் கடலில் மீன் பிடித்து வாழும் அப்பாவி மீனவனை சுட்டுக் கொல்லும் சிங்கள அரசை ஏன் கண்டிக்க வில்லை என்று தமிழக மக்கள் கேள்வி கேட்பது சரிதானே?
*****************************************


தமிழக பட்ஜெட்டில் மக்களின் வாழ்க்கை நிலை உயர ஏதுமில்லை என்று ஜெ சொல்லியிருப்பதை பார்க்கும் போது இதற்கு முன்னால் இவரின் பத்தாண்டு கால ஆட்சியின் போது ஒவ்வொரு பட்ஜெட்டும் மக்களின் வாழ்வுயர்வை முன்னிலை வைத்து போட்டிருந்ததாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா? #டவுட்டு
********************************************
டோபி காட் படம் பார்த்தேன். என்னால் பெரிதாய் இன்வால்வ் ஆக முடியவில்லை. என்னதான் மிக அருமையான கேரக்டர்கள், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் படத்தில் இருந்தாலும், ஒட்டவேயில்லை. எனக்கென்னவோ இது அமீர்கான் பிராண்டிங் மேல் இருக்கும் ஒரு குட்வில்லில் ஓப்பனிங் இருந்ததாகத்தான் தெரிந்தது. அமீர்கானுக்கும் நாயகிக்கும் நடுவே நடக்கும் இம்பல்சிவான உடலுறவு காட்சி அபாரம்.  அடுத்த நாள் காலையில் குற்ற உணர்ச்சியுடன் அமீர் தயங்கும் தயக்கமும், காதலியின் ரியாக்‌ஷனும் இந்திய சினிமாவுக்கு புதுசு. நடு நடுவே இலக்கியதரமாய் சில காட்சிகள் வந்தாலும், மதியக் காட்சியில் தூக்கம் சொக்கியடித்ததை தவிர்க்க முடியவில்லை.
*******************************************
விரைவில் யாருடன் கூட்டு என்று சொல்வதாய் டாக்டர் சொல்லியிருக்கிறார். நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். தமிழ் நாட்டில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்றும், ஆனால் வேலை வாய்ப்பு பதிவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவரக்ள் வேலைக்காக காத்திருப்பதாகவும், தமிழ் சினிமா மோகத்தில் வீழ்ந்து உழன்று கிடக்கும் தமிழ் இளைஞர்களை வெளிக் கொணர வேண்டுமென்றும் இன்று அறிக்கை விட்டிருக்கிறார். ஏற்கனவே மதுவை ஒழிச்சாச்சு.. அடுத்து இதை முடிச்சிட்டு தான் அடுத்த வேலை.. வாழ்க.. ராஜ்யசபா எம்.பி..சீட்.
****************************************** 
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றுக் கொல்வதை எதிர்த்து எல்லா அரசியல் தலைவர்களிடமும், மனு ஒன்றை கொடுத்து அதற்கான ஆதரவை கோரி முனைப்பு எடுத்து செய்யும் பத்ரிக்கும் அவருடன் இருக்கும் மனித நேயமுள்ள நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.
**************************************** 
இந்த வார ப்ளாஷ்பேக்
பாப் மார்லே
வை பற்றி சொன்னால் அது சூரியனுக்கே டார்ச் அடித்தாற்ப்போல.. என்பதால் அவரின் இந்த பாடலை மட்டும் உங்களுக்கு தருகிறேன். பாடல்களின் மூலம் சோஷியல் கான்சியஸ் உள்ள புரட்சிகரமான பாடல்களை தந்தவர். அருமையான கிடாரிஸ்ட். ரேகே இசையின் முன்னோடிகளின் ஒருவர் என்றும் சொல்லலாம். இந்த பாடலை நீங்கள் தமிழிலும் கேட்டிருக்கலாம் நன்றி தேவா.
***********************************************
இந்த வார புத்தகம்
நம் பதிவர் சுரேகா எழுதிய நீங்க தான் சாவி தான் சமீபத்தில் படித்த புத்தகம். இது சுய முன்னேற்ற புத்தகம். சாதாரணமாக அறிவுரை சொல்வது யாருக்கும் பிடிக்காது. ஆனால் அறிவுரை சொல்வது போலில்லாமல் நம் பக்கதில் அமர்ந்து பேசுவதைப் போல எழுத்து நடை அமைந்திருப்பது சிறப்பு. அப்படி அறிவுரை சொல்லும் போது தமிழ் சினிமாவில் வந்த காட்சிகளை விவரித்து அதை  வைத்து கட்டுரையை எழுதியிருப்பது இன்னும் சுவாரஸ்யம். நிச்சயம் இந்த புத்தகம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசாக அளிக்க சரியான புத்தகம்.
*********************************************
இந்த வார தத்துவம்
லவ்வரோட தங்கச்சி நமக்கு மிஸ்டு கால் கொடுத்தா நமக்கு என்ன தோணும்?
கண்ணா.. ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா?
***********************************************
இந்த வார எச்சரிக்கை
இரவில் ஹைவேக்களில் பயணம் செய்யும் போது திடீரென யாராவது உங்கள் கார் கண்ணாடியின் மீது மூட்டையை வீசிச் சென்றால் உடனடியாய் வைப்பரை போட்டு க்ளீன் செய்யாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் அது கண்ணாடி முழுவதும் பரவி உங்களது பார்வையை மறைக்கும். அதை வைத்து கொள்ளையர்கள் உங்களை பிந்தொடர்ந்து கொள்ளையடிக்க ஏதுவாக இருக்கும். இது ஒரு புதிய டெக்னிக்காக கொள்ளையர்கள் பயன்படுத்துகிறார்களாம். சாக்குரத..
*****************************************************
இந்த வார குறும்படம்
2008ன் கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்ற குறும்படம். ரிசெஷனில் அமெரிக்காவின் நிலையை காட்டிய நிதர்சன படம் என்றும் கூறலாம். அல்லது கிண்டலடிக்கும் படம் என்று சொல்லலாம்.
***************************************************
இந்த வாரக் கவிதை
நேற்று தொலைத்த என்னை
இன்று தேடிக் கொண்டிருக்கிறேன்
நாளை கிடைப்பேன் என்ற
நம்பிக்கையில்…
எழுதியவர் ஸ்ரீதர்
*********************************************
குப்புசாமின்னு ஒருத்தன் தனக்கு சாவே வரக்கூடாதுன்னு தவமிருந்தானாம். சாமியும் அவன் தொந்தரவு தாங்காம.. வந்து என்னடா வேணுமின்னு கேட்டாராம். இவனும் சொன்னான். அவரும் ஆகட்டும்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாராம். வர வழியில ஒருத்தன் உன் பேரு என்னான்னு கேட்டானாம். அவனும் சொல்லி, சொல்லிப் பார்த்தானாம். அவன் பேரை குப்புமின்னுதான் சொல்ல முடிஞ்சிதான். அவனுக்கு “சா”வே வரலியாம். இதனால் அறியப்படும் நீதியாதெனில் எதை கேட்டாலும் “ப்ளான்” பண்ணித் தெளிவாக் கேட்கணும் ரைட்டா?
********************************************
இந்த வார விளம்பரம்
கோக்கின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்ட போட்டியில் வந்த விளம்பரப் படங்கள். அதில் ஒன்னரை நிமிடத்தில் குட்டியாய் ஒரு கதை சொல்லியிருப்பது க்யூட்
******************************************
அடல்ட் கார்னர்
ஒரு 12 வயசு பையன் மேல ரேப் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. அவனோட வக்கீல் அவன் வயசை சொல்லி.. அவனுடய லுல்லாவை பிடிச்சிட்டு “பாருங்க யுவர் ஆனர். இவ்வளவு சின்னப்பையன் எப்படி ரேப் பண்ணினான்னு சொல்வீங்க? “ என்று ஆர்கியூ செய்ய, பையன் அவரை அருகில் அழைத்தான். “சார்.. ரொம்ப பிடிச்சி ஆட்டாதீங்க.. அப்புறம் நீங்க கேஸ்ல தோத்துருவீங்க” என்றான்.
*****************************************
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

27 comments:

vinthaimanithan said...

தல, இந்த பரோட்டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.மொத கேள்வியும் அடுத்த டவுட்டும் கலக்கல். பாப் மார்லே கலைஞர்கள் (நோ..நோ. நான் 'அவரை' சொல்லல!) சமூகப்போராளிகளாகவும், அறத்தின் குரலாகவும் இருக்கவேண்டும் என்பதை வாழ்ந்து நிறுவியவன். நம் சமகால உதாரணமாக கத்தாரைச் சொல்லலாம்.

அப்பாலிக்கா குப்புசாமி சோக்கு அரதப்பழசு!

ஸ்ரீதரோட கவிதை நல்லாருக்கு!

Nat Sriram said...

Adults corner super..

Nat Sriram said...

Adults corner super..

Philosophy Prabhakaran said...

குப்புமி மேட்டர் பிடிச்சிருந்தது...

ஜெட்லி... said...

இப்படி எல்லாம் கூட கொள்ளை அடிப்பாங்களா....
எச்சரிக்கைக்கு நன்றிணே...

Sukumar said...

கொத்து ... கெத்து பாஸ்...

சுரேகா.. said...

அவர் அமெரிக்கா போகும் ‘இந்தியர்’களுக்குத்தான் வெளியுறவு அமைச்சர்..! கேனத்தமிழர்களுக்கு அல்ல போலிருக்கு!

டாக்டர் ராமதாஸ் ஒரு காமெடி பீஸ்..! அவரை விடுங்க!

அப்புறம்..

நீங்கதான் சாவி - புத்தகப்பார்வைக்கு மிக்க நன்றி தலைவரே!

எம்.எம்.அப்துல்லா said...

// இதற்காக அறிக்கை விட்ட நமது வெளியுறவு அமைச்சர்.. அப்படியே எல்லையே தெரியாமல் கடலில் மீன் பிடித்து வாழும் அப்பாவி மீனவனை சுட்டுக் கொல்லும் சிங்கள அரசை ஏன் கண்டிக்க வில்லை என்று தமிழக மக்கள் கேள்வி கேட்பது சரிதானே

//

அவரு இந்தியரு. இந்தியர்களுக்கு கேள்வி கேக்குறாரு. நாம என்ன இந்தியர்களா??

Cable சங்கர் said...

//அவரு இந்தியரு. இந்தியர்களுக்கு கேள்வி கேக்குறாரு. நாம என்ன இந்தியர்களா??
//

அது சரி..

Guru said...

///தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றுக் கொல்வதை எதிர்த்து///
அவங்க சுற்றி சுற்றி சுட்டு கொல்றத தான் குறியீடா சொல்றீங்களா கேபிள்ஜி?

அமெரிக்காவுக்கு போனா தான் கரிசனம் எல்லாம்..உள்ளூர்ல இருந்தா பெப்பே தான் போல இருக்கு. அமெரிக்காவுக்கு கண்டனம். சிறிலங்காவுக்கு வந்தனம் வைக்குறாங்க நிருபமா....

Ganesan said...

எம்.எம்.அப்துல்லா said..

அவரு இந்தியரு. இந்தியர்களுக்கு கேள்வி கேக்குறாரு. நாம என்ன இந்தியர்களா?

இதுதாண்டா கேள்வி. நாம என்ன இந்தியர்களா?

Ganesan said...

சுரேகாவின் புத்தகம் அருமை, நல்ல உதாரண சினிமா குறிப்புகளுடன்.

படிக்க வேண்டிய புத்தகம்.

Ganesan said...

கார் கண்ணாடியில் முட்டை மேட்டர் பகீர்.

ஜாக்கிரதையா இருக்கணும்.

Anonymous said...

>>> விரைவில் ஒரு லட்சத்து எழுபது ஆறு ஆயிரம் கோடி ஹிட்ஸ் பெற வாழ்த்துகிறேன்!!
( சி.பி.ஐ. வந்தாலும் வரலாம்..)

சுரேகா.. said...

//அவர் அமெரிக்கா போகும் ‘இந்தியர்’களுக்குத்தான் வெளியுறவு அமைச்சர்..! கேனத்தமிழர்களுக்கு அல்ல போலிருக்கு!//

அப்துல்லாண்ணே! நானும் இதையேதான் சொல்லியிருக்கேன்.

-L-L-D-a-s-u said...

அவரு இந்தியரு. இந்தியர்களுக்கு கேள்வி கேக்குறாரு. நாம என்ன இந்தியர்களா?
Repeatu ..

பா.ராஜாராம் said...

அடல்ட் கார்னர் மற்றும் அப்துல்லா கார்னர்- நச்! :-))

அருண் said...

எல்லாமே சூப்பர்,குப்புசாமி மேட்டர் அருமை.குறும்படமும் நல்லாயிருக்கு.
-அருண்-

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அன்பின் சங்கர் சார்,

உங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நீங்கள் கூறிய அமெரிக்கா பற்றிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் கூறியது போன்றே அமெரிக்கா அதன் பாதுகாப்புக்காக செய்வதாக ஒத்துக்கொண்டாலும், இப்படி முறையற்ற கல்லூரிகளை அனுமதித்தது யார் குற்றம் ? லட்சம் லட்சமாக பணம் கட்டி ஏமாந்து நிற்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கா ஒரு பதிலும் கூறவில்லையே. இதையெல்லாம் விடுங்க சார். இதே போன்று ஒரு சூழ்நிலை அமேரிக்க மாணவர்களுக்கு நம் நாட்டிலோ அல்லது வேறொரு நாட்டிலோ ஏற்பட்டால் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா ?

Ba La said...

பின்னுட்டம் சூட இருக்கு, பரோட்டா மாதிரியே.

Dhobi Ghat என்னோட விமா்சனம் இங்கே
http://pathivalai.blogspot.com/

Unknown said...

http://tamildigitalcinema.com/?p=8509
படம் இயக்கும் கேபிள்சங்கர்-
மவச புடிக்கற புள்ளைங்களுக்கெல்லாம் கேபிள் சங்கர்ங்கிற பேரை தெரியாம இருந்திருக்காது. கேபிள் சங்கர் என்றும் பெயரில் பிளாக்கில் எழுதி வரும் இவர் ‘சினிமா வியாபாரம்’ என்னும் புத்தகத்தின் மூலம் ‘சினிமாவ வெச்சு இவ்வளவு பிஸினஸ் இருக்கா! என்று வாய் பிழக்க வைத்தவர். சில படங்களில் இணை. துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கும் கேபிள் சங்கர், இயக்குநர் ஆகும் முயற்சியில் இறங்க, முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் கதையும் சொல்லியிருக்கிறார். அந்த தயாரிப்பாளருக்கு கதை பிடித்திருப்பதால் விரைவில் இவர் சினிமா இயக்குவார் என்று தெரிகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொத்து ,,Superb

Jana said...

Adults corner super :)

Sen22 said...

ஸ்ரீதரோட கவிதை நல்லாருக்கு!

கொத்து ,,Superb..

இனியா said...

Good one Cable. Though it is inhuman to radio-tag those students, I also feel that they joined the university knowing that they were fraudulent. Students should stay away from these universities!!!

Suthershan said...

குப்புசாமி மேட்டர் செம குத்து..

கொங்கு நாடோடி said...

ஆமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு காலில் ஒரு கருவியை கட்டி---
கேபிள் சார்,
இந்த அனுமதி இல்லாத ஆன்லைன் பல்கலையில் சேருவது ஆதாயம் தேடத்தான்...

90% மாணவர்கள் ஆந்திராவை சேர்த்தவர்கள், எப்படியாவது அமெரிக்க வந்துவிட குறுக்கு வழி பார்த்து இதை தேர்ந்தெடுத்தவர்கள். மற்றும், இங்கு கணவன் அல்லது மனைவி H1B1 விசாவில் வேலையில் இருப்பார்கள். அவர்களின் மனைவியோ/கணவனோ dependent விசாவில் இருப்பார்கள். இவர்கள் இந்த கல்லூரியில் ஆன்லைனில் சேர்த்துவிட்டால் அவர்களின் விசா மாணவர் விசாவாக மாற்றப்பட்டு அவர்கள் வேலை பார்க்கும் தகுதி பெறுகிறார்கள், இப்போது புரிந்து இருக்கும் ஏன் இத்தனை கவலை இந்த தெலுங்குவாளுகுன்னு....