Thottal Thodarum

Feb 24, 2011

சினிமா வியாபாரம்-10

பகுதி 10
ஆங்கிலப் படங்களை விலைக்கு வாங்கி.. அதுவும் கொஞ்சம் பழைய படங்களை வாங்கி, நிதமும் வேலூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து படங்களுக்கான வியாபாரம் பேசி, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் இருக்கும் தியேட்டர்களில் ஒவ்வொரு படத்துக்கு இடையே கிடைக்கும் கேப்பில் தன் படங்களைப் போட்டு மிகச் சிறிய விநியோகஸ்தராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்று சொல்வார்கள். அதன் பிறகு சூப்பர் குட் செளத்திரியின் படங்களை அவர் வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்ததும், நோ.. லுக்கிங் பேக் இருவருக்கும். தமிழ் நாட்டில் முக்கியமாய் என்.எஸ்.சி ஏரியாவின் கிங் என்றால் அது அவரைத்தான் குறிக்கும் அந்த அளவுக்கு இந்த ஏரியாக்களில் ஆளுமையுள்ள ஒரு விநியோகஸ்தராக இருக்கிறவர்.
விஜய்யின் காவலன் படத்திற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், நிஜ காரணமான முந்தைய விநியோகஸ்தரின் பின்னணி தான் என்பது இத்துறையில் உள்ளவர்களுக்கு தெரியும். அவராலும் மேலும் பல பிரச்சனைகளாலும் சிக்கித்தவித்த படத்தை அத்துனை சிக்கல்களிலிருந்து விடுவித்து தமிழகம் மட்டுமில்லாது, உலகமெங்கும் வெளியாவதற்கு ஆஸ்கர் ரவி அவர்களின் ஆளுமையே காரணம்.

இவரைப் போல இன்னும் நிறைய பேர் தமிழ் நாட்டின் சினிமாவின் தலைவிதியை நிர்ணையிப்பவராகவும், நிர்ணையித்தவராகவும் விளங்கி வ்ருகிறார்கள். இந்த தொடர் விநியோகஸ்தர்களை பற்றி அல்ல.. ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், விநியோகஸ்தர் என்று பல அடுக்குகளைக் கொண்ட சினிமா உலகில் எக்ஸிபிஷன் எனப்படும் திரையிடுதல் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும், ஒவ்வொரு தியேட்டரும் தன் பார்வையாளர்களை தக்க வைக்க எவ்வளவு போராடுகிறது என்பதைப் பற்றியும் சொல்வதுதான் என்பதால். மேலும் தியேட்டர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

சரி தியேட்டரை எடுத்தாகிவிட்டது, ஓரளவுக்கு புதுப்பித்தாகிவிட்டது. புதிய படம் ஒன்றை ரிலீஸ் செய்தாகியாயிற்று.. அப்புறம் என்ன என்று பார்க்கும் போது அடுத்த பெரிய படங்களை எங்கள் தியேட்டரில் வெளியிட வேண்டி கொஞ்சம் நஞ்சமல்ல நிறைய அலைய வேண்டியிருந்தது.

தொடர்ந்து பெரிய படங்களை போட எங்களது தியேட்டர் சினிமாவின் எல்லைக்கோடான சிட்டிக்கு மிக அருகில் இருந்ததால் தான் பெரிய பிரச்சனை. சரி அப்படியே சிட்டி தியேட்டரான உதயத்தை விட்டு நம் தியேட்டரில் போடலாமென்றால் ஏசி கிடையாது, டிடிஎஸ் கிடையாது. இது ரெண்டும் காசியில் இருந்ததால் விநியோகஸ்தர்களின் ஆதரவு காசிக்கே.

புதுப் படங்களையும், பெரிய நிறுவனங்கள், பெரிய நடிகர்கள் நடித்த படங்களையும் வெளியிட்டுவிட்டால் மட்டுமே ஒரு திரையரங்கு வெற்றிகரமான அரங்காக மாறிவிடாது. தியேட்டரின் பிரதான விஷயமான ஒளி,ஒலி, மற்றும் இருக்கை வசதிகள், டிக்கெட்டிங் வசதிகள் என்பது போன்ற பல விஷயங்கள் தியேட்டரை நிலை நிறுத்த மிகவும் முக்கியமான விஷயங்கள் ஆகும்.

டால்பி டிஜிட்டல், டி.டி.எஸ் என்பது மட்டும் தமிழ் சினிமா உலகில் வரவில்லையென்றால் சினிமாவை தியேட்டரில் பார்த்து அனுபவிக்கும் ஆர்வம் மக்கிப் போய், மக்கள் டிவியோடு இரண்டற கலந்திருக்ககூடிய அபாயம் இருந்ததை.. காப்பாற்றிய பெருமை கமலுக்கு உண்டு.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

குரங்குபெடல் said...

Steady Going . . . Well

பிரபல பதிவர் said...

முடிவை தவிர எல்லாமே சும்மா நச்சுனு இருக்கு.....

Jana said...

Nice :)

சுரேகா.. said...

தியேட்டரைப்பத்தியும், அந்த தயாரிப்பாளர் பத்தியும் நீங்க சொன்ன அத்தனையும் நிதர்சனமான உண்மை..!

கலக்குங்க ஜி!!

pichaikaaran said...

அழகான கட்டுரை . கடைசி வரி அசிங்கமாக இருந்தது. நம்பக தன்மையை பாதிக்கிறது

மதுரை சரவணன் said...

நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்

அருண் said...

இவ்வளவு விசயமா?சூப்பர்,
கடைசி வரி மேட்டர் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமாயிருக்கேன்.