ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும். சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்?
சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு டப்பாவில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐடி டிஎஸ்பி. கொஞ்சம் கொஞ்சமாய் கிடைத்த கைகளை வைத்து தன் விசாரணையை ஆரம்பிக்க, அங்கொன்றும், இங்கொன்றுமாய் லிங்க் கிடைத்து, ஒரு வட்டம் வருகிறது. கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப் படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின் பின்னணி என்று மிக டீடெயிலாக சொல்லியிருக்கிறார்கள்.
வழக்கமாய் இம்மாதிரியான படங்களில் பரபரவென திரைக்கதை ஓடும், அல்லது பிஷுக், விஷுக்கென காமெராவை அங்கும் இங்கும் ப்ளாஷ் பேன் செய்து, எபெக்ட் போட்டு மிரள வைக்கும் காலத்தில், நிஜ விசாரணை எப்படி போகுமோ அதே வேகத்தில் விசாரணையை காட்டியிருப்பது ஒரு விதத்தில் அழகாய் இருக்கிறது.
படத்தில் முக்கியமாய் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம் காஸ்டிங். வழக்கமாய் மிஷ்கின் அவரது படங்களில் இதைச் சரியாக செய்வார். நடு ராத்திரி தூக்கத்தில் எழுப்பினாலும் விரைப்பாகவே “வால்ல்ல்ல்ல்ல்டர் வெற்றிவேல்” என்று எச்சில் தெரிக்க, நேர் பார்வை பார்த்தபடி பேசும் ஆபீஸர்களையே பார்த்து பழகிய நமக்கு மிகச் சாதாரணமாய் இருக்கும் ஆபீசர்களை பார்க்கும் போது என்னடா இது என்று தோன்றினால் அதற்கு காரணம் பெரும்பாலனர்வகள் சினிமாவில் மட்டுமே போலீஸை பார்பதும், நம் தமிழ் சினிமா சொல்லிக் கொடுத்திருக்கும் போலீஸ் பற்றிய கான்செப்டும் தான் காரணம்.
சேரன் மிக இயல்பாய் இந்த கேரக்டரில் பொருந்துகிறார். சோகமயமாய் இருக்கும் அவரது முகத்தின் தன்மைக்கு, தங்கையை தொலைத்த சோகமும், இறுக்கமான முகத்துடனான விசாரணை செய்யும் முறையும் மிக அருமையாய் பொருந்துகிறது. டிஎஸ்பி நரேன், அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், அஸிஸ்டெண்ட் கமிஷனர் திரிசங்கு, ஜவுளிக்கடை அதிபர், அடிக்கடி ஆங்கிலம் பேசும் கமிஷனர், காணாமல் போன ஒருவனது செம குண்டு அம்மா, ஜூடாஸ் ஜெயப்பிரகாஷ், மார்சுவரி ஆள், ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மனைவி லஷ்மி, அந்த பையன் என்று சரியான ஆட்களை பொறுக்கி போட்டிருக்கிறார் இயக்குனர். சேரனின் உதவியாளராய் வரும் தீப்திஷாவும் இன்னொரு இளைஞரை பற்றி பெரிதாய் சொல்ல முடியவில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிப்பு லஷ்மி நரசிம்மனுடயது. சும்மா மிரட்டியிருக்கிறார்.
இசை ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்படத்தில் வரும் பின்னணியிசை மிக அருமை. முக்கியமாய் பல நேரங்களில் வசனம் கொடுக்க வேண்டிய பல இம்பாக்டுகளை இசை கொடுக்கிறது. என்ன கொஞ்சம் வெஸ்டர்னாக இருப்பதால் சில இடங்களில் அன்னியப்படத்தான் செய்கிறது.
ஒளிப்பதிவாளர் சத்யா. பி.சியின் வாரிசு வரிசையில் வந்திருக்கும் இன்னொரு சிறந்த டெக்னீஷியன். பெரும்பாலான லாங் ஷாட்டுகள், நீண்ட ஷாட்டுகள், கால் ஷாட்டுகள், பரபரவென பத்து செகண்டுக்கு ஷாட் வைக்காமல் நின்று நிதானித்து, மெல்ல நம் ஆர்வத்தை அதிகமாக்கி ஸ்கீரினுக்குள் நுழையச் செய்யும் வேலையை கேமரா அருமையாய் செய்திருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியில் சேசிங் ஷாட் கம்போசிங்கும், அதன் எக்ஸிகூயூசனும் அருமை. இவருக்கு மிகப் பெரிய பலம் எடிட்டர் கெகின்.
இயக்குனர் மிஷ்கின் சீனுக்கு சீன் அவரது குரு டக்கேஷின் பாதிப்பை வெளிப்படுத்துகிறார். முக்கியமாய் அந்த அடர்மழை ஓப்பனிங் டாப் ஆங்கிள் ஷாட் சின், நீண்ட மெளனமான காட்சிகள், குறைவான வசனங்கள், ஆனால் ஷார்ப்பான வசனங்கள். முக்கியமாய் பாரன்சிக் டாக்டர் ஜேகேவை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கோட் களோடு பேசுவது. வித்யாசமான லோ ஆங்கிள் ஷாட்டுகள், மெல்ல,மெல்ல கதையை அன்போல்ட் செய்யும் முறை என்று மிரட்டுகிறார். மிகச் சிறிய விஷயங்களைக்கூட விடாமல் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். ஒரு ஆபீஸரின் விசாரணையை அதன் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான். தமிழ் சினிமாவில் இது வரை சவக்கிடங்கு காட்சிகளை இவ்வளவு நுணுக்கமாய் காட்டியிருக்கிறார்களா? என்பது சந்தேகம்தான். ஆனா ஊனா கான்ஸ்டபிள் கூட துப்பாக்கி வச்சிருக்கிறா மாதிரி பார்த்த நம் சினிமா வரலாற்றில், முதல் முறையாய் ஒரு ஆபீஸர் வெப்பன் வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு விஷயங்கள் செய்ய வேண்டும் என்பது போன்ற டீடெய்லாக காட்டியிருக்கிறார்கள். மூகத்தில் டாக்டர் கோட்டை போட்டு மூடி பிணங்களூடே படுத்து தூங்கிக் கொண்டிருகும் டாக்டர் ஜூடாஸின் அறிமுகக் காட்சி, இன்ஸ்பெக்டரும், சேரனும் கேஸ் பத்தி பேசிக் கொள்ளும் வசனங்கள், அதனூடே அவர் சொல்லும் ப்ளேஷ் பேக் காட்சி, டிஎஸ்பி தன் கோபத்தை, தன் மறுப்பை தெரிவிக்க சிகரெட் கேட்டு கத்தும் காட்சி, அதே ரியாக்ஷனை சேரனிடன் இன்ஸ்பெக்டர் காட்டும் காட்சி என்று மிரட்டலாய்த்தான் இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸில் அந்த களனை பயன் படுத்திக் கொண்ட முறையும், அத்துனை நடிகர்களை வைத்து கோரியோகிராப் செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சி, இண்டெர்வெல் ப்ளாக்கின் போது வரும் சண்டைக்காட்சி எல்லாம் மிஷ்கினின் முத்திரைகள்
மிக இயல்பான இன்வெஸ்டிகேஷனை காட்டியதற்காக பாராட்டினாலும், அதே இயல்பு தன்மையே படத்தின் விறுவிறுப்புக்கு கேடு விளைவிக்கிறது. முக்கியமாய் படத்தின் முதல் பகுதி சேரனின் விசாரணையை போலவே படு ஸ்லோ. இடைவேளைக்கு பிறகு கதையின் ஓட்டத்தை ஒரளவுக்கு சினிமா அறிவுள்ளவர்கள் கண்டு பிடித்துவிடுவார்கள். சமீபத்தில் வந்த ஈசன் ப்டத்தின் கருவும் இப்படத்தின் கருவும் ஒரே விதமாய் வாடை வருவதை மறக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் சேரன் ஏன் அவரது அஸிஸ்டெண்டுகளை பற்றிய பைல்களை அவர்கள் கண் முன்னே குப்பை தொட்டியில் போட வேண்டும்? அவர் ஒன்று அவ்வளவு அரகண்டான ஆளாய் காட்டவில்லையே? அதே போல் கடைசியில் வரும் குத்து பாட்டு பெரியதாய் எதுவும் இம்பாக்டை கொடுக்கவில்லை. அங்கு நடக்கும் ஹைஃபை கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. அமீருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நல்ல இயக்குனர். தயவு செய்து இம்மாதிரியான வேடங்களில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். என்னைப் பொறுத்தவரை அந்த பாடல் படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் குறைக்கிறது என்றே தோன்றுகிறது. கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்குமோ? என்ற யோசனை வருவதை தடுக்க முடியவில்லை. ஆஹா நான் ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். நம்ம சாரு நடித்திருக்கிறார். ஒரு ஷாட் வந்தாலும் சும்மா நின்னு பாடறாரு.. சிலாகிக்க நிறைய விஷயங்கள் படத்தில் இருந்தாலும், சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால்…
யுத்தம் செய் - போர்க்களம்
Post a Comment
30 comments:
மீ கோயிங் டுமாரோ...
அட.. மீ தான் ஃபஸ்டா???
was waiting for your feedback ji. thanks
7th anga irupena.. santhika time kodunga :)
//இயக்குனர் மிஷ்கின் சீனுக்கு சீன் அவரது குரு டக்கேஷின் பாதிப்பை வெளிப்படுத்துகிறார்//
>>> படுத்தட்டும். படுத்தட்டும்.
//அமீருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நல்ல இயக்குனர். தயவு செய்து இம்மாதிரியான வேடங்களில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.//
>>> ஆமாம். குறிப்பாக டோட்சி..சாரி.. யோகி படத்தில் டாய்லெட்டில் அமர்ந்திருக்கும் "யதார்த்த" காட்சி மறக்கவே முடியாது...
//யுத்தம் செய் - போர்களம்//
>>> அண்ணே, தப்ப நினைக்க வேண்டாம். தயவு செஞ்சி போர்க்களம்னு மாத்திருங்க. போர்களம்... நான் Bore களம்னு நினைச்சிட்டேன். அப்பறம் யாரும் படம் பாக்க போக மாட்டாங்க...
ஒரு முறை பார்க்கலாம்
//சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்?//
?
சேரன் இதிலும் அலறாரா? (அவர் ஸ்டைலில்)
Cable Sankar - The One and Only என்று சொல்ல வைக்கும் விமர்சனம்... அநியாயத்துக்கு டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றி விலாவரியாக எழுதியிருக்கீங்க...
// குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிப்பு லஷ்மி நரசிம்மனுடயது //
அவங்க பேரு லஷ்மி ராமகிருஷ்ணன் இல்லையா...?
இணையத்தில் புத்தகக் கண்காட்சி...
விபரங்களுக்கு பார்க்க..
http://guhankatturai.blogspot.com/2011/02/we-can-books.html
சாருவின் அசிகர் மன்ற தலைவர் கேபிள் சங்கர் வாழ்க
டெக்னிக்கல் விமர்சனம்.
வாழ்த்துக்கள் கேபிள்.
வாழ்த்துக்கள் சேரன்.
படம் பெரிய வெற்றியை கொடுக்கும் போல.
கேபிள் ஜி, போர்க்களமா..? இல்லை "போர்" களமா..?
:-)
" கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்குமோ? என்ற யோசனை வருவதை தடுக்க முடியவில்லை"
அது சரி தலைவா கடைசி வரை படம் நல்லா இருக்க நல்லா இல்லையான்னு சொல்லவேஇல்லையே .
தல இசை, ஓக்கேவா உங்களுக்கு, தேவையான இடங்களின் மெளனத்தை நிரப்பத்தெரிந்தவரே ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பது என் கருத்து. எனக்கு முயூசிக் தெரியும் என்று கிடைத்த இடத்திலெல்லாம் இசையால் நிரப்பினால் சப்தம்தான் இருக்கும். எனக்கு இந்த படத்திற்கு இசை ஒரு மைனஸாகவே படுகிறது. யூகிக்ககூடிய முடிவும் ஒரு மைனஸ். மற்றபடி ஹேட்ஸ் ஆப் மிஸ்கின், காப்பி அடிக்கிறது தப்பில்ல, ஆனா இப்படி அடிக்கனும்.
// என்ன கொஞ்சம் வெஸ்டர்னாக இருப்பதால் சில இடங்களில் அன்னியப்படத்தான் செய்கிறது.//
நீங்கள் சொன்ன விஷயத்தைத்தான் நான் வேறு விதமாய் சொல்லியிருக்கிறேன். முரளி..
நல்ல விமர்சனம் படத்தோட saspence உடைக்காமல் .
சிலர் படத்தோட மொத்த கதையும் எழுதுகிறார்கள்
நேற்று கமலாவில் உங்களை பார்த்தேன் .ஆனால் பேச முடியவில்லை
தூங்கா நகரம் எப்பிடி இருந்துச்சு .இரண்டாம் பாகத்தில் நான் தூங்கிட்டேன் .
அருமையான விமர்சனம்..எனக்கும் இப்படம் ஈசனை நினைவுபடுத்தியது..
நார்மல் மர்டர் கதையை மிக இயல்பாக..பல வித்தியாசமான காட்சியமைப்புகளால்..
மிஷ்கின் மிரட்டி இருக்கார்..அனால் இரண்டாம் பாதியில் நிறைய டிராமா-வை
காணமுடிகிறது..அதை கிளைமாக்ஸ் மறக்க வைகிறது.
4 star in Times of India !!
ஆஹா நான் ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். நம்ம சாரு நடித்திருக்கிறார். ஒரு ஷாட் வந்தாலும் சும்மா நின்னு பாடறாரு.."
wow
சேரனை நினைத்து பயமா இருந்தாலும் இன்னிக்கு நைட்டு போகலாம்னு இருக்கேன். :-))
தூங்காநகரம் எப்படி இருக்குதாம்?
யுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா ?
//நேர் பார்வை பார்த்தபடி பேசும் ஆபீஸர்களையே பார்த்து பழகிய நமக்கு மிகச் சாதாரணமாய் இருக்கும் ஆபீசர்களை பார்க்கும் போது என்னடா இது என்று தோன்றினால் அதற்கு காரணம் பெரும்பாலனர்வகள் சினிமாவில் மட்டுமே போலீஸை பார்பதும், நம் தமிழ் சினிமா சொல்லிக் கொடுத்திருக்கும் போலீஸ் பற்றிய கான்செப்டும் தான் காரணம்.//
மிகச் சரி
தொழில்நுட்பங்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள், ஆனால்...
‘ஸுஜாத்’ என்றால் உயர்பிறப்பு என்று அர்த்தம். யோனி சிதைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் பெண்ணின் பெயர் அது.
வைஸ்சியக் கிழடுகளின் பார்வை ருசிக்கு யோனி சிதைத்துக் காட்டும் சூத்திரர்களின் கைகள் வெட்டப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. Sex & violence-ஐக் காட்சிப்பொருள் ஆக்காதீர்கள் என்று சொல்வதற்கும் எவ்வளவு வன்முறை தேவைப்படுகிறது பாருங்கள்! கொப்பூழைக் காட்டாமல் குத்துபாட்டு வைத்து என்ன புண்ணியம், ரோஜா இதழ்கள் மிதக்கும் நீர்க்குட்டைக்குள் சிறுபெண்கள் மீது பாயும் கருத்த தடியர்கள் நம்மை psychological rape பண்ணிவிடுகையில்? (இதே மனவெளி வற்கலவி ‘அஞ்சாதே’ படத்திலும் உண்டு).
Antagonist-களுக்கு ஒத்தாசையாய் இருக்கிற ஷைத்திரியர்களுக்கு இசக்கிமுத்து, துரைப்பாண்டி இப்படியாக்கும் பெயர்கள்.
Protagonist கருப்பனுக்குப் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இறுதிச் சண்டையில் இவர், அவன்களே அடித்துக்கொண்டு சாகட்டும் என்று ஒதுங்கி நிற்கிறார். ‘மகாபாரத’ influence-ஆ?
Opening shot-இல் top angle வைக்கும்போதே இது மேல்தட்டுப் பார்வை என்று விளக்கிவிடுகிறார். ஆனால், பாதிக்கப் படுகிற ‘அறிவுள்ளவர்கள்’ யுத்தம் செய்வதே சாலும் என, யூதாயிஸ போதனையான ‘கண்ணுக்குக் கண்’ கொள்கையைத் தூக்கிப் பிடிக்கையில், போராளிகளை பித்துப்பிடித்தவர்களாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? தோஸ்தொயேவ்ஸ்கிக்கே வெளிச்சம்!
(ஜாக்கி சேகரைப் போல மட்டுறுத்தல் வைத்திருந்திருக்கலாம். அங்கேபோல் இங்கேயும் என் பின்னூட்டம் தவிர்க்கப் பட வாய்ப்பு இருந்திருக்கும்).
அருமையான விமர்சனம் தலைவா,
இப்போதே படத்திற்கு செல்ல வேண்டும் போல் உள்ளது,உங்கள் இந்த விமர்சனத்தை படிக்கும் போது. ஆனால் எனக்கு நாளை தான் டிக்கெட் கிடைத்திருக்கிறது,கண்டிப்பா சென்று பார்த்து விட்டு மறுபடியும் வந்து கமெண்ட் போடுகிறேன்.
கதையை மட்டும் சொல்லாமல் நல்ல அலசல்.
சேரன் படத்துக்கு சரியான தேர்வு,
@sen
பார்த்தாச்சா?
@தோழி
வந்திருச்சு..
@சிவகுமார்
மாத்திட்டேன்
@எல்.கே
எல்லோரும் ஒரு முறை தான் இப்பல்லாம் பாக்குறாங்கன்னு நினைக்கிறேன்.:))
@கலாநேசன்
அலறார்..லைட்டா..:))
@பிலாசபி பிரபாகரன்
நன்றி
@குகன்
வாழ்த்துக்கள்.
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி
@காவேரி கணேஷ்
அப்படி சொல்ல முடியாது.
@ராஜு
போர்க்களம் தான்
@ஜி.ராஜ்மோகன்
நல்லாயில்லைன்னு எங்க சொன்னேன்.:)
@ராகுல்
அஹா..
@கார்த்திக்
ஆம்
@மோகன்குமார்
ஆம்
@பார்வையாளன்
அது கிண்டல்..
@ஆதிமூலக்கிருஷ்ணன்
அரைத்தூக்கம்
@ஆகாயமனிதன்
:_
@ராஜசுந்தராஜன்
அருமையான வித்யாசமான பர்செப்ஷன்.. தலைவரே...
2ஸ்வீட் ராஸ்கல்
பார்த்துட்டு சொல்லுங்க
@சே.குமார்
நன்/றி
தங்கையை காணவில்லை..லீவு.கேட்டாலும் தரவில்லை.. புது கேஸு வேறு தலையில் கட்டப்பட்ட நேரத்தில்.. புதிதான traine ரெண்டு பேரை கூட கூட்டி கொண்டு அலைய வேண்டும்..என்ற கோபத்தில் file ஐ தூக்கி குப்பைதொட்டியில் போட்டு செல்வது ஒன்றும் தப்பில்லேயே.. தியெட்டரில் சொற்ப கைதட்டலும் அந்த காட்சிக்கு கிடைத்தது... பாதிக்கப்பட்டவர்கள் போல.:)
படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது. உங்க விமர்சனமும். பிணவறை மற்றும் மருத்துவர் குறித்த காட்சிகளிலும் அதிக கவனத்துடன் உள்ளது உள்ளபடியாகக் கொடுத்திருக்கிறார். நன்றி கேபிள் :-)
Post a Comment